Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#36
எல்லாருக்கும் நமஸ்தே
எனது பெயரை கு<b>ரு</b>க்காலபோவான் என்று பிழையாக எழுதிய தமிழ்ரசிகையை வன்மையாகக் கண்டித்து எனது விவாதத்தை ஆரம்பிக்கிறேன்.
விவாதத் தலைப்பு <i>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</i> என்றதற்கு எமது தரப்பு இதுவரை உருப்படியான வாதம் வைக்கவில்லை நழுவி ஏதே எல்லாம் எழுதுகிறோம் என்றார்கள் எதிர்தரப்பார்கள்.
அதாவது புலம் பொயர்ந்த இளையோரை மாத்திரம் கருத்தில் கொண்டு அவர்கள் இணையம் என்னும் ஒரு ஊடகத்தால் நன்மையடைகிறார்களா இல்லையா என்ற வாதத்தை நாங்கள் சரியாக எதிர் கொள்ளவில்லை என்று தங்களைத் தாங்களே குளப்புகிறார்கள்.

இலத்திரனியல் தகவல் களஞ்சியங்களை இணைக்கும் பாலமாக, சுயகருத்துக்களை குழுமங்களில் குடில்களில் பலரோடு பகிர்ந்து விமர்சனம் பெற்று முன்னேறவும், கல்வித்துறையில் ஆசிரியரோடு சக மாணவர்களோடு, பொழுதுபோக்கும் துறையிலும் சமூகச்சேவையிலும் சகாக்களுடன் வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறையாகவும் எமது புலம் பெயர்ந்த இளையவர்கள் பயன்படுத்தி தம்மையும் வளம்படுத்தி எமது தேசியத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள். இவற்றை எனக்கு முன் வந்த எனது அணியினர் விபரமாக உதாரணத்தோடு தந்திருந்தார்கள்.

எமது தரப்பார் ஏற்கனவே ஒத்துக் கொண்டுவிட்டார்கள் இணையத்தால் <b>தீமைகளும் இருக்கு</b> என்று. அதற்காக இணையத்தால் இளையவர்களிற்கு <b>சீரழிவு மட்டும் தான் என்ற வாதம் தவறானது என்றதை தான் நிலை நாட்டி வருகிறார்கள்</b>. ஒருவர் கேட்டிருந்தார் இணையத்தால் எமது புலம்பெயர்ந்த சமூகத்தில் இளையவர் சாதித்த ஒன்றையாவது உதாரணமாக தரமுடியுமா என்று. புலம் பெயர்ந்த சமூகத்தில் எமது இளையவர் முன்னின்று ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்த சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அப்படியான ஒரு அறியாமை அவருக்கு இருக்காது. ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்கு பங்களிக்கும் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி முதல் நிகழ்ச்சி நிரல், இடம் காலம் என்பன உறுதிசெய்யப்பட்டு அனைத்து ஆர்வமுள்ளோருக்கும் அறிவிக்கும் இறுதிக்கணம் வரை மாத்திரமல்ல நிகழ்ச்சி முடிந்த பின் அதன் நிழற்படங்கள், அங்கு பரிமாறப்பட்ட கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவது வரை மின்னஞ்சலின் அரட்டை மென்பொருட்களின் இணையத்தளங்களின் பங்கு முக்கியமானது. இவற்றிற்கு தொலைபேசி பத்திரிகைகள் வானொலி
போன்ற ஏனைய தொடர்பாடல் முறைகள் நிச்சையமாக உதவுகிறது. அதுமாத்திரமல்ல இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கடிதம் எழுதி வசதி கிடைக்கும் பொழுது நேரே சந்தித்தும் நடைமுறைப்படுத்தலாம் ஆனால் குறுகியகாலத்தில் தனிப்பட்ட பொறுப்புக்கள் மத்தியில் வினைத்திறன் மிக்க முறையில் ஒழுங்கு செய்ய எமது இளையவர்கள் இணையத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவை (தொடர்பாடல் முறைகள்) எல்லாம் அத்திவாரங்கள் போன்றவை, ஒரு கட்டிடத்தின் வெளி அழகைத்தான் ரசிப்பார்களே தவிர அதன் அத்திவாரத்தில் தான் அது தங்கியிருக்கிறது என்று ஒரு கணம் கூட சிந்திப்பவர்கள் மிக அரிது.

சிலர் வாதிடலாம் இணையத்தால் பல பயன்களிருந்தாலும் சில தீமைகளே அதை ஒரு சீரழிவுக்கருவியாக நோக்க வைக்கிறது என்று, அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் கலந்துவிட்டால் அந்த ஒரு குடம் பாலும் நாஞ்சுதான் என்ற பாணியில். நஞ்சையும் நன்மையான வழிகளில் பாவிப்பதா இல்லையா என்பது முற்று முழுதாக எமது கைகளில் தான் உள்ளது, அதற்கு சிறந்த உதாரணம் எமது போராட்டம்.

எதிர்தரப்பு தலைவர் அரைத்த மாவை அவருக்கு பின்னர்வந்தவர்களும் அரைக்கிறார்கள் ஆபாசம் அறைக்குள் வருகிறது என்று. ஆபாசத்தை தேடுபவர் இருக்கும் வரை அவர் இருக்குமிடமெல்லாம் கிடைக்கும் எல்லா வழிமுறைகளாலும் அது வந்தே தீரும். அதற்கு தீர்வு வரும் வழியில் ஒன்றை அடைப்பது அல்ல. தேடுபவர் ஏன் தேடுகிறார், அதை எவ்வாறு திருத்திக் கொள்ளலாம் என்று சிந்தியுங்கள். அதே போல் தான் இன்னெருவர் தமிழ் அரட்டை ஒன்றில் தனது அனுபவமாக எழுதியிருந்தார், தன்னை ஒரு குடும்பப் பெண்ணாக எண்ணிய பின்பும் ஒருவன் தொலைபேசி இலக்கம் கேட்டான் என்று. தனது நிலையில் ஒரு அப்பாவி குடும்பப்பெண்ணிருந்திருந்தால் அவளின் குடும்பம் அவனால், அவன் அவளை சந்தித்த இணையத்தால், அதற்கு சந்தர்ப்பம் வழங்கிய அவர்கள் இருவரும் இருக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தால், சீரழிந்திருக்கும் என்று தனது வாதத்திற்கு பரிதாபமாக வலுச்சேர்க்க முயன்றார். அந்தக் குடும்பப்பெண் அப்பாவியாக இருக்கும் வரை அவள் ஆபத்தில் தான் இருப்பாள். அந்த பெண் புலம் பெயர்ந்த சமூகத்திலிருந்தால் மாத்திரம் தான் ஆபத்து வரும் அதுவும் அந்த ஆபத்து இணையத்தில் சீரழிந்த இளையவனால் தான் வரும் என்பது பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்ற மாதரி. ஒரு அப்பாவிப் பெண் வேலைக்கோ, படிக்கவே இல்லை சில கருமங்களை ஆற்ற வங்கி போன்ற இடங்களிற்கு கிரமமாக பேய்வரும் போது கூட அதே மாதிரியான ஆபத்துக்களை சந்திப்பாள். இவர்களின் எண்ண ஓட்டத்தில் தீர்வு கொடுப்பது என்றால் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்காலத்தில் இருந்த நடமுறைகளை தான் கொண்டுவர வேண்டும். நேயின் அறிகுறிகளுக்கு மாத்திரம் வைத்தியம் பார்த்து உங்களை ஏமாத்தாதீர்கள் நேய்க்கும் வைத்தியம் பார்ப்பது எப்படி என்று யேசிக்க முயற்சியுங்கள் இல்லாவிட்டால் தேற்க்கப்போவது நீங்கள் வெல்லப்போவது நோய்.

எதிர்த்தரப்பில் ஒருவர் கூறியிருந்தார் கணனி வேறு இணையம் வேறு. இணையம் இல்லாமல் கணனியில் பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று. இன்று இணையம் என்பது கணனிக்கு விரும்பினால் சேர்த்துக் கொள்ளப்படும் ஒன்றாக இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் எதிர்காலத்தில் இணையம் இல்லாம் கணனி இல்லை என்று அதன் வடிவமைப்பு இருக்கப்போகிறது, இதை நோக்கிய ஒருபடி நகர்விற்கு வின்டோஸ் விஸ்ரா நல்ல உதாரணம். இந்த விவாதத்திற்கு வெளியே இந்தக் களத்தில் பகிரப்பட்ட ஒரு அனுபவம், குறிப்பிட்ட ஒரு பிள்ளையின் பெற்றோர் மகள் எம்எஸ்என் இல் ஆண்களை மாத்திரம் நண்பர்களாக சேர்த்து வைத்திருந்தாள், பல்வேறு பட்ட படங்களை பரிமாறினாள் அதை அறிந்ததால் பெற்றோர் இணைய இணைப்பை துண்டித்து விட்டார்கள். ஆனால் அதை நேரடியாக செய்தால் பிள்ளை கேவித்துவிடும் என்று கணனிக்கு இணைய இணைப்பு வழங்கும் கடத்தியில் தில்லு முல்லுச் செய்துதார்கள் என்று.

இன்னுமொரு 5...10 வருடங்களில் கைத் தொலைபேசியில் இணையத்திற்கு செல்லக்கூடியது என்பது சர்வசாதாரணமாகப் போகிறது. அது மாத்திரமல்ல தொலைக்காட்சி உரையாடல் (video conference) கூடச் செய்யலாம். தனியே பேச்சு எழுத்துக்கள் மாத்திரம் அல்ல பங்குபற்றுபவர்களின் அசையும் படங்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இங்கே ஒருவரின் வக்கிர எண்ணங்கள் இன்னெருவரினால் அறைக்குள் மாத்திரம் ஒளிந்திருந்து பகிரப்படப்போவதில்லை அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் ஒளித்துவைக்கும் கைத்தொலைபேசியால் எங்கும் என்னேரமும் நிறைவேற்றலாம்.

எனவே இன்று உள்ள இணையத் தொடர்பாடல் வழிமுறைகளால் சீரழிகிறார்கள் என்று ஓலமிட்டு உங்கள் நேரத்தை விரையமாக்காதீர்கள் இல்லை அவற்றை இளையவர்கள் பெற்றுக் கொள்ளும் வழிகளை தடுத்து நேயின் அறிகுறிக்கு ஒத்தடம் குடுபதுபோல் தீர்வு கண்டுவிட்டதாக பெருமைபட்டுக் கொள்ளாதீர்கள். இதுவரை வந்த எல்லா எதிர்த்தரப்பாரும் சீரழிகிறார்கள் என்றதற்கு வஞ்சகமில்லாமல் உதாரணங்களை அடுக்கினார்கள். இதுவரை யாராவது சீரழிவை தடுப்பதற்கோ அல்லது குறைந்த பட்சம் எமது இளையவரின் சீரழிவை குறைப்பதற்கு என்ன வழிமுறைகளை கையாளலாம் என்று ஆக்கபூர்வமாக ஒரு உதாரணமாவது வைத்தார்களா?

தகவல் தொழில்நுட்பம் தனது புரட்ச்சிப்பாதையில் தொடரும், தொடர்பாடல்களுக்கு புதிய இலகுவான வினைத்திறன் மிக்கவழிகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. அவற்றை குரங்கின் கை பூமாலை போல் இல்லாது எவ்வாறு அனுபவித்து நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றி ஒட்டுமொத்த சமூகத்தை வளப்படுத்த முடியும் என்ற முற்போக்கான சிந்தனையில் எமது நேரத்தை செலவிடுவோம்.
நன்றி வணக்கம்.

<b>பிற்குறிப்பு</b>, வீட்டில் நாற்காலியின் சுகத்திலிருந்து எழுதும் பட்டிமன்றத்திற்கு மக்கள் படை கரும்புலிகள் என்று உங்கள் அணியினரை ஊக்குவிப்பதாக எண்ணி அந்த தூய்மையான மறவர்களை சிறுமைப்படுத்தாதீர்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)