01-19-2004, 02:52 PM
என்ன செய்யப் போகின்றார்கள்.
தான் வைத்த பொறியைப் பற்றி தானே பறைசாற்றிப் பெருமிதமடைந்து இறுதியில் அதில் தானே |விழநேர்ந்து பலியாகும் துர்ப்பாக்கியம் யாருக்காவது நிகழ்ந்தால் அவர்கள் இன்றிருக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள் போல் பரிதாபத்திற்குரியவர்களாயிருப்பர்.
ரணில் பறைசாற்றிய சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னல் பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்பது சிலருக்குப் புரிந்திருக்கலாம். இதற்குள் தன்காலத்தில் அமெரிக்கா புலிகளைத் தடைசெய்துவிட்டதாக பெருமையடித்துக் கொண்;ட அம்மணி சந்திரிகாவையும் உள்ளடக்கலாம்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கு புலிகள் ஒன்றும் தீண்டத் தகாதவர்களல்ல. அவர்களுக்கென்று இப்பிராந்தியத்தில் இலங்கையின் மீதான நலன்கள் 2000ம் ஆண்டின் பின் முதன்மைப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கான அரசியல் பொருளாதார தேவைகருதி இலங்கையில் கொந்தளிப்பதாக இருக்கும் யுத்தத்தை தணிவித்து இலங்கையில் அமைதிச் சூழலைப் பேணவேண்டியிருக்கின்றது.
யுத்தத்தின் பச்சையான யதார்தத்தை புரிந்துகொண்டு சமாதானம் செய்ய இவ்விருகட்சிகளில் எது அதிகம் முன்வருகின்றதோ அதை ஆதரிக்க மேற்குலகம் தயாராகவே இருக்கின்றது. சந்திரிகாவினது சமாதான முயற்சிக்கும் இவ்வாறு ஆதரவு கிடைத்தது தெரிந்ததே.
யுத்தம் மீது மேற்குலகத்திற்கு கட்டிவளர்க்கப்பட்ட பெருமைகள் வன்னிப்போரை புலிகள் வெண்றதுடன் தகர்ந்துபோயிற்று. அதன் உடனடி விளைவாகவே இலங்கையின் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவிலிருந்து சமாதானத்திற்கான ஆதரவை மேற்குலகம் வன்மையாகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.
விடுதலைப்புலிகள் சர்வதேச அரசியல் அரங்கில் போராட்டம் தொடங்கி இத்தனை ஆண்டுகளும் இராஜதந்திர அரசியல் அர்த்தத்தில் அதிகம் பிரசன்னமாகியிருக்காத சூழலில் விடுதலைப்புலிகளின் போர் ஓர்மம், தாம் வரித்துக் கொண்ட இலக்கில் இருந்து விடாப்பிடியாக இருக்கும் தன்மை, வளைந்து கொடாமை, போன்ற குணாம்சங்களுக்கூடாகத்தான் மேற்குலகம் புலிகளை விளங்கி வைத்திருக்கிறது. மேலும் சிறிலங்கா அரசாங்கங்களின் இராஜதந்திர முயற்சிகளால் விடுதலைப் புலிகள் பிரிவினையின்றி வேறெதையும் ஆதரிக்காதவர்கள் என்றும், யுத்தத்தைத் தவிர மாற்று அணுகு முறைக்கு உடன்பாடற்றவர்கள் என்றும் அவர்கள் பலமான படைச் சக்தியை தவிர அவர்களுக்கான அரசியல் பின்னணி மிகவும் பலவீனமானதென்றும் நம்புவிக்கவோ அல்லது இக்கருத்தை எடுத்துக்கொள்ள வைக்கவோ முடிந்தது.
இத்தகையதொரு பின்னணியில் சமாதானத்தின் பொருட்டு புலிகளை யுத்தத்திற்கு திரும்பவிடாத ஒரு சூழலைப் பேண மேற்குலகம் விரும்புகின்ற யதார்த்ததை சிங்கள அரசியல் தலைவர்கள் அதிகம் இராஜதந்திர அர்த்தத்தில் புலிகளைத் தாம் வென்ற விட்டதாக எண்ணினர். தோற்றப்படுத்தினர்.
ஆனால் இப்பொழுது ரணில்-சந்திரிகாவுக்கிடையில் எழுந்துள்ள அதிகாரப்போட்டி மெய்நிலையை அதிகம் மேலெழுப்பிக் கொண்டுவருகிறது. அதைத் தரிசிக்கும் வாய்ப்பு இப்பொழுது மேற்குலகத்திற்கு கிடைத்திருக்கின்றது. கிடைத்தன் விளைவாய் மேற்குலகத்தின் பிரதிபலிப்பு இனப்பிரச்சினையின் மேற்குலகின் நிலைப்பாடு குறித்த மெய் நிலையை மேலெழுப்பி வருகின்றது. அதைத் தரிசிக்கும் வாய்ப்பும் சிங்களத் தலைவர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும், மக்களுக்கும் இப்பொழுது வாய்த்திருக்கின்றது.
சனாதிபதியும் பிரதமரும் தமது அதிகாரப் போட்டிக்கு முடிவு கண்டுகொள்ள வேண்டும். அல்லது சமாதான முயற்சிகளில் பாரிய பின்னடைவுகள் ஏற்படும் என அமெரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சட் ஆர்மிரேஜ் கருத்துத் தெரிவித்து ஒரு சில நாட்களுக்குள் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கொலின் பவல் பிரமருக்கும் சனாதிபதிக்கும் தனித்தனியாக அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வண்ணம் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார். அதன் உள்ளடக்கம் இரு அரசியல் தலைவர்களும் தமது அதிகாரப் போட்டிக்குத் தீர்வுகண்டு புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது.
அமெரிக்காவின் இராஜங்க அமைச்சரிடமிருந்து கடிதம் மூலம் இச் செய்தி விடுக்கப்பட்டிருந்தால் எச்சரிக்கை கலந்த ஒரு வற்புறுத்தலாகவே இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
இதிலிருந்து எதை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கின்றது என்றால் இலங்கை அரசியலில் மேற்கிற்கிருக்கும் இன்றியமையாத முக்கியத்துவத்தையும் அதன் மனோபாவத்தையும் தான். இதைப் புரிந்து கொள்ள இன்னொன்றையும் நாம் பார்க்கலாம்.
அமெரிக்க நெப்ரெஸ்க்கா வெஸ்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் றொபட் சீ ஒபஸ்ற் கூறிய கருத்துக்களை அவதானிக்கலாம்.
விடுதலைப் புலிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால திட்டவரைபு எடுத்த எடுப்பிலேயே பல அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்படுவது ஆச்சரியப்படக் கூடிய தொன்றல்ல. உண்மையில் இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கையில் நிலவும் ஒரு துரதிஷ்ட நிலையே இதுவாகும். மேலும் தீர்வுத் திட்டம் குறித்துப் பேசுவதற்குக்கூட ஒப்புதல் மறுக்கப்பட்டிருப்பது பாரதூரமான விசனத்திற்குரிய ஒரு நிலையாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவிற்கும் ஏற்பட்டுள்ள அதிகாரத்துவ இழுபறி பேச்சுவார்த்தையை முடக்கியுள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்துவக் குரலாக இரு தரப்பினருமே எததையும் கூற முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது.
புலிகள் சமர்ப்பித்துள்ள இன்றைய இடைக்கால தன்னாட்சி அதிகாரத் திட்டவரைபினை உன்னிப்பாக அவதானிக்காமல் இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள தீர்வுத் திட்டத்திற்கும் புலிகளின் திட்டத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட வேறுபாடுகளையே காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை புலிகளும் தாம்தெரிவித்திருக்கும் யோசனைகள் தொடர்பில் எத்தகைய சமரசத்திற்கும் வரமுடியாதவர்கள் என கூறவுமில்லை. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் புலிகளுடன் திட்டவரைபு தொடர்பில் பேச்சு வார்த்தைக்குக் கூட அது செல்லமுடியாது தவறியிருப்பது மிகவும் விசனத்திற்குரிய ஒரு காரியமென்றே கூறவேண்டும். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகத் திட்டவரைபு குறித்து எதிர்போ, கண்டனமோ அதீதமானதென்றே இராஜீகமட்டத்தில் கருத்தெழாதது குறிப்பிடத்தக்கது. வரவேற்புகளும் கிடைக்கத் தான் செய்தன.
இலங்கையில் சமாதானத்தை நாடும் மேற்குலகத்தின் நிலைப்பாட்டை புலிகளுக்கு எதிராக திருப்பிவிட முடியும் என்று நம்பியிருந்த சிங்கள இராஜதந்திரத்தின் மீதே அது திரும்பிப் பாய்கின்றது. சர்வதேச அரசியலரங்கில் தமக்குக் கிடைத்தவாய்ப்பை புலிகள் பயன்படுத்தி தம்மைப் பிரசன்னப்படுத்திக் கொண்டவிதம் எச்சரிக்கையுடனேனும் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் கலப்பதற்கு எதிரானவர்களல்ல என்பதை விழங்க வைத்திருந்தது.
ஒஸ்லோவில் புலிகளின் உள்ளகச் சுயநிர்ணய உரிமையுடனான சமஸ்டிப் பிரகடனம், யுத்த நிறுத்த அனர்த்தங்களில் புலிகள் கடைப்பிடித்த பொறுமை, பேச்சுக்களில் அரசதரப்பின் வேண்டுகோளிற் மேசைக்கெடுக்காத பின்போட்டமை, தாமாக ஒரு இடைக்கால திட்ட வரைபை முன்வைத்தமை போன்றனவெல்லாம் இதுவரைகாலம் புலிகள் பற்றி தோற்றப்படுத்தப்பட்டு வந்த பல விடயங்களைச் சர்வதேச எண்ணங்களில் மாற்றங்காணவோ குறைந்த பட்சம் வீரியம் குறையவோ வாய்ப்பளித்திருந்தது.
இத்தகைய பின்னணியில் புலிகள் யுத்தத்திற்கு திரும்பினால் காத்திரமான அழுத்தத்தையோ வற்புறுத்தல்களையோ செய்யும் அரசியல் புறநிலையை, தார்மீக பலத்தை மேற்குலகம் இழந்து வருகின்றது. அதை மேற்கு வைத்திருக்க வேண்டுமாயின் சிங்களத் தலைவர்கள் மீது மிகப் பலமான எச்சரிக்கை தோரணையிலான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.
நாடு யுத்தத்திற்குத் திரும்புமாயின் அதற்கான மகாபொறுப்பு சர்வதேச அரங்கில் சிங்கள ஆட்சியாளர்கள் மீது விழுமேயின்றி புலிகள் மீதல்ல.
இப்பொழுதுள்ள மேற்கின் நிலைமையோ இலங்கையோ யுத்தத்திற்குத் திரும்பிவிடாது செய்வதாயின் இலங்கையின் அரசியல் தலைவர்கள் மீது காத்திரமான அழுத்தத்தை பிரயோகிப்பதுடன் புலிகளின் திட்ட வரைபு குறித்து சாதகமாகப் பரிசீலிக்க அவர்களை நிர்ப்பந்திப்பதில் தான் தங்கியிருக்கின்றது.
சிங்களத் தலைவர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் நிலைமையை எங்கள் ஊரில் சொல்வார்கள் 'உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்" என்று.
நன்றி ஜி.கே. ஈழநாதம்.
:wink: :?: :?: