01-21-2004, 12:27 AM
<b>இந்திய நோக்கில் சமாதானம்...?</b>
.இந்திய அரசின் இலங்கையின் அரசியல் இயக்கம் மீதான ஆதிக்க நடவடிக்கைகள் மெல்ல மெல்லஅதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த வகையிலும்தலையிடாது என ஒரு பேச்சுக்கு அடிக்கடி வெளிப்படையாக கருத்துக்கூறிவரும் இந்திய அரசு இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு,வர்த்தகம் மற்றும் சமாதான முன்னெடுப்புக்கள் அனைத்துள்ளும்தனது சுய அபிலாசைகள் மற்றும் பிராந்தியாPதியிலான அரசியல் மற்றும் இராணுவ நலன்களுக்கேற்பதொடர்ந்தும் தன்மூக்கை நுழைத்துவருகின்றது.
இந்த விவகாரம் அண்மைக்காலமாக அதுவும் சமாதான நடவடிக்கைகள் ஒரு முட்டுக்கட்டை நிலையைஎட்டத் தொடங்கியபின் அதிகரித்த வேகத்தில் சற்று வெளிப்படையாகவே நிகழத்தொடங்கியுள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.1990களின் ஆரம்பத்தில் அதுவும் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்தின் பின் இலங்கைவிவகாரங்களில் ஒரு வித கோபம் கலந்த வெறுப்புணர்வுடன் எந்தவிதமான ஈடுபாட்டையும் வெளிப்படையாகக் காட்டாது ஒதுங்கியிருப்பது போன்று காட்டிக்கொண்டாலும் அனைத்துநிகழ்வுகளையும் உன்னிப்பாக அவதானிக்கத் தவறியதில்லை.
சந்திரிகா அரசு பதவியேற்றபின்னர் அதுவும் மூன்றாம் ஈழப்போர் ஆரம்பமான பின்னர் இந்தியாவின் அணுகுமுறைகள் மீண்டும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில்முனைப்புக் கொள்ளத்தொடங்கின.போரின் தீவிரம் அதிகரித்தகாலங்களில் இலங்கையின் இறைமை உரிமை, ஒருமைப்பாடுபோன்றவற்றில் தனக்குப் பெரிதும் அக்கறையுடன் கூடிய ஆர்வம் இருப்பதாக இந்திய ஆளும்வர்க்கம்கூறத்தொடங்கியதுடன் இலங்கைக்கு இரா ணுவ மற்றும் பாதுகாப்பு hPதியிலான உதவிகளை தாமாகவேசெய்யமுன்வந்ததை சந்திரிகா அரசும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருந்தது.
யுத்தத்திற்கு உதவி அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான உதவியென்ற பெயரில் மேற்குலகநாடுகள் குறிப்பாக அமெரிக்காவும், அதற்குச் சார்பான நாடுகள் இலங்கைக்குள் பல்வேறு வழிகளாலும் ஊடுருவி தம்மை இலங்கையின் ரட்சகர்களாக காட்ட முனைந்து கொண்டிருந்த வேளை யில்,அதனை முறியடிக்கவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இருந்தது.இந்தியாவுக்கு எதிரான போக்குடைய பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆயுதாPதியிலான உதவி களை செய்துகொண்டிருந்தமையும், இந்தியாவினால் சகித்துக் கொள்ள முடியாத விடயமாக இருந்ததில் வியப்பில்லை.
ஆனையிறவு விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து யாழ்.குடாநாடு புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டபோது குடாநாட்டினுள் நிலைகொண்டிருந்த சுமார் 30,000 க்கும் அதிகமான படையினரைக் காப்பாற்ற இந்தியாவின்கால்களில் விழுவ தைத் தவிர சந்திரிகாவுக்கு வேறுவழியிருக்கவில்லை. இது இந்தியா -இலங்கைமீது தனது மேலாதிக்கத்தை மீண்டும் செலுத்த வாய்ப்பான சூழலை உருவாக்கிக்கொடுத்தது.
ரணில் ஆட்சிக்கு வந்ததும் ஏற்பட்ட அரசியல் மாற்றம் சமாதான சூழலை ஏற்படுத்தியபோது, அதன்பின்னணியில் அதாவது சமாதான ஏற்பாட்டாளராக செயற்பட்ட நோர்வேயின் வருகையுடன் மேற்குலகின்அதாவது, அமெரிக்க சார்பு நாடுகளின் உறவுகள் இலங்கை அரசுடன் வலுப்பெறத்தொடங் கியது.இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாத ஒன்றாகும்.மேற்குலக ராஜதந்திரம் சமாதான நகர்வுகளில் இந்தி யாவை தாம் புறக்கணித்துச் செயற்படவில்லைஎன்ற தோற்றத்தை உருவாக்கி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இந்தியாவுக்கு அனைத்தையும்உடனுக்குடன் தெரிவித்துக் கலந்து ரையாடியபோதிலும் இந்தியா அதில் திருப்தி கொண்டதுகிடையாது.
இந்த சமாதான முயற்சி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரோபாயத்தின் முக்கிய அம்சம் என்றே இந்தியா உணர்ந்திருந்தால் அதனை ஆதரிப் பதுபோல் வெளியில் காட்டிக்கொண்டாலும் மறைமுகமாகஅத னை எதிர்க்கவும் அமைதி முயற்சிகளைக் குழப்பவும் சந்திரி காவை - அதாவது ஜனாதிபதியைதனக்கான கருவியாக பயன்படுத்திக்கொண்டது.சந்திரிகாவின் அதிரடி அரசியல் நடவடிக்கையால் ஏற்பட்ட குழப்பம் சமாதானத்தைப் புறந்தள்ளியதில் இந்தியாவுக்கு உண்டான திருப்தியை அண்மைக்காலத்தில் இந்திய ராஜதந்திரிகளான தீக்ஷீத், ராஸ்கோத்ரா, முனி ஆகியோர் வெளியிட்ட நுட்பமான கருத்துக்கள்வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் ஹிந்தித்துவ கோட்பாட்டை ஆதரித்து முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை தடுக்கமுடியாது மௌனம் காக்கும் பாரதீய ஜனதா அரசு இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுூப் ஹக்கீமை அழைத்துப்பேசி முஸ்லிம்களுக்காக உருகுவது வேடிக்கையான விடயம்.சமாதான முயற்சியை குழப்பும் ஒரு சாதனமாகவே முஸ்லிம் காங்கிரசையும், ஹக்கீமையும் இந்தியா கையாளத்தொடங்கியுள்ளது, இரகசியமான விடயமல்ல.
இதேவேளை, ஒரு காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்த ஜே.வி.பி யை இந்தியா தனது காலடியில் விழவைத்தமையானது சமாதானத்துக்கு எதிரான சக்திகளை இந்தியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தொடங்கிவிட்டமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆக இலங்கையில் சமாதானம் என்பதை இந்தியா நியாயமான முறையில் அங்கீகரிக்க விரும்பவில்லை என்பதையே அண்மைக்கால அதன் செயற்பாடுகள் உணர்த்துவதாக உள்ளது.இது இந்திய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஒரு தீர்வை திணிக்க முயலும் இந்திய ஆளும்வர்க்கத்தின் ஆழ்மனநோக்கம் இன்னமும் மாறவில்லை என்பதை உணர்த்தவே செய்கிறது
நன்றி: நமது ஈழநாடு (19.01.2004)
http://www.eezhanaadu.com/achieves/1901200.../editorial.html