Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#38
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ் வழி வந்த பெருங்குடி மக்களே (பார்வையாளர்களே) சீர்தூக்கிச் சமன் செய்யும் துலாக்கோல் போல் நடுநிலைமை தவறாது தீர்ப்புச் சொல்ல வந்திருக்கும் நடுவர்களே, எனக்கிங்கு நான் கேட்டவுடன் சீட்டுத்தந்த இரசிகை அவர்களே, மற்றும் இணைய ஊடகம் எம்தமிழ்ச் சிறார்களுக்கு விளைவிக்கும் பெருஞ் சீர்கேடுகளைக் கண்டு, மனம் நொந்து, வெந்து, குமுறிக் கொண்டிருக்கும் எனதணியினரே, எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

மன்னிக்கவும். இன்னும் சிலர் இங்கு இருக்கிறார்கள். என்னவோ இணைய ஊடகங்கள் புலம்பெயர் தமிழ் இளைஞர்களை ஏதோ வாழவைக்கிறதாம் என்று கூறிக்கொண்டு (புூனை பால் குடிக்கும்போது கண்ணை மூடிக் கொள்ளுமாம் அதுபோல) சமூகத்தின் சீரழிவு புரியாத அப்பாவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங் கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே!. உங்களுக்குத் தெரியாதது இல்லை. <b>உண்மை செருப்புப் போட்டுக் கொண்டு வீதியில இறங்க முதல பொய் பல்லக்கில ஏறி ஊரையே சுற்றி வந்துவிடுமாம்.</b> அதுபோலத்தான் எதிரணியினர் பாவம் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நடுவர் அவர்களே! உலகத்து மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. <b>தாங்கள் சீரழிகிறோம் என்பது கூடத் தெரியாமல் (புரியாமல்) சீரழிந்து கொண்டிருப்பவர்கள்.</b>
2. தங்களுக்கு சீரழிவு வருவதை புரிந்து கொண்டு சுதாகரித்துக் கொள்பவர் (தப்பித்துக் கொள்பவர்)

இதில எதிரணியினர் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்களாகவே புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நடுவர் அவர்களே!
நான் தெரியாமல்தான் கேட்கிறேன். எதிரணியினர் புலம்புவது போல மனக்கட்டுப்பாடு இருந்தா சீரழியாமல் தப்பித்துக் கொள்ளலாம் (பார்க்க- சிநேகிதியின் கருத்து) என்ற கருத்தை நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்களா?.

<b>மனக்கட்டுப்பாடு</b> - அது பெரியவங்க நாங்களே இல்லாம அல்லாடிட்டுக் கிடக்கிறோம். இதில இளைஞர்களுக்கு இருக்கும் எண்டு நினைக்கிறீங்க????

எத்தனையோ அடிபட்டு, அவமானப்பட்டு, அனுபவப்பட்டு இன்னுமே பெரியவங்களால தங்கட மனசக் கட்டுப்படுத்த (மனம் ஒரு குரங்கு. அதைத் தாவவிட்டால் தப்பி ஓடவிட்டால்............)
மார்க்கம் இல்லாம ஓடுப்பட்டுத் திரியுறாங்க.

மனக்கட்டுப்பாடு என்ன கடையில வாங்கிற கொம்பியுூட்டர் பாட்ஸ் எண்டு நினைச்சாங்களா. வாங்கிப் புூட்டிவிட்டா சரி எண்டு........

அது ஒண்ணுமில்ல நடுவர் அவர்களே. எதிரி அணியில பாத்தீங்கெண்டா பெரும்பாலும் (ஒன்றிரண்டு கட்டையில போறதுகள தவிர) பட்டிமன்றத் தலைப்புக்கு சம்பந்தப்பட்ட புலம்பெயர் இளைஞர்களே ஆக்கிரமிச்சு இருக்கிறப் பாக்கலாம். அதுதான் அவர்களுக்கு தாங்கள் சீரழிஞ்சு கொண்டிருக்கிறது தெரியேல்ல. <b>அவர்களின் நலன்களில அக்கறை</b> உள்ள நான் (தூயவன் கவனிக்கவும்) இந்தப்பக்கம் இருந்து பார்த்து கவலைப்பட்டு, ஏதோ என்னால் இயன்றவரை புத்திமதி சொல்லலாம் என்று வந்தேன்.

இன்னுமொரு முக்கியமான ரகசியம் உங்களுக்கு மட்டும் சொல்லுறன் நடுவர் அவர்களே.

உலகத்திலேயே பகுத்தறிவு உள்ள <b>மிருகம்</b> என்று மனிதனை சொல்லுவினம். பகுத்தறிவு எண்டா என்ன???? <b>நல்லது எது கெட்டது எதுஎண்டு அலசி ஆராய்ந்து (பகுத்து, அறிந்து) சரியான, மிகச் சரியான, மிகமிகச் சரியான முடிவை எடுப்பது.

இங்கு எத்தனைபேர் அப்படி சரியான முடிவு எடுக்கிறார்கள். (உங்களைத் தவிர) சரியான முடிவுதான் எடுத்திருப்பதாக நாம் முடிவு எடுக்கும்போது நினைத்திருப்போம். ஆனால் பின்னர் அதுவும் பிழையான முடிவுதான் என்று அறிந்து கவலைப்படாதவர் யாராவது இங்கிருக்க முடியுமா????

ஏதாவது ஒரு இடத்தில எப்பவாவது ஒரு சந்தர்ப்பத்தில எல்லோருமே பிழையான முடிவு எடுத்துத்தான் இருப்போம். (அப்பிடி நான் ஒருக்காலும் செய்ததில்லை என்று இங்கு யாராவது வாதிடுவார்களானால், அவர்களுக்கு தான் பிழையான முடிவு எடுத்தது இன்னும் தெரியாமல் இருக்கும்) பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியில வரும்போது, எல்லாமே சரியான விடை எழுதிப் போட்டு வாறவை எத்தினைபேர் வெளியில வந்து மற்ற மாணவரோடு கதைச்சபிறகு கவலைப் பட்டிருப்பினம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நடுவர் அவர்களே! அழிவுப் பாதையில போறவன் எவனுமே தான் அழிவுப்பாதையில போறது தெரிஞ்சு போறதில்ல. அது நல்ல பாதையெண்டு பிழையான ஒரு முடிவை அவன் எடுத்திருந்தா, அவனுக்கு எவ்வளவுதான் மனக்கட்டுப்பாடு இருந்தும் பிரியோசனமில்லை. அப்பிடி பிழையான முடிவை எடுத்தவர்கள்தான் எதிரணியில நிறையப் பேர் இருக்கினம். அங்க மனக்கட்டுப்பாடு இருந்தும் என்ன லாபம். [b]சீரழிவு சீரழிவுதானே. </b>இதைவிட முக்கியமான ஒரு விடயத்திற்கு வருகிறேன்.

உலகத்தில எந்தப் பொருள் (அல்லது ஒரு விடயம்) கவரும் தன்மையைக் கொண்டிருக்கோ, அது எப்போதுமே தனக்குள்ளே மறைமுகமான (Hidden traps) பொறிகளைக் கொண்டிருக்கும். இதை யாரும் விஞ்ஞானிகளோ, மேதைகளோ முதல்லேயே சொல்லியிருக்காவிடில், எழுதி வச்சுக் கொள்ளுங்கோ இன்றையில் இருந்து இது ஈஸ்வர் விதி (Eswar`s law) என்று அழைக்கப்படும்.

இதற்கு உதாரணம் நான் பக்கம் பக்கமா எழுதலாம். ஏனெண்டா இந்த விதிக்குள்ள அடங்காதது எதுவுமில்ல. இங்க நான் பொறி என்று சொன்னதுக்குள் இழப்புக்கள் எதுவாகவும் இருக்கலாம். நேர விரயம், பண விரயம், பொருள் விரயம், உடல் சீர்கேடு, இறப்பு உட்பட எதுவாகவும் இருக்கலாம். <b>ஏன் எத்தனையோ பேர் பைத்தியமா</b>க் கூடத் திரியிறாங்க. இதுவும் ஒரு பொறிதான் என்று அவர்கள் கண்டுபிடித்து திருந்துவதற்குள் காலம் கடந்திருக்கும். இதற்கு மாமன்னர் முதல் மகாமுனி வரை எவரும் விதிவிலக்கல்ல.

<i>சிகரட் குடிக்கிறவை, மதுபானம் பாவிக்கிறவை, போதைப்பொருள் பாவிக்கிறவை சீட்டு விளையாடுறவை, இவ்வளவு ஏன் தொலைக்காட்சியில தொடர்நாடகம் பார்க்கிறவை எல்லாரையும் கேளுங்கோ. ஒரே பதில்தான் வரும். தொடக்கத்தில <b>சும்மா பொழுதுபோக்குக்குத்தான் தொடங்கினது. இப்ப விட ஏலாமக் கிடக்கு</b>.</i>

ஏன் யாழ் களத்துக்கு சும்மா வந்து போன நாங்களே இதுக்குள்ள கட்டுண்டு கிடக்கேல்லையா. ஒருநாளைக்கு யாழுக்கு வராட்டி ஏதோ முக்கியமான வேலையை செய்யாம விட்டமாதிரி மனசு குறுகுறுக்காதவர் யாரும் இருக்கிறீர்களா.

இப்ப எதிரணியினர் பலரும் வைத்த கருத்தின் சாராம்சத்தை எடுத்து நோக்குவோமாக இருந்தால், அங்கே <b>இணையத்தின் </b>பலாபலன்கள் பக்கம் பக்கமாக எடுத்துக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

<b>அதெல்லாம் வெறும் கவர்ச்சி!!!!!!!</b>

அதற்குள்ளே மறைந்து கிடக்கின்ற தீமைகள் அவர்களின்ட கண்ணுக்கு இப்ப தெரியாது. அதால அவர்கள் படப்போற சீரழிவுகள் அவர்களுக்கு இன்னும் புரியேல்லை. எங்கட அணி நண்பர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இளையோர்தானே. இனி நீங்கள் ஒருக்கா ஆணித்தரமா சொல்லிவிட்டீங்களெண்டா அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு இருக்கு.

எதிரணி அப்பாவிகள் பட்டியலிட்டதுபோல் இணையத்தின் பயன்கள் சொல்லிடங்காதவைதான். இளைஞன் முதல் இறுதியாக வந்தவர்வரை இணையத்தின் நன்மைகளை எக்கச்சக்கமாக எடுத்து வீசினார்கள். ஆனால்......... ஆனால்............ புலம் பெயர்ந்த தமிழ் இளைஞருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நன்மைகளை பட்டியலிட மறந்து விட்டார்கள். பாவம் அவர்கள் அப்படியொன்று இருந்தால்தானே.......

<b>இணையத்தின் வசதிகள் எங்களுக்கும் தெரியுமையா</b>. இந்த இணைய நூற்றாண்டில் காலைக் கடன் கழிப்பதற்கு மட்டும் கதிரையை விட்டு எழுந்தால் போதும். (அதுவும் எடுத்துச் செல்லும் கணனி இருந்தா காலைக்கடன் கழிக்கிற நேரத்திலும் இணையத்தை பார்வையிடலாம்)

படிக்க வேணுமா.......... <b>இணையம். </b>
வங்கிக்கு போக வேணுமா.......... <b>இணையம் </b>
கடைக்கு போக வேணுமா........ <b>இணையம் </b>
வாசிகசாலை............. ஊகூம் <b>இணையம்.</b>
ஊருக்குச் சென்று உறவினரைப் பாக்க வேணுமா, கதைக்க வேணுமா........... <b>இணையம் </b>
இனி கோயிலுக்கும் ஒருவனும் போகமாட்டான் ......... இணையத்தில இருக்கிற கோயிலைப் பாத்து ஒரு கும்பிடு போட்டா காணாதே?

<b>காசி என்ன கங்கை என்ன..... கைக்கெட்டும் தூரம்தான்.......போங்கடா!</b>
எங்கட காலத்தில பையன்கள் (நானல்ல நண்பர்கள்) விடியக் காலம எழுந்து, சீவிச்சிங்காரிச்சு சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கேயோ போய்விட்;டு களைத்து விழுந்து வருவார்கள். வீட்ட வந்தா அப்பா கேட்பார், <b>என்ன கொண்டுபோய் விட்டுட்டு வந்தாச்சா.</b> இதே போல மாலையிலும் வீட்டை கொண்டை விடவேணும். இதைவிட கோயில் குளத்துக்கு கூட்டிக்கொண்டு போக வேணும். பயந்து பயந்து சந்திக்க வேணும். இப்படி அல்லாடி வளர்ந்தது எங்கள் காலத்து காதல். ஆனா இப்ப இருந்த இடத்தில இருந்து <b>இணையக் காதல்</b>. காதலுக்காக அலைவதிலும் ஒரு சுகமுண்டென்று சொல்லக் கேள்வி. அந்த சுகம் இப்ப கிடைக்குமா.???????

அந்தக் காலத்தில வாசிகசாலைக்குப் போனா, பத்திரிகை படிச்சு அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல, நாலு தெரிஞ்ச மனிசரைச் சந்திக்கலாம், அவையோட கேள்விப்பட்ட செய்திகளை கலந்து பேசலாம் காற்றோட்டமா இருந்து. நாலு சுவத்துக்கு நடுவில இருந்து உங்களோட நான் கதைச்சாலும் முகம் பாத்துப் பேசுறது மாதிரி வருமே.

இப்பிடி எல்லா வசதிகளும் கைக்கெட்டும் நிலை இருந்தாலும், அதில ஒருவகை இழப்பு இருக்கிறதை நீங்கள் எல்லோருமே உணர்ந்திருப்பீங்கதானே.

<b>இனி புலம் பெயர்ந்த தமிழ் இளையோர் இந்த இணையத்தால் எப்பிடி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறனர் என்று பார்ப்போம்.</b>

உங்களுக்குத் தெரியாததா, தமிழ்சமூகம் தங்கட பிள்ளைகளை பொத்திபொத்தி வளர்க்கிற சமூகம். தோளுக்கு மேல வளர்ந்த பையன் எண்டாலும் சரிதான், வயதுக்கு வந்த பெண் எண்டாலும் சரிதான் முடிவுகள் அப்பா அம்மாதான் எடுக்க வேணும். பிள்ளைகளுக்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது என்பது பெற்றோரது கணிப்பு.

எங்கட காலத்தில ஒரு திருட்டு தம் அடிக்கிறதெண்டாலும் எவ்வளவு கஷ்டங்கள், யாராவது பாத்திடப் போயினம். சொந்தக்காரர் மட்டுமெண்டில்லை. ஊரவன் யார் பார்த்தாலும் துலைஞ்சிது. போறபோக்கில வத்தி வச்சிட்டுப் போயிடுவாங்கள். <b>ஒரு பிள்ளை நல்ல பிள்ளையா </b>வளக்கப் படவேணும் எண்டதில ஊரே கவனமா இருக்கும்.

ஆனா இப்ப புலம் பெயர்ந்த இடத்தில???????? கட்டுப்பாடுகள் எதுவும் அற்ற நிலை. தமிழன் யார் பார்த்தாலும் எனக்கென்ன. அப்பா அம்மாவே என்னை அடிக்கேலாது. இதில மற்றவன் என்ன சொல்லுறது எண்ட நிலை.

அதைவிட முக்கியமாக வெளிநாடு வந்த பெரும்பான்மை பெற்றோர் தங்கள் வசதிகளைப் பெருக்குவதில் காட்டுற அக்கறையை, தங்கள் அறிவைப் பெருக்குவதில் காட்டுவதில்லை.
நாளுக்குநாள் முன்னேறிவரும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை விளங்கிக் கொள்வதில் பல பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான இடைவெளி அதிகம். பிறகென்ன பிள்ளைகள் காட்டில மழைதான்.

மதன் அண்ணாச்சி சொல்லியிருந்தார் பத்திரிகை, தொலைக்காட்சியில இல்லாத கெட்ட விசயங்களா எண்டு (பார்க்க மதனின் கருத்தை).

ஐயா ! லண்டன் பத்திரிகையில மூண்டாம் பக்கத்தில என்ன வருதெண்டு லண்டனில இருக்கிறவங்களுக்கு தெரியும். ஜேர்மனில இருக்கிறவங்களுக்குத் தெரியுமா????
கனடாத் தொலைக்காட்சியில காட்டிறது இத்தாலியில தெரியுமா?????

ஆனா இணையத்தில போட்டா, அது எல்லா இடத்திலும் தெரியுமய்யா. இணையத்தின்ரை சக்தி பெரிசய்யா. பத்திரிகையும் தொலைக்காட்சியும் சேர்ந்து பத்துப் பேரைக் கெடுத்தா, <b>இணையம் நூறு பேரைக் கெடுத்த மாதிரி.</b>

அதுமட்டுமில்ல, அந்தக்காலத்தில யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் வந்ததாக. பெரியவர்களுக்கே அங்கொன்று இங்கொன்றாகத்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்ப புலம்பெயர் நாட்டில் இளையோர் பலருக்கு நீரிழிவு நோய். காரணம் என்ன. அதுதான் <b>எல்லாமே இருந்த இடத்திலேயே கிடைக்குதே. உடல் வருத்தி உழைப்போ, உடற்பயிற்சியோ இல்லையே. புலம் பெயர்ந்த இளையோர் உடற்பயிற்சியையும் இணையத்தின் மூலம் செய்ய வசதியேதும் இருக்கா எண்டு தேடுவதாகக் கேள்வி</b>.

இது நன்மையா மறைந்திருக்கும் தீமையா????????

இதைவிட புலம்பெயர் தமிழ் இளையோரிடம் சாதாரணமாகக் காணக்கூடியது மூக்குக் கண்ணாடிப் பாவவை. எங்கட காலத்தில எங்காவது ஒருவன் கண்ணாடி பாவிப்பான். அவனுக்கு கண்ணாடி எண்டே பட்டப் பெயர் வைத்திருப்போம். இப்ப கண்ணாடி எண்டா எந்தக் கண்ணாடி என்று கேள்வி வரும்.

இதைவிட பல புதிதுபுதிதான நோய்கள் மௌஸ் பிடிச்சா கைநரம்பு பிச்சுக்குதாம். தொடர்ந்து தட்டச்சை தட்டிக்கொண்டே இருந்தா தட்டச்சேபோவியா என்றொரு நோய். ஒக்காந்து ஒக்காந்து ஒக்கார்ற இடமே காய்ச்சுப் போச்சு. (எந்திரிச்சு வேல செய்யுங்கப்பா). இன்னும் பல புதுநோய்கள் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எல்லாமே இணையத்தின் உதவியுடன் (கணனிக்;கு முன்னால) மனிதன் சோம்பேறியா மாறுவதால.

இவ்வளவு நேரமும் நான் சொன்னதில இருந்து நடுவர் அவர்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். ஆஆஆஆஆ அதேதான்.

அளவுக்கு மிஞ்சினா இணையமும் நஞ்சு

மீண்டும் எனக்கு (இப்பவாவது) சந்தர்ப்பம் அளித்த எனதணி நண்பர்கள், ஒருங்கிணைப்பாளர், மட்டுறுத்துனர், மற்றும் பார்வையாளர் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.....

அன்புடன்
ஈஸ்வர்


<b>உடல் உழைப்புக்கு மதிப்பில்லாமல் செய்த இணையத்தை அளவோடு பாவிப்போம். இணையம் எங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது. அது சீரழிவை நோக்கிய பாதை!!!!!</b>

!
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)