01-29-2006, 08:50 AM
<b>ஜெனீவாவில் பேசுவதை விட ஓஸ்லோவிலே பேசலாம்: மகிந்த மீது ஜாதிக ஹெல உறுமய சாடல் </b>
அமைதிப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த ஒப்புக்கொண்டதைவிட நோர்வேயின் ஓஸ்லோவிலே நடத்தியிருக்கலாம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது.
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் கமல் தேசப்பிரிய கூறியதாவது:
அமைதிப் பேச்சுகளில் அரசாங்கம் பங்கேற்பதற்கு முன்பாக 3 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது.
வன்முறைகளை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்பதில் இணக்கப்பாடு காண வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் மகிந்த ராஜபக்ச எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
தென்னிலங்கையின் இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் பேச்சுகள் நடத்தப்படும் என்று மகிந்த சிந்தனையில் தெரிவித்திருந்ததை மகிந்த ராஜபக்ச மீறியுள்ளார். மகிந்தவின் வெற்றிக்கு பங்காற்றியவர்கள் ஜே.வி.பி.யினரும் ஜாதிக ஹெல உறுமயவினரும்தான்.
ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலையிலிருந்து மாறி ஜெனீவாவில் பேச்சுகள் நடத்த மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதை விட பேசாமல் நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலே நடத்திவிடலாம். கூட்டாட்சி முறையில் தீர்வு காண வலியுறுத்துகிற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டிருப்பது ஏற்க முடியாது.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்குக் காரணமாக இருந்த ஜி.எல்.பீரிசும் இப்போது அமைச்சரவையில் இணைய உள்ளார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்று கூறி தேர்தலில் மக்களின் வாக்கைப் பெற்றவர் மகிந்த. இப்போது தனது நிலையிலிருந்து மாறி உள்ளார்.
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கம், அதிஉயர்பாதுகாப்பு வலயம் அகற்றல், துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவு ஆகியவற்றைச் செயற்படுத்துமாறு அரசாங்கத்துக்கு விடுதலைப் புலிகள் பாரிய அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளை ஜாதிக ஹெல உறுமய தோற்கடிக்கும் என்றார் அவர்.
ஜாதிக ஹெல உறுமயவின் உதய கம்மன்பில கூறியதாவது:
ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதைவிட ஓஸ்லோவிலேயே நடத்தலாம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் பேச்சுகள் நடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை பாதிக்கப்படும். இது சிறிலங்கா அரசாங்கத்துக்குப் பாதகமானது.
அமைதிப் பேச்சுகளை கொழும்பில்தான் முதலில் நடத்த வேண்டும்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து வன்னிக்குப் பாதுகாப்பாகச் செல்ல முடிகின்ற போது பேச்சுகளையும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலே நடத்தலாம் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

"
"
"