01-25-2006, 10:37 AM
அறிவியல் ஆராச்சி என்பது எது என்ற அடிப்படைகள் தெரியாமலும் நான் காட்டியுள்ள ஆதாரங்களில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பதை விளங்காமல் சொல்கிறீரே உங்களுக்கு புரியும் வண்ணம் மீண்டும் சொல்லித் தருகிறன்.
இங்கே ராஜாதிராஜ இட்ட பன்சலின் கட்டுரை ஆனது ஒரு ஆராச்சிக் கட்டுரை என்பதற்கான அடிப்படைகள் எதுவும் அற்றது.
அது ஏன்?
1) ஒரு ஆராச்சி என்பது, முதலில் தனது நோக்கத்தை அல்லது எதிர்வு கூற்றை முன் மொழிந்து அதற்கு ஏற்றாற்போல் ஆராய்வு வடிவமைக்கப்படு அதன் அடிப்படயிலேயே தரவுகள் பெறப்பட்டு,ஆராய்வின் அடிப்படைகள் அல்லாமல் மற்றய காரணிகள் எவ்வாறு ஆரையப்படும் காரணியில் தாக்கம் செலுத்தாமல் நிவர்த்தி செய்யப் படிகின்றன என்பவற்றை வைத்தே நடை பெறுகிறது.ராஜாதிராஜா இணைத்த கட்டுரையில் இவை எதுவுமே நடை பெறவில்லை.அவர் எந்த வித ஆராய்வையும் மேற்கொள்ளவில்லை.
2) இரண்டாவதாக ஆராச்சிக் கட்டுரை எழுதுபவர் ஆராய்வின் துறை சார் வல்லுனராகவும் இருக்க வேண்டும்.ஒரு குருவியோ அல்லது ஒரு மலரோ ஆராச்சிக் கட்டுரை மனித வரலாற்றைப் பற்றி எழுதிவிட முடியாது.
இந்தோ உரேசியங்களின் வரலாற்றை ஒரு சாதாரன கொமுனிடி கல்லூரியில் உயிரியியல் தொழில் நுட்பம் படிப்பிக்கும் ஒருவர் தனது வீட்டு கண்ணணியில் எழுதி விட முடியாது.ஆனால் இந்தப் பன்சன் என்பவர் அமெரிகாவில் இயங்கும் இந்துதுவக் குழுக்களின் முன்னணி செயற்பாட்டாளர்.அவர் இப்படியான கட்டுரையை எழுதியது அரசியற் காரணங்களுக்காக.அதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இணைக்கப் பட்டுள்ளன.
3)இங்கே பன்சே என்றவர் எதுவித ஆராச்சியயும் மேற்கொள்ளவில்லை அவர் அத்துறை சார்ந்த அறிவியளாரும் அல்ல.அவர் எந்த ஒரு பல்கலைக் கழகத்தின் சார்பிலோ அன்றி ஆராச்சி நிருவனத்தின் சார்பிலோ அக் கடுரையை வெளியிடவில்லை.அது ஒரு அமெரிக்க இந்திய மனித உரிமைகள் அமைப்பு என்று சொல்லப் படுகின்ற அவரது இந்துதுவ அமைப்பின் சார்பிலேயே வெளியிடப் பட்டுள்ளது.
இவ்வளவு விசயமும் முன்னய பக்கங்களில் சுட்டிக் காட்டப் பட்டிருக்க எதோ பெரிய கருத்தைச் சொல்லி விட்டதாக இங்கே வந்து டிசுப்ருவ் பண்ணு டிசுபுருவ் பண்ணு என்று ஒரு கேள்வியைக் கேட்டுகொண்டிருக்கின்றீரே
சரி இனி இந்த பன்சல் என்பவர் தனது கட்டுரையில் மேற்கோள் காட்டிய கிவிசில்ட் என்பவரது ஆராச்சி ஆபிரிக்கவில் இருந்து எவ்வறு மனிதகுடிப் பரம்பல் ஏற்பட்டது என்பதை நோக்காகக் கொண்டு வடிவமைக்கப் பட்டது.
அதில் பெறப்பட்ட தரவுகளின் பிழை ஆனது பல் ஆயிரம் வருடங்கள் வரை ஆனது.இத் தரவுகளை வைத்துக் கொண்டு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னய குடிப் பரம்பலைக் கூறி விட முடியாது.இது அணுவை ஒரு அடிமட்டத்தை வைத்து அளப்பதற்குச் சமன்.அத்தோடு மருவிய மரபணுவின் மருவும் வேகம் பற்றிய புரிதல் இன்னும் முழுமயாக கணக்கிடப் படவில்லை.அத்தோடு கிவிஸ்லிட் 1999 எழுதிய ஆராச்சிக் கடுரைக்கு எதிர்மாறாக அவரே ஆரியரின் குடிப்பரம்பல் பற்றி இன்னொரு கட்டுரையை 2004 இல் எழுதி உள்ளார்.அவரின் 1999 ஆம் ஆன்டு ஆராய்வுக் கட்டுரை ஆனது 60,000 BC இல் நடந்த ஆபிரிக்கக் குடிப் பரம்பலை ஆராயும் நோக்கிலானது.இதனை வைத்துக் கொண்டு 1500 BC இல் நடந்த ஆரியரின் குடிப்பரம்பல் பற்றி எந்த வித எதிர்வு கூறலையும் கூறிவிட முடியாது.
ஆகவே மரபணு ரீதியான ஆராய்வுகள் அத் தொழில் நுட்பத்திலும் தரவுகளின் பிழயில் இருக்கக் கூடிய அளவைக் குறைப்பதன் மூலம் மேற் கொள்ளப் பட்டாலேயே ஆரியரின் வருகை பற்றிய ஆராய்வுகளை மேற் கொள்ள முடியும்.
அத்தோடு வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை ஒரு தரவை வைத்துக் கொண்டு மாற்றி எழுதிவிட முடியாது.அத் தரவை அனுசரிக்கும் வகையில் தொல்பொருளியல்,மொழியியல்,இலக்கியம்,சமூகவியல் பொன்ற இனோரன்ன துறைகளில் ஆராய்வுகள் நடத்தப் பட்டே அறிவியல் ரீதியான தரவுகள் முடிவுகள் பெறப்பட முடியும்.இவ்வாறன ஆராய்வுகள் அனைத்தும் ஆரியர் இந்திய உபகண்டத்திற்கு வெளியில் இருந்து வந்தார்கள் என்ற உண்மையயே சுட்டிக் காட்டுகின்றன.