01-26-2006, 02:56 AM
<b>பேச்சுகளில் முஸ்லிம் தனித்தரப்பு விவகாரம்!- மகிந்த மீது ஹக்கீம் கண்டனம். </b>
இடம்பெறவிருக்கும் பேச்சுகளின்போது முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு கட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றது. பேச்சுகள் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே தீர்க்கப்படவேண்டிய முக்கிய விடயமாகும் இதில் முஸ்லிம் தரப்பினருக்கு எதுவித இடமும் இல்லை என ஸ்ரீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதனைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ராவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்காவின் சமாதான அனுசரணையாளராக செயற்படும் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை செவ்வாயக்கிழமை மாலை சந்தித்துப்பேச்சு நடத்தினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களிலேயே ரவுப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்த சிந்தனைகள் என்பதில், சமாதானப்பேச்சகளில் முஸ்லிம் தரப்பினர் தனித்தரப்பாக கலந்தகொள்ளுவார்கள் எனத் தெரிவித்திருந்தவர் தற்போது அதனை உதாசீனப்படுத்திவிட்டு அது சாத்தியமில்லை என்கின்றார்.
எவை எப்படி இருப்பினும் முஸ்லிம்கள் தனித்தரப்பாகவே கலந்துகொள்வார்கள் இதனை, விடுதலைப்புலிகளும் புரிந்து கொள்ளவேண்டும். அமைதிப்பேச்சக்கள் இடம்பெறவுள்ள இந்தவேளையில் அதற்குப்பூரண ஆதரவு வழங்குமாறும் மீண்டும் ஒரு யுத்தம் எற்படாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வண்ணமும் நாம் அவரைக்கேட்டுக் கொள்கின்றோம். இதே வேளை முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பாகவும் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சமாதானப்பேச்சுகள் இடம்பெறும் போது முஸ்லிம்கள் தனித்தரப்பாகவே கலந்துகொள்வதற்கு ஆவன செய்யவேண்டும் என்று மீண்டும் நாம் கோருகின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

"
"
"