01-29-2006, 12:14 PM
500 கிராம் வெள்ளைப்பச்சை அரிசிமாவுடன் இளநீர்சேர்க்கவும் அத்துடன் அரை ரிஸ்புூன் ஈஸ்ட்(சிலர் ஈஸ்ட்டுக்கு பதிலாக பாதிகப் பியர் சேர்ப்பதும் உண்டு. ஆனால் எல்லோரும் விரும்பமாட்டார்கள்) சேர்த்து நன்றாக கையால் பிசைந்து சேர்க்கவும். ஓரளவு களிப்பதத்திலே மண் சட்டி அல்லது சில்வர் சட்டியில் வைத்து ஈரதுணியால் மூடிக்கட்டவும். 12 மணிநேரம் கழித்து தேங்காய்ப்பால்(முதல்ப்பால்) சேர்த்து கலக்கவும். அதன்பன் கல்லுச்சட்டியை(சில்வர்சட்டியைதவிர்க்கவும்) அடுப்பில் வைத்து சுட ஆரம்பிக்கலாம். சட்டியில் அப்பம் ஒட்டும் பட்சத்தில் இரண்டு மூன்றுதடவை முட்டைபொரித்து அதன்பின் பயன்படுத்தலாம்.

