01-30-2006, 04:20 AM
<b>தேசியத் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையில் வெளிப்படும் "அதிர்ச்சித் தகவல்" என்ன?: க.வே.பாலகுமாரன் விளக்கம் </b>
இலங்கைக்கு வருகை தந்த நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்முடன் தேசியத் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையில் தெரிவித்திருக்கும் "அதிர்ச்சித் தகவல்" என்ன? "தமிழீழ தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை" எப்படி உருவாக்கம் பெற்றுள்ளது? விடுதலைப் புலிகளின் "இறுதி மூல உபாயம்" என்ன? ஆகியவை தொடர்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார்.
இவை தொடர்பாக புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (28.01.06) அரசியல் அரங்கம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் உரையாற்றினார்.
உரையின் முழு எழுத்து வடிவம்:
இந்த வாரம் நிகழக் கூடிய சில நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டு சென்ற வாரம் நாங்கள் சில தரவுகளை முன்கூட்டியே வழங்கியிருந்தோம்.
தற்போது தேசியத் தலைவர் அவர்கள் எடுத்திருக்கும் முடிவுகள் நீண்டகாலத்தில் இந்தத் தீவில் அதிர்ச்சியூட்டக் கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பாகச் சொல்லியிருந்தோம்.
குளத்தின் நடுவிலே கல்லைப் போட்டால் அந்தக் குளத்தில் எழுகின்ற அலைகள் எப்படி விரிந்து பரந்து செல்கிறதோ அதைப் போல -
இந்த சுனாமி அலையினது தாக்கம் போல-
தலைவரது இம்முடிவானது சிறு சிறு வட்டங்களாக உருவாகி பெரிய வட்டங்களாகப் பல்கி பரவி மிகப் பெரியத் தாக்கத்தை இந்தத் தீவில் ஏற்படுத்தப்போகிறது.
எங்களைப் பற்றி யார் எதுவும் சொன்னாலும் எங்களுக்குப் பரவாயில்லை. நாங்கள் மிகத் தெளிவாக அமைதியின் பெயரில் உள்ள பற்றுதலை மீண்டும் நாங்கள் சந்தேகத்துக்கிடமின்றி இந்த உலகத்துக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். நாங்கள் மனப்பூர்வமாக அமைதியை விரும்புகிறோம். உண்மையான மனமாற்றத்தினை சிங்களத் தலைவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்றும் அதற்காகக் காத்திருக்கத் தயாராக இருக்கிறோம்.
புலிகளின் "பாசித்தாள்" பரிசோதனை
போர் செய்ய வேண்டிய நிலையில் கூட-
போருக்கான நியாய காரணங்கள் எங்கள் பக்கம் இருக்கும் நிலையிலும் கூட-
நாங்கள் போர் செய்வதைத் தவிர்த்து இன்னும் ஒரு வாய்ப்பை மகிந்தருக்குக் கொடுப்பதற்காக முன்வந்திருக்கிறோம்.
எங்களுடைய இந்தப் பெறுமதியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் ஒரு பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறோம்.
மூலகங்களின் உண்மையான நிறங்களை அறிவதற்காக மேற்கொள்ளப்படுகிற "பாசித்தாள் பரிசோதனை" போல "போர் நிறுத்த அமுலாக்கம்" என்கிற நிலைப்பாடாகிய "பாசித்தாளை" பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை மகிந்தருக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் மட்டுமின்றி சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்துகிறோம்.
நாம் 2002ஆம் நிகழ்வுகளை நினைவில் கொள்வோம்.
2001 ஆம் ஆண்டு யூலை 24 ஆம் நாள் கட்டுநாயக்க விமான தளத்தை நாங்கள் அழித்ததற்குப் பின்னால் சிங்கள அரசு தறிகெட்டு திக்குத் திசை தெரியாமல் ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டது. அதன் விளைவாக அமைதிக்கான வாய்ப்பு ஒன்று தோன்றியது. அதனடிப்படையில் தேசியத் தலைவர் அவர்கள் நிலைமைகளைச் சரியாகக் கணக்கிட்டு 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தானாகவே முன்வந்து போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து சங்கிலித் தொடராக நடந்த பல நிகழ்ச்சிகளையும் நீங்கள் அறிவீர்கள்.
இந்தத் தீவில் முதல் முறையாகப் போர் நிறுத்த உடன்பாடு என்பது மிகப் பாரிய அளவில் தாக்கத்தை விளைவிக்க கூடியதாக உருவாக்கப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள்.
நோர்வேத் தரப்பினர் இதில் தலையிட்டு முயற்சிகளை மேற்கொண்ட அந்தச் சூழ்நிலையைஇ எங்கள் பாலா அண்ணை அவர்களின் நூலின் ஒரு பந்திக்கூடாக வாசித்துக் காட்ட விரும்புகிறேன்.
"இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் ஒரு ஆவணத்தைத் தயாரிப்பதற்காக நோர்வேயின் சமாதானத் தூதுவர்களான விதார் ஹெல்கிசன்இ ஜான் பீற்றர்சன்இ எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்கள் லண்டனில் என்னுடனும் கொழும்பில் சிறிலங்கா அரசப் பிரதிநிதிகளுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை நிகழ்த்தினர்.
2002 ஆம் ஆண்டு ஜனவரிஇ பெப்ரவரி மாதங்களில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் நான் பல முறை தொடர்பு கொண்டு அவருடன் கலந்து ஆலோசித்து அவரிடமிருந்து பல திருத்தங்களையும் யோசனைகளையும் மாற்றங்களையும் பெற்று எமது தரப்பு ஆவணத்தை முழுமைப்படுத்தி நோர்வே அரசிடம் கையளித்தேன். நீண்ட வரலாற்றுப் பகைமை உடைய இருதரப்பினரும் இணங்கக் கூடிய ஒரு போர் நிறுத்த ஆவணத்தைத் தயார் செய்வதில் நோர்வே அனுசரணையாளர் கடைபிடித்த பொறுமையானஇ விடா முயற்சியானஇ மதிநுட்பமான பணியை நான் பாராட்ட வேண்டும்
அதற்கேற்ப 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாளன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் ரணிலும் அந்த ஆவணத்தில் கைச்சாத்திட்டனர். அதற்கூடாக இந்த ஆவணம் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில் நோர்வே நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் அவர்கள் சொன்னதை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 60 ஆயிரம் மக்களைப் பலி கொண்டு பரந்துபட்ட அளவில் மனித அவலங்களுக்குக் காரணமாக இருந்த இந்த நெருக்கடிக்கு சமரசப் பேச்சுகள் மூலம் தீர்வு காண்பதே இருதரப்பினரது இலட்சியமாகும்.
இந்த அதிகாரபூர்வமான போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் பகை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இருதரப்பினரும் உறுதி பூண்டுள்ளனர்"
என்கிற வகையில் எவ்வாறு 1993 ஆம் ஆண்டில் பாலஸ்தீனத் தரப்பு இஸ்ரேல் தரப்புக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்ட போது உலகம் மகிழ்ந்ததோ அதற்கு சற்றும் குறைவிலா மகிழ்ச்சியோடு இந்தப் போர் நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வருகிற நாளில் இந்த உலகம் மகிழ்ந்ததை இப்போது நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் போர் நிறுத்தத்தின் முக்கிய சரத்துகளை நினைவுபடுத்துகிறேன்.
யுத்த நிறுத்த நடைமுறைகளின் முதலாவது விதிக்கு இணங்கஇ எத்தரப்பினரும் எந்தவிதமான வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இதனை நிறைவேற்ற சகலவிதமான இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படுதல் அவசியமாகும். நேரடியான மற்றும் மறைமுகமான துப்பாக்கிச் சூடுகள்இ திடீர்த் தாக்குதல்கள்இ பதுங்கித் தாக்குதல்கள் என்று விவரங்கள் விரிந்து சென்று கொண்டிருக்கின்றன.
அடுத்த முக்கியமான செய்தி
"முதலாவது தரப்பின் 8 ஆம் பகுதிக்கு அமைவாக தமிழ் துணை இராணுவக் குழுக்களை யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் ஆயுதமற்றவர்களாக்கும்".
இதில் 30 நாட்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
"இந்த அணியில் உள்ள ஆட்களுக்கு சிறிலங்கா அரசினது கட்டுப்பாட்டுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் இணையும் வாய்ப்பை அளித்து வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் பணிபுரியச் செய்யும்".
அடுத்தது இராணுவத்தினரது வெளியேற்றம் தொடர்பானது;
"இருதரப்பினரில் எத்தரப்பினரும் தமது பிடியில் வைத்திருக்கின்ற வணக்கத் தலங்களிலிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் 30 நாட்களுக்குள் வெளியேறிஇ பொதுமக்கள் செல்ல வழி செய்ய வேண்டும்".
"உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள வணக்கத் தலங்கள் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்துவிடாத பட்சத்திலும் கூட அனைத்து ஆயுதம் தரித்த ஆளணிகளும் வெளியேறி அவை பொதுப்பணியாளர்களால் நல்ல நிலையில் பேணப்பட வேண்டும்".
"எந்த ஒருதரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாடசாலைக் கட்டடங்கள்இ இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிற நாளிலிருந்து விடுவிக்கத் தொடங்கி அவற்றை பாவனைக்குக் கையளிக்க வேண்டும்"
இப்படியாக சிலவற்றுக்கு 160 நாட்களும் சிலவற்றுக்கு 30 நாட்களுமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த நெகிழ்ச்சியான போக்கை கடைபிடித்திருக்கிறோம் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
<b>தேசியத் தலைவர் நடத்திய சந்திப்பில் வெளிப்பட்டிருக்கும் "அதிர்ச்சித் தகவல்" என்ன?</b>
இதைத்தான் தேசியத் தலைவர் அவர்கள் நோர்வேத் தரப்பினருக்கு மிகவும் காத்திரமாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்த உடன்பாட்டை இல்லாது செய்தல் அல்லது மாற்றியமைத்தல் ஐரோப்பிய நாடுகளுக்கு புலிகளின் குழுக்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்துதலை முற்றாகத் தடுத்தல் ஆகியவைதான் மகிந்த ராஜபக்சவின் பதவியேற்புக்கு அடிப்படையாக அமைந்தது.
அதாவது இராஜதந்திர ரீதியாக நாங்கள் உருவாக்கிய வல்லான்மைச் சமநிலையை இல்லாமல் செய்வதுதான் அவரது நோக்கம்.
இந்த வல்லான்மைச் சமநிலை என்பது பொதுவாக நாடுகளிடையே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு சட்டரீதியாக ஏற்கப்படுதல் என்பது.
நாங்கள் எங்களுடைய தியாகத்தாலும் மாவீரர்களின் பேண் தகமையாலும் ஒப்பந்தமே இல்லாத ஒரு வல்லான்மைச் சமநிலையை நாம் உருவாக்கி இருந்தோம்.
அத்தகைய வல்லான்மைச் சமநிலையைக் குலைப்பதற்குத் மகிந்தரும் அவரது குழுவினரும் இந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.
எங்களுடைய சர்வதேச அங்கீகாரத்தைக் குறைத்து எங்களுடைய வல்லான்மைச் சமநிலையை மாற்றியமைக்க முற்பட்டுத்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முதன் முதலில் மகிந்தர் முன்வைத்தார். நாங்கள் முன்வைக்கவில்லை.
பொறியை அவர்தான் எங்களுக்கு விரித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. அதை வலுப்படுத்தத்தான் முடியும் என்று எரிக் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதை வழிமொழிகிற நிலைக்குத்தான் மகிந்தர் இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்.
நாங்கள் எமது வல்லான்மைச் சமநிலையை மீண்டும் உறுதிப்படுத்தி எங்களுக்குப் படிப்படியாக கிடைத்து வருகிற சர்வதேச அங்கீகாரத்தை மேலும் பேணுவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு தொடராகத்தான் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்துள்ளதே தவிர சிங்களத் தரப்பு சொல்வதைப் போல் வேறு எந்தவகையிலும் அமையவில்லை.
நாங்கள் முடிந்தளவுக்கு இந்த சிங்கள அரசை அம்பலப்படுத்திய பின்பும் இல்லை எங்களுக்குப் புரியவில்லை- தெரியவில்லை என்று உலகம் சொல்லுமானால் அதையும் கேட்டுக் கொண்டு மீண்டும் நிரூபிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
இன்று மிக முக்கியமான சந்தியில் சிறிலங்கா அரசாங்கம் நிற்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்த சரத்துகள் பேணப்படாத நிலையிலும் கூடஇ போர் நிறுத்த மீறல்களுக்குக் காரணமான துணை இராணுவக் குழுக்களை சிங்கள இராணுவத்துக்கூடாக இயக்கி இத்தனை படுகொலைகளையும் செய்த பின்புஇ அதற்கு பதிலடி கொடுத்த பின்னால் இன்று சிங்கள அரசு திரும்பவும் பழைய நிலைக்கு இன்று வந்துள்ளது. சிங்கள அரசு இப்போது 2002ஆம் ஆண்டுக்குப் போய் நிற்கிறது.
சிங்கள அரசு இப்போது,
தனது இராணுவத்தின் மனவலிமையைப் பாதிக்கத்தக்க வகையிலான-
படுகொலைக்கும் பழிவாங்கலுக்கும் மிகுந்த மிருகத்தனத்தனத்துக்கும் இலக்காகி இருக்கிற சிங்கள இராணுவத்தை-
பக்குவமாகச் சொல்லித் திருத்தி-
துணை இராணுவக் குழுக்களை அகற்றி
இராணுவத்தைச் சீரமைக்க முடியும்
என்பது நடக்காத காரியம்.
ஏனெனில்இ இந்தச் செயற்பாடுகள் சிங்கள இராணுவத்தைக் கலைப்பதற்குச் சமமானது.
ஆகவே
"சிங்கள இராணுவத்தை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்?
யார் கட்டுப்பாட்டிலே சிங்கள இராணுவம் இயங்குகிறது "
என்ற புதிய செய்தி- இன்று உலகத்துக்கு தெரியப் போகிறது.
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கான வாய்ப்பைஇ சந்தர்ப்பத்தை மகிந்தருக்கு நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பது அவருக்கு போகப் போக நன்றாக புரியும்.
ஆகவேதான் சிங்கள தேசத்துக்கு அதிர்ச்சியூட்டுகிற செய்தியாக படிப்படியாக எமது முடிவு அமையப் போகிறது என்று நாங்கள் சொல்கிறோம்.
அடுத்து மிக முக்கியமானது-
எங்களை சர்வதேச ரீதியாக தரமிறக்கி- எங்களுக்குத் தடைவிதிக்க அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் அவர்களாகவே முன்வந்து அப்படியானவற்றை இல்லாது செய்கிறார்கள்.
மகிந்தர் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாராம்- புலிகளோடு பேசுவது குறித்து மிகுந்த மனத்திருப்தியோடு இருக்கிறாராம்.
மகிந்தர் இப்படிச் சொல்வதன் மூலம் சிங்கள தேசத்தின் அனைத்து இனவெறியர்களுக்கும் பேரினவாதிகளுக்கும் சினமும் கொதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதனது விளைவு என்னவாகும்? என்பதும் நாங்கள் சொன்ன அதிர்ச்சியலைக்குள்ளே காலப்போக்கில் சேரும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
இதுவரை நாம் கூறியவை இப்பேச்சுவார்த்தைகள் தொடர்பான எங்களது நிலைப்பாடு.
போர் நிறுத்தத்தை வலுவாக்குவதற்கான வாய்ப்பு தந்தமைக்கு நாங்கள் சிங்கள அரசுக்கு நன்றி சொல்கிறோம் என்பதுதான் எங்களது செய்தி.
"தமிழீழத் தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை"
இதுவரை நடந்த பேச்சுகளுக்கு ஊடாகவும்இ தலைவர் அவர்கள் சந்தித்த அண்மைய சந்திப்பிகளினூடாகவும் நாங்கள் ஒரு முக்கிய உருவாக்கத்தைச் செய்து கொண்டு வருகிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
"தமிழீழத் தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை" என்று சொல்லக் கூடிய ஒரு நிலைப்பாட்டினது தோற்றுவாய்களை நாங்கள் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தேசியத் தலைவர் அவர்கள் தனது செயற்பாட்டிற்கூடாக- எல்லோரும் புரிந்து கொள்ளத்தக்கதாக எந்த அணியும் சாராத தமிழீழத் தேசத்தினது புதிய தேசியக் கொள்கை-நிலைப்பாடு ஒன்று வெளிநாடுகள் தொடர்பாக உருவாகிக் கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம்.
நாட்டினது வெளிவிகாரக் கொள்கையின் முக்கிய அம்சங்களான
- தேசிய நலனை முன்னெடுத்தல்
- அனைத்துலக உள்நாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் தேசிய நலனை முன்னெடுக்கும் கொள்கையை வகுத்தல்
- தேசிய நலனை அடைவதற்காக பேச்சுவார்த்தைகளை உபாயமாகப் பயன்படுத்துதல்- போரை உபாயமாகப் பயன்படுத்தல்
- மிக வலுவுடன் சமமான நிலையில் நாங்கள் வெளிநாட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்
- எதிர்பார்க்காத பலனை இவை தராவிட்டால் மாற்று வழிகளைக் கையாள்தல்
ஆகிய அனைத்து அம்சங்களுக்கும் அமைவாக நடந்த பேச்சுவார்த்தையே தலைவர் அவர்கள் நடத்திய அண்மையப் பேச்சுவார்த்தை என்று நிச்சயமாகக் கூறுவேன்.
வியட்நாமிலே மிக நீண்டகாலமாக பேச்சும் போருமாக அந்தப் போராட்டம் நடந்தது.
"இராணுவ பலத்துக்கு- வலிமைக்கு அடுத்தபடியாக இராஜதந்திர நடவடிக்கைக்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டது"
என்று வியட்நாம் போராட்டம் பற்றிச் சொல்வார்கள்.
அதேபோல்
இராணுவ நடவடிக்கைகளின் இலக்குகளுக்கு அமைவாகவும் இசைவாகவும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டது" என்றும் சொல்வார்கள்.
நாங்கள் மிகத் தெளிவாக மனப்பூர்வமாக மகிந்தருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறோம்- சிங்கள தேசத்துக்கு அளிக்கிறோம்.
நாங்கள் எதுவித கள்ளம்- கபடமும் இல்லாமல் தெளிவாகச் சொல்கிறோம்இ "முன்னுக்கு வாருங்கள்- பிரச்சனையைத் தீர்க்க மனமுவந்து எங்களோடு இணைந்து செயற்பட வாருங்கள்" என்று வாய்ப்பைக் கொடுக்கிறோம்.
அப்படி அவர்கள் முன்வரக் கூடிய வாய்ப்பை நிரூபிப்பதற்காக-
போர் நிறுத்த உடன்பாட்டை "மீண்டும்" உயிர்ப்பித்து நடைமுறைப்படுத்த-
நீங்கள் ஒப்புக்கொண்ட விடயங்களைச் செய்வதற்கு முன்வாருங்கள் என்று எல்லோரும் ஏற்கக் கூடிய மிக இலகுவான-நியாயமான வாய்ப்பையும் உலகத்துக்கும் மகிந்தருக்கும் அளித்திருக்கிறோம்.
இந்த விடயங்களின் அடிப்படையில் தேசியத் தலைவரது அணுகுமுறையைப் பார்க்க வேண்டும்.
போர்இ அமைதிஇ சண்டைஇ சமாதானம் என்று பார்க்காமல்
ஒரு தேசத்தினது இராஜதந்திர உருவாக்கமாக
தனது இலக்கை அடைவதற்கான சர்வதேச ரீதியான சட்ட ரீதியான மாற்றங்களைக் கடைபிடிக்கும் தன்மையாக பார்க்க வேண்டும்.
உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில் புலிகளின் உறுதி மூல உபாயம் என்ன?
இதற்கப்பால்
இவை யாவும் நிறைவேற்றப்படாத நிலையில்
எங்கள் இயக்கத்தின் இறுதி மூல உபாயமாக
எங்கள் மக்களின் அடிப்படை எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் எங்கள் மக்களின் இறுதி விடுதலைப் போர் மேற்கொள்ளப்படும் என்பதையும் நாங்கள் மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறோம்.
ஆகவேஇ தேசியத் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் என்பவை எமது விடுதலைப் போராட்டத்தினது பல்பக்க பரிணாமத்தை புலப்படுத்தி ஒரு படிநிலை வளர்ச்சியை குறிக்கிறது என்பதை நாம் தெரிவிக்கிறோம் என்றார் க.வே.பாலகுமாரன்.
தகவல்: புதினம்.

[size=14] ' '