01-23-2006, 06:44 AM
<b>விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தம்பதியினர் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தனர். </b>
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மற்றும் திருமதி அடேல் பாலசிங்கம் ஆகியோர் இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளனர். முற்பகல் 9.00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சியை வந்தடைந்தார்.
வந்தடைந்த அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தம்பதியினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அவர்கள், கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல், சூசை, கேணல் ந்ஐயம், கேணல் ரமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் பரா, தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி உட்பட பல தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் வரவேற்றனர்.
தனது வருகை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தலைவர் அவர்களை சந்தித்து இன்றைய சூழ் நிலைகள் களநிலைமைகள் பற்றி கலந்தாலோசிப்போம். நாளை மறுதினம் நோர்வே அமைச்சர் வருகிறார். அப்பொழுது மிகவும் முக்கியமான விடயங்கள் அவருடன் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக விளக்குவோம் எனவும் தெரிவித்தா
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i>[</b>

"
"
"