Yarl Forum
ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? (/showthread.php?tid=1647)



ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? - Mathan - 01-02-2006

ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ?

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான எரிவாயுவே குழாய்கள் மூலம் கிடைப்பதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் செய்யும் ரசிய எரிவாயு குழாய்களில் பெரும்பாலானவை உக்ரெய்ன் ஊடாகவே செல்கின்றன. இந்த குழாய்களில் இருந்து உக்ரெய்ன் எரிவாய்வை திருட ஆரம்பித்திருப்பதாலேயே ஐரோப்பிய விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா குற்றம் சாட்டியுள்ளது.

செய்தி மூலம்: பிபிசி இணையத்தளம்

மேலும் படிக்க http://news.bbc.co.uk/1/hi/world/europe/45...5726.stm[/size]


- Mathan - 01-02-2006

ஐரோப்பிய எரிவாயு விநியோக குழாய்களின் வரைபடம்

<img src='http://www.inogate.org/images/maps/new_gas_sm.gif' border='0' alt='user posted image'>
<i><b>படத்தின் மீது கிளிக் செய்வதன் மூலம் பெரிய அளவிலான தெளிவான வரைபடத்தை பார்க்கலாம்.</b></i>

இந்த வரைபடத்தில் ஐரோப்பியாவிற்காக எரிவாயு விநியோகத்தின் பல முக்கிய குழாய்கள் உக்ரெய்ன் ஊடாக செல்வதை காணலாம்.

படம் மூலம்: INOGATE - Interstate Oil and Gas Transport to Europe


- Mathan - 01-02-2006

உக்ரெய்ன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051230123111russia2203.jpg' border='0' alt='user posted image'>
<b>உக்ரெய்னுக்கு எரிவாயு நிறுத்தம் </b>

உக்ரெய்ன் ஊடாக ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட 2.5 கோடி டொலர்கள் பெறுமதியான எரிவாயுவை உக்ரெய்ன் திருடிவிட்டதாக ரஷ்ய அரசின் எரிபொருள் நிறுவனமான காஸ்புரோம் குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரெய்ன் ஊடாக செல்லும் குழாய்களில் இருந்து பத்து கோடி கனமீட்டர்கள் கொள்ளளவுள்ள எரிவாயு உறுஞ்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

வாயு விலையில் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பை செலுத்த மறுத்த தனது அண்டை நாடு உக்ரெய்னுக்கான வாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்த மறுதினம் இந்தக் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.

தனது நாடு சட்டவிரோதமாக எரிவாயுவை எடுத்ததாக கூறப்படுவதை உக்ரெய்னிய எரிசக்தித்துறை அமைச்சர் இவான் பலச்கோவ் வன்மையாக மறுத்துள்ளர்.

ஆனால் தனது நாட்டின் குழாய் வலையமைப்பு ஊடாக ஐரோப்பாவுக்கு எரிவாயுவை அனுப்புவதற்கு பதிலாக ஓராளவு வாயுவை எடுத்துக்கொள்ள உக்ரெய்ன் அருகதையுடையது என்றும் அவர் கூறியுள்ளார்.

வெப்பநிலை உறைநிலையை அடைந்தால் தமக்கு வரவேண்டிய அந்த கொடுப்பனவுக்கான எரிபொருளை உக்ரெய்ன் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி - பிபிசி தமிழ்


- kuruvikal - 01-02-2006

பாவம் ஐரோப்பிய மக்கள். குளிருக்க நடுங்கப் போகினம்..! அவையட்ட என்று ஒன்றும் இல்ல உருப்படியா..! அதுதான் உலகத்தைச் சுரண்டிப் பிழைக்கினம். அமெரிக்கா ஒரு அறிக்கை விட்டதோட அடங்கிட்டார்..! ரஷ்சியாவின் பிராந்திய செல்வாக்குக்கான வலுவை உலகம் புரிஞ்சுக்கும் இப்பவாவது..! அத்தோட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஏன் ஈராக்கை ஆக்கிரமிச்சிருக்கினம் எண்டதும் வெளிக்குது..! படத்தைப் பாருங்கோ..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 01-02-2006

இயற்கை வளம் இல்லாதவை மனிதவளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. முகாமைத்துவ வளம் கைத்தொழில்நுட்பவளம் போன்றவற்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதை வைத்து இயற்கைவளம் உள்ளவர்களை இயலும் என்றால் இலகுவாக சுரண்டியும் மிகுதிக்கு தமது மனிதவள நிபணத்துவத்தோடு பண்டமாற்றுச் செய்தும் முன்னேறிவிட்டார்கள்.

இயற்கை வளத் தட்டுப்பாட்டால் மனித வளத்தில் முதலீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தவர்கள் தான் பல துறைகளில் இன்று பெரும்பாலும் முன்னணியில் இருக்கிறார்கள்.

நாங்கள் இரண்டும் கெட்டானாக இருக்கிறம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Vasampu - 01-02-2006

உக்ரெயினுடன் 2009 வரை விலையில் மாற்றமில்லை என்று ரஷ்யா செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி ஏன் 4 மடங்கு விலை உயர்த்தியது என்பதற்கு இதுவரை விளக்கமில்லை.


- kurukaalapoovan - 01-02-2006

2009 வரை எரிவாயுவின் விலையில் மாற்றமிருக்காது என்று நிபந்தனைகள் அற்ற முறையில் ரஷ்யா செய்த ஒப்பந்தத்தை மீறி விட்டது. மிகவும் கண்டிக்கத்தக்க மனிதஉரிமை மீறல் அநாகரீகமான செயற்பாடு.

மசகு எண்ணை விலை அதிகரித்த தேவையின் நிமித்தம் சந்தை தீர்மானிக்கிறது என்று பெயரில் எறுகிறது. எரிவாயுவின் தேவை வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கு ஆனால் ரஷ்யா தான் விளக்கம் குடுக்காமல் ஏத்திப்போட்டுது?


- kuruvikal - 01-02-2006

இயற்கை வளத்தை தட்டிப்பறிக்கத்தான் தொழில்நுட்பத்தை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் பயன்படுத்தினம். இது ஜனநாயகம் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் நடக்குது. சக்தி வளப்பிரச்சனை மேற்கு ஐரோப்பாவுக்கு பெரிய பிரச்சனை..! மூளை இருந்தும் தொழில்நுட்பம் இருந்தும் சக்தி வளப்பிரச்சனைக்கு இன்னும் தீர்வு இல்லை..! இப்ப சுரண்டலே அதுக்குத்தான். இன்று ஈராக்குடன் மோதுவதும் மத்திய கிழக்கில் பதட்டத்தை உருவாக்கி நாடுகளைப் பிரித்தாண்டு பலவீனப்படுத்தி தங்களை பலமானவர்களாக அங்கு நிலை நிறுத்த நினைக்கும் மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க செயற்திட்டங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது..! :wink: Idea


- Mathan - 01-04-2006

மேற்கு ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா சீர்செய்துள்ளது


மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகம் பழையபடி சீரடைந்துவிட்டதாக ரஷ்ய எரிவாயு நிறுவனமான காஸ்புரோம் தெரிவித்துள்ளது.

எரிவாயுவின் விலை குறித்து ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமையன்று எரிவாயுவின் வரத்து குறைந்ததாக பல நாடுகள் தெரிவித்திருந்தன.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவேண்டிய எரிவாயுவை உக்ரெய்ன் திருடுவதாக காஸ்புரோம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

எரிவாயு இழப்பை ஈடுசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் காஸ்புரொம் தெரிவித்துள்ளது.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறும் உக்ரெய்ன், இயற்கை எரிவாயுவை ஒரு அரசியல் ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.


BBC Tamil


- Mathan - 01-04-2006

தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி ரசியாவும் உக்ரெய்னும் எரிவாயு விலை தொடர்பில் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்படி 1,000 கியூபிக் மீற்றர் எரிவாயுவை 95 அமெரிக்க டொலர்களுக்கு உக்ரெய்ன் பெற்று கொள்ளும். இதற்கு முன்பு 50 டொலர்களையே உக்ரெய்ன் செலுத்தி வந்தது. மேற்கத்தைய நாடுகளுக்கு இதே அளவான எரிவாயுவை 230 டொலர்களுக்கு விற்பனை செய்துவரும் ரசியா முன்னிய சோவியத் யூனியனை சேர்ந்த ஏழை நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விற்பனை செய்து வருகின்றது.

மேலதிக செய்திகளை ஆங்கில மொழியில் படிக்க
http://news.bbc.co.uk/1/hi/world/europe/45...9648.stm[/size]


- Vasampu - 01-04-2006

இந்த விடயத்தில் ரஷ்யா அவசரப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது. மிகவும் குறைந்த விலையில் வறிய நாடுகளுக்கு விற்றுவந்த ரஷ்யா நியாயமான விலையொன்றை இப்போது பேசித் தீர்த்ததைப் போல முன்னரே செய்திருந்தால் அதன் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கும் அதுபோல தற்போதய பிரைச்சினையும் ஏற்பட்டிருக்காது.


- வினித் - 01-04-2006

Quote:இந்த விடயத்தில் ரஷ்யா அவசரப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது. மிகவும் குறைந்த விலையில் வறிய நாடுகளுக்கு விற்றுவந்த ரஷ்யா நியாயமான விலையொன்றை இப்போது பேசித் தீர்த்ததைப் போல முன்னரே செய்திருந்தால் அதன் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கும் அதுபோல தற்போதய பிரைச்சினையும் ஏற்பட்டிருக்காது.


நீங்கள் சொல்லவது சரிதான் வசம்பு அண்ணா

<b>ஆனால் உக்ரெய்னும் சும்மா இல்லை அவர்களின் கனவும் ஜரேப்பிய யுனியனில் இனைவது தான்</b>
பிறகு தெரியும் தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 01-07-2006

Vasampu Wrote:இந்த விடயத்தில் ரஷ்யா அவசரப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது. மிகவும் குறைந்த விலையில் வறிய நாடுகளுக்கு விற்றுவந்த ரஷ்யா நியாயமான விலையொன்றை இப்போது பேசித் தீர்த்ததைப் போல முன்னரே செய்திருந்தால் அதன் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கும் அதுபோல தற்போதய பிரைச்சினையும் ஏற்பட்டிருக்காது.

உக்ரெய்ன் இப்போது மேற்குலக நாடுகளுடன் உறவை பலப்படுத்தி வருவதுடன் எதிர்காலத்தின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவும் விரும்புகின்றது. இந்த நிலையில் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை அந்த பக்கம் சாய விடாமல் தடுக்கும் ஒரு அரசியல் ஆயுதமாகவே ரஷ்யா எரிவாயு விலையை உபயோகப்படுத்தியிருக்கின்றது. நீங்கல் வேறு ஒரு தலைப்பில் குறிப்பிட்டிருப்பது போல ஒவ்வொரு நாடும் தமது சொந்த நலங்களின் அடிப்படையிலேயே செயல்படுக்கின்றன அதே போலதான் ரஷ்யாவும்.


- kurukaalapoovan - 01-16-2006

<b>உலக எண்ணெய் அரசியலும் ரஸ்யாவின் காய் நகர்த்தலும்</b>
<i>-ரூபன் சிவராஜா (நோர்வே)-</i>
பலமே இன்றைய உலக ஒழுங்கின் நிர்ணய சக்தி. பலத்தினதும் நலனினதும் அடிப்படையிலேயே இன்றைய உலகம் இயங்குகின்றது என்பது பலரும் அறிந்ததே. நாடுகளுக்கிடையிலான உறவு 'அரசே மூலம், நலனே வேதம்" என்ற செல்நெறியின் பாற்பட்டதாகவே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பொருளாதார நலனை முன்னிலைப்படுத்தியே உலக நாடுகளுக்கிடையிலான உறவுகள் அமைந்துள்ளன. எண்ணெயை மையப்படுத்திய அரசியல், உலக அரங்கின் செல்நெறியைத் தீர்மானிக்கும் சக்தியென்ற போக்கு இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது என்றால் அது மிகையான கூற்றாக இருக்க முடியாது.

ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு, சூடான் மற்றும் ஆச்சே (இந்தோனேசியா) உள்நாட்டு போரினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தலையீடுகளின் பின்னணியில் 'உலக எண்ணெய் அரசியலுக்கு" குறிப்பிடத்தக்க பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
.......
..............
http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060116.htm


- Mathan - 01-22-2006

ஜோர்ஜிய எரிசக்தி விநியோக பாதிப்புக்கு ரஷ்யா மீது குற்றச்சாட்டு

ஜோர்ஜியா நாட்டுக்கான எரிவாயு விநியோகம் முழுமையாகவும் மின்வரத்து கால்பங்கும் துண்டிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த சதிவேலைகளை அரங்கேற்றியிருப்பது ரஷ்யாதான் என ஜோர்ஜிய அதிபர் மிகாயல் சாகஷ்விலி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவிலுருந்து ஜொர்ஜியாவுக்கு மின்சாரம் கொண்டுவரும் முக்கிய கம்பிப்பாதை இன்று அதிகாலை குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது என்றும் எரிவாயு கொண்டுவரும் குழாய்ப் பாதை இரண்டில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்துள்ளது என்றும் சாகஷ்விலி கூறியுள்ளார்.

ஜோர்ஜியா வழியாக செல்லும் குழாய்ப்பாதைகளின் கட்டுப்பாட்டைப்பெற ரஷ்ய அரசு விரும்புவதால் ரஷ்ய அதிகாரிகளிடம் இருந்து பல்வேறு மிரட்டல்களை ஜோர்ஜியா எதிர்கொண்டுவருவதாக பிபிசியிடம் அவர் கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்ற ரஷ்ய அரசின் விளக்கத்தை தாங்கள் ஏற்கவில்லையென சாகஷ்விலி கூறியுள்ளார்.

அரசியல் உள்நோக்கங்களுடன் முறைதவறி மற்றவர்களை மிரட்டும் நாடு ரஷ்யா என்பது தெளிவாகியுள்ளது என சாகஷ்விலி குற்றம்சாட்டினார்.

BBC தமிழ்