01-28-2006, 06:07 AM
[size=18]<b>ஜெனீவா செல்வதற்கு முன்னர் செய்ய வேண்டியது....?</b>
பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் தீவிர முயற்சிகளையடுத்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேசுவதற்கு இணங்கியிருக்கின்றன. கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த சொல்ஹெய்ம், சரியான திசையில் ஒரு அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று திருப்தி தெரிவித்திருக்கிறார். ஜெனீவாவில் பேசுவதற்கு விடுதலைப் புலிகள் தெரிவித்த இணக்கத்தை வரவேற்றிருக்கும் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சமாதானத்தைக் காண்பதற்கு அரசாங்கம் அதனால் இயன்ற சகலதையும் நிச்சயம் செய்யும் என்று அறிவித்திருக்கிறார். பெப்ரவரி நடுப்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் இப் பேச்சுவார்த்தை 2003 ஏப்ரல் மாதம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பிறகு கொழும்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான முதல் நேரடிச் சந்திப்பாக அமையப் போகின்றது.
ஆசிய நாடொன்றிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி ராஜபக்ஷ அடியெடுத்துக் கொடுத்த நிலைப்பாட்டைஅவரை விடவும் கூடுதல் முனைப்புடன் வலியுறுத் தி வந்த அவரது நேச அணிகளான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யும் ஜாதிக ஹெல உறுமயவும் இப்போது அவரது மன மாற்றத்தைகண்டிக்காமல் மௌனமாக இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவ்விரு கட்சிகளையும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு வழிக்குக் கொண்டு வருவதில் தற்போதைக்குஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் ,சமாதான முயற்சிகளுக்கு எதிராக தென்னிலங்கையின் முக்கிய அரசியல் சக்திகள் கிளம்பாதிருப்பதை ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார் எனலாம்.
போர் நிறுத்த உடன்படிக்கை என்று ஒன்று உண்மையில் நடைமுறையில் இருக்கிறதா என்று வேறு யாருமல்ல, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரே கேள்வி கேட்கின்ற அளவுக்கு கடந்த சில வாரங்களாக வடக்கு, கிழக்கில் தீவிரமடைந்திருந்த வன்முறைகள் முற்றுமுழுதான போரை மூள வைத்து விடுமோ என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில் ,ஜெனீவா பேச்சுவார்த்தைக்கான இணக்கம் ஓரளவுமன ஆறுதலைத் தருகின்றது என்றாலும், இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகையான நம்பிக்கை எதையும் வளர்த்துக் கொள்ள முடியாது என்ற யதார்த்தம் எம் முன்னால் விரிந்து கிடக்கின்றது. `இவை சமாதானப் பேச்சுவார்த்தைகள் அல்ல. போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளே' என்று சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றார். மு ட்டுக் கட்டை நிலையைத் தகர்ப்பதற்காகவே வடக்கு, கிழக்கின் தற்போதைய மோசமான நிலைவரங்களுக்கு மத்தியிலும் கூட, ஜெனீவாவில் பேசுவதற்கான ஜனாதிபதியின் விட்டுக் கொடுப்பை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள் என்று அவர்களின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கூறியிருக்கிறார்.
உண்மையில், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு மார்க்கமும் இல்லாத ஒரு நிலையில், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே தற்போதைய இணக்கப்பாடு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் மாத்திரமே ஜெனீவாவில் ஆராயப்பட முடியும் என்பது தெட்டத் தெளிவானது. அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அனுசரணையாளர்களான நோர்வேத் தரப்பினர் இறங்கப் போகும் நிலையில், அடுத்துவரும் நாட்களில் வடக்கு, கிழக்கின் தற்போதைய வன்முறை நிகழ்வுப் போக்குகளில் தணிவு எற்பட்டால் மாத்திரமே ஜெனீவா சந்திப்பினால் ஏதாவது உருப்படியான விளைபயனைக் கொண்டுவர முடியும் என்பதை சரியாகப் புரிந்து கொள்வது அவசியம்.
பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து இணக்கம் காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் கூட வடக்கு, கிழக்கில் அப்பாவிக் குடிமக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படக் கூடிய சூழ்நிலை தோன்றாதிருப்பதை உறுதி செய்வதற்கான கைங்கரியங்களில் ஈடுபடுகின்ற சக்திகளும் இந்த குடிமக்கள் கொலையின் பின்னணியில் இருக்கின்றன. இந்நிலையில், ராய்ட்டர் செய்திச் சேவைக்கு சொல்ஹெய்ம் நேற்று வியாழக்கிழமை அளித்திருக்கும் பேட்டியொன்றில் தெரிவித்த கருத்து சகலரினதும் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், `தற்போதைய சமாதானச் செயன்முறைகளை சீர்குலைப்பதற்கு சில பிரகிருதிகள் முயற்சிக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. தற்போதைய அனுகூலமான முயற்சிகளை மலினப்படுத்துவதற்கு வன்முறைகளைத் தூண்டுவதில் நாட்டம் கொண்ட சக்திகள் இருக்கின்றன. வன்முறைகளை நிறுத்துவதற்கு இருதரப்பினரும் தங்களாலான சகல முயற்சிகளையும் செய்ய வேண்டும். சமாதானச் செயன் முறைகளை தடம்புரட்டி விடுவதற்கு சீர்குலைவுச் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார்.
ஜெனீவாவில் சந்திப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய வன்முறைகள் அநேகமாக தொடரவே செய்யுமென்று மக்கள் சர்வசாதாரணமாகப் பேசுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையேயான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு மார்க்கம் எதுவும் இல்லாத விபரீதத்தின் தவிர்க்க முடியாத விளைவே இது. வடக்கு, கிழக்கில் வன்முறைகள் நிறுத்தப்படாதவரை - குறிப்பாக, அப்பாவிக் குடிமக்கள் படுகொலை செய்யப்படும் கொடூரமான சம்பவங்களை நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதவரை - சொல்ஹெய்மின் வருகையும் அவர் கொழும்பிலும் கிளிநொச்சியிலும் நடத்திய பேச்சுகளும் ஏற்படுத்திய சொற்ப நம்பிக்கை எந்தவித பாயனுமற்றதாகவே முடியும். பேச்சுவார்த்தைக்காக ஜெனீவா செல்வதற்கு முன்னதாக செய்யப்பட வேண்டியது எது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவையில்லை
<i><b>ஆசிரியர் தலையங்கம்- தினக்குரல் (27/01/06)</b></i>
[url]
]http://www.thinakural.com/New%20web%20site...orial.htm[/url]

"
"
"