01-26-2006, 02:34 AM
<b>முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை நிராகரிப்பு: முஸ்லிம் சபை கவலை</b>
இலங்கை அமைதி முயற்சிகளுக்கான பேச்சுகளில் முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளமை கவலை அளிப்பதாக சிறிலங்கா முஸ்லிம் சபை கவலை தெரிவித்துள்ளது.
58 முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான முஸ்லிம் சபை மகிந்த ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடித விவரம்:
முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் நிராகரித்திருப்பது எமக்கு கவலையளிக்கிறது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதலே இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அமைதி முயற்சிகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக இணைக்கப்படாவிட்டால் முஸ்லிம்களினது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அமைதி நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டுவிடும் நிலை உள்ளது.
இருந்தபோதும் அமைதி முயற்சிகள் வெற்றி பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

"
"
"