![]() |
|
இன்று கா.வே.பாலகுமாரன் அவர்களின் உரை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இன்று கா.வே.பாலகுமாரன் அவர்களின் உரை (/showthread.php?tid=1930) |
இன்று கா.வே.பாலகுமாரன் அவர்களின் உரை - sri - 12-20-2005 ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ Áì¸Ùì¸¡É ÁÉ¢¾§¿ÂôÀ½¢ ±ýÈ ¦À¡¢ø ÒÄÉ¡ö×ì¸ÕŢ¡¸ ÀÄ¿¢ÚÅÉí¸û ¦ºÂüÀ¼ ÅóÐÅ¢ð¼É ±É§Å Áì¸û ¾ÁÐ ¦º¡ó¾ì¸¡ø¸Ç¢ø ŢƢôÀ¡¸ þÕ츧ÅñÎõ ±É Ţξ¨ÄôÒÄ¢¸Ç¢ý ãò¾ ¯ÚôÀ¢É÷ ¸.§Å À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û ¦¾¡¢Å¢ò¾¡÷. þýÚ À¢üÀ¸ø 3.30 Á½¢ìÌ ÒÄ¢¸Ç¢ý ÌÃø ¿¢ÚÅÉò¾¢ø þ¼õ¦ÀüÈ ¬Æ¢ô§ÀÃ¨Ä þ¨ºô§À¨Æ ¦ÅǢ£ðΠŢơŢø ¸ÄóÐ ¦¸¡ñÎ º¢ÈôҨáüÚõ§À¡Ð À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û þùÅ¡Ú ¦¾¡¢Å¢ò¾¡÷.þýÚ ¯Ä¸õ ÓØÅЧÁ ¸¼ó¾ ÅÕ¼ ÍÉ¡Á¢Â¡ø Á£ðÎôÀ¡÷ìÌõ «Ð ¦¾¡¼÷À¡É ¿¢¨É×ôÀ½¢¸¨Ç §Áü¦¸¡ûÙõ Å¡ÃÁ¡¸ þùÅ¡Ãõ ¸¨¼ôÀ¢Êì¸ôÀðÊÕó¾Ð. «ó¾ Ũ¸Â¢ø ¾Á¢Æ÷ ¾¡Â¸ò¾¢ø þ¼õ ¦ÀÚ¸¢ýÈ ¿¢¸ú׸Ǣø þó¾ þ¨ºô§À¨Æ ¦ÅǢ£Îõ ´ýÚ ÍÉ¡Á¢ ¾¡ì¸ò¾¢É¡ø ÀøÄ¡Â¢Ãì¸½ì¸¡É ¯Â¢÷¸¨Ç ¿¡í¸û þÆó¾¢Õ츢ýÈ ¿¢¨Ä墀 3000 §ÀÕìÌ §ÁüÀð¼Å÷¸û ¸¡ÂÁ¨¼ó¾ ¿¢¨Ä¢Öõ 50000 òÐìÌõ §ÁüÀð¼Å£Î¸¨Ç þÆó¾¢Õ츢ýÈ ¿¢¨Ä¢Öõ; ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ Áì¸Ç¢ý ¯ÇôÒñ¨½ ¬üÚõ À½¢Â¢ø þýÛõ ¦¾¡¼÷óÐ ¯ÇÅÇòШÈôÀ½¢¸û þ¼õ¦ÀüÚ ÅÕÅÐ À¡Ã¡ð¼ò¾ì¸Ð ±É§Å ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ ±ÁÐ Áì¸Ç¢ü¸¡É À½¢ þýÛõ ÓüÚô¦ÀÈ Å¢ø¨Ä ¦¾¡¼÷óÐ À½¢¸û ¿¨¼¦ÀÈ §ÅñÎ ¦ÁýÚõ ÌÈ¢ôÀ¢ð¼¡÷. சங்கதி - sri - 12-21-2005 மூன்றாவது சுனாமி வரப்போகிறது- அது எங்களுக்கு அல்ல: கா.வே.பாலகுமாரன் இலங்கையில் மூன்றாவது சுனாமி வரப்போகிறது- அது எங்களுக்கு அல்ல என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. பாலகுமாரன் எச்சரித்துள்ளார். புலிகளின் குரல் வெளியீட்டுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆழிப்பேரலை ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாலகுமாரன் பேசியதாவது: அழிவுகளிலிருந்து மீள வேண்டும் என்பது எவருக்கும் ஏற்படும் முன்னர் தேசியத் தலைவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. அனைத்து தளபதிகளுக்கும் தொடர்பாளர்களுக்கும் இது தெரியும். இதுவிடயத்தில் இவர்கள் தலைவரிடம் சொல்வதற்கு செல்லும் போது அதற்கு முன்னரே தலைவரே எந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணித்த வரலாறுதான் இங்கே நடந்த வரலாறு. தன்னுடைய சொந்தப் பாதுகாப்பையும் புறந்தள்ளி அவர் செயற்பட்டது எல்லோருக்கும் தெரியும். மிஞ்சியோரும் மிஞ்சாமல் இறந்தோரும் மீட்கப்பட்ட வரலாறும் அனைவருக்கும் தெரியும். வீதியோடு கிடந்த சடலங்களைக் கூட பண்போடும் மரியாதையோடும் மீட்டெடுத்த வரலாறு எங்களுக்கு உரியது. ஆழிப்பேரலையையடுத்து ஓடோடி வந்த புலம்பெயர் வந்த தமிழ் மக்களிடத்திலே பேசுகையில் தலைவர் கூறினார், 2ஆம் சுனாமி என்று. மூன்றாவது சுனாமி வரப்போகிறது- ஆனால் அது எங்களுக்கு அல்ல என்பது மாத்திரம் சொல்ல முடியும். ஆனால் உண்மையான சுனாமி வந்தால் என்னை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள். சுனாமி பேரவலத்திற்கு எதிராக நாம் கிளர்ந்தெழுந்த விதம் உலகத்தினது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரவலத்தையே பெருவாய்ப்பாக மாற்றிய தேசம்- பேரவலத்திலிருந்து மீளக் கூடிய தேசம் என்று எங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆச்சே மாகாணத்தில்தான் ஆழிப்பேரலை அவலம் நடந்தேறியது. அங்கே நடந்த விடுதலைப் போராட்டம் இன்று முற்றுப்பெற்றுவிட்டது. சிறிலங்கா அரசாங்கம் போல் அங்கே உள்ள இந்தோனேசிய அரசாங்கம் இல்லாமல் அரசும் போராளிகளும் விட்டுக்கொடுத்தார்கள். போராளிகளது உறவுகள் இறந்திருந்தனர். பேச்சுகள் நடந்தன. திட்டவட்டமான வரையறைகளுடான பேச்சுகளையடுத்து இன்று அங்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் ஏற்றுக்கொண்ட தீர்வு அது. சுனாமியினால் உடலின் வெளிப்புற புண்ணுக்கு அப்பால் உளப்புண் என்று ஒன்று உள்ளது. அதை ஆற்றுவது காத்திரமான விடயம். அந்த உளவளத்துணை பணி இன்னும் தொடர்கிறது. இசை பற்றிய ஆய்வு முழுமையடையவில்லை. அது வெறுமையை, தனிமையை நிரப்புகிறது. உளவியல் ரீதியாக மனிதனது உச்ச வெளிப்பாடாக இருக்கிறது. இசைக்கு மேலத்தேய கீழத்தேய என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஊடகத்தின் வரைவிலக்கணமே இடைவிடாது பிறரோடு தொடர்புடைய வைப்பதுதான். எங்களது ஊடகங்கள் சில பிறரை கத்தரிக்கின்ற வேலையைச் செய்கின்றன. இதை கைவிட வேண்டும் என்றார் அவர் - kuruvikal - 12-21-2005 பாலகுமார் சொன்னதில் ஒன்றைத் தெளிவாக கவனிக்க வேண்டும்.. சுனாமியால் பாதிக்கப்பட்டோரின் உளவியல் தாக்கம்...அதற்கான தீர்வு...அதை நோக்கிய செயற்பாடுகள்...!
- sri - 12-26-2005 இந்தியாவுக்கு எதிரான மகிந்தர், ஜே.வி.பி. சதிகள் என்ன?: பகிரங்கப்படுத்துகின்றனர் விடுதலைப் புலிகள்!! இந்திய அரசுக்கு எதிராக ஜப்பான், சீனா போன்ற சக்திகளைக் கொண்டுவருவதில் சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள சக்திகளும் செயற்பட்டு வருவதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புலிகளின் குரல் வானொலியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமரன் ஆற்றிய உரை: நாள்தோறும் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்து வருகிறீர்கள். எமது போராட்ட முனைப்பு பல்வேறு பக்கங்களாகக் கிளைத்தெழுந்து, ஏலவே நாம் சொன்னதைப் போல எதிர்வினைகள் ஆற்றப்படுவதையும் அதன் விளைவாக ஒரு புதிய பரிணாமம் தோன்றப் போவதையும் நாம் முன்னமே சொல்லி வைக்கிறோம். கொழும்பு அரசியலை நீங்கள் பார்க்கும் போது நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். சிங்களத் தலைவராகத் தோற்றமளிக்கும் மகிந்தர் இப்பொழுது வழமைபோன்ற மிகத் தந்திரமான, ஒரு குள்ளநரியாக, ஒரு சந்திரிகாவாக, ஒரு பிரேமதாசாவாக மாறக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார். அவருடைய அரசியல் நடவடிக்கைகள் வழமையான நரித்தந்திரம் நிரம்பிய அரசியல்தன்மைகள் கொண்டிருப்பதை நாம் தெளிவாகப் பார்க்கிறோம். அதனை இந்தப் பேச்சுவார்த்தையின் அறிவிப்பில் பார்க்கலாம். பேச்சுவார்த்தை என்றாலே இரண்டு தரப்பும் ஒருமித்து சந்திக்க வேண்டிய இடம். அந்த இடமே பிரச்சனையாக்கப்படும்போது அந்தப் பேச்சுவார்த்தை என்பது எத்தகைய வேறு நோக்கங்களைக் கொண்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே சிங்கள அரசியல் தொடர்பாக இனி நாம் பெரிதாகப் பேசுவதற்கோ அல்லது மகிந்தரின் செயற்பாடுக்கு ஊடாக அமைதிக்கான ஒரு வாய்ப்பு அல்லது கதவு திறக்கப்படும் என்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அவரே அடைத்துவிட்டார். அவரே கதவைத் திறந்து அவரே கதவை சாத்தி பூட்டையும் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டு அவர் இந்தியாவுக்குப் போகிறார். இந்தியா, இந்தியா என்கிற சொல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பதிவாக இருக்கிறது. எங்கள் மக்கள் மத்தியில் இந்தியா தொடர்பாக ஒரு நெகிழ்வு, ஒரு அன்பு, ஒரு அச்சம், மிகைப்படுத்தப்பட்ட பயம், சில முற்கற்பிதங்கள் என்று எண்ணங்கள் பலவாறாக இருக்கின்றன. நாங்கள் எங்கே எவரைச் சந்தித்தாலும் இந்தியா தொடர்பான கேள்விகளைக் கேட்காமல் விடுவது கிடையாது. ஏதோ இந்தியா எங்களுக்கு பரம எதிரி போலவும் எங்களது விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியா தடையாக இருப்பது போலவும் இந்தத் தடையை எவ்வாறு மீறுவது என்று நாங்கள் சிந்திப்பது போலவும் இது தொடர்பாக பல்துறை சார்ந்த அறிஞர்களும் இந்தியாவோடு உறவை ஏற்படுத்தி இந்தியாவுக்கு நிலைமைகளை விளங்கப்படுத்தி இந்தியாவுடன் நாங்கள் கீழிறங்கி உறவைப் பேணாவிட்டால் என்ன செய்வது என்று தலையில் கை வைத்து வியக்கிற துன்பகர நிலையையும் நாங்கள் பார்த்து வருகிறோம். இது தொடர்பாக தேசியத் தலைவருடன் நாங்கள் நீண்டகாலமாக பேசியும் வருகிறோம். அவரும் இது தொடர்பாக பல கருத்துகளையும் சொல்லி இருக்கிறார்கள். இந்தியா என்று சொல்லுகிறபோது நாங்கள் இந்திய மக்களைத்தான் நம்புகிறோம். குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களை நம்புகிறோம். தமிழ்நாட்டு மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் பல்வேறு அடக்குமுறை ஒடுக்குமுறைச் சட்டங்களின் வெளிப்பாடு காரணமாக தங்களுடைய ஆர்வத்தை அந்த ஈடுபாட்டை மறைத்து மனதுக்குள்ளே வைத்திருக்கிறார்கள். இவை நீங்கும்போது அவை வெளிவரும் என்று சொன்னார்கள். அது முதலிலே சொன்ன கருத்து. அதுபோலவே இப்போது பொடா சட்டம் எடுத்ததற்குப் பின்னாலே தமிழ்நாட்டில் உணர்வலைகள் மெல்ல மெல்ல பொங்கி மேலே வருவதையும் எங்களுடைய செய்திகள் தமிழ்நாட்டிலே முக்கிய இடத்தைப் பெறுவதையும் அண்மையிலே கூட புங்குடுதீவு பாலியல் வல்லுறவுச் சம்பவம் தமிழ்நாட்டிலே மிகப் பெரிய செய்தியாக சென்றதையும் தமிழருடைய உரிமையை சிங்களவன் மறுப்பதைத் தெளிவாகச் சொல்லக்கூடிய கட்டுரைகளும் முக்கியமான பத்திரிகைகளில் அங்கு வருவதை நாம் அறிகிறோம். அவ்வாறு பார்க்கும்போது எங்களுக்குப் பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. அதை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு இந்தியா தொடர்பான சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அண்மைக்கால நிகழ்ச்சிகளுக்கு ஊடாக இந்தியாவில் போக்கில் எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்று பாருங்கள். இந்தியா என்று நாம் சொல்லும்போது இந்திய அரசு என்று பார்க்கின்றபோது சில நலன்கள் இருக்கின்றன. அந்த நலன்களை அடைவதற்காக காலம்காலமாக தன்னுடைய கொள்கைகளை மாற்றிக்கொண்டும் சிலவற்றை வேறு பாதைக்கு திருப்பிக்கொண்டு போவதையும் பார்க்கலாம். உதாரணத்துக்கு நீங்களே அறியலாம். ரணிலுடைய சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலத்தில் இந்தியா ஒருவகையான அமைதி நிலைப்பாட்டை எடுத்தது. அதேவேளையில் சந்திரிகா போன்ற தலைவர்களையும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளையும் பயன்படுத்தி இந்த அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஒரு தடையாக இருந்தது என்ற அவச்சொல்லும் அந்த காலகட்டத்திலே பல்வேறு தரப்புகளால் கருத்துகள் சொல்லப்பட்டது. இப்போது நீங்கள் பார்க்கலாம். இந்த முறை மகிந்தர் பதவியை எடுத்தபோது இந்தியாவை துணைக்கு அழைத்தார். எதற்கெடுத்தாலும் இந்தியாவை துணைக்கு அழைக்கின்ற போது இந்தியாவுக்கு ஒரு அச்சம் தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மகிந்தர் போன்ற தலைவர்கள் தங்களுடைய தவறான செயற்பாடுகளுக்கு இந்தியாவை துணைக்கு அழைப்பது எவ்வளவு சரி என்ற கேள்வி இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் நிச்சயமாக எழுந்திருக்க வேண்டும். மகிந்தர் நிச்சயமாக நம்பினாராம் இந்தியா தன்னோடு இந்தியா நல்லுறவைப் பேணும் என்று. அந்த நம்பிக்கையில்தான் அவர் நோர்வேயை எடுத்தெறிந்தும் புலிகளைச் சீண்டியும் பல்வேறாகப் பேசிக் கொண்டு வந்தார். ஆனால் மங்கள சமரவீர இந்தியா சென்றபோது இந்தியா மிகத் தெளிவாகச் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பான இந்திய நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும். இந்தியாதான் முதன்முறையாக வடக்கு - கிழக்கு நிலைப்பாடு தொடர்பாக சட்ட ரீதியான ஒரு கருத்தை முன்வைத்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலே சொல்லப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். நாங்கள் தனிப்பட்ட முறையிலே ராஜீவ் காந்தியைச் சந்தித்தபோது கூட அவர் சொன்ன கருத்து, வடக்கு - கிழக்கு இணைப்பை நாங்கள் ஒருபோதும் பிரிக்கவிடமாட்டோம். நீங்கள் அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று எங்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார். இவையெல்லாம் வரலாற்றிலே பதிவுகளாக நாங்கள் சொல்லக்கூடிய வாய்ப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே அந்த வகையிலும் இன்னொரு வகையிலே பார்த்தீர்கள் என்றால் போர் நிறுத்த உடன்பாட்டை மாற்றுவது அல்லது மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்துக்கு மாற்றுவது போன்ற விடயங்களிலும் இந்தியா ஆர்வமாக இருக்கவில்லை. இந்தியா சொன்ன செய்தி மிகத் தெளிவானது. இதே பாதையில் தொடர்ந்து சென்று ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முயலுங்கள் என்று இந்தியா திருப்பி அனுப்பிய கதையை நாங்கள் அறிவோம். ஜே.வி.பி. போன்ற சக்திகள் இந்தியாவை பயன்படுத்தி தங்களுடைய இலக்கை அடைவதற்காக முயற்சிப்பது குறித்து இந்தியாவுக்கு அச்சம் தோன்றியிருப்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதன் விளைவாகத்தான் ஜே.வி.பி. போன்ற சக்திகள் ஜப்பான் அல்லது சீனாவை முன் நிறுத்தும் போது அது இந்தியாவுக்கு உவப்பாக இருக்க முடியாது. இந்த விடயங்களில் இந்தியா பெரிதும் தலையிடுவதாகத் தெரியவில்லை. ஆகவே மகிந்தர் ஜப்பானை தரப்பாக எடுத்தபோது நாங்கள் அதை மறுத்த பொழுது இந்தியாவுக்கு அதிலே ஒரு செய்தி இருப்பதை இந்தியா உணர்ந்திருக்கக் கூடும். நாங்கள் இந்த விடயங்களில் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவுடன் எந்தப் பகைமையும் கிடையாது. நாங்கள் விரும்பி இருந்தால் இந்தியாவுக்கு ஒரு சிறு பகைமையுள்ள ஒரு போட்டியாக வரக்கூடிய சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை நாங்களும் முன்நிறுத்தி நாங்கள் செயற்படவில்லை. எங்களுடைய நோக்கம் எப்போதும் இந்தியாவைப் பகைப்பது கிடையாது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயற்படப்போவதும் கிடையாது. அதேவேளையில் எங்களுடைய நலன்களுக்கு எதிராக இந்தியாவும் செயற்படக் கூடாது. இதுதான் தலைவரின் முக்கியமான எண்ணம். இதை நாங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். இந்தியத் தரப்பு எங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுப்பது எங்களுக்குப் பெருத்த வேதனையாக இருக்கிறது. இன்று நிலைமைகள் மாறி இருக்கின்றன. இந்தியத் தரப்பு அண்மைக்காலமாக தங்களுடைய நிலைப்பாடை மறு ஆய்வுச் செய்யக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது. 15.12.2005 அன்று உதயன் பத்திரிகையில் கூட இலங்கை விரிக்கும் வலையில் இந்தியத் தரப்பு சிக்குமா என்று தலையங்கம் எழுதியுள்ளது. இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்தச் செல்லுகிற தூதுக்குழுவில் இடம்பெற ஜே.வி.பி. மறுத்ததற்கான பிரதான காரணம் என்று நாங்கள் அறியும்போது இந்தியாவுடனான தனது உறவில் இந்தியா போடக்கூடிய அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ஜே.வி.பி. செல்லவில்லை என்பது தெளிவான செய்தியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்திலே ஜே.வி.பிக்கு உவப்பாக இருந்த இந்தியா இன்று சிறிது சிறிதாக விட்டுச் செல்கிறது. இதைப்பார்க்கும்போது அரசியலிலே நண்பர்களும் இல்லை பகைவர்களும் இல்லை என்ற செய்தி தெளிவாகப் புலப்படுகிறது. இங்குள்ள ஒரு முக்கியமான செய்தி என்னவெனில் இந்தியாவுக்கு மாற்றான ஒரு சக்தியைக் கொண்டுவர புலிகள் விரும்பவில்லை என்பதும் அந்த மாற்று சக்தியைக் கொண்டுவருவதற்கு இந்தியாவுடன் கூட நின்ற சக்திகள்தான் முயலுகின்றன என்பதை நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதை இந்தியா புரிந்தும் இருக்கிறது. இதற்கு அப்பால் எங்கள் மக்களிடம் பேசும்போது நாங்கள் சொல்லக்கூடிய செய்தி என்னவெனில், இந்தியா தொடர்பான அச்சம் எங்கள் மக்களிடத்திலே இருக்க வேண்டி அவசியம் இல்லை என்பதுதான் எங்களுடைய பிரதான நிலைப்பாடு. இந்தியா தொடர்பான முற்கற்பிதங்களை நாங்கள் மாற்றிக்கொள்வோம். ஏனென்று சொன்னால் எங்களுடைய விடுதலைப் போராட்டம் இன்று ஒரு உன்னதமான நிலையை அடைந்து அதனுடைய இறுதிப் பக்கங்களைத் தயாரிக்கிற இந்த வேளையிலே நாங்கள் அச்சம், ஐயுறவு எதுவுமற்று ஒரு தெளிவான மக்கள் கூட்டமாக மாற வேண்டும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறோம். இந்திய மத்திய அரசு என்பது நாங்கள் நினைப்பதுபோல் ஒரு அரசு அல்ல. ஏலவே உள்ளது போன்ற பலமான அரசு இன்றைக்கு கிடையாது. இந்தியாவில் இன்று கூட்டாட்சி என்பது ஒரு நிலையாக வந்துவிட்டது. மத்தியில் உள்ள ஆட்சி என்பது ஒவ்வொரு பிரதான கட்சிக்கும் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட கூட்டுக் கட்சிகள் உள்ளன. அந்த மாநிலக் கட்சிகள் இல்லாமல் இந்தியாவில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. இந்தியாவில் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. மொழிவாரியாக பிரிவிக்கப்பட்ட போது 18-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்று ஒவ்வொரு மாநிலமும் தனிநாடு கோரிக்கை என்று கூறாவிட்டாலும் கூட தன்னுடைய உரிமைக்காக அதிகாரத்திற்காக போராட்டங்களை நடத்திக் கொண்டு வருவதும் அதை ஏற்க வேண்டிய நிலைக்கு இந்திய மத்திய அரசு தள்ளப்படுவதும் மாநிலக் கட்சிகளுடைய கை ஓங்கி வருவதும் இன்றைக்கு இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு வெளிப்பாடாக வெளிவருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவில் தனிநாடு கோருகிற சக்திகளுடன் நாங்கள் ஒருபோதும் உறவு வைத்ததும் கிடையாது. வைக்கப்போவதும் கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் அந்த மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். அந்த வகையில்தான் இந்தியாவினுடைய அரைகுறை சமஸ்டி ஆட்சிக்கு அப்பால் எங்களுடைய இனத்தின் சிக்கல்கள் வெவ்வேறாக இருப்பதால் நாங்கள் இடைக்கட்டத் தீர்வுக்குப் போனோம் என்பதை இந்தியா கட்டாயம் கவனத்தில் கொண்டிருக்கும் என்று நம்புகிறோம். பி.ஜே.பி.யினது கூட்டுக் கட்சிகளின் சார்பில் 185 பேர் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு 220 என்றால் முக்கியமாக தமிழ்ப் பிரதேச கட்சிகள்- தமிழ் மாநிலக் கட்சிகள் அதிக அங்கத்துவம் வகிக்கின்றன. அந்த வகையில்தான் அண்மையில் ம.தி.மு.க. தலைவர் வைகோ தெரிவித்திருந்த கருத்தை இந்தியா நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் தமிழ் மக்களினது நலன்கள் புறக்கணிப்படுமானால் தமிழகம் ஒரு காஸ்மீரமாகும் என்று அவர் சொன்னது வெறும் அச்சுறுத்தல் அல்ல. ஒரு யதார்த்தமான களநிலைமை. இன்று காஸ்மீரில்தான் தனிநாட்டுக் கோரிக்கையும் அதனால் ஏற்பட்ட பல இரத்தக் களறிகளும் அதற்கு அப்பால் காஸ்மீருக்கு விசேடமான தனியான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் வருவதற்கு காஸ்மீரிலே நடந்து வருகிற சம்பவங்களைக் மனதில் வைத்துக் கொண்டுதான் வைகோ பேசியிருக்கிறார். முன்னைய மத்திய அரசு போல் இல்ல இன்று இருக்கிற அரசு. அது பலமுனையிலே இருக்கின்றது. 15-க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் அந்த இனங்களுடைய நலன்கள் தொடர்பாக இந்திய அரசு தனது நலன்களைத் திருப்ப வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதேபோல் கிளர்ச்சிகள் நடந்த அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து போன்ற போர் நடந்த இடங்களில் கூட பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு இறங்கி மிக இரகசியமாகப் பேசினாலும் கூட மேலைத்தேய நகரங்களிலே இந்தியா தனது பிரதிநிதிகளை அனுப்பி உலகுக்குத் தெரியாத வகையில் பேசினாலும் கூட அந்தப் பேச்சுவார்த்தைகள் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டதாக நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட மூன்றாம் தரப்பாக சில சக்திகள் செயற்படுவதை நாம் அறிவோம். ஆகவே இந்திய அரசு நல்லபோக்கிலே போவதை நாம் அறிவோம். இந்தியாவின் இந்த போக்கிற்கு ஒருபோதும் நாம் தடையாக இருக்கப்போவதில்லை. இதை நாம் வரவேற்கிறோம். மகிந்தர் போன்ற ஆட்களை நம்பி இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்கும் என்று சொன்னால் அது மிகவும் முட்டாள்தனமாகிவிடும் என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். மகிந்தர் டில்லிக்குச் செல்கின்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காவிட்டாலும் கூட இந்தியா தன்னுடைய சுயமரியாதைக்காக, சுயகௌரவத்துக்காக தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆகையால்தான் மகிந்தர் போகும்போது எல்லோரையும் இழுத்துக் கொண்டு போகிறார். அதிலே தொண்டமானும் செல்வதாக செய்திகள் வருகின்றன. தொண்டமானை நாங்கள் வேண்டுகிறோம். செல்லுங்கள். சென்றுவரும்போது செய்தியை எங்களுக்குச் சொல்லுங்கள். எங்கள் மக்களுக்கு உங்கள் நிலைப்பாடை விளங்கப்படுத்துங்கள். மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனது அறிக்கை ஒன்றை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். "இந்தியா தமிழ் பேசுகிற மக்களுக்குச் செய்கிற அந்த நிலைப்பாடு என்பது தமிழ்நாட்டு தமிழ் மக்களினது மனங்களிலே புண்ணாக இருக்கிறது. மலையக மக்களுக்கு என்ன செய்தார்கள் இந்தியா. எங்களைக் கை கழுவிவிட்டார்கள். இவர்களை நம்பியா தமிழகத் தமிழர்கள் இருக்க முடியும்" என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருக்கிறார். இந்தக் கருத்துகள் எல்லாம் இந்தியாவுக்குச் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை இந்திய அரசு எதிரி அல்ல. தன்னுடைய போக்கைத் திருப்பி எங்களுடைய தேசியத் தலைவர் சொன்னது போல் எங்களது தேசிய விடுதலைப் போராட்டத் தலைமையை மாசுபடுத்தாமல் அதனுடைய வலிமையைக் குறைக்காமல் தமிழ் மக்களின் போராட்டத்தை போராட்டமாகக் கருதிச் செயற்பட வேண்டுகிறோம். 1926 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது தமிழர்கள். இந்தியாவினது விடுதலைப் போராட்டத்திலே காங்கிரஸ் என்ற அந்த அமைப்பில் முன்னணி வகித்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் தெளிவான வேண்டுகோளுக்கு இணங்க மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்து கொக்குவில் உட்பட 7 இடங்களிலே கூட்டங்கள் வைத்து இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மகாத்மா காந்தி பேசுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தவன் தமிழன். தமிழனுக்கு இருக்கிற உணர்வுகூட சிங்களவனுக்கு இல்லையே என்று அப்போது காந்தி சொன்னாராம். அப்படியான நிலையிலே வாழ்ந்தவர்கள் நாங்கள். ஆய்வாளர் திருநாவுக்கரசர் சொன்னது போல், இந்தியாவுடன் தமிழ் மக்கள் தொடர்புகொண்டமையால்தான் ஆங்கில அரசு தமிழ் மக்களைக் கைவிட்டு சிங்களவர் பக்கம் சாய்வது என்ற முடிவு கூட வரலாற்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த விடயங்களை இந்திய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கருத்தில் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான சூழ்நிலை என்பது எங்களைப் பொருத்தவரையான கருத்து. மகிந்தர் போன்றோரது செயற்பாட்டு இந்திய அரசு துணை போனால் வரலாற்றிலே தீராத களங்கம் ஏற்படும் என்பதை மகிந்தருக்கு இந்த முறை சொல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பேச்சுவார்த்தையிலே மகிந்தருக்கு நம்பிக்கை இல்லை. எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் மகிந்தரைச் சந்தித்த போது தன்னுடைய நல்லெண்ணத்தைக் காட்டவில்லை. தொடர்ந்தும் ஜப்பானையே அவர் பேச்சுவார்த்தைக்கான இடம் என்று கூறுவதற்கு காரணம் அவர் பேச விரும்பவில்லை. இந்த நிலையில் எங்கள் மக்கள் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்பது அண்மைக்காலமாக எங்கள் மக்களின் செயற்பாடுகளுக்கு ஊடாக வெளிவந்திருக்கிறது. இப்போ நிச்சயமாகத் தெரியும். புங்குடுதீவில் தர்சினி என்ற எங்கள் சகோதரிக்குச் செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் கொடுமை ஏற்கெனவே தென் தமிழீழத்தில் ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணிற்கும் செய்யப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கும் மாற்றாக அதனை உரைக்க வைப்பதற்காக தமிழ்ப் பெண்கள் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்துவதற்காக மக்கள் தாங்களாக முன்வந்து பயிற்சி பெற்று பயிற்சி பெற்ற மறுகணமே செயற்பட்டு இழிசெயலில் ஈடுபட்ட அந்த கடற்படையினருக்குத் தக்கபாடம் படைத்திருப்பதை இன்றைக்குச் செய்தியாக அறிந்தோம். எதையும் மூடிமறைக்க முடியாது என்பது உலகத்துக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை இத்தனை காலம் மூடி மறைத்தது போல் இனிமேல் மூடிமறைக்க முடியாது. அப்படிச்செய்யவும் இயலாது. இந்த அடிப்படையில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் மகிந்தரின் நாடகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் சொல்ல வேண்டிய செய்தி.. இந்தியாவிலே மூன்றாம் தரப்பாக ஒரு சக்தி உருவெடுக்கிறது. அந்த சக்தி எங்களுக்கு நேச சக்தி. உரிமை கோருகிற இனங்களின் கட்சிகள் அதிகாரங்கள் கோருவது என்பது எங்களுக்கு உவப்பான செய்தி. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை அல்ல. அதேபோல் உலகத்தில் கூட மூன்றாம் தரப்பு சக்தியாக தென் அமெரிக்க நாடுகளிலே பொலிவியா, அர்ஜென்ரினா, கியூபா ஆகிய இடங்களிலே ஒரு புதிய அணி வெனிசூலா தலைமையில் உருவாகி வருவதை நாம் கவனத்தில் கொண்டு வருகிறோம். (தொடரும்) - Anandasangaree - 12-26-2005 :oops: :oops: :oops: :oops: - தூயவன் - 12-26-2005 இராஜதந்திரம் என்பது வெளிப்பார்வைக்கு புலப்படாதது. அது எப்படியாக நகர்கின்றது என்பதற்கு நகர்த்தப்படும் காய்கள் தான் தீர்மானிக்கும். தலைவன் நகர்த்தும் விதம் தமிழனுக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று வாழ்த்துவோமாக. - sri - 01-01-2006 மாமனிதர் ஜோசப் படுகொலை, மகிந்தரின் இந்தியப் பயணம், தமிழக எழுச்சி குறித்து கா.வே.பாலகுமாரன் கருத்து மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணம், தமிழகத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சி ஆகியன குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். புலிகளின் குரல் வானொலியில் நேற்று சனிக்கிழமை ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்கள்: வேகமெடுக்கும் எங்கள் விடுதலைப் போராட்டத்தினுடைய நிகழ்வுகள் பற்றியே இம்முறையும் நாம் பேசுகிறோம். வேகமெடுக்கும் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்குத் தடை போடுகிற பணிகளும் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் காலத்திலே நாங்கள் வாழ்கிறோம். இரண்டுக்கும் இடைப்பட்ட அந்த இடைவெளியும் முரணும் தடைகளே எங்கள் போராட்டத்தின் வெறியைத் தூண்டும் படிகளாக மாறுகிற அற்புத பரிணாம மாற்றத்தையும் உங்களோடு பேச உள்ளோம். இம்முறை 2 முக்கிய பதிவுகளைத் தொட்டுச் செல்கிறோம். எங்கள் மறைந்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், விடுதலை வேள்வியில் தன்னை ஒப்புக்கொடுத்த கடைசிமனிதராக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை அண்மைக்காலத்தில் சந்தித்த போதெல்லாம் தன்னளவில் தன்னோடு திருப்தியாகவும், தன் பணி குறித்து திருப்தியாகவும் அதேவேளை சாவை அதோடு எதிர்நோக்கிய நிலையிலே தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவர் பற்றிய வரலாறை பின்னொரு நாள் வரலாறு பேசும். அவரது இறப்பு, இழப்பு என்பது தொடர்பான சில கருத்துகளை ஆலயங்களிலே பரிசுத்தமான இடங்களில் கொல்லப்பட்டவர்களினூடாக நாம் சொல்ல நினைக்கிறோம். மாமனிதர் ஜோசப் அவர்கள் இன்னும் விழி திறக்காதவர்களுக்காக தன் கண்களை மூடி இருக்கிறார்கள். முதலில் எங்களுடைய வணக்கத்திற்குரிய பஸ்தியான் அடிகளாரைப் பற்றி... உங்களை 85 ஆம் ஆண்டு தை மாதம் நிகழ்வுகளுக்குச் இட்டுச் செல்ல விரும்புகிறேன். 6.1.1985 ஆம் நாளன்று மன்னார் வங்காலையில் உள்ள புனித ஆனால் ஆலயம்.. நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டுத் திறந்த சிங்கள இராணுவம் செய்த வரலாறு உங்களுக்கு நினைவு இருக்கலாம். பஸ்தியான் நித்திரையில் எழுந்து தனது மேலங்கியை அணிந்து கொண்டு செபமாலையை கையில் எடுத்துக் கொண்டும் கையைத் தூக்கிய வண்ணம் ப்ளீஸ் என்று சொல்லிக் கொண்டு வந்த போது அவர் மீது சூடுகள் பாய்ச்சப்பட்டன. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். பாதர் பஸ்தியானின் இறப்பு எங்கள் அன்பிற்குரிய மாமனிதர் சிங்கத்தினுடைய இறப்பு மீள எங்களுக்கு நினைவுட்டியிருக்கிறது. பாதர் பஸ்தியானை அடிக்கடி கேட்பாளர்களாம், இப்படி மக்கள் நலனுக்காகச் செயற்படுகிறீர்களே உங்கள் உயிருக்கு ஆபத்து இல்லையா? என்று. அதற்கு அவர் சொல்வாராம், "நிச்சயமாக இருக்கிறது. எனக்கு மட்டும் அல்ல என்னைப் போன்ற அனைத்துத் தமிழ் மக்களின் உயிருக்கும் இருக்கிறது. நாளைக்கு என்ன நடக்கும் என்ற சொல்ல முடியாத நிலையில் நாங்கள் வாழ்கிறோம்" என்று சொன்ன அந்த சொற்கள் இன்றைக்கும் எமது தமிழ் மக்கள் மத்தியிலே எதிரொலிக்கிறது. இன்று எங்கள் மக்கள் மிக மோசமான இராணுவத்தின் பிடியிலே சிக்கி நாளாந்தம் தங்கள் உயிர்களை இழப்பதற்கு என்ன பாவம் செய்தார்கள் என்று கேட்கிறோம்.? மற்றொரு முக்கியமான சம்பவம். எல்சடேவாரில் நடந்தது. இது மிகவும் அவலமானதும் உருக்கத்திற்குரியதுமாகும். ரெவரெண்ட்களின் ஆயர் என அழைக்கப்பட்ட ஆர்ச் பிசப் ரொமாரோ பற்றிய கதைதான். மார்ச் 24, 1980ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. ஆயர் அவர்கள் திருப்பலி கொடுத்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே ஆயர் அவர்கள் சுருண்டு விழுந்தார். அதுபோலவே மதிப்பிற்குரிய ஐயா சிங்கத்தாரும் ஆயரிடமிருந்து நற்கருணை பெற்றுத் திரும்பும் போது சூடுகள் அருகிலிருந்து அனைவரும் பார்க்கும் வகையில் தீர்க்கப்பட்டன. அவர் சுருண்டு விழுந்தார். அவரது துணைவியாரும் சேர்ந்து விழுந்தார். இந்த செய்திகளுக்கு அப்பால் நான் சில செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். இந்தச் செய்திகள், ஆயர் வார்த்தைகளாக வெளிவந்தன. ஆயரின் வார்த்தைகள் இன்றும் இத்தனை வருடங்கள் கடந்த பின்னரும் மிகவும் காத்திரமாக உலகத்திலே எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. எந்த இணையத்தளத்திற்கும் போனாலும் ஆயருடைய படமும் அவரது கருத்துக்களும் ஓங்கி ஒலித்தவாறு இருப்பதை நினைக்கும் போது எங்களுக்காகச் சொன்ன சொற்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். முக்கியமாக அவர் சாவதற்கு சில நாள்களுக்கு முன்னால் நீளமான செய்திகளை எங்களுக்குச் சொல்லி சென்றிருக்கிறார். அவரது முக்கியமான செய்தி என்னவென்றால், "என்னை கொல்லலாம். ஆனால் நான் வெறும் இறப்பில் நம்பிக்கை கொண்டவன் அல்ல நான் மீண்டும் நிச்சயமாக எல்சடேவர் மக்களோடு உயிர்ப்பேன்" என்று சொன்னார். அதுவே எங்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது. இதற்கு அப்பால் ஒரு முக்கிய செய்தியைச் சொல்லி இருக்கிறார். "நீங்கள் மக்களுக்குச் சொல்லுங்கள். என்னைக் கொல்வதே அவர்கள் வென்றால் நான் கொன்றவர்களை ஆசிர்வதிக்கிறேன் என்றும் மன்னிக்கிறேன் என்றும் சொல்லுங்கள். ஏனென்றால் வீணாக என்னைக் கொல்வதில் தங்களது நேரத்தை வீணடிக்கிறார்கள். உண்மையிலே என்னைக் கொல்வதற்காகச் செலவிடுகிற நேரம் ஒரு பயனற்ற நேரம். ஒரு ஆர்ச் பிசப்பை அவர்கள் கொல்லலாம். ஆனால் இறைவனைக் கொல்ல முடியுமா? ஆலயத்தைக் கொல்ல முடியுமா? அந்த ஆலயமும் மக்களும் தங்கி வாழுகிற மக்களைக் கொல்ல முடியுமா? கருத்துகளைக் கொல்ல முடியுமா?" என்று கேட்டார். அந்தக் கருத்துகளைத்தான் எங்களுடைய மாமனிதர் பரராஜசிங்கமும் கேட்டார்கள். கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குரல் எங்கள் மனதிலே இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய சாவுக்காக நேரத்தை வீணடித்தது வீண் வேலை. அவருடைய சாவினால் அவர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதை ரொமாரோ சார்பில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அதைவிட முக்கியமான செய்தி அவர் சொன்னது என்னவெனில், கடவுளின் பெயரால், எங்கள் மக்களின் பெயரால் நான் இவர்களைக் கேட்கிறேன்..தயவு செய்து உங்களுடைய அடக்குமுறைகளை நிறுத்துங்கள். உங்கள் மக்களையே நீங்கள் கொல்லாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டார். நாங்களும் கேட்கிறோம்.. எங்களது விடுதலைப் போராட்டம் சார்பாக...எங்களது மக்கள் சார்பாக திரும்பத் திரும்பக் கேட்கிறோம். இந்தக் கொலைகளை நிறுத்துங்கள் என்று ஆயருடைய வார்த்தைகளுடாக நாங்கள் கேட்கிறோம். எங்கள் மக்கள் இந்தக் குரலை எதிரொலிக்கிறார்கள். தென் தமிழீழத்திலே தொடராக நடந்து வருகிற படுகொலைகளை நாங்கள் பார்க்கிறோம். அந்தப் பெரியவர்கள் நடேசன், சிவராம், சந்திரநேரு உட்பட தென் தமிழீழத்தின் மூத்தவர்களை, அறிஞர்களைக் கொல்வதற்கூடாக எதனை நாம் சாதிக்கப் போகிறோம்? இந்தத் தமிழினத்தின் அறிஞர்களைக் கொல்வதற்கு ஊடாக எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்பதை ஆயரின் வார்த்தைக்கூடாக உங்களை மன்றாட்டமாக, ஆயரின் குரலுக்கூடாக இங்கே நாம் உலகத்துக்கு முன்னால் வைக்கிறோம். அதைவிட முக்கியமாக ஆயர் சொன்ன கருத்து ஒன்று உள்ளது. "இந்த நெல்லை, கோதுமையைப் பாருங்கள். நெல்லுக்கு உமி இருக்கிறது அல்லது கோதுமையைச் சுற்றி உமி இருக்கிறது. அதனுடன் தாங்குகிற தாவரமும் இருக்கிறது. இந்தத் தாவரமும் உமியும் ஒன்றாக நீண்டகாலத்துக்கு இருக்குமேயானால் உள்ளிருக்கும் தானியத்தை நாம் பெற முடியாது. ஆகவே தானியத்தைப் பெற வேண்டுமானால் அதைத் தாங்குகிற உமியும் தாவரமும் இறந்துபட வேண்டும். அப்படி இறந்துபடும்போதுதான் தானியம் வந்துசேரும் என்று சொன்னது போல் நாங்கள் இந்த இறப்புக்கூடாக எங்கள் விடுதலையைப் பெறுவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை ஆயருடைய வார்த்தைக்கு ஊடாக சொல்ல விரும்புகிறேன். அடுத்து இன்னொரு பதிவுக்குச் செல்கிறேன். நாளாந்தம் மகிந்தருடைய சுயரூபம் வெளிப்படுகிற அந்த வேகத்தைப் பார்க்கிறபோது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. மகிந்தர் இப்போது கிட்டத்தட்ட கொலைகளைப் புரியக் கூடிய சர்வாதிகாரியாக கொலைவெறி பிடித்த, இனவெறி பிடித்த ஒரு இராணுவத்தினுடைய கையிலே சிக்கிய ஒரு பகடைக்காயாக மாறிச் செயல்படுவதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பெரும் அச்சம் எழுகிறது. எங்கள் மாமனிதர் சிங்கத்தின் கொலைக்கு அனுமதித்து அல்லது உத்தரவிட்டு அல்லது தெரிந்தும் பேசாமல் இருந்துவிட்டு குருதிக் கறை படிந்த கரத்தோடு மகிந்தர் இந்தியா சென்று இருக்கிறார். ஆகவே அவரது குருதிக் கறை படிந்த கரத்தைக் குலுக்கும் போதாவது எங்கள் மாமனிதரைப் பற்றி நிச்சயமாக ஒரு கனம் அதிர்ச்சியுற்றிருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். தயவு செய்து உலகம் இந்த செய்தியைப் புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று நடக்கிற மாற்றங்களை நீங்களே பாருங்கள். சென்னையிலே வேப்பேரி பெரியார் திடல் எங்களுடைய மையமாக, ஒரு தங்குமிடமாக இருந்திருக்கிறது. பெரியார் திடலில்தான் நாங்கள் அறிவுக் கருத்துகளை, சமதர்மக் கருத்துகளை, போராட்டக் கருத்துகளை, போராட்ட இளைஞர்களைச் சந்தித்தோம் பேசினோம் என்ற வரலாறு ஒரு காலத்தில் இருந்தது. மிக நீண்டகாலத்துக்குப் பின்னால் அண்மையில் வேப்பேரி பெரியார் திடலில் அந்த மண்டபத்துக்குள் மிகுந்த திரளுக்கு முன்னாலே எல்லாத் தமிழ்த் தலைவர்களும்-வீரமணி ஐயா தலைமையிலே நெடுமாறன் ஐயா, ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் அனைத்துப் பேரும் ஒன்றாகச் சேர்ந்து என்ன தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். இங்கே நாங்கள் சொல்ல வருகிற முக்கியமான செய்தி என்னவென்றால், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா அவர்கள் கூட அந்தச் சந்திப்பை இரத்துச் செய்த வரலாற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் சொன்னார் இது ஒரு பாரிய இக்கட்டான நிலை என்று. ஒரு நாட்டினது ஜனாதிபதியை ஒரு மாநிலத்தின் முதல்வர் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு சந்திக்க முடியாது என்று சொல்லி இருப்பது எத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை நினைவில் கொள்கிறோம். எங்களுக்குச் சில விடயங்கள் தெளிவாகத் தெரிகிறது. மகிந்தர் இந்தியா சென்று எல்லோரையும் பார்த்தார். சோனியா காந்தியையும் பார்த்தார். அங்கேயும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அடுத்த வருடம் ராஜீவ் காந்தி நினைவுநாளை என்னுடைய நாட்டிலே கொண்டாடப் போகிறேன் என்று ஏறுக்கு மாறாக, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஒரு கத்துக்குட்டி அரசியல்வாதியைப் போல் சொல்லிக் கொண்டு திரிவதைப் பார்க்கும்போதெல்லாம் உண்மையிலேயே சோனியா காந்திக்கு சிரிப்பு வந்திருக்கக் கூடும். இப்படியாக மகிந்தருடைய நிலைப்பாடுடைய முடிவு என்னவென்றால், தமிழ்நாட்டுக்குப் போக முடியாமல் கடைசியாக கொச்சிக்குப் போய் குருவாயவூரப்பன் என்று சொல்லக் கூடிய ஒரு கடவுளை வணங்கப் போகிறாராம். நாங்கள் ஒன்றை அறிய விரும்புகிறோம். இது எங்களுக்கு விளங்கவில்லை. தமிழ் மக்கள் மீது படையெடுப்பதற்கு கொச்சிக்கும் காஞ்சி காமகோடிக்கும் சத்யசாயி பாபாவுக்கும் திருவேங்கடத்திலே உள்ள திருப்பதிக்கும் போவது என்பது என்ன செய்தி என்று விளங்கவில்லை. இதிலே ஒரு முக்கிய கருத்து.. இந்தியாவிலே இதைப் பற்றிச் சொல்கிறார்கள். இலங்கையிலே யாராவது ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனே உடனடியாகச் செய்ய வேண்டியது 2 காவடி எடுப்பார்கள். ஒன்று தலதா மாளிகைக்கு. மற்றொன்று புதுடில்லி. இது எங்களுக்கு விளங்கவில்லை. புதுடில்லியிலே என்ன கோவில் கட்டி வைத்திருக்கிறார்களா? அங்கே என்ன குளித்து அபிசேகம் செய்யப் போகிறார்களா? அல்லது நிவேதனம் படைக்கப் போகிறார்களா? அல்லது அங்கே வரம் அள்ளப் போகிறார்களா? எங்களுக்கு உண்மையிலே விளங்கவில்லை. இந்தியாவில் உள்ள பத்திரிகைகளே கேலியாக எழுதக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மகிந்தர் புதுடில்லிக்குக் காவடி எடுத்து முக்கியமான தலைவர்மார்களைச் சந்தித்த பிறகு மகிந்தர் இது தொடர்பில் எதையும் பேசவில்லை என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதேவேளை இந்தியாவின் சார்பாக அதன் வெளிவிவகாரப் பேச்சாளர் திரு. சியாம் சரண் அவர்கள் பத்திரிகையாளர் மகாநாட்டில் சொல்லப்பட்ட கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல நான் விரும்புகிறேன். அந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டிலே 3 முக்கிய கேள்விகள் அவரை நோக்கி எழுப்பப்பட்டன. 1. சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய கருத்து என்ன? 2. நீங்கள் 5 ஆவது இணைத் தலைமை நாடாக ஒப்புக்கொள்ளத் தயாராகவிட்டீர்களா? 3. சிறிலங்காவுக்கும் புலிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விகள் கேட்கப்பட்டபோது, சியாம் சரண் சொன்ன மறுமொழி ஒன்றே ஒன்று, "நாங்கள் இதுபற்றி ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். இலங்கை சிங்கள அரசு, புலிகளோடு பேச வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அந்த மூன்று கேள்விகளையும் புறந்தள்ளியிருப்பதனுடைய பரிமாணத்தை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். இந்த 3 கேள்வியையும் தூக்கிக் கொண்டுதான் காவடி எடுப்பதற்காக மகிந்தர் அங்கு சென்றார் என்பதும் கடைசியாக வெறுங்கையோடு கொச்சிக்குப் போய் குருவாயூரப்பனை வணங்கிவிட்டு வருவதுதான் அவர் செய்யக் கூடிய பணி என்பதும் இதுக்கு ஒரு ஜனாதிபதி, 8 அமைச்சர். 25 உத்தியோகத்தர் என்று அரைவாசி அரசாங்கத்தைத் தூக்கிக் கொண்டு காவடி எடுக்க வேண்டிய அவசியம் என்ன?என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் இப்போது சொல்லப் போகிற செய்தி.. இந்தியா எங்கள் பக்கம் மாறிவிட்டது என்பது அல்ல. இந்திய அரசினுடைய நிலைப்பாடு பற்றி நாங்கள் ஏற்கனவே மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். இப்போது உண்மையிலே சிறிலங்கா அரசுடன் அவர்கள் பொருண்மியக் கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சில ஏற்பாடுகளைச் செய்வாதாக அறிந்தோம். அதுபற்றி நாங்கள் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளப்போவது இல்லை. அது அரசுக்கும் அரசுக்கும் உள்ள செய்தியாக இருக்கிறது. வைகோ, வீரமணி ஐயா, நெடுமாறன் ஐயா, ராமதாஸ் அவர்கள் சொன்னது போல் எதுவும் வக்கற்ற நிலையில் எல்லாவற்றுக்குமான இறுதித் தீர்வாக இந்தியாவைப் பயன்படுத்த வெளிக்கிடுவது என்பது இந்தியாவை இளிச்சவாயர்கள் என்ற நிலைக்குக் கொண்டு வந்துவிடுவது என்பதை இந்தியர்களே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் இப்போது நாங்கள் சொல்லக் கூடிய செய்தியாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளும், எங்களுக்கு எதிரான பத்திரிகைகளும் கூட தவிர்க்க முடியாமல் உண்மையை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்குப் பாருங்கள், இந்து பத்திரிகை. உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் இந்துப் பத்திரிகைக்கும் எங்களுக்கும் உள்ள உறவு. நீண்டகாலமாக ஒரு மேட்டுக்குடி செய்தியைத் தாங்கிவரக்கூடிய பத்திரிகை, தமிழ் மக்கள் தொடர்பாக மிகவும் ஒரு மூன்றாம் தரமான நிலைப்பாட்டை எடுப்பதும் எமது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதும் எங்களுடைய சாவுகளை, இறப்புகளை கணக்கெடுக்கிற மோசமான செயலைச் செய்து வந்த இந்து பத்திரிகை அதனுடைய நிருபர் நிருபமா சுப்பிரமணியன், அவர் இப்போது இந்தியாவில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் இப்போது ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தச் செய்தி எழுதப்பட்டது 2 நாட்களுக்கு முன்னர். அதனுடைய தலைப்பு சிறிலங்காவும் இந்தியாவும்; மிக நெருங்கி- மிக தொலைவில்.. நாங்கள் சொல்லிக் கொண்டுவருவதை அவர் சொல்லியுள்ளார். "என்ன செய்ய முடியாது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த குழப்பமாக இருக்கிறது" இதுதான் மகிந்தருடைய பயணத்தினுடைய நிலைப்பாடு. மகிந்தர் சென்று வந்த பின்னால் இந்தியா இன்னும் குழம்பியிருப்பதாக நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இதிலே நிருபமா சுப்பிரமணியம் சொல்லக் கூடிய முக்கியச் செய்திகளை உங்களுக்காக தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன். சில செய்திகள் உண்மையாக வெளிவருகின்றன. "90-களுக்குப் பின்னால் இந்தியா இலங்கை விடயத்தில் நேரடியாக தலையிடாமல் ஒரு கை கழுவிவிட்ட நிலையில் மறைமுகமான ஈடுபாட்டைக் கொண்டதாகவும் குறிப்பாகச் சந்திரிகாவின் செயற்பாட்டின் போது புலிகளையும் தமிழ் மக்களையும் பிரிப்பதற்கான ஏற்பாட்டிலே ஒருவகையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அதேபோல் தவிர்க்க முடியாமல் இந்தியா எதிர்பார்க்காத ரணில் வென்றபோது அமைதி முயற்சியை என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்க்கவும் முடியாமல் ஆதரிக்கவும் முடியாமல் தத்தளித்ததாகவும் எதிர்த்தால் போரைத் தாங்கள் ஆதரிக்கிறோம் என்ற பயத்திலே எதிர்க்காமல் இருந்ததாகவும்" ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நிருபமா மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அப்பால் அவர் சொல்லக் கூடிய செய்தி, இப்போது உண்மையிலே நடக்கக் கூடிய விசயம் என்னவென்று சொன்னால் ஒரு செய்தியை அவர் வெளியே கொண்டு வந்திருக்கிறார். நாங்கள் ஏற்கனவே அதைச் சொல்லி இருக்கிறோம். "ரணிலுடைய காலத்திலே அமைதி முயற்சிக்கு எதிரான சக்திகளோடு இந்தியா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பாக ஜே.வி.பி.யோடு" என்று செய்தி வந்திருக்கிறது. இதுபற்றி நாங்கள் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இன்று பாருங்கள்...இத்தகைய வெளிப்பாடுகள் எல்லாம் இந்திய மக்கள் முன்னால் வெளிப்படையாக வைக்கப்படுகின்றன. உண்மையிலே இந்தியாவுக்கு ஒருவிதமான மனநிலை இருக்கிறது. அது பெரியண்ணன் மனநிலை என்று சொல்வார்கள். தன்னைச் சூழ உள்ளவர்கள் தன்னைக் காணவந்து மதித்துப் போனால் அது அவர்களுக்கு ஒரு திருப்தி. ஊர்ச் சண்டியர் என்று கேள்விபட்டியிருப்பியள். அதுபோல இந்தியாவுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கிறது என்பது பத்திரிகைகளுடாக வெளிப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்தியா தெளிவாகச் சில செய்திகளைச் சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்தியா, இணைத் தலைமையாகப் பதவியேற்றாலும் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்தாலும் அல்லது வேறு எந்த வகையான உதவியையும் இலங்கைக்குச் செய்ய முற்பட்டாலும் இந்த முடிவுகளை மேற்கொள்ளும் முன்னால் மகிந்தருக்கு ஒன்றை தெளிவாகச் சொல்ல வேண்டும்- ஜே.வி.பி., பௌத்த பிக்குகளை அடக்கி வைத்து தெற்கே அரசியல்வாதிகளுக்கு உண்மையைச் சொல்லி இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒற்றையாட்சி முறை உதவாது; இணைப்பாட்சி முறையிலே தீர்க்க முடியும்- அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று மிகக் கடுமையாகத் தெளிவாக மகிந்தருக்குச் சொல்லச் சொல்லி நிருபமா சுப்பிரமணியன் எழுதி இருக்கிறார். இந்த ஆதரவை வைத்துக் கொண்டு தமிழீழத்துக்கு இந்தியா ஆதரவு என்று சொல்லிக் கொள்ள முன்வராவிட்டாலும் கூட நியாயமான உண்மைகளை மறைக்க முடியாததாக இருக்கிறது என்பதை நாங்கள் இன்று உணரக்கூடியதாக இருக்கிறது. இன்று உள்ள நிலைமை மகிந்தர் என்ன செய்யப் போகிறார்? சரத் பொன்சேகாவின் கைப்பாவையாகி போரைத் தொடங்கப் போகிறாரா? அல்லது மேற்குலகமும் இந்தியாவும் சொல்வதைப் போல் ஓஸ்லோவுக்குப் போகப் போகிறாரா? என்ற கேள்வி இன்றைக்கு எழுந்து இருக்கிறது. மகிந்தர் ஓஸ்லோவுக்குப் போகப் போகிறார் என்று எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால் வேறுவழியில்லை என்பதற்கல்ல.. முழு அளவிலான போரைத் தமிழ் மக்கள் மீது தொடுப்பதற்கு அவருக்குக் கால அவகாசம் ஆகக் குறைந்தது 3 மாதமாவாவது வேண்டும் என்று சொல்லிப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக எழுதுகிறார்கள். ஆகவே ஒருவேளை, ஓஸ்லோ போகக் கூடிய முடிவை மகிந்தர் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜே.வி.பி.யை அவர் இந்தியா கூட்டிக் கொண்டுப் போக விரும்பியதே இந்தியாவினது அழுத்தத்தினூடாக ஜே.வி.பி.க்கு ஒரு பாடத்தைப் படிப்பிக்கலாம் என்பதற்காக. இதுவரை காலமும் போராடுகிற அமைப்புக்குத்தான் கூடிய அழுத்தத்தை உலகம் கொடுத்து வந்தது. எங்களைப் பொறுத்தவரை அப்படித்தான் கொடுத்தார்கள். இந்த அழுத்தங்கள் எங்களுக்குப் பயன்படாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இம்முறைதான் சிறிலங்காவின் வரலாற்றில்-தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் சமமான அழுத்தம்- புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுதுகிறார்கள். இந்த சமமான அழுத்தமே ஒருவகையான புதிய பரிணாம மாற்றம்தான். புலிகளைப் பொருத்தவரையில் அழுத்தம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் யாரைத் தாங்கி இருக்கிறோம்? எங்களுக்கு எந்த அழுத்தமும் பயன்படாது. ஆனால் சிங்கள அரசைப் பொறுத்தவரையில் அதனது நாளாந்த உயிரே மேற்குலகத்தின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது. இந்தியாவின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது. ஆகவே அழுத்தம் என்பது எவருக்கு அதிகம் பயன்படும் என்பது வரக்கூடிய நாட்களிலே வரலாற்றிலே தீர்மானிக்கப்படப்போகக் கூடிய செய்தியாக இருக்கிறது. ஆகவேதான் நாங்கள் சொல்லுகிறோம். இன்று எங்களைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக ஒரு அருமையான சூழல் தமிழ் மக்கள் சிந்திய குருதி காரணமாக, மாமனிதர் சிங்கம் ஐயா சிந்திய குருதி காரணமாக மாறி வருகிறது. சிங்கம் ஐயா இறக்கவில்லை. எங்கள் கூடவே வாழ்கிறார் என்று கூறிக்கொண்டு வருகிறோம். அந்த வார்த்தையைத்தான் மதிப்பிற்கும் அன்பிற்குரிமுரிய ரோமோ அவர்களது வார்த்தைகளிலே கூறினோம். (தொடரும்) நன்றி புதினம் - sri - 01-10-2006 நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம்: மக்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு! நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர். புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியா, பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை: சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசவிக், பொஸ்னியாவில் கொடூரமான மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கு உத்தரவிட்ட கொடூர மிலேச்சத்தனமான இராணுவத் தளபதி இன்னமும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் ராட்கோ மிலேடிக் போன்றோர் வரிசையில் இலங்கையில் இடம்பெறக் கூடிய அரசியல் இராணுவத் தலைமைகள் பற்றியும் நாம் பேச உள்ளோம். சாமியே சரணம் ஐயப்பா என்று இந்தியாவுக்கு காவடி எடுத்துவிட்டு அது பயனளிக்காத நிலையில் மகிந்தரால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மங்கள என்று சொல்லக்கூடிய அமங்களமான ஒருவருடைய வாய் வார்த்தைகள் பற்றியும் அவரது அமெரிக்க செயற்பாடு பற்றியும் சொல்ல உள்ளோம். எவருடைய நலனுக்கும் இருப்புக்கும் கேடு விளைவிக்காமல் எங்களுடைய நலன்களை முன்னிறுத்தி எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறோம் என்பதுதான் எங்களின் செய்தி. நாங்கள் தேவையற்ற எதிர்ப்புகளை இராஜசதந்திர வழிகளுடாக மென்மைப்படுத்தி எங்களது விடுதலைப் பாதையை நாங்கள் வேகப்படுத்த முயலுகிறேமே அல்லாமல் எந்தவிதமான சர்வதேச மற்றும் இந்திய அரசியலில் எதிலும் தலையிடாமல் நாங்கள் செல்லும் புதிய பாதையில் எங்களைச் செல்ல விடுங்கள் என்பதுதான் எங்களது கருத்து. பயங்கரவாதம் என்ற சொல் இன்று உலகத்தைப் பிடித்து பேயாக ஆட்டிக் கொண்டு இருக்கிறது. இம்முறை மாவீரர் நாளில் தலைவர் அவர்கள் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்து இருந்தார்கள். "பயங்கரவாதம் என்ற சொற்பதத்துக்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழியில் நடத்தப்படுகிற நியாயமான அரசியல் போராட்டங்களும் பயங்கரவாதமாக திரிபுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கவராத சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறைக்கு அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது" - என்று தலைவர்கள் அவர்கள் கூறியிருந்த கருத்தின் விளைவை சொல்ல விரும்புகிறேன். அண்மைக்காலத்தில் உலகத்திலே இந்தக் கருத்துகள் உக்கிரமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தென் அமெரிக்காவிலே ஏற்பட்டிருக்கிற புதிய மாற்றங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 2005 ஆம் ஆண்டு யூன் மாதம் கியூபாவிலே உள்ள ஹவானாவின் மாநாட்டு மண்டபத்தில் 700-க்கும் மேற்பட்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். அந்த இடத்தில் லத்தீன் அமெரிக்காவில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பும் தங்களுடைய சான்றுகளை முன்வைத்து எது பயங்கரவாதம் என்று பேசினார்கள். அங்கே முக்கியமாகச் சொல்லப்பட்டக் கருத்து என்னவென்று சொன்னால், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு மக்கள் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டி இருக்கிறார்கள் என்ற செய்தியை நாங்கள் அறிந்தோம். அந்த முன்னணி இன்று தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் பயங்கரவாதி என்ற கருத்தை அந்த முன்னணிக்கு ஊடாக நாம் அறியலாம். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்...லத்தீன் அமெரிக்காவின் பின்லேடன் என்று சொல்லப்படக் கூடிய ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை இன்று அமெரிக்கா தன்னுடைய நகரங்களிலே வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. வெனிசூலாவில் பல பயங்கரவாதச் செயல்களைச் செய்து அங்கிருந்து தப்பியோடி அமெரிக்காவில் இன்று இருக்கக் கூடிய அந்தப் பயங்கரவாதியை தங்கள் நாட்டுக்குத் தருமாறு வெனிசூலா அதிபர் அமெரிக்காவைக் கேட்டிருக்கின்றார்கள். அவர் பெயர் லூயிஸ் பொசாடா கர்லஸ் என்று அழைக்கப்படுகிறார். அவர் 1976 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கியூபாவின் விமானம் ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்து 73 பொதுமக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். அவர் பயங்கரவாதி. யார் பயங்கரவாதி என்று தோலுரிக்கிற கனி ஒன்று உலகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதை நாங்கள் கவனத்திலே கொள்கிறோம். அந்த வகையில் இந்தத் தொடர்பாடல் துறையும் வல்லாண்மை சக்திகளால் திரிபுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுடைய விடுதலைப் போராட்டம் மிக நீண்டகாலமாக உரிய இடத்தை அடையாமல் இருப்பதற்கு இந்தத் தடைகளே காரணமாக இருந்தது. இன்று தென் அமெரிக்காவில்- டெலி சவுத் என்று சொல்லக் கூடிய தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளினுடைய ஒரு அணியாக அர்ஜென்ரீனா, கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் தங்களுக்கான தொலைக்காட்சியை அதாவது தென் அமெரிக்காவின் சி.என்.என். என்று சொல்லக் கூடியதை உருவாக்கி இருக்கிறார்கள். இதை புதிய செய்தியாக நாம் பார்க்கிறோம். இந்த அணியில் கியூபா, வெனிசூலா, அர்ஜென்ரினா இறுதியாக பொலிவியா சேர்ந்திருக்கிறது. பொலிவியா பற்றி ஒரு சில விடயங்கள் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். பொலிவியாவின் வரலாறு ஒரு அதியசமான வரலாறு. மூன்றில் இரண்டு பகுதி மக்கள் செவ்விந்திய மக்கள். அவர்கள் நீண்டகாலமாக அடிமைப்பட்ட நிலையே வாழ்ந்தார்கள். 70 வீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நபரின் கைகளில் சிக்கி எண்ணெய் வளமெல்லாம் அவர்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டன. இன்று தென் அமெரிக்காவின் 12 நாடுகளிலே பாரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுவருவதை உலகம் கவனித்துக் கொண்டு வருகிறது. தேர்தலுக்கு ஊடாகவே மாற்றங்களைச் செய்கிறார்கள். எந்த வகையிலும் பயங்கரவாதச் செயல் என்று அமெரிக்கா சொல்ல முடியாத வகையில் தேர்தலுக்கு ஊடாக மாற்றங்களைச் செய்து வருகிறார்கள். யூவோ மார்ஸ் என்று சொல்லக் கூடிய இன்று கூட வாடகை வீட்டு அறையில் வாழ்கிற, எந்தவிதமான வங்கிக் கணக்கும் இல்லாத ஒரு சாதாரணமான செவ்விந்திய மனிதர் இன்று பதவிக்கு வந்திருக்கிறார்கள். தென் அமெரிக்காவில் 200 வருடத்துக்குப் பின்னர் வந்திருக்கக் கூடிய ஒரு செவ்விந்திய ஜனாதிபதி என்று அவர் அழைக்கப்படுகிறார். அவர் சார்ந்த அய மாரா என்ற குடியினுடைய கொள்கைகளை அவர் முன்னால் வைத்துப் பேசுகிற போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் சொன்னார், "என்னுடைய கோட்பாடு திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, சோம்பி இருக்கக் கூடாது, அதேவேளை அடிமையாக இருக்க கூடாது" என்று சொல்லி கருத்தை முன்வைத்திருக்கிறார். வெனிசூலா, கியூபா, பொலிவியா நாடுகளுக்கு ஊடாக ஒரு புதிய கீழைத்தேய தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு புதிய அணியை அவர்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் எவருக்கும் எதிராக என்று இல்லாவிட்டாலும் தங்கள் நாடு, தங்கள் வளங்கள் தங்களுக்கு உரியது என்ற அடிப்படையிலே உருவாகி வருகிறார்கள். வெனிசூலாவில் 1998 ஆம் ஆண்டிலிருந்து மிகப் பெரிய புரட்சியே நடந்து கொண்டு வருகிறது. அங்கே ஒரு சாதாரண இராணுவ உத்தியோகத்தராக இருந்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற சாவோசினுடைய நடவடிக்கைகள் மிகப் பெரிய எழுச்சியை உலகம் முழுக்க உருவாக்கி இருக்கின்றன. உலகத்திலே மிகக் கூடிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடு- மிக அற்புதமாக அந்த எண்ணெய் வளத்தை தமது வறுமையான மக்களுக்காக- அந்த எண்ணெய் வளத்தின் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்து மிக அற்புதமாக ஒரு பொருண்மியத்தை அவர் உருவாக்கிக் கொண்டு வருகிறார். ஏழை நாடுகளுக்கு எண்ணெய்யை அவர் குறைந்த விலையில் விற்பதற்குக் கூட முன்வந்திருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கியூபாவுக்கு எண்ணெயை மிகக் குறைந்த விலைக்கு விற்றுக் கொண்டு வருகிறார்கள். இப்படியாக அந்த நாடுகள் எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லக் கூடிய ஒரு நாடாக இன்று வெனிசூலா மாறியிருக்கிறது. கியூபாப் புரட்சி நடந்தது 1959 ஆம் ஆண்டு. தொடக்கத்திலே அந்தப் புரட்சியை நசுக்குவதற்கு இராணுவ ரீதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு பே ஓப் பிக்ஸ் என்று சொல்லக் கூடிய அந்த வளைகுடா படையெடுப்புக்குப் பின்னால் இராணுவ ரீதியான செயற்பாடுகள் தோற்றதற்குப் பின்னால் பொருண்மிய ரீதியான முற்றுகை ஒன்று இடப்பட்டு பல்வேறு வகையிலே சொல்லப்படமுடியாத தாக்குதல்களை மேற்கொண்டு இலக்குகள் பொருண்மிய ரீதியாக அடையாளம் காணப்பட்டு 40 வருட காலமாக- உலகத்திலே மிக நீண்ட பொருண்மிய முற்றுகைக்குள்ளே அகப்பட்ட கியூபா நாடு, இன்று மெல்ல மெல்ல தலைநிமிர்ந்து ஒரு காலத்திலே சய தேசிய உற்பத்தியைக் கொண்டிருந்த நாடு இன்றைக்கு 7 விழுக்காடு அளவிற்கு வருட உற்பத்தி வளர்ந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம். கியூபா எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கிற. நாளை நாங்கள் விடுதலை பெற்றாலும் கூட தொடக்கத்திலே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக்கூடும். இவற்றைத் தாண்டுவதற்காக வெறுமனே ஆர்வம் மாத்திரமல்லாமல் ஆக்கபூர்வமாகச் செயற்படக் கூடிய அணியே உலகத்தில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. கியூபாவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது எங்களுக்கு அதிசயமாக இருக்கிறது. கியூபாவில் ஒரு அற்புதமான மக்கள் நலன் சார்ந்த பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். தங்களது வரவு - செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 68 விழுக்காட்டுக்கு மேல் கல்வி, சுகாதாரம், சமூக நலன் மற்றும் விஞ்ஞான நலன்களுக்காக ஒதுக்குகிறார்கள். அதனுடைய விளைவாக உலகத்திலே இன்றைக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம் மிகுந்த ஒரு அற்புதமான மருத்துவத் துறை கியூபாவிலே இருப்பதை உலகம் முழுமைக்கும் ஏற்றுக் கொள்வார்கள். 165 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற அளவிலே கியூபாவில் இன்றைய நிலை இருக்கிறது. ஏறத்தாழ 12 ஆயிரம் விஞ்ஞானிகள்- அவர்களிலே 15 விழுக்காடு கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்; 210 ஆய்வு நிறுவனங்கள். ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் மேலானோர் அங்கே பணி செய்கிறார்கள் என எண்ணிப் பாருங்கள். அதைவிட முக்கியமானது உலகத்திலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைந்த- சிறுவர் இறப்பு விகிதம் 6.2 விழுக்காடு உடைய அந்த நிலையும் ஆயுள் நிலை வாழ்நிலை எதிர்பார்ப்பு 76 ஆகவும் உள்ள நாடாக கியூபா இருக்கிறது. இலங்கையில் கூட 73 ஆக இருக்கிறது. இப்படியாக கியூபாவில் புதிய அணியை உருவாக்கி புரட்சியை நடத்தி அற்புதமாக ஒரு மாற்று அணியை உருவாக்கிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டு வருகிறார்கள். பொலிவியாவைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய செய்தி போராளிகள், பொதுமக்களுக்கு உள்ளது. 1967 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் நாள்தான் கொலைக் குழுக்களால் சே கொல்லப்பட்டார். இந்த உலகத்திலே நாங்கள் இப்போது தனித்துவிடப்படவில்லை. எங்களுடைய அற்புதமான, அன்புக்குரிய பொதுமக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்- நாங்கள் தனித்துவிடப்படவில்லை. உலகமே தன்னுடைய வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் போராடிக் கொண்டு இருக்கிறது. அங்கே புதிய புதிய அணிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. நாளை நாங்களும் விடுதலைப் பெற்றுச் செயற்படும்போது எங்களுக்கு உதவ- கரங்களைக் கொடுப்பதற்கு- எங்கள் மனங்களைத் தொடுவதற்கு- எங்கள் பசியைத் தீர்ப்பதற்கு நாடுகள் உலகிலே உள்ளன. நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை. வாழ்வின் இருப்புக்காக வரலாற்றை எங்களின் மக்களுக்காக நாம் முன்வைக்கிறோமே அல்லாமல் வேறு எந்த வகையான அரசியலும் இந்த இடத்திலே இங்கே இல்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். அதேவேளையில் இன்னொரு முக்கிய செய்தியை இங்கே சொல்ல வேண்டும். அண்மையிலே இந்தியாவுக்குப் பயணம் செய்து அங்கே உறங்கிக் கிடந்த தமிழ் மக்களின் உணர்வைத் தட்டிவிட்ட பணியைத் தவிர வேறு எதையும் மகிந்தர் செய்யவில்லை. அது தோல்வியில் முடிந்ததுக்குப் பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக- மப்பு பிடித்த மந்தி மரத்துக்கு மரம் தாவுவது போல- இப்போது அவர் தான் போகவில்லை. ஏனென்றால் இவர் போனால் வரவேற்க அங்கே யாரும் தயாராக இல்லை. இவரைச் சந்திப்பதற்கு புஸ் தயாராக இருப்பார் என்று நான் நம்பவில்லை. தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் என்று சொல்லக் கூடிய ஒரு கத்துக்குட்டி அமைச்சர்- வெளிநாடு என்றால் என்னவென்று அரசியல் ரீதியாக-இராஜதந்திர ரீதியாக எந்தவிதமான அனுபவமும் அற்ற- உள்நாட்டிலே கீழ்நிலை அரசியல் நடத்தி அந்த செல்வாக்கின் பயனாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீரவை, அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே அவர் கடந்த சில நாள்களாக திருவாய் மலர்ந்து பல செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார். அந்தச் செய்திகளைக் கேட்கிறபோது எங்களுடைய இரத்தம் கொதிக்கிறது என்று சொல்லவில்லை. எங்களுடைய மனங்களிலே மிகப் பெரிய சோகமும் மிகப் பெரிய சினமும் கிளர்ந்தெழுகின்றன. மங்கள சமரவீர- முக்கியமாக அமெரிக்காவில் உள்ள புலனாய்வு அமைப்புகளையும், பயங்கரவாத எதிர்ப்பு இயக்கங்களையும் பல்வேறு இயக்கங்களையும் சந்தித்தது மட்டுமல்லாமல் அவர் அண்மையில் "வாசிங்டன் போஸ்ட்" பத்திரிகைக்கும் மிகப் பெரிய செய்தி ஒன்றை அளித்திருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்னர் மங்கள சமரவீர சொல்லியிருக்கும் கருத்துகளை எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். "நவீன பயங்கரவாத உலகத்தின் தந்தையாக" எமது விடுதலைப் போராட்டத்தை மங்கள சமரவீர வர்ணித்திருக்கிறார். அதைப் போல் "மிகக் கொடிய கொலைகார பொருள்முறை அமைப்பைக் கொண்ட அல்-கொய்தா அமைப்பைவிட மிக பாரதூரமான ஒரு இயக்கம்" என்று அமெரிக்காவில் போய் சொல்லி கோள் மூட்டுகிற வேலையைப் பார்த்து இருக்கிறார். எங்களைப் பற்றி பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசாங்கம் சொல்லக் கூடிய இறுதி செய்தியாக இருக்கிறது- இதுதான் உண்மையான செய்தி என்பதையும் எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். அமெரிக்காவில் சொல்லி இருக்கிறார் "எங்களுக்குத் தேத்தண்ணி தந்தால் போதாது. ஆதரவு தந்தால் காணாது. நாங்கள் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நீங்கள் செய்ய வேண்டும்" என்று கேட்பதற்காக இங்கே இருந்து அமெரிக்காவுக்குப் போயிருக்கிறார். அங்கே என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாவிட்டாலும் கூட இப்போது சில செய்திகளை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எங்கள் மக்களின் வாழ்வும் இருப்பும் தொடர்பான முக்கியமான செய்தி என்று நினைக்கிறேன். இந்தச் செய்தியை மக்கள் முன்னிலையில் தெளிவாக வைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அண்மைக்காலமாக எங்கள் பகுதிகளில் கொலைகள் அரங்கேறிக் கொண்டு வருகின்றன. முக்கியமாக இளைய தலைமுறை, அறிவாளர்கள் குறிபார்த்து இலக்கு வைக்கப்படுகிறார்கள். இந்தத் தேசத்தினது குருத்துகளைக் கருக்குவதிலே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடப்பதை நாங்கள் பார்க்கிறோம். இந்த மாதிரியான செயற்பாடுகளுக்குக் காரணமாக இருக்கக் கூடிய கொலைக் குழுக்கள் பற்றி உலகத்திலே மிக சோகமான அவலமான வரலாறு ஒன்று இருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளிலே குறிப்பாக கொலம்பியா, வெனிசூலா, சிலி, கியூபா போன்ற நாடுகளிலே 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளிலே அமெரிக்க சி.ஐ.ஏ. துணையோடு அமெரிக்க இராணுவ நிலைகளிலே பயிற்றுவிக்கப்பட்ட கொலைக் குழுக்களின் தோற்றங்களைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். வரலாற்றிலே அண்மைக்காலமாக சி.ஐ.ஏ.வின் இரகசியக் கோப்புகள் யாவும் அமெரிக்காவிலே வெளியிடப்பட்டு பல்வேறு செய்திகள் பகிரங்கமாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஏதோ கண்டுபிடித்த செய்திகள் அல்ல. உதாரணமாக 70 ஆம் ஆண்டுகளில் கொண்டோர் பிளான் என்று சொல்லக் கூடிய கேசிங்கரின் அடிப்படையில் தென் அமெரிக்காவில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களைக் கொல்வதற்கான பாரிய திட்டம் ஒன்று குழுக்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாற்றை நாங்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம். அந்த வரலாற்றை அமெரிக்கா இப்போது கைவிட்டதாக நாங்கள் நம்பிக் கொண்டு இருக்கிறோம். இப்போது மங்கள சமரவீர அங்கே போய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்- எங்கள் மண்ணிலே கொலைக் குழுக்களினது கைங்கர்யங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இந்தக் கைங்கர்யங்களை தொடர்ந்து நிகழ்த்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற அந்த நிலையிலேயும் ஒருகால கட்டத்தில் சமூக நீதியைக் கதைக்கிற இந்த உலகம், நிச்சயமாக இந்த கொலைகாரக் குழுக்களைச் செயற்படுத்தி அனுமதித்திருக்கக் கூடிய சரத் பொன்சேகா அல்லது மகிந்த ராஜபக்ச போன்றவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தோற்றுவித்து- சிறைப்பிடித்து- விசாரிக்கப்பட வேண்டிய கட்டத்துக்கு தள்ளபடப் போகிறார்கள் என்பதையும் அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே இந்த முறை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லுவது போல்- மங்கள சமரவீர எந்த வகையான கோள்மூட்டலை அமெரிக்காவில் செய்தால் என்ன? எங்கு செய்தால் என்ன? ஒரு புதிய நிலைப்பாடு இன்றைக்கு எங்கள் போராட்டம் பற்றி உலகத்திலே உருவாகிக் கொண்டு இருக்கிறது. அந்த நிலைப்பாடு என்னவென்று சொன்னால்- போதும் போதும் என்றாகிவிட்ட இந்த வன்முறைக்கு வழியாக ஒரு புதிய தீர்வை இந்த உலகம் முன்வைக்காவிட்டால்- அந்தத் தீர்வை நாங்களாக ஏற்படுத்திக் கொள்வதை உலகம் தடுக்க மாட்டார்கள் என்ற நிலையிலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செய்தி. ஆக, இந்த கொலைக் குழுக்களினது அரங்கேற்றங்கள் எங்களுக்கு லத்தீன் அமெரிக்கச் சம்பவங்களை உணர்த்துகின்றன. அதே லத்தீன் அமெரிக்க நாடுகள்தான் இந்தக் கொலைக் குழுக்களை எல்லாம் விரட்டி புரட்சிகளை நடத்தி ஒரு புதிய அணியை உருவாக்கி இன்று உலத்திலே ஒரு புதிய சக்தியாக மாறியிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். அண்மைக்காலத்திலே அரசியல் ரீதியான மாற்றங்களை தென் அமெரிக்கா நாடுகள் நிகழ்த்துவதை உலகம் பதிவு செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் நாங்கள் பார்க்கும் போது நிச்சயமாக ஆசியாவில் கூட இந்த அடக்குமுறையாளர்களுக்கு வல்லாண்மை நாடுகள் தொடர்ந்து உதவி செய்தால் அதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வுகள் நடந்திருப்பதாக நாங்கள் பார்க்கிறோம். ஆகவே அன்பிற்குரியவர்களே! நாங்கள் தனித்துவிடப்படவில்லை. ஆனால் எங்களை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சேகுவேராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம். 40 வருடகாலமாக மிகப் பெரிய நீண்ட பொருண்மிய அடக்குமுறைகளுக்கு உள்ளே இருந்தும் ஒரு நாட்டால் வாழமுடியும் என்று சொன்னால்- அதன் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்த முடியாது- அதன் கடல் போக்குவரத்து மிகக் கூடுதலான செலவைக் கொடுக்கிறது- இப்படி எந்த வகையான உறவும் உதவியும் இல்லாத நிலையில் கியூபாவுக்கு இன்றைக்கு சீனா உதவி செய்கிறது- வெனிசூலா உதவி செய்கிறது. இன்னும் பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன. ஆகவே, நீடித்து நிற்கும் விடுதலைப் போராட்டத்துக்கு உதவிகள் தாமாக வந்து சேரும் என்பதைத்தான் இன்று நாம் முக்கிய செய்தியாக கூறுகிறோம் என்றார் கா.வே.பாலகுமாரன். நன்றி புதினம் - sri - 01-18-2006 அமெரிக்க தூதுவரின் உரை: விடுதலைப் புலிகள் கருத்து சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (14.01.06) புலிகள் குரல் வானொலியின் அரசியல் அரங்கம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. பாலகுமாரன் ஆற்றிய உரை: விடுதலைப் போராட்டம் என்பவை சர்வதேச நிலைப்பாட்டோடு சம்பந்தப்பட்டவை என்பதும் அது தவிர்க்க இயலாதது என்பதும் எல்லோரும் அறிந்ததே. எங்களுடைய விடுதலைப் போராட்டம் கூட சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலினூடாகத்தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் கரு, அடிப்படை ரீதியான செயற்பாடு குடியேற்றவாத காலத்தில் உருவாக்கப்பட்டு பனிப்போர் காலத்திலே வளர்ச்சியடைந்து தற்போதைய புதிய உலக ஒழுங்குக்குள்ளும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு வித்தியாச தன்மையை நீங்கள் பார்க்கலாம். எந்த ஒரு நிலையிலும் நாங்கள் ஒரு பக்கச் சார்பெடுக்காமல் விடுதலைச் சார்போடு செயற்பட்டிருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் இந்தியச் சார்பாக நாங்கள் செயற்பட்டதாக தோற்றப்பாடு இருந்தபோதும் கூட அதுவும் அவ்வாறாக இல்லை என்பது விரைவில் நிரூபிக்கப்பட்டது. இன்று சர்வதேச சூழ்நிலையில் எங்களது நிலைப்பாடு தெளிவாக வைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஜே.ஆர், அமெரிக்கா என்பக்கம் என்று சொன்னார். அதன் பின்னர் சந்திரிகா, இந்தியா என்பக்கம் என்று சொன்னார். இப்போது மகிந்தர் தான் யார் பக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என எல்லோரையும் தன் பக்கம் எனச் சொல்லிக்கொண்டு அந்த முயற்சியில் படுதோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் சில அறிக்கைகள் வெளிவந்துள்ளன. கொழும்பில் உள்ள சில இனவாதப் பத்திரிகைகள் அவற்றை பாராட்டி புகழ்வதையும் நாங்கள் பார்த்துக்கொண்டு வருகிறோம். உதாரணமாக, ஐலன்ட் பத்திரிகையின் தலைப்பிலே அமெரிக்க தூதுவரின் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராட்டும் வரவேற்பும் கொடுக்கப்பட்டிருந்ததை நாம் பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இது தொடர்பாக அரசியல் எதுவும் பேச விரும்பாத போதும் சில கருத்துகளை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றோம். அண்மையில் ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி இங்கு வந்து சென்றதற்குப் பின்னால் அமெரிக்காவின் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட்டும் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக சில கருத்துகளை முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது என்று அகாசி சொன்னார். சிறிலங்கா இராணுவம் நல்ல வலிமையான இராணுவம் என்றும் அதற்கு பாராட்டும் நற்சான்றிதழையும் ஜெப்ரி லான்ஸ்டெட் வெளியிட்டுள்ளார். இது என்னவென்று எங்களுக்குப் புரியாததாக இருந்தாலும் கூட அமெரிக்கா சென்று வந்த மங்கள சமரவீரவுக்கு ஒரு ஆறுதல் பரிசாக, இந்த மாதிரியான அறிக்கையை தூதுவர் ஊடாக அமெரிக்க அரசாங்கம் கொடுத்திருக்க முற்பட்டிருக்கக் கூடும் என்று சில பேர் கருதுகிறார்கள். அது எவ்வாறாக இருந்தாலும் அமெரிக்க தூதுவரின் உரையிலே இரண்டு வரிகளை நாங்கள் இங்கே கவனத்தில்கொள்கிறோம். 1. தங்களுடைய மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கக் கூடிய தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்கிறார். அவர் எங்களைத்தான் கேட்கிறார். 2. தங்களுடைய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய முதலீடுகளையும் தொழிற்சாலைகளையும் வாய்ப்புக்களையும் புறந்தள்ளும் தலைவர்கள் எவ்வாறானவர்கள் என்றும் ஒரு கேள்வி கேட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருண்மிய சரிவு பற்றி இவ்வாறு அவர் சொல்லியிருக்கக் கூடும். ஏனென்றால் அமெரிக்கா மிக நீண்டகாலமாகவே சொல்லி வருகிறது..எங்களுடைய அக்கறை பொருண்மிய நலன் பற்றியதுதான் என்று. அதனால் அதைப் பற்றி நாங்கள் கதைக்க விரும்பவில்லை. அவர்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வரக் காரணம் அண்மையிலே கொழும்பு பங்குச் சந்தை மிகப் பெரிய சரிவை சந்தித்துக் கொண்டு வருகிறது. அண்மையிலே வெளிவந்த டெய்லி மிர்ரர் பத்திரிகையில் கூட, முழுப் பங்குச் சந்தையின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 15 பில்லியன் அளவுக்குச் சரிந்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாம் நிச்சயமாக அமெரிக்காவிற்கு ஒரு குழப்பத்தைக் கொடுத்திருக்கக் கூடும். அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கையில் பங்குச் சந்தைகள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கூடாகவே வணிகங்களை அமெரிக்கா மேற்கொள்வது அறிந்த விடயம். ஆனால் இந்த மாதிரியான சிக்கலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று நினைக்கிறோம். அமெரிக்காவின் அறிக்கையும் அதற்கு முன்னால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினது அறிக்கையும் ஒரு நிலைமையை தோற்றுவிப்பதாக சிங்களம் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலையை எங்களுடைய மக்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. தென்னாசிய பிராந்தியத்தில் தமிழீழச் சிக்கல் தொடர்பாக உலகம் மிகக்குறைந்த கவனத்தையே செலுத்துகிறது என்பது மிகத் தெளிவான செய்தியாக இருக்கிறது. அதனது புவிசார் அரசியல் மற்றும் பொருண்மிய நலனுக்கு இசைவானதாக கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்துக்குப் மிகப் பெரிய பாரிய சிக்கல்கள் உலகெங்கும் பரந்து இருக்கிறது. அதைப் பற்றி நாங்கள் சுருக்கமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதிரியான செய்திகளுக்கூடாக எங்கள் மக்கள் கூட யோசிக்கலாம். உலகம் ஏதோ புலிகளுக்கு எதிராக திரும்புகிறது. எங்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு உலகம் மாறப்போகிறது என்ற அச்சத்தை உருவாக்குவதற்கான ஒரு கருத்தாக இதைப் பார்க்கக் கூடாது என்பதற்காக இதைச் சொல்லுகிறோம். இந்தக் கருத்துகள் சிங்கள மக்களுக்குச் சொல்வதற்காக மிகப் பெரிய மன்றாட்டத்தின் அடிப்படையில் வெளியாகி இருக்கக் கூடும். உண்மையிலே மகிந்தர் இப்படியான அறிக்கைகளையாவது வெளியிடுங்கள் என்று மன்றாடியிருக்கக் கூடும். தென்னாசிய பிராந்தியத்தில் தமிழீழச் சிக்கலில் உலகம் பெரிதாகத் தலையிட முடியாது இருக்கிறது. ஏனென்றால் இதைவிட உலகத்திலே இன்று பல்வேறு சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. மிகக் கடைசியாக தோன்றியிருக்கிற பாரிய சிக்கல் ஈரான் பற்றியது. ஈரானில் உள்ள அணு ஆலைகளிலே மீண்டும் ஐ.நா.வின் அனுமதி இல்லாமல் தங்களுடைய செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பைத் தொடர்வதற்கான முடிவை ஈரான் எடுத்திருக்கிறது. உலகத்தினுடைய முக்கியமான சகல முடிவுகளையும் புறந்தள்ளி தன்னுடைய தேவைக்காக அணு ஆயுத எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதற்காகச் செய்வதாகக் கூறி, ஐ.நா. சபையால் முத்திரையிடப்பட்ட பொருள்களை எல்லாம் உடைத்துவிட்டு தன்னுடைய உற்பத்தியை செய்ய முயன்று வருகிறது. மீண்டும் மத்திய கிழக்கிலே இன்னொரு போர் மேகம் சூழக்கூடிய ஆபத்து ஏற்பட்டு பரபரப்பாக பேசப்படுகிற செய்தியை நாங்கள் பார்க்கிறோம். அதற்கு அப்பால் மிக முக்கியமான செய்தி இன்று ஈராக்கில் உள்ள நிலைமை. ஈராக்கின் இன்றைய நிலைமை குறித்து உலகம் மிகப் பெரிய அதிர்ச்சியும் பரபரப்புமாக நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் மெல்ல மெல்ல பயங்கரவாதத்தைப் பயிற்றுவிக்கக் கூடிய ஏற்றுமதி செய்யக் கூடிய- பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமாக மாறிவிட்டது என்பது ஆய்வியல் ரீதியாக இன்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் செய்திகள் அண்மையில் எகிப்திய அறிக்கைக்கு ஊடாக வெளியில் வந்தது. அமெரிக்காவுக்கு எதிரான முழுமையான சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய- இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கைக்கொள்ளக் கூடிய- அவர்கள் சொல்கிற சொற்களுக்குக் கூடாக சொல்வதானால் இஸ்லாமியப் போராளிகளைப் பயிற்றுவிக்கக் கூடிய ஒரு தளமாக ஆப்கானை விட ஈராக் மாறிவிட்டது என்று அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வந்திருக்கிறது. ஈராக்கில் உள்ளது மிகத் திறமான நகர கொரில்லாச் செயற்பாட்டுக்குரிய போராட்டக் களமாக ஈராக் மாறிவிட்டது. இப்படியான களம் ஒன்றைச் செலுத்துவதற்கு ஐரோப்பிய நகரம் ஒன்று மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது என்றும் பதுங்கு வீடுகளில் இருந்து கொண்டு ஆயுதங்களைக் கடத்திச் சென்று பாதுகாப்புப் படையினர் கண்ணுக்கு முன்னாலே வெடிகுண்டுச் சம்பவங்களையும் பல்வேறு முக்கிய பயங்கரவாதச் செயற்பாடுகளையும் நகரத்துக்கு ஊடாக செய்யக் கூடிய நிலை தோன்றியிருப்பதாகவும் அதற்கு ஈராக் ஒரு பொருத்தமான இடமாக மாறிவிட்டதாக சொல்லக் கூடிய அபாயகரமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈராக்கில் இன்று நாள்தோறும் நடக்கின்ற செய்திகள் எல்லாமே ஈராக் முழுமையாக போராளிக் குழுக்களை ஏற்றுமதி செய்யக் கூடிய- பயிற்றுவிக்கக் கூடிய களமாகத்தான் இருக்கிறது. ஈராக்கில் தலையிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் நிலைப்பாடுகளில் மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு புஸ் மற்றும் பிளேயரின் செல்வாக்கு தங்கள் தாயகப் பகுதிகளில் மிக மோசமாகக் கீழிறங்கி அவர்களது எதிர்காலமே சிக்கலாகி மாறி இருக்கிறது. இந்த வேளையில்தான் எங்களுடைய பிரச்சனை தொடர்பாக மகிந்தர், அலறிப் பதறிக்கொண்டு திரிவதை அவர்கள் பெரிதாக எண்ணுவதற்கில்லை என்று ஓரளவுக்கு கணிப்பாக நாம் கருதுகிறோம். இவற்றைவிட மத்திய ஆசியா என்கிற ஐந்து நாடுகளில் உள்ள வளங்களைச் சுரண்டுவதற்காக அமெரிக்கா படுகிற பாடு. அவைகள் எல்லாம் சோவியத்தின் ஒரு பகுதிகளாக இருந்து பிரிந்து போனவை. இன்று சோவியத் ரஷ்யா தோல்வியுற்ற அந்த சம்பவத்தை 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வரலாற்றுப் பிறழ்வு, தவறு என்று ரஷ்ய அதிபர் புட்டின் கூறுகிறார். அதேவேளை தஜிஸ்கிஸ்தான், கஜகிஸ்தான் போன்ற இடங்களில் அமெரிக்கா தலையிட்டு கஸ்பியன் கார்டன் என்றத் திட்டத்தை முன்வைத்து அந்த இடங்களிலே தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி சீனாவுக்குத் தடுப்புச் சுவராக உருவாக்கி அந்த இடத்திலே மையப் படைகளை நகர்த்துவதற்கான புதிய திட்டங்களைச் செயற்படுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. அங்கே மிகப் பெரிய குழப்பங்களும் பிரச்சனைகளும் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயக ரீதியான செயற்பாட்டை நாங்கள் அமைதியாகக் கொண்டு வர விரும்புகிறோம் என்று அமெரிக்கா சொல்லுகிறது. இப்படியான ஒரு வித்தியாசமான உலக ஒழுங்கிலே நாம் வாழ்கிறோம். அந்தந்த நாடுகளிலே உள்ள சிக்கல்கள் எல்லாம் ஒரு முக்கியமான நிகழ்ச்சித் திட்டத்துடன் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் எங்களுடைய தமிழீழச் சிக்கலும் உலகத்தின் முன்னிலையில் வந்திருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், பிராந்திய ரீதியாகக் கூட இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளும்-வலுவிழந்து காணப்படுகின்றன. இந்துத்துவா தீவிரவாதத்தின் வெறியால் பி.ஜே.பி. கட்சி துண்டு துண்டாகச் சிதறிக் கொண்டு இருக்கிறது. அதேபோல் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியும் மிக வலுவிழந்தே உள்ளது. வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களான உத்திரப்பிரதேசமோ, பீகாரோ இன்று காங்கிரசுக்கு மாறானவர்களின் கையில் இருக்கிறது. தமிழீழச் சிக்கலை முன்னிலைப்படுத்தி மகிந்தர் என்னதான் பாடுபட்டாலும் அதைக் கணக்கிலெடுப்பதற்கான ஒரு புறநிலைச் சூழல் உலகத்தில் கிடையாது. இந்த வருடத்தின் தொடக்கத்திலே இருந்து நீண்டு போகும் இந்த ஆண்டில் உலகம் செயலற்று இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்படியான நிலையில் தவறான ஒரு கோட்பாட்டின் அடிப்படையில், தவறான குழுக்களின் துணையோடு களமிறங்கி தவறான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார் மகிந்தர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமான சர்வதேச சூழ்நிலையை எமது செயற்பாட்டுக்கூடாக உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்ல முடியும். ஆகவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கும் இராஜதந்திரம் தெரியும். நாங்களும் புவிசார் அரசியல் பற்றி அறியமுடியும். எங்களுக்கும் சாதகமான சூழ்நிலை இருப்பது தெளிவான செய்தியாக இருக்கிறது. 1999 ஆம் ஆண்டு ரைம்ஸ் சஞ்சிகையில் ஜோகனா மைக்கேரியல் எழுதிய கட்டுரையில் இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். "சிறிலங்காவில் உள்ள தமிழ்ப் புலிகளே! உங்கள் நேரம் இனிமேல்தான் வர இருக்கிறது" என்று எழுதியிருக்கிறார். இதைச் சொல்வதற்கான காரணம் தலைநகரான வொசிங்டனிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் தூரம் முக்கியம். இன்று ஆப்கானை, துருக்கியை அண்டிய ஆசிய ஐரோப்பிய பகுதிகள், கிழக்கு ஆசிய பகுதிகள் தொடர்பான சிக்கல்கள் எல்லாவற்றையும் முன்னிலைப்படுத்தி நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக எங்களைப் பொறுத்தவரையில் இந்த சர்வதேசத்தின் தலையீடு என்பது ஒரு அளவிலேதான் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியும் என்பது தவிர்க்க இயலாத நியதி. அதன் காரணமாகத்தான் மகிந்தர் போன்றவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டுக் கருத்துகளைச் சொன்னாலும் கூட அந்தக் கருத்துகள் எடுபடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆகவே உலகம் எம் பக்கம் என்று நாம் சொல்லவில்லை. உண்மையின் பக்கம் உலகம் நிற்க வேண்டும் என்று விரும்புகிறோம். உண்மையின் பக்கம் நிற்காவிட்டாலும் இந்த பிராந்தியத்திலே நிற்க வேண்டிய அவசியம் என்ன என்று உலகம் தேட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினது செயற்பாடு காரணமாக, எங்களுடைய கருத்துகளுக்கூடாக நாங்கள் செயற்படும்போது எங்களுடைய மக்களுடைய கருத்துகளை முன்னிலைப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் மூதூரிலே நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டின் கடைசியான வரிகளை உங்களுக்கு இங்கே நான் முன் வைக்க விரும்புகிறேன். "இனியும் என்ன யோசிக்க இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான். அதுதான் சாவுக்குள் வாழ்வை நுழைப்பது என்பது. சாவென்பது எமக்கு வீரச்சாவாக அமைய வேண்டும். வீழ்ந்தவர் நினைவுடன் வீறாக எழுந்து எமது மக்களின் வாழ்வுக்காக எமது மண்ணையும் எமது இருப்பையும் காப்போம்" என்று அந்தத் தொடர் அற்புதமாக எழுதப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள செய்தி என்னவெனில் "சாவுக்குள் வாழ்வை நாங்கள் நுழைக்கிறோம்". இதைத்தான் நாங்கள் உலகுக்குச் சொல்லுகிறோம். நாங்கள் எந்தப் பயங்கரவாதச் செயலையும் செய்யவுமில்லை. எவருக்கும் எதிராக நாங்கள் போரைத் தொடங்கவும் இல்லை. நாங்கள் எங்கள் சாவிலிருந்து எங்களைக் காப்பதற்காக வாழ்வை அதற்குள் அமைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் அல்லாமல் வேறு எதுவும் கிடையாது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் உணர வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக கோருகிறோம் என்றார் பாலகுமாரன். நன்றி புதினம் - sri - 01-24-2006 பிரபாகரன்- எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பில் மகிந்தவுக்கு அதிர்ச்சியான பதில் காத்திருக்கிறது: கா.வே.பாலகுமாரன் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை இலங்கை வருகை தந்துள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் ல்ஹெய்ம் சந்திக்கும் போது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அதிர்ச்சியான பதில் காத்திருக்கிறது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை ஒலிபரப்பாகிய "அரசியல் அரங்கம்" பகுதியில் தென்னிலங்கை அரசியல் நிலைமைகள், தமிழீழத்தினது நிலைப்பாடு ஆகியவை தொடர்பில் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை: கொழும்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிற திடீர் திருப்பங்கள், தலைகீழான மாற்றங்கள் சுருக்கமாகச் சொல்வதானால் கழுகு ஒன்று புறாவாக மாறியமை, மெல்ல மெல்ல கருக்கொண்டு வரும் அரசியல் சதி ஆகியவை பற்றி உங்களோடு பேசுகிறோம். கொழும்பு அரசியலில் திடீரென்று அமைதிக் கொடி- வெள்ளைக் கொடியாக கொடிகட்டிப் பறக்கிறது. மகிந்தர் தனது அரச மாளிகையில் இராப்பகலாக தந்திரங்களைத் திட்டமிட்டு மாநாடுகளைக் கூட்டி வருகிறார். மகிந்தரின் 2 மாநாடுகளும் உண்மை நோக்கமும் 15 கட்சிகளை அழைத்து முதலில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. மகிந்தர் உடனடியாகப் பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இலங்கையில் உள்ள சிங்கள, ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர்களுடன் ஒரு மாநாடு. அதிலும் தான் போருக்குச் செல்லப்போவதில்லை என்ற செய்தியூடாக மகிந்தர் வெளிப்பட்டுள்ளார். இதில் மிக முக்கியமானதும் கவனிக்கப்பட வேண்டியதும் என்னவெனில் இந்த மாநாடுகளில் தமிழர் தரப்பு திட்டமிடப்பட்டு இலாவகமான முறையில் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழருக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக நடத்தப்பட்டவை இவை என்ற செய்தி எமக்கு விளங்குகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜே.வி.பி.யின் சோமவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அங்கே அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் வெளியில் வந்து அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுள்ளனர். ஆகவே எங்களுடைய சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது மகிந்தர், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவினர் சேர்ந்து ஒரு நாடகத்தை ஆடுகின்றனர். அந்த நாடகத்தின் உண்மையான கருவை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சி மாநாடு நடந்த அன்று அல்லது அதற்கு மறுநாள் காலையில் ஒரு பத்திரிகைச் செய்தியை ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ளார். அதில் "சமாதானம் என்ற சொல் பேசிப் பேசி புளித்துப் போன சொல்லாகும். எனவே தற்போது அதைக் கைவிட்டுவிட்டு அழிக்க வேண்டியவர்களை அழிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச காய்களை நகர்த்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது "காய்களை நகர்த்த வேண்டும்" என்பது. மேலும் "நாட்டைப் பிரிக்க முயன்ற தாராளவாதிகளாலும் மேற்குலக சக்திகளாலும் சமாதானம் என்ற சொல் பேசிப் புளித்துப்போய்விட்ட சொல். தற்போது அரச தலைவருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்கிறார். இதில் "நல்ல சந்தர்ப்பம்" என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து, "அனைத்து அரசியல் எதிராளிகளில் பலரும் தாம் நெருக்கமாகிவிட்டார்கள்". அதாவது களத்தில் இறங்கிவிட்டார்கள். ஆகவே எதிராளிகளை அடையாளம் கண்டு அழித்துவிட்டு அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்" என்கிறார். இதில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான சொற்கள் இவை: "இன்று நாம் அனைவரும் தீர்க்கமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதுபோல் புலிகளும் தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் உண்மை. மகிந்தரை அடிமைப்படுத்துவது அல்லது தோல்வியடைச் செய்வது; இல்லாவிட்டால் தோல்வியைப் புலிகள் தழுவது" என்கிறார் சோமவன்ச. ஆகவே ஒரு சதி உருவாகி அதனது வெளிப்பாட்டை மறைப்பதற்காக அதேநேரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை சிங்கள மக்களுக்குச் சொல்வதற்காக விமல் வீரவன்ச எங்களுக்கு இதனூடே ஒரு தகவலைத் தந்திருக்கிறார். அதாவது கடந்த சில நாள்களாக அமைதி முயற்சிகள் தொடர்பாக மகிந்தர் எடுத்திருக்கிற புதிய காய் நகர்த்தல் என்ன என்பதுதான் கேள்வி. அதற்கு தெளிவான செய்தியாக, மகிந்தரால் இந்தப் பிரச்சனைக்கு இப்போது போர் மூலம் முகம் கொடுக்க முடியாது என்பதால் மீண்டும் இன்னொரு வழியில் எங்களை பழைய நிலைக்குக் கொண்டுபோவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்கிறர்கள். மகிந்தரின் குட்டிக் கரணத்துக்குக் காரணம் " எமது பலம்" இப்படியாக திடீரென்று மகிந்தர் குட்டிக் கரணமடிப்பதற்குக் காரணம் என்னவெனில், அதுதான் "எங்கள் பலம்". அண்மைக்காலமாக இங்கே நடந்து வருகிற மக்களினது எழுச்சி, அதனது விளைவு, மக்கள் படையணியாகத் திரளக் கூடியச் சூழல், மக்கள் பயிற்சி பெறுகிற தோற்றப்பாடு என்கிற எமது இராணுவ பலத்தினது விளைவாக மகிந்தர் திக்குமுக்காடி சதித் திட்டத்தை வகுக்கிறார். ஆகவே, எங்கள் மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அமைதி முயற்சிகள் தொடர்பான மகிந்தரின் அனைத்துக் கூப்பாடுகளும் எங்களுடைய இராணுவ பலத்தின் வெளிப்பாட்டில்தான் உருவானதே தவிர வேறு ஒன்றும் அல்ல. இந்தச் செய்திகளுக்கு ஊடாக எங்களுக்குக் கிடைக்கக் கூடிய முடிவுகள் எவையெனில், முதலாவது- 15 கட்சிகளை அழைத்து மகிந்தர் பேசுவதற்கு முன்பாக ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவுடன் மகிந்தர் நீண்ட கலந்துரையாடலை நடத்தி சதித்திட்டத்தை வகுத்திருக்கிறார்கள். அதாவது- "இப்பொழுது நீங்கள் அமைதியாக இருங்கள். புலிகளை அழிப்பதற்கான இன்னொரு வழியிலே நான் செயற்படப் போகிறேன். ஆகையால் சிறிது காலத்திற்கு அமைதியாக இருங்கள். மீண்டும் அமைதிப் பொறிக்குள் புலிகளைச் சிக்க வைக்கும் முயற்சியை எடுக்கப் போகிறேன்" என்ற கருத்தைத் தெரிவித்து, "வெளியில் நீங்கள் கூப்பாடு போடுங்கள். உள்ளுக்குள் எனக்கு ஆதரவாக இருங்கள்" என்றும் மகிந்தர் கூறியிருக்கிறார். அதுபோல- சிங்கள ஊடகத்தாரைக் கூப்பிட்டு, அவர்களுக்கும் தனது உண்மையான உள்நோக்கத்தை விளக்கி, தனக்கு ஒத்துழையுங்கள் என்று கேட்டுவிட்டு வெளியில் சமாதானம், புதிய முயற்சி, அர்ப்பணிப்பு என்று பலவாறான சொற்களை மகிந்தர் பயன்படுத்துகிறார். எங்களுக்கு மகிந்தரது உண்மையான தந்திரம், நோக்கம் எதுவென்பது தெளிவாக புரிந்துவிட்டது. இந்தச் சூழலில் அமைதிக்காகப் பாடுபடும் சர்வதேசத்தின் முயற்சிகளை நாங்கள் புறம் தள்ளாது, நோர்வேயினுடைய சிறப்புத் தூதுவர வருகையைத் தடுக்காமல், அவரது முயற்சிக்கூடாக அமைதியோடு செயற்படத் தயாராக இருக்கிறோம் என்பதை மீண்டும் உலகுக்குத் தெரியப்படுவத்துவதற்காக தேசியத் தலைவர் அவர்கள் சந்திக்க உள்ளார்கள். தேசியத் தலைவருடனான சந்திப்புகள் அனைத்துமே மிக மிக முக்கியமானவை. ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் மிக மிக முக்கியமான முடிவுகளை சர்வதேசத்துக்கு அவர் தெளிவாக்குவார். அன்று சுதுமலையில் மக்களுக்கு முன்னால் பேசியது போலவே, அவர் தற்போதைய 6 சுற்றுப் பேசுக்களுக்கூடாக எங்களை வளைக்க முற்பட்ட போதும் ஜப்பானிய தூதுவர் அக்காசி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கிளிநொச்சிக்கு வரவழைத்த தேசியத் தலைவர் அவர்கள், "சிறிலங்கா அரசுக்கு பணம் சேர்க்கும் கருவியாக எங்களைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார். தேசியத் தலைவரின் கருத்தையறிந்த உலகம் அதிர்ந்தது. ஆகையால்தான் டோக்கியோவில் கூட்டப்பட்ட நிதி உதவி வழங்கும் மாநாட்டிற்கு நாங்கள் செல்லவில்லை என்பது உலகத்துக்கு நன்றாகத் தெரியும். அதுபோலவே மீண்டும் ஒரு சந்திப்பை நிகழ்த்த இருக்கிறார்கள். அதிலே தெளிவாக இத்தகைய நிலைப்பாடுகளை தலைவர்கள் அவர்கள் விளக்குவார். எமது தேசத்தின் குரலாக எமது நிலைப்பாட்டைச் சொல்வதற்காக நாங்கள் சந்திக்கிறோமே தவிர வேறொன்றும் இல்லை. அதேபோல் நாங்கள் நினைப்பது போல் இல்லாமல் உண்மையான ஒரு அமைதி முயற்சியை முன்னெடுப்பதற்கான திட்டங்களை அவர்கள் முன்வைத்திருந்தால் அதை நாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்பது எப்போதும் எங்களுடைய நிலைப்பாடு. இந்தப் போர் நிறுத்தச் சீர்குலைவுக்கு யார் காரணம் என்பது இந்த உலகத்துக்கு மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் அண்மைக்காலமாக பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, "இந்தப் போர் நிறுத்தம் புலிகளால் சீராக கடைபிடிக்கப்பட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இராணுவமும் சிங்கள அரசியல் தலைமையும் கருணா என்கிற அந்த நிகழ்வுக்கூடாக இங்கே குழப்புவதற்காக மேற்கொண்ட அனைத்து நிழற்போரினூடாகத்தான் இந்த நிலைமை உருவானதே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை" என்பது உலகத்தினது அனைத்துத் தலைவர்களுக்கும் மிகத் துல்லியமாகத் தரப்பட்டுள்ளது. மகிந்தரின் குட்டிக் கரணத்துக்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. ஆகவே, இந்த முறை போர் நிறுத்தம் பற்றித்தான் பேச வேண்டும் என்று சிங்களத் தரப்பு சொல்லுகிற போது அந்த சதி எங்களுக்கு நன்றாக புரிகிறது. மக்களினது அமைதிக்காக இந்த முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம். இந்தக் குழப்பத்துக்கு யார் காரணம் என்பது உலகத்துக்கு மிக நன்றாகத் தெரியும். அனைத்து வகைகளிலும் பார்த்தால் மகிந்தருக்கு உடனடித் தேவை முகம் மறைப்பு வேலை- பூச்சு வேலை. இந்த நெருக்கடி ஏற்பட்டதால்தான் திடீரென்று மாற்றத்தை உருவாக்கி எங்களுடைய பாலா அண்ணை வருவதற்கான வழிகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார். எந்த வாயால் எரிக் சொல்ஹெய்மை எதிர்க்கிறோம் என்று சொன்னார்களே அதே வாய் இப்போது வரவேற்கிறோம் என்று சொல்வதற்குக் காரணம் என்ன என்பதை எமது மக்கள் உள்வாங்கிக் கொண்டால் எமது அரசியலினது அடுத்த கட்ட நீட்சி எவ்வாறு இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும். தேசியத் தலைவரின் சர்வதேச உறவுகள் எங்களுடைய தேசியத் தலைவரது நுண்மான் நுழைபுலம் பற்றி சில விடயங்களை நான் சொல்ல வேண்டும். நீண்டகாலமாக தலைவர் அவர்கள், சர்வதேசத் தொடர்புகளைப் பேணி வருகிறார். பொருத்தமான இடங்களில் இராஜதந்திர மொழிகளில் பல்வேறு சொற்களைச் சொல்லி இருக்கிறார்கள். அவற்றுக்கூடாக எங்களுடைய தேசத்தினது சர்வதேச உறவுகள் நெறிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியத் தரப்போடு நடைபெற்ற உறவுகள் தொடர்பான அவரது கருத்துகள் அண்மைக்காலமாக வெளிவந்துள்ளன. புதுடில்லியில் இந்தியத் தரப்போடு பேச்சுக்கள் நடைபெற்ற போது இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரனைச் சந்தித்த போது தலைவர்கள் அவர்கள் தெரிவித்த கருத்து: "நீங்கள் உங்கள் நலன்களைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் எங்கள் நலன்களைப் பற்றிச் சிறிதளவாவது கவலைப்படாமல் இருப்பது தவறு" என்று கூறினார். அதேபோல் மற்றொன்றை எங்களுக்குத் தெரிவித்தார் தலைவர். "தமிழ் மக்களை இளிச்சவாயர்களாக- எதுவும் அவர்களுக்கு நடந்தால் கேட்க யாருமில்லை என்று நினைத்து ஒரு அடிமை மனோநிலையில் தமிழ் மக்களை தங்களது பகடைக் காய்களாக யாரும் பயன்படுத்த முற்பட்டால் அதை நான் பொறுத்துக்கொள்ளமாட்டேன்" என்றார். சுருக்கமாகச் சொன்னால், "எதிர்காலத்திலே தமிழ் மக்களை எவராவது தங்களது பகடைக்காயாகப் பயன்படுத்தி- இளிச்சவாயர்களாகப் பயன்படுத்த முற்பட்டால் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்பது அவருடைய கருத்து. இதையேதான் உலகுக்கு நாங்கள் இப்போதும் சொல்கிறோம். "நாங்கள் சர்வதேசத்தினது நலனைப் புறக்கணிக்க விரும்பவில்லை. முன்னாள் பிரித்தானிய பிரதமர் கூறியது போல, "எங்களுக்கு அரசியலில் நண்பர்களும் இல்லை. பகைவர்களும் இல்லை. நிரந்தமராமனது எங்களது நலன்கள் மட்டுமே. அதைப் பின்தொடர்வது என்பதே எங்கள் பணி" என்பது உலக இராஜதந்திரிகளினது முனைப்பு எங்களுக்குத் தெரியும். எங்களுக்கும் இது பொருந்தும் என்பதை உலகுக்கு நாங்கள் ஓங்கி அறிவிக்கிறோம். அந்தச் செய்தியைத்தான் இப்போதைய சந்திப்புகளிலும் தலைவர் அவர்கள் சொல்லுவார்கள் என்று நம்புகிறோம். ஆகவே நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம். "அமைதி முயற்சியாக இருந்தாலும் சரி. போராக இருந்தாலும் சரி. எங்களுடைய தேசம் ஒரு போர்க்கோலம் பூண்டு மிகவும் பலத்துடனும் ஆயத்தங்களுடனும் இருந்தால்தான் நாங்கள் எதனையும் வெல்ல முடியும்" என்பதுதான் அந்தச் செய்தி. தளர்ச்சியில்லாமல் நாங்கள் முன்னேற வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் யுத்தம் என்ற அந்த யுத்த வடிவத்தை உருவாக்கிய ஜெனரல் கியாப் அவர்கள் எப்போதும் சொல்வார்கள், "ஒரு கட்டத்திலே அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தெளிவாக நிலைப்பாடு மேற்கொண்ட பின்னர் மக்கள் படையணியாகத் திரள வேண்டும். அந்தப் படையணியின் ஒருங்கமைவில்தான் வெற்றி பலப்படும்" என்பார் அவர். ஆகவே இன்று நாங்கள் எங்கள் தேசத்தை முற்றாகப் போர் நிலைக்குத் தயார்படுத்தி, போர் முனைப்புக்குள்ளாக்கி மகிந்தரது தந்திரத்தை வெல்வதற்கான பலத்தை நாங்கள் ஒன்றுதிரட்டி விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய ஒரு அவகாச நிலையை நாங்கள் பெற்றுக்கொண்டு வருகிறோம். இது உடனடியாகவும் வேகமாகவும் செய்யப்பட வேண்டிய வேலை. இதனுடைய அடிப்படையில் நடக்கக் கூடிய பேச்சுகளும் போர்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதான். வியட்நாமிலே ஒரு பழமொழி இருக்கிறது. பேச்சும் போருமாக போராட்டம் நடக்கும்; பேசுங்கள்- போரிடுங்கள் போரிடுங்கள்-பேசுங்கள் பேசுங்கள்- போரிடுங்கள் என்று போரிடுங்கள் என்று இறுதியிலே முடியும். ஆகவே எங்களுடைய பேச்சுக்கள் யாவும் அதன் நீட்சியாக போரிலே சென்று முடியும். படிப்படியான பரிணாம ரீதியான செயற்பாடுகளுடே நகருகிறோம். அண்மையிலே வரக்கூடிய இந்தப் பேச்சுகள், அதனது வெளிப்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மகிந்தரே ஏன் போர் நிறுத்தம் பற்றி பேச வருகிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவருடைய வழியிலேயே சென்று அவர் எதிர்பார்க்காத மிகவும் அதிர்ச்சியடையப் போகிற பதிலைச் சொல்லத் தலைவர் அவர்கள் தயாராகி வருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். தலைவரது அண்மைக்கால செயற்பாட்டுக்கு ஊடாக, அவரது நிலையை மிகவும் மதிப்போடும் வியப்போடும் பார்க்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு அனைத்துத் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆசியத் தலைவர் பிரபாகரன் கடந்த 20 ஆம் நாள் ஐலண்ட் பக்கத்தின் நடுப்பக்கத்தில் எங்களைப் பற்றி மிக மோசமாக எழுதி வரும் சமிந்த பெர்னாண்டோ சொல்கிறார், பிரபாகரன் அவர்கள் ஆசியாவின் முதன்மைத் தலைவர்களிலே தன்னை உருவாக்கிவிட்டார் என்று வயிறெரிந்து எழுதினாலும் கூட மனம் பொறுக்க முடியாமல் எழுதினாலும் கூட பல செய்திகளைச் சொல்லுகிறார். "பிரபாகரன் ஒரு சர்வதேச நிலைப்பாடுடைய தலைவராக இருக்கிறார். அதற்குக் காரணம் சிங்களத் தலைமையே. இன்று பிரபாகரனிடம் மண்டியிடுவதற்கு சிங்களத் தலைமை தயாராக இருக்கிறது. இதற்கு ஊடாக பிரபாகரன் அவர்கள் மிகப் பெரிய செய்தியை உலகத்துக்குச் சொல்லுகிறார்கள். 2 நாட்டினது இராணுவத்தைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு கொலை முயற்சிகளிலிருந்து தப்பி உள்ளார். ஆழிப்பேரலையிலுமிருந்தும் தப்பியிருக்கிறார். இதற்கு அப்பால் தன்னை ஒரு சர்வதேசத் தலைவராக தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டார். இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்ற மாற்றுக் கோரிக்கையை முன்வைத்து அதற்கான ஆதரவையும் திரட்டிவிட்டார். அமெரிக்கா மீதான குண்டுவெடிப்புக்குப் பின்னரும் கூட மிகப் பெரிய போரை நடத்த ஆயத்தமாகிவிட்டார். இப்படிப்பட்ட பிரபாகரனின் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியாத சிங்களத் தலைமைகள் தவறு இழைக்கின்றனர்" என்று அதில் சிங்களத் தலைவர்களை இடித்துரைத்துச் சொல்லி இருக்கிறார். எங்களுடைய இறுதிப் போர் வெற்றிக்கூடாக நாங்கள் உருவாக்கக் கூடிய அந்த வரலாற்றுச் சாதனையைப் படைப்பதற்கு முன்னால் பல்வேறு வகையிலும் உலகம் எடுக்கிற முயற்சிகள், அதற்கு ஊடாக முள்ளை முள்ளால் எடுப்பது போல் நாங்கள் நகர்ந்து செல்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, "எதிர்காலத்திலே தமிழ் மக்களை எவராவது தங்களது பகடைக்காயாகப் பயன்படுத்தி- இளிச்சவாயர்களாகப் பயன்படுத்த முற்பட்டால் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்கிற தலைவரது வார்த்தைகளை நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள் என்றார் கா.வே. பாலகுமாரன். நன்றி புதினம் - தூயவன் - 01-30-2006 <b>தேசியத் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையில் வெளிப்படும் "அதிர்ச்சித் தகவல்" என்ன?: க.வே.பாலகுமாரன் விளக்கம் </b> இலங்கைக்கு வருகை தந்த நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்முடன் தேசியத் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையில் தெரிவித்திருக்கும் "அதிர்ச்சித் தகவல்" என்ன? "தமிழீழ தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை" எப்படி உருவாக்கம் பெற்றுள்ளது? விடுதலைப் புலிகளின் "இறுதி மூல உபாயம்" என்ன? ஆகியவை தொடர்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார். இவை தொடர்பாக புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (28.01.06) அரசியல் அரங்கம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் உரையாற்றினார். உரையின் முழு எழுத்து வடிவம்: இந்த வாரம் நிகழக் கூடிய சில நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டு சென்ற வாரம் நாங்கள் சில தரவுகளை முன்கூட்டியே வழங்கியிருந்தோம். தற்போது தேசியத் தலைவர் அவர்கள் எடுத்திருக்கும் முடிவுகள் நீண்டகாலத்தில் இந்தத் தீவில் அதிர்ச்சியூட்டக் கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பாகச் சொல்லியிருந்தோம். குளத்தின் நடுவிலே கல்லைப் போட்டால் அந்தக் குளத்தில் எழுகின்ற அலைகள் எப்படி விரிந்து பரந்து செல்கிறதோ அதைப் போல - இந்த சுனாமி அலையினது தாக்கம் போல- தலைவரது இம்முடிவானது சிறு சிறு வட்டங்களாக உருவாகி பெரிய வட்டங்களாகப் பல்கி பரவி மிகப் பெரியத் தாக்கத்தை இந்தத் தீவில் ஏற்படுத்தப்போகிறது. எங்களைப் பற்றி யார் எதுவும் சொன்னாலும் எங்களுக்குப் பரவாயில்லை. நாங்கள் மிகத் தெளிவாக அமைதியின் பெயரில் உள்ள பற்றுதலை மீண்டும் நாங்கள் சந்தேகத்துக்கிடமின்றி இந்த உலகத்துக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். நாங்கள் மனப்பூர்வமாக அமைதியை விரும்புகிறோம். உண்மையான மனமாற்றத்தினை சிங்களத் தலைவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்றும் அதற்காகக் காத்திருக்கத் தயாராக இருக்கிறோம். புலிகளின் "பாசித்தாள்" பரிசோதனை போர் செய்ய வேண்டிய நிலையில் கூட- போருக்கான நியாய காரணங்கள் எங்கள் பக்கம் இருக்கும் நிலையிலும் கூட- நாங்கள் போர் செய்வதைத் தவிர்த்து இன்னும் ஒரு வாய்ப்பை மகிந்தருக்குக் கொடுப்பதற்காக முன்வந்திருக்கிறோம். எங்களுடைய இந்தப் பெறுமதியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஒரு பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறோம். மூலகங்களின் உண்மையான நிறங்களை அறிவதற்காக மேற்கொள்ளப்படுகிற "பாசித்தாள் பரிசோதனை" போல "போர் நிறுத்த அமுலாக்கம்" என்கிற நிலைப்பாடாகிய "பாசித்தாளை" பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை மகிந்தருக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் மட்டுமின்றி சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்துகிறோம். நாம் 2002ஆம் நிகழ்வுகளை நினைவில் கொள்வோம். 2001 ஆம் ஆண்டு யூலை 24 ஆம் நாள் கட்டுநாயக்க விமான தளத்தை நாங்கள் அழித்ததற்குப் பின்னால் சிங்கள அரசு தறிகெட்டு திக்குத் திசை தெரியாமல் ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டது. அதன் விளைவாக அமைதிக்கான வாய்ப்பு ஒன்று தோன்றியது. அதனடிப்படையில் தேசியத் தலைவர் அவர்கள் நிலைமைகளைச் சரியாகக் கணக்கிட்டு 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தானாகவே முன்வந்து போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து சங்கிலித் தொடராக நடந்த பல நிகழ்ச்சிகளையும் நீங்கள் அறிவீர்கள். இந்தத் தீவில் முதல் முறையாகப் போர் நிறுத்த உடன்பாடு என்பது மிகப் பாரிய அளவில் தாக்கத்தை விளைவிக்க கூடியதாக உருவாக்கப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். நோர்வேத் தரப்பினர் இதில் தலையிட்டு முயற்சிகளை மேற்கொண்ட அந்தச் சூழ்நிலையைஇ எங்கள் பாலா அண்ணை அவர்களின் நூலின் ஒரு பந்திக்கூடாக வாசித்துக் காட்ட விரும்புகிறேன். "இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் ஒரு ஆவணத்தைத் தயாரிப்பதற்காக நோர்வேயின் சமாதானத் தூதுவர்களான விதார் ஹெல்கிசன்இ ஜான் பீற்றர்சன்இ எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்கள் லண்டனில் என்னுடனும் கொழும்பில் சிறிலங்கா அரசப் பிரதிநிதிகளுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை நிகழ்த்தினர். 2002 ஆம் ஆண்டு ஜனவரிஇ பெப்ரவரி மாதங்களில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் நான் பல முறை தொடர்பு கொண்டு அவருடன் கலந்து ஆலோசித்து அவரிடமிருந்து பல திருத்தங்களையும் யோசனைகளையும் மாற்றங்களையும் பெற்று எமது தரப்பு ஆவணத்தை முழுமைப்படுத்தி நோர்வே அரசிடம் கையளித்தேன். நீண்ட வரலாற்றுப் பகைமை உடைய இருதரப்பினரும் இணங்கக் கூடிய ஒரு போர் நிறுத்த ஆவணத்தைத் தயார் செய்வதில் நோர்வே அனுசரணையாளர் கடைபிடித்த பொறுமையானஇ விடா முயற்சியானஇ மதிநுட்பமான பணியை நான் பாராட்ட வேண்டும் அதற்கேற்ப 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாளன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் ரணிலும் அந்த ஆவணத்தில் கைச்சாத்திட்டனர். அதற்கூடாக இந்த ஆவணம் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில் நோர்வே நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் அவர்கள் சொன்னதை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 60 ஆயிரம் மக்களைப் பலி கொண்டு பரந்துபட்ட அளவில் மனித அவலங்களுக்குக் காரணமாக இருந்த இந்த நெருக்கடிக்கு சமரசப் பேச்சுகள் மூலம் தீர்வு காண்பதே இருதரப்பினரது இலட்சியமாகும். இந்த அதிகாரபூர்வமான போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் பகை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இருதரப்பினரும் உறுதி பூண்டுள்ளனர்" என்கிற வகையில் எவ்வாறு 1993 ஆம் ஆண்டில் பாலஸ்தீனத் தரப்பு இஸ்ரேல் தரப்புக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்ட போது உலகம் மகிழ்ந்ததோ அதற்கு சற்றும் குறைவிலா மகிழ்ச்சியோடு இந்தப் போர் நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வருகிற நாளில் இந்த உலகம் மகிழ்ந்ததை இப்போது நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் போர் நிறுத்தத்தின் முக்கிய சரத்துகளை நினைவுபடுத்துகிறேன். யுத்த நிறுத்த நடைமுறைகளின் முதலாவது விதிக்கு இணங்கஇ எத்தரப்பினரும் எந்தவிதமான வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இதனை நிறைவேற்ற சகலவிதமான இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படுதல் அவசியமாகும். நேரடியான மற்றும் மறைமுகமான துப்பாக்கிச் சூடுகள்இ திடீர்த் தாக்குதல்கள்இ பதுங்கித் தாக்குதல்கள் என்று விவரங்கள் விரிந்து சென்று கொண்டிருக்கின்றன. அடுத்த முக்கியமான செய்தி "முதலாவது தரப்பின் 8 ஆம் பகுதிக்கு அமைவாக தமிழ் துணை இராணுவக் குழுக்களை யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் ஆயுதமற்றவர்களாக்கும்". இதில் 30 நாட்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். "இந்த அணியில் உள்ள ஆட்களுக்கு சிறிலங்கா அரசினது கட்டுப்பாட்டுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் இணையும் வாய்ப்பை அளித்து வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் பணிபுரியச் செய்யும்". அடுத்தது இராணுவத்தினரது வெளியேற்றம் தொடர்பானது; "இருதரப்பினரில் எத்தரப்பினரும் தமது பிடியில் வைத்திருக்கின்ற வணக்கத் தலங்களிலிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் 30 நாட்களுக்குள் வெளியேறிஇ பொதுமக்கள் செல்ல வழி செய்ய வேண்டும்". "உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள வணக்கத் தலங்கள் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்துவிடாத பட்சத்திலும் கூட அனைத்து ஆயுதம் தரித்த ஆளணிகளும் வெளியேறி அவை பொதுப்பணியாளர்களால் நல்ல நிலையில் பேணப்பட வேண்டும்". "எந்த ஒருதரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாடசாலைக் கட்டடங்கள்இ இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிற நாளிலிருந்து விடுவிக்கத் தொடங்கி அவற்றை பாவனைக்குக் கையளிக்க வேண்டும்" இப்படியாக சிலவற்றுக்கு 160 நாட்களும் சிலவற்றுக்கு 30 நாட்களுமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த நெகிழ்ச்சியான போக்கை கடைபிடித்திருக்கிறோம் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். <b>தேசியத் தலைவர் நடத்திய சந்திப்பில் வெளிப்பட்டிருக்கும் "அதிர்ச்சித் தகவல்" என்ன?</b> இதைத்தான் தேசியத் தலைவர் அவர்கள் நோர்வேத் தரப்பினருக்கு மிகவும் காத்திரமாகச் சொல்லியிருக்கிறார். இந்த போர் நிறுத்த ஒப்பந்த உடன்பாட்டை இல்லாது செய்தல் அல்லது மாற்றியமைத்தல் ஐரோப்பிய நாடுகளுக்கு புலிகளின் குழுக்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்துதலை முற்றாகத் தடுத்தல் ஆகியவைதான் மகிந்த ராஜபக்சவின் பதவியேற்புக்கு அடிப்படையாக அமைந்தது. அதாவது இராஜதந்திர ரீதியாக நாங்கள் உருவாக்கிய வல்லான்மைச் சமநிலையை இல்லாமல் செய்வதுதான் அவரது நோக்கம். இந்த வல்லான்மைச் சமநிலை என்பது பொதுவாக நாடுகளிடையே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு சட்டரீதியாக ஏற்கப்படுதல் என்பது. நாங்கள் எங்களுடைய தியாகத்தாலும் மாவீரர்களின் பேண் தகமையாலும் ஒப்பந்தமே இல்லாத ஒரு வல்லான்மைச் சமநிலையை நாம் உருவாக்கி இருந்தோம். அத்தகைய வல்லான்மைச் சமநிலையைக் குலைப்பதற்குத் மகிந்தரும் அவரது குழுவினரும் இந்த முயற்சிகளை மேற்கொண்டனர். எங்களுடைய சர்வதேச அங்கீகாரத்தைக் குறைத்து எங்களுடைய வல்லான்மைச் சமநிலையை மாற்றியமைக்க முற்பட்டுத்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முதன் முதலில் மகிந்தர் முன்வைத்தார். நாங்கள் முன்வைக்கவில்லை. பொறியை அவர்தான் எங்களுக்கு விரித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. அதை வலுப்படுத்தத்தான் முடியும் என்று எரிக் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதை வழிமொழிகிற நிலைக்குத்தான் மகிந்தர் இப்போது தள்ளப்பட்டிருக்கிறார். நாங்கள் எமது வல்லான்மைச் சமநிலையை மீண்டும் உறுதிப்படுத்தி எங்களுக்குப் படிப்படியாக கிடைத்து வருகிற சர்வதேச அங்கீகாரத்தை மேலும் பேணுவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு தொடராகத்தான் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்துள்ளதே தவிர சிங்களத் தரப்பு சொல்வதைப் போல் வேறு எந்தவகையிலும் அமையவில்லை. நாங்கள் முடிந்தளவுக்கு இந்த சிங்கள அரசை அம்பலப்படுத்திய பின்பும் இல்லை எங்களுக்குப் புரியவில்லை- தெரியவில்லை என்று உலகம் சொல்லுமானால் அதையும் கேட்டுக் கொண்டு மீண்டும் நிரூபிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இன்று மிக முக்கியமான சந்தியில் சிறிலங்கா அரசாங்கம் நிற்கிறது. போர் நிறுத்த ஒப்பந்த சரத்துகள் பேணப்படாத நிலையிலும் கூடஇ போர் நிறுத்த மீறல்களுக்குக் காரணமான துணை இராணுவக் குழுக்களை சிங்கள இராணுவத்துக்கூடாக இயக்கி இத்தனை படுகொலைகளையும் செய்த பின்புஇ அதற்கு பதிலடி கொடுத்த பின்னால் இன்று சிங்கள அரசு திரும்பவும் பழைய நிலைக்கு இன்று வந்துள்ளது. சிங்கள அரசு இப்போது 2002ஆம் ஆண்டுக்குப் போய் நிற்கிறது. சிங்கள அரசு இப்போது, தனது இராணுவத்தின் மனவலிமையைப் பாதிக்கத்தக்க வகையிலான- படுகொலைக்கும் பழிவாங்கலுக்கும் மிகுந்த மிருகத்தனத்தனத்துக்கும் இலக்காகி இருக்கிற சிங்கள இராணுவத்தை- பக்குவமாகச் சொல்லித் திருத்தி- துணை இராணுவக் குழுக்களை அகற்றி இராணுவத்தைச் சீரமைக்க முடியும் என்பது நடக்காத காரியம். ஏனெனில்இ இந்தச் செயற்பாடுகள் சிங்கள இராணுவத்தைக் கலைப்பதற்குச் சமமானது. ஆகவே "சிங்கள இராணுவத்தை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? யார் கட்டுப்பாட்டிலே சிங்கள இராணுவம் இயங்குகிறது " என்ற புதிய செய்தி- இன்று உலகத்துக்கு தெரியப் போகிறது. இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கான வாய்ப்பைஇ சந்தர்ப்பத்தை மகிந்தருக்கு நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பது அவருக்கு போகப் போக நன்றாக புரியும். ஆகவேதான் சிங்கள தேசத்துக்கு அதிர்ச்சியூட்டுகிற செய்தியாக படிப்படியாக எமது முடிவு அமையப் போகிறது என்று நாங்கள் சொல்கிறோம். அடுத்து மிக முக்கியமானது- எங்களை சர்வதேச ரீதியாக தரமிறக்கி- எங்களுக்குத் தடைவிதிக்க அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் அவர்களாகவே முன்வந்து அப்படியானவற்றை இல்லாது செய்கிறார்கள். மகிந்தர் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாராம்- புலிகளோடு பேசுவது குறித்து மிகுந்த மனத்திருப்தியோடு இருக்கிறாராம். மகிந்தர் இப்படிச் சொல்வதன் மூலம் சிங்கள தேசத்தின் அனைத்து இனவெறியர்களுக்கும் பேரினவாதிகளுக்கும் சினமும் கொதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனது விளைவு என்னவாகும்? என்பதும் நாங்கள் சொன்ன அதிர்ச்சியலைக்குள்ளே காலப்போக்கில் சேரும் என்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவரை நாம் கூறியவை இப்பேச்சுவார்த்தைகள் தொடர்பான எங்களது நிலைப்பாடு. போர் நிறுத்தத்தை வலுவாக்குவதற்கான வாய்ப்பு தந்தமைக்கு நாங்கள் சிங்கள அரசுக்கு நன்றி சொல்கிறோம் என்பதுதான் எங்களது செய்தி. "தமிழீழத் தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை" இதுவரை நடந்த பேச்சுகளுக்கு ஊடாகவும்இ தலைவர் அவர்கள் சந்தித்த அண்மைய சந்திப்பிகளினூடாகவும் நாங்கள் ஒரு முக்கிய உருவாக்கத்தைச் செய்து கொண்டு வருகிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். "தமிழீழத் தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை" என்று சொல்லக் கூடிய ஒரு நிலைப்பாட்டினது தோற்றுவாய்களை நாங்கள் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தேசியத் தலைவர் அவர்கள் தனது செயற்பாட்டிற்கூடாக- எல்லோரும் புரிந்து கொள்ளத்தக்கதாக எந்த அணியும் சாராத தமிழீழத் தேசத்தினது புதிய தேசியக் கொள்கை-நிலைப்பாடு ஒன்று வெளிநாடுகள் தொடர்பாக உருவாகிக் கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம். நாட்டினது வெளிவிகாரக் கொள்கையின் முக்கிய அம்சங்களான - தேசிய நலனை முன்னெடுத்தல் - அனைத்துலக உள்நாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் தேசிய நலனை முன்னெடுக்கும் கொள்கையை வகுத்தல் - தேசிய நலனை அடைவதற்காக பேச்சுவார்த்தைகளை உபாயமாகப் பயன்படுத்துதல்- போரை உபாயமாகப் பயன்படுத்தல் - மிக வலுவுடன் சமமான நிலையில் நாங்கள் வெளிநாட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்ளல் - எதிர்பார்க்காத பலனை இவை தராவிட்டால் மாற்று வழிகளைக் கையாள்தல் ஆகிய அனைத்து அம்சங்களுக்கும் அமைவாக நடந்த பேச்சுவார்த்தையே தலைவர் அவர்கள் நடத்திய அண்மையப் பேச்சுவார்த்தை என்று நிச்சயமாகக் கூறுவேன். வியட்நாமிலே மிக நீண்டகாலமாக பேச்சும் போருமாக அந்தப் போராட்டம் நடந்தது. "இராணுவ பலத்துக்கு- வலிமைக்கு அடுத்தபடியாக இராஜதந்திர நடவடிக்கைக்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டது" என்று வியட்நாம் போராட்டம் பற்றிச் சொல்வார்கள். அதேபோல் இராணுவ நடவடிக்கைகளின் இலக்குகளுக்கு அமைவாகவும் இசைவாகவும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டது" என்றும் சொல்வார்கள். நாங்கள் மிகத் தெளிவாக மனப்பூர்வமாக மகிந்தருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறோம்- சிங்கள தேசத்துக்கு அளிக்கிறோம். நாங்கள் எதுவித கள்ளம்- கபடமும் இல்லாமல் தெளிவாகச் சொல்கிறோம்இ "முன்னுக்கு வாருங்கள்- பிரச்சனையைத் தீர்க்க மனமுவந்து எங்களோடு இணைந்து செயற்பட வாருங்கள்" என்று வாய்ப்பைக் கொடுக்கிறோம். அப்படி அவர்கள் முன்வரக் கூடிய வாய்ப்பை நிரூபிப்பதற்காக- போர் நிறுத்த உடன்பாட்டை "மீண்டும்" உயிர்ப்பித்து நடைமுறைப்படுத்த- நீங்கள் ஒப்புக்கொண்ட விடயங்களைச் செய்வதற்கு முன்வாருங்கள் என்று எல்லோரும் ஏற்கக் கூடிய மிக இலகுவான-நியாயமான வாய்ப்பையும் உலகத்துக்கும் மகிந்தருக்கும் அளித்திருக்கிறோம். இந்த விடயங்களின் அடிப்படையில் தேசியத் தலைவரது அணுகுமுறையைப் பார்க்க வேண்டும். போர்இ அமைதிஇ சண்டைஇ சமாதானம் என்று பார்க்காமல் ஒரு தேசத்தினது இராஜதந்திர உருவாக்கமாக தனது இலக்கை அடைவதற்கான சர்வதேச ரீதியான சட்ட ரீதியான மாற்றங்களைக் கடைபிடிக்கும் தன்மையாக பார்க்க வேண்டும். உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில் புலிகளின் உறுதி மூல உபாயம் என்ன? இதற்கப்பால் இவை யாவும் நிறைவேற்றப்படாத நிலையில் எங்கள் இயக்கத்தின் இறுதி மூல உபாயமாக எங்கள் மக்களின் அடிப்படை எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் எங்கள் மக்களின் இறுதி விடுதலைப் போர் மேற்கொள்ளப்படும் என்பதையும் நாங்கள் மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறோம். ஆகவேஇ தேசியத் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் என்பவை எமது விடுதலைப் போராட்டத்தினது பல்பக்க பரிணாமத்தை புலப்படுத்தி ஒரு படிநிலை வளர்ச்சியை குறிக்கிறது என்பதை நாம் தெரிவிக்கிறோம் என்றார் க.வே.பாலகுமாரன். தகவல்: புதினம். |