01-22-2006, 08:57 PM
<b>பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களுக்கு சம அந்தஸ்து கோரி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினால் கையெழுத்து சேகரிப்பு.</b>
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்தி;ற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் சமஅந்தஸ்தை கோரி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து சேகரிப்பு இன்று கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையொப்ப திரட்டல் இன்று அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடம்பெற்றது.
இதன்போது அம்பாறையில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டதாக கட்சியின் மாவட்ட இணைப்பாளர் எம் எம் பஹீஜ் தெரிவித்தார்.
இதேவேளை கையொப்பங்கள் திரட்டப்பட்டு அவை ஜனாதிபதி, நேர்வே ஏற்பாட்டாளர், மற்றும் இலங்கைக்கு உதவியளிக்கும் சமதலைமை நாடுகள் என்பவற்றிடம் கையளிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் ஹாபிஸ் அகமட் நசிர் தெரிவித்துள்ளார்.
<b><i>தகவல் மூலம்-பதிவு.கொம்</i></b>

"
"
"