01-30-2006, 07:32 AM
பிரிட்டன் கருக்கலைப்பு சட்டம்கடுமையாக்க மக்கள் வலியுறுத்தல்
பிரிட்டன் மக்களில் பெரும்பாலானவர்கள் "கருக்கலைப்பு சட்டம்' கடுமையாக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
பிரிட்டனில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு. கடந்த 1967ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த சட்டம் 22 வாரங்கள் வரை கருவை கலைக்க அனுமதி அளித்தது. பின்னர்இ கடந்த 1990ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டு 24 வாரங்கள் வரையிலான கருவை கலைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் "அப்சர்வர்' என்ற ஆங்கில நாளிதழ் இது குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. பிரிட்டன் மக்களில் 47 சதவீத பெண்கள் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதாவதுஇ தற்போதைய 24 வாரங்கள் என்ற நிலையை குறைத்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் "கருக்கலைப்பு செய்வதை' சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று கடுமையான கருத்தை தெரிவித்துள்ளனர்.
31 சதவீத பெண்கள் மற்றும் 35 சதவீத ஆண்கள் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கூறி உள்ளனர். இரண்டு சதவீத பெண்கள் மற்றும் 5 சதவீத ஆண்கள் மட்டுமே கருக்கலைப்பு செய்யும் கால வரம்பை மேலும் அதிக காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் "கருக்கலைப்பு சட்ட' விவகாரம் கடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............