01-26-2006, 08:28 PM
<b>மீண்டும் பேச்சுக்கள்: அமெரிக்கா வரவேற்பு </b>
இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்குவதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் பேச்சாளர் சென் மக்கொர்மக் வாசிங்டனில் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் பேச்சுக்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரவேற்கிறது.
அமைதி முயற்சிகளில் சாதகமான முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை நாம் பாராட்டுகிறோம். அமைதி முயற்சிகளில் நோர்வே மேற்கொள்ளும் அனுசரணைப் பணிகளுக்கு நாம் முழுமையாக ஆதரவளிக்கிறோம்.
அமெரிக்க பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன், கடந்த சனவரி 23 ஆம் நாள் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுக்கு திரும்பினால்தான் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் அரசியல் ஆயுதமாக வன்முறைகளையும் பயங்கரவாதச் செயற்பாடுகளையும் விடுதலைப் புலிகள் மேற்கொள்வதை கைவிடச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம்இ நோர்வே, ஜப்பான் ஆகியவை நிரந்தர அமைதி உருவாக பேச்சு மேசைக்கு இருதரப்பினரும் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இலங்கை அமைதி முயற்சிகளில் அமெரிக்கா முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
ஆத்திரமூட்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் பொறுமை காத்திருந்த சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா பாராட்டுகிறது. அமைதி முயற்சிகளை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு நாம் ஆதரவளிக்கிறோம்.
இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை நாம் ஆதரிக்கிறோம். சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வன்முறைகளை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சனை முடிவுக்கு வருவதைப் பார்க்கவே இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் விரும்புகிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அமைதியை உருவாக்கவும் அந்த நாட்டின் நிலைத்தன்மை நீடிக்கவும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<b><i> தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>

"
"
"