01-20-2004, 12:03 AM
சில வருடங்களுக்க முன்னர் உண்மையாகவே நிகழ்ந்த ஒரு விசயத்தை இங்கே குறிப்பிடலாமென நினைக்கிறேன். சிலவேளை இதை ஏற்கெனவே யாழ் பழைய கருத்துக்களத்தில் குறிப்பிட்டிருக்கலாம். சரியாக நினைவில் இல்லை.
பதினாறு வயதான மகன்.. ஜிம்னாசியம் என்று கூறப்படும் பிரிவில் கல்வி கற்பவர். ஒருநாள் தாயும் தகப்பனும் ஒரு வைபவம் ஒன்றுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது மகன் மலசலகூடத்தினுள் இருந்தார்.
'ஒரு இடமும் போகாமை உங்கையே இருக்கணும்' என்று தாயோ தந்தையோ உரத்த குரலில் மகனுக்கு கேட்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்கள். வைபவத்தால் திரும்பி வந்தபோதும்.. அந்த மகன் மலசலகூடத்தினுள்ளேயே இருந்தாராம்.
'மகனைப் படிப்பில் கெட்டிக்காரனாக வளர்த்த அளவுக்கு, உலக அனுபவத்தில் கெட்டிக்காரனாக வளர்க்கத் தவறிவிட்டேன்' என அந்தத் தந்தை நண்பரொருவருக்குக் கூறிக் கவலைப்பட்டாராம்.
பிள்ளைகளை பொத்திப் பொத்தி வளர்த்து.. காசு காசென்று எக்கச்சக்கமாய் அதுகளுக்கென சேர்த்துவைச்சு மண்டையைப்போட.. அதுகள் என்ன செய்வதென்று தெரியாது திண்டாடாமல் அல்லது ஏமாறாமல் இருந்தால் சரி.. இதுக்குத்தானே கவிஞரே சொன்னார்.. 'சுட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று...'

.