01-22-2006, 11:23 PM
ஜோர்ஜிய எரிசக்தி விநியோக பாதிப்புக்கு ரஷ்யா மீது குற்றச்சாட்டு
ஜோர்ஜியா நாட்டுக்கான எரிவாயு விநியோகம் முழுமையாகவும் மின்வரத்து கால்பங்கும் துண்டிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த சதிவேலைகளை அரங்கேற்றியிருப்பது ரஷ்யாதான் என ஜோர்ஜிய அதிபர் மிகாயல் சாகஷ்விலி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவிலுருந்து ஜொர்ஜியாவுக்கு மின்சாரம் கொண்டுவரும் முக்கிய கம்பிப்பாதை இன்று அதிகாலை குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது என்றும் எரிவாயு கொண்டுவரும் குழாய்ப் பாதை இரண்டில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்துள்ளது என்றும் சாகஷ்விலி கூறியுள்ளார்.
ஜோர்ஜியா வழியாக செல்லும் குழாய்ப்பாதைகளின் கட்டுப்பாட்டைப்பெற ரஷ்ய அரசு விரும்புவதால் ரஷ்ய அதிகாரிகளிடம் இருந்து பல்வேறு மிரட்டல்களை ஜோர்ஜியா எதிர்கொண்டுவருவதாக பிபிசியிடம் அவர் கூறினார்.
ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்ற ரஷ்ய அரசின் விளக்கத்தை தாங்கள் ஏற்கவில்லையென சாகஷ்விலி கூறியுள்ளார்.
அரசியல் உள்நோக்கங்களுடன் முறைதவறி மற்றவர்களை மிரட்டும் நாடு ரஷ்யா என்பது தெளிவாகியுள்ளது என சாகஷ்விலி குற்றம்சாட்டினார்.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>