01-24-2006, 12:21 AM
பிரபாகரன்- எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பில் மகிந்தவுக்கு அதிர்ச்சியான பதில் காத்திருக்கிறது: கா.வே.பாலகுமாரன்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை இலங்கை வருகை தந்துள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் ல்ஹெய்ம் சந்திக்கும் போது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அதிர்ச்சியான பதில் காத்திருக்கிறது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை ஒலிபரப்பாகிய "அரசியல் அரங்கம்" பகுதியில் தென்னிலங்கை அரசியல் நிலைமைகள், தமிழீழத்தினது நிலைப்பாடு ஆகியவை தொடர்பில் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை:
கொழும்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிற திடீர் திருப்பங்கள், தலைகீழான மாற்றங்கள் சுருக்கமாகச் சொல்வதானால் கழுகு ஒன்று புறாவாக மாறியமை, மெல்ல மெல்ல கருக்கொண்டு வரும் அரசியல் சதி ஆகியவை பற்றி உங்களோடு பேசுகிறோம்.
கொழும்பு அரசியலில் திடீரென்று அமைதிக் கொடி- வெள்ளைக் கொடியாக கொடிகட்டிப் பறக்கிறது. மகிந்தர் தனது அரச மாளிகையில் இராப்பகலாக தந்திரங்களைத் திட்டமிட்டு மாநாடுகளைக் கூட்டி வருகிறார்.
மகிந்தரின் 2 மாநாடுகளும் உண்மை நோக்கமும்
15 கட்சிகளை அழைத்து முதலில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. மகிந்தர் உடனடியாகப் பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இலங்கையில் உள்ள சிங்கள, ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர்களுடன் ஒரு மாநாடு. அதிலும் தான் போருக்குச் செல்லப்போவதில்லை என்ற செய்தியூடாக மகிந்தர் வெளிப்பட்டுள்ளார்.
இதில் மிக முக்கியமானதும் கவனிக்கப்பட வேண்டியதும் என்னவெனில் இந்த மாநாடுகளில் தமிழர் தரப்பு திட்டமிடப்பட்டு இலாவகமான முறையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆகவே தமிழருக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக நடத்தப்பட்டவை இவை என்ற செய்தி எமக்கு விளங்குகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜே.வி.பி.யின் சோமவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அங்கே அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் வெளியில் வந்து அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
ஆகவே எங்களுடைய சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது மகிந்தர், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவினர் சேர்ந்து ஒரு நாடகத்தை ஆடுகின்றனர். அந்த நாடகத்தின் உண்மையான கருவை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
அனைத்துக் கட்சி மாநாடு நடந்த அன்று அல்லது அதற்கு மறுநாள் காலையில் ஒரு பத்திரிகைச் செய்தியை ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ளார்.
அதில் "சமாதானம் என்ற சொல் பேசிப் பேசி புளித்துப் போன சொல்லாகும். எனவே தற்போது அதைக் கைவிட்டுவிட்டு அழிக்க வேண்டியவர்களை அழிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச காய்களை நகர்த்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டியது "காய்களை நகர்த்த வேண்டும்" என்பது.
மேலும் "நாட்டைப் பிரிக்க முயன்ற தாராளவாதிகளாலும் மேற்குலக சக்திகளாலும் சமாதானம் என்ற சொல் பேசிப் புளித்துப்போய்விட்ட சொல். தற்போது அரச தலைவருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்கிறார்.
இதில் "நல்ல சந்தர்ப்பம்" என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து,
"அனைத்து அரசியல் எதிராளிகளில் பலரும் தாம் நெருக்கமாகிவிட்டார்கள்". அதாவது களத்தில் இறங்கிவிட்டார்கள். ஆகவே எதிராளிகளை அடையாளம் கண்டு அழித்துவிட்டு அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்" என்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான சொற்கள் இவை:
"இன்று நாம் அனைவரும் தீர்க்கமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதுபோல் புலிகளும் தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் உண்மை. மகிந்தரை அடிமைப்படுத்துவது அல்லது தோல்வியடைச் செய்வது; இல்லாவிட்டால் தோல்வியைப் புலிகள் தழுவது" என்கிறார் சோமவன்ச.
ஆகவே ஒரு சதி உருவாகி அதனது வெளிப்பாட்டை மறைப்பதற்காக அதேநேரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை சிங்கள மக்களுக்குச் சொல்வதற்காக விமல் வீரவன்ச எங்களுக்கு இதனூடே ஒரு தகவலைத் தந்திருக்கிறார்.
அதாவது கடந்த சில நாள்களாக அமைதி முயற்சிகள் தொடர்பாக மகிந்தர் எடுத்திருக்கிற புதிய காய் நகர்த்தல் என்ன என்பதுதான் கேள்வி.
அதற்கு தெளிவான செய்தியாக, மகிந்தரால் இந்தப் பிரச்சனைக்கு இப்போது போர் மூலம் முகம் கொடுக்க முடியாது என்பதால் மீண்டும் இன்னொரு வழியில் எங்களை பழைய நிலைக்குக் கொண்டுபோவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்கிறர்கள்.
மகிந்தரின் குட்டிக் கரணத்துக்குக் காரணம் " எமது பலம்"
இப்படியாக திடீரென்று மகிந்தர் குட்டிக் கரணமடிப்பதற்குக் காரணம் என்னவெனில்,
அதுதான்
"எங்கள் பலம்".
அண்மைக்காலமாக இங்கே நடந்து வருகிற மக்களினது எழுச்சி, அதனது விளைவு, மக்கள் படையணியாகத் திரளக் கூடியச் சூழல், மக்கள் பயிற்சி பெறுகிற தோற்றப்பாடு என்கிற எமது இராணுவ பலத்தினது விளைவாக மகிந்தர் திக்குமுக்காடி சதித் திட்டத்தை வகுக்கிறார்.
ஆகவே, எங்கள் மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று அமைதி முயற்சிகள் தொடர்பான மகிந்தரின் அனைத்துக் கூப்பாடுகளும் எங்களுடைய இராணுவ பலத்தின் வெளிப்பாட்டில்தான் உருவானதே தவிர வேறு ஒன்றும் அல்ல.
இந்தச் செய்திகளுக்கு ஊடாக எங்களுக்குக் கிடைக்கக் கூடிய முடிவுகள் எவையெனில்,
முதலாவது-
15 கட்சிகளை அழைத்து மகிந்தர் பேசுவதற்கு முன்பாக ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவுடன் மகிந்தர் நீண்ட கலந்துரையாடலை நடத்தி சதித்திட்டத்தை வகுத்திருக்கிறார்கள்.
அதாவது-
"இப்பொழுது நீங்கள் அமைதியாக இருங்கள். புலிகளை அழிப்பதற்கான இன்னொரு வழியிலே நான் செயற்படப் போகிறேன். ஆகையால் சிறிது காலத்திற்கு அமைதியாக இருங்கள். மீண்டும் அமைதிப் பொறிக்குள் புலிகளைச் சிக்க வைக்கும் முயற்சியை எடுக்கப் போகிறேன்" என்ற கருத்தைத் தெரிவித்து,
"வெளியில் நீங்கள் கூப்பாடு போடுங்கள். உள்ளுக்குள் எனக்கு ஆதரவாக இருங்கள்" என்றும் மகிந்தர் கூறியிருக்கிறார்.
அதுபோல-
சிங்கள ஊடகத்தாரைக் கூப்பிட்டு, அவர்களுக்கும் தனது உண்மையான உள்நோக்கத்தை விளக்கி, தனக்கு ஒத்துழையுங்கள் என்று கேட்டுவிட்டு
வெளியில்
சமாதானம், புதிய முயற்சி, அர்ப்பணிப்பு என்று பலவாறான சொற்களை மகிந்தர் பயன்படுத்துகிறார்.
எங்களுக்கு மகிந்தரது உண்மையான தந்திரம், நோக்கம் எதுவென்பது தெளிவாக புரிந்துவிட்டது.
இந்தச் சூழலில் அமைதிக்காகப் பாடுபடும் சர்வதேசத்தின் முயற்சிகளை நாங்கள் புறம் தள்ளாது, நோர்வேயினுடைய சிறப்புத் தூதுவர வருகையைத் தடுக்காமல், அவரது முயற்சிக்கூடாக அமைதியோடு செயற்படத் தயாராக இருக்கிறோம் என்பதை மீண்டும் உலகுக்குத் தெரியப்படுவத்துவதற்காக தேசியத் தலைவர் அவர்கள் சந்திக்க உள்ளார்கள்.
தேசியத் தலைவருடனான சந்திப்புகள் அனைத்துமே மிக மிக முக்கியமானவை.
ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் மிக மிக முக்கியமான முடிவுகளை சர்வதேசத்துக்கு அவர் தெளிவாக்குவார்.
அன்று சுதுமலையில் மக்களுக்கு முன்னால் பேசியது போலவே, அவர் தற்போதைய 6 சுற்றுப் பேசுக்களுக்கூடாக எங்களை வளைக்க முற்பட்ட போதும் ஜப்பானிய தூதுவர் அக்காசி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கிளிநொச்சிக்கு வரவழைத்த தேசியத் தலைவர் அவர்கள்,
"சிறிலங்கா அரசுக்கு பணம் சேர்க்கும் கருவியாக எங்களைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
தேசியத் தலைவரின் கருத்தையறிந்த உலகம் அதிர்ந்தது.
ஆகையால்தான் டோக்கியோவில் கூட்டப்பட்ட நிதி உதவி வழங்கும் மாநாட்டிற்கு நாங்கள் செல்லவில்லை என்பது உலகத்துக்கு நன்றாகத் தெரியும்.
அதுபோலவே மீண்டும் ஒரு சந்திப்பை நிகழ்த்த இருக்கிறார்கள். அதிலே தெளிவாக இத்தகைய நிலைப்பாடுகளை தலைவர்கள் அவர்கள் விளக்குவார்.
எமது தேசத்தின் குரலாக எமது நிலைப்பாட்டைச் சொல்வதற்காக நாங்கள் சந்திக்கிறோமே தவிர வேறொன்றும் இல்லை.
அதேபோல் நாங்கள் நினைப்பது போல் இல்லாமல் உண்மையான ஒரு அமைதி முயற்சியை முன்னெடுப்பதற்கான திட்டங்களை அவர்கள் முன்வைத்திருந்தால் அதை நாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்பது எப்போதும் எங்களுடைய நிலைப்பாடு.
இந்தப் போர் நிறுத்தச் சீர்குலைவுக்கு யார் காரணம் என்பது இந்த உலகத்துக்கு மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நாங்கள் அண்மைக்காலமாக பெற்றுக்கொண்ட தகவல்களின் படி,
"இந்தப் போர் நிறுத்தம் புலிகளால் சீராக கடைபிடிக்கப்பட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இராணுவமும் சிங்கள அரசியல் தலைமையும் கருணா என்கிற அந்த நிகழ்வுக்கூடாக இங்கே குழப்புவதற்காக மேற்கொண்ட அனைத்து நிழற்போரினூடாகத்தான் இந்த நிலைமை உருவானதே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை" என்பது உலகத்தினது அனைத்துத் தலைவர்களுக்கும் மிகத் துல்லியமாகத் தரப்பட்டுள்ளது.
மகிந்தரின் குட்டிக் கரணத்துக்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது.
ஆகவே, இந்த முறை போர் நிறுத்தம் பற்றித்தான் பேச வேண்டும் என்று சிங்களத் தரப்பு சொல்லுகிற போது அந்த சதி எங்களுக்கு நன்றாக புரிகிறது.
மக்களினது அமைதிக்காக இந்த முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம்.
இந்தக் குழப்பத்துக்கு யார் காரணம் என்பது உலகத்துக்கு மிக நன்றாகத் தெரியும்.
அனைத்து வகைகளிலும் பார்த்தால் மகிந்தருக்கு உடனடித் தேவை முகம் மறைப்பு வேலை- பூச்சு வேலை. இந்த நெருக்கடி ஏற்பட்டதால்தான் திடீரென்று மாற்றத்தை உருவாக்கி எங்களுடைய பாலா அண்ணை வருவதற்கான வழிகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
எந்த வாயால் எரிக் சொல்ஹெய்மை எதிர்க்கிறோம் என்று சொன்னார்களே அதே வாய் இப்போது வரவேற்கிறோம் என்று சொல்வதற்குக் காரணம் என்ன என்பதை எமது மக்கள் உள்வாங்கிக் கொண்டால் எமது அரசியலினது அடுத்த கட்ட நீட்சி எவ்வாறு இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
தேசியத் தலைவரின் சர்வதேச உறவுகள்
எங்களுடைய தேசியத் தலைவரது நுண்மான் நுழைபுலம் பற்றி சில விடயங்களை நான் சொல்ல வேண்டும்.
நீண்டகாலமாக தலைவர் அவர்கள், சர்வதேசத் தொடர்புகளைப் பேணி வருகிறார். பொருத்தமான இடங்களில் இராஜதந்திர மொழிகளில் பல்வேறு சொற்களைச் சொல்லி இருக்கிறார்கள். அவற்றுக்கூடாக எங்களுடைய தேசத்தினது சர்வதேச உறவுகள் நெறிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியத் தரப்போடு நடைபெற்ற உறவுகள் தொடர்பான அவரது கருத்துகள் அண்மைக்காலமாக வெளிவந்துள்ளன.
புதுடில்லியில் இந்தியத் தரப்போடு பேச்சுக்கள் நடைபெற்ற போது இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரனைச் சந்தித்த போது தலைவர்கள் அவர்கள் தெரிவித்த கருத்து:
"நீங்கள் உங்கள் நலன்களைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் எங்கள் நலன்களைப் பற்றிச் சிறிதளவாவது கவலைப்படாமல் இருப்பது தவறு" என்று கூறினார்.
அதேபோல் மற்றொன்றை எங்களுக்குத் தெரிவித்தார் தலைவர்.
"தமிழ் மக்களை இளிச்சவாயர்களாக- எதுவும் அவர்களுக்கு நடந்தால் கேட்க யாருமில்லை என்று நினைத்து ஒரு அடிமை மனோநிலையில் தமிழ் மக்களை தங்களது பகடைக் காய்களாக யாரும் பயன்படுத்த முற்பட்டால் அதை நான் பொறுத்துக்கொள்ளமாட்டேன்" என்றார்.
சுருக்கமாகச் சொன்னால்,
"எதிர்காலத்திலே தமிழ் மக்களை எவராவது தங்களது பகடைக்காயாகப் பயன்படுத்தி- இளிச்சவாயர்களாகப் பயன்படுத்த முற்பட்டால் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்பது அவருடைய கருத்து.
இதையேதான் உலகுக்கு நாங்கள் இப்போதும் சொல்கிறோம்.
"நாங்கள் சர்வதேசத்தினது நலனைப் புறக்கணிக்க விரும்பவில்லை.
முன்னாள் பிரித்தானிய பிரதமர் கூறியது போல,
"எங்களுக்கு அரசியலில் நண்பர்களும் இல்லை. பகைவர்களும் இல்லை. நிரந்தமராமனது எங்களது நலன்கள் மட்டுமே. அதைப் பின்தொடர்வது என்பதே எங்கள் பணி"
என்பது உலக இராஜதந்திரிகளினது முனைப்பு எங்களுக்குத் தெரியும்.
எங்களுக்கும் இது பொருந்தும் என்பதை உலகுக்கு நாங்கள் ஓங்கி அறிவிக்கிறோம்.
அந்தச் செய்தியைத்தான் இப்போதைய சந்திப்புகளிலும் தலைவர் அவர்கள் சொல்லுவார்கள் என்று நம்புகிறோம்.
ஆகவே நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம்.
"அமைதி முயற்சியாக இருந்தாலும் சரி. போராக இருந்தாலும் சரி. எங்களுடைய தேசம் ஒரு போர்க்கோலம் பூண்டு மிகவும் பலத்துடனும் ஆயத்தங்களுடனும் இருந்தால்தான் நாங்கள் எதனையும் வெல்ல முடியும்"
என்பதுதான் அந்தச் செய்தி.
தளர்ச்சியில்லாமல் நாங்கள் முன்னேற வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மக்கள் யுத்தம் என்ற அந்த யுத்த வடிவத்தை உருவாக்கிய ஜெனரல் கியாப் அவர்கள் எப்போதும் சொல்வார்கள்,
"ஒரு கட்டத்திலே அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தெளிவாக நிலைப்பாடு மேற்கொண்ட பின்னர் மக்கள் படையணியாகத் திரள வேண்டும். அந்தப் படையணியின் ஒருங்கமைவில்தான் வெற்றி பலப்படும்" என்பார் அவர்.
ஆகவே இன்று நாங்கள் எங்கள் தேசத்தை முற்றாகப் போர் நிலைக்குத் தயார்படுத்தி, போர் முனைப்புக்குள்ளாக்கி மகிந்தரது தந்திரத்தை வெல்வதற்கான பலத்தை நாங்கள் ஒன்றுதிரட்டி விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய ஒரு அவகாச நிலையை நாங்கள் பெற்றுக்கொண்டு வருகிறோம்.
இது உடனடியாகவும் வேகமாகவும் செய்யப்பட வேண்டிய வேலை.
இதனுடைய அடிப்படையில் நடக்கக் கூடிய பேச்சுகளும் போர்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்.
வியட்நாமிலே ஒரு பழமொழி இருக்கிறது.
பேச்சும் போருமாக போராட்டம் நடக்கும்;
பேசுங்கள்- போரிடுங்கள்
போரிடுங்கள்-பேசுங்கள்
பேசுங்கள்- போரிடுங்கள் என்று போரிடுங்கள் என்று இறுதியிலே முடியும்.
ஆகவே எங்களுடைய பேச்சுக்கள் யாவும் அதன் நீட்சியாக போரிலே சென்று முடியும்.
படிப்படியான பரிணாம ரீதியான செயற்பாடுகளுடே நகருகிறோம்.
அண்மையிலே வரக்கூடிய இந்தப் பேச்சுகள், அதனது வெளிப்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே
மகிந்தரே ஏன் போர் நிறுத்தம் பற்றி பேச வருகிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அவருடைய வழியிலேயே சென்று அவர் எதிர்பார்க்காத மிகவும் அதிர்ச்சியடையப் போகிற பதிலைச் சொல்லத் தலைவர் அவர்கள் தயாராகி வருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
தலைவரது அண்மைக்கால செயற்பாட்டுக்கு ஊடாக, அவரது நிலையை மிகவும் மதிப்போடும் வியப்போடும் பார்க்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு அனைத்துத் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஆசியத் தலைவர் பிரபாகரன்
கடந்த 20 ஆம் நாள் ஐலண்ட் பக்கத்தின் நடுப்பக்கத்தில் எங்களைப் பற்றி மிக மோசமாக எழுதி வரும் சமிந்த பெர்னாண்டோ சொல்கிறார், பிரபாகரன் அவர்கள் ஆசியாவின் முதன்மைத் தலைவர்களிலே தன்னை உருவாக்கிவிட்டார் என்று வயிறெரிந்து எழுதினாலும் கூட மனம் பொறுக்க முடியாமல் எழுதினாலும் கூட பல செய்திகளைச் சொல்லுகிறார்.
"பிரபாகரன் ஒரு சர்வதேச நிலைப்பாடுடைய தலைவராக இருக்கிறார். அதற்குக் காரணம் சிங்களத் தலைமையே. இன்று பிரபாகரனிடம் மண்டியிடுவதற்கு சிங்களத் தலைமை தயாராக இருக்கிறது. இதற்கு ஊடாக பிரபாகரன் அவர்கள் மிகப் பெரிய செய்தியை உலகத்துக்குச் சொல்லுகிறார்கள். 2 நாட்டினது இராணுவத்தைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு கொலை முயற்சிகளிலிருந்து தப்பி உள்ளார். ஆழிப்பேரலையிலுமிருந்தும் தப்பியிருக்கிறார். இதற்கு அப்பால் தன்னை ஒரு சர்வதேசத் தலைவராக தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டார். இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்ற மாற்றுக் கோரிக்கையை முன்வைத்து அதற்கான ஆதரவையும் திரட்டிவிட்டார். அமெரிக்கா மீதான குண்டுவெடிப்புக்குப் பின்னரும் கூட மிகப் பெரிய போரை நடத்த ஆயத்தமாகிவிட்டார். இப்படிப்பட்ட பிரபாகரனின் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியாத சிங்களத் தலைமைகள் தவறு இழைக்கின்றனர்"
என்று அதில் சிங்களத் தலைவர்களை இடித்துரைத்துச் சொல்லி இருக்கிறார்.
எங்களுடைய இறுதிப் போர் வெற்றிக்கூடாக நாங்கள் உருவாக்கக் கூடிய அந்த வரலாற்றுச் சாதனையைப் படைப்பதற்கு முன்னால் பல்வேறு வகையிலும் உலகம் எடுக்கிற முயற்சிகள், அதற்கு ஊடாக முள்ளை முள்ளால் எடுப்பது போல் நாங்கள் நகர்ந்து செல்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே,
"எதிர்காலத்திலே தமிழ் மக்களை எவராவது தங்களது பகடைக்காயாகப் பயன்படுத்தி- இளிச்சவாயர்களாகப் பயன்படுத்த முற்பட்டால் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது"
என்கிற தலைவரது வார்த்தைகளை நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள் என்றார் கா.வே. பாலகுமாரன்.
நன்றி புதினம்

" "