01-21-2006, 05:27 AM
ஆதி - விமர்சனம்
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2006/Aathi.jpg' border='0' alt='user posted image'>
பாரம்பரியமாக செய்கிற வத்தல் வடாமை பட்டுத்துணியில் பிழிந்து மொட்டை மாடியில் காய வைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் ஆதி. பார்த்து பார்த்து பழகிய பழிவாங்கல் கதைதான். அதற்கு செய்த செலவு இருக்கிறதே, அதுதான் பிரமிப்பு.
விஜயின் குடும்பத்தை கொன்று அவரை அநாதையாக்குகிறது வில்லன் கோஷ்டி. வளர்ந்து பெரியவனாகும் விஜய், வில்லனை Ôவில்Õ தனியாகவும் Ôலன்Õ தனியாகவும் பிய்த்து பீராய்வதுதான் முழு நீள கதை! அங்கங்கே மழைச்சாரலாக தென்படுகிற த்ரிஷா-விஜய் லவ் மட்டும் குடல் வரைக்கும் நனைக்கிற குளிர்.
ஆரம்ப காட்சியே திகைப்பு. கடலோர காற்றை வாங்கியபடியே, முன்னாள் டி.ஜி.பி தேவனின் மூச்சு காற்றையும் ஒரேயடியாக வாங்கிவிடுகிற த்ரிஷா, துப்பறியும் சாம்பு லெவலுக்கு வில்லன்களை ஃபாலோ பண்ணுவதை ரசிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் ஹீரோ செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் இவரே செய்து விடுவாரோ என்ற அச்சத்தையும் தருகிறார். நல்லவேளையாக சுதாரித்துக் கொள்கிறார் இயக்குனர். அப்பாவியாக சென்னைக்கு வருகிற விஜய், கல்லூரியில் சேர்ந்து சமத்து பிள்ளையாக படிக்கிறார். திடீரென்று ஒருநாள் வில்லனை போட்டுத்தள்ளிவிட்டு அசுர அவதாரம் எடுக்கையில் ஜிவ்வென்று வேகம் பிடிக்கிறது படம்.
ஒரு ஸ்டண்ட் இயக்குனரின் வேகமும், ஒரு நடன இயக்குனரின் லாவகமும் அவர்கள் சொன்னதை செய்திருக்கிற விஜயிடம் இருக்கிறது. சபாஷ்! அதிகப்படியாக இன்னொரு விஷயம்... மில்லி மீட்டர் கூட பிசகாத நடிப்பையும் வாரி வழங்கியிருக்கிறார் மனிதர்! தன் பழைய வீடு இருந்த இடம்தான் இப்போதைய லைப்ரரி என்பதை அவர் பார்த்த மாத்திரத்தில் நமக்கும் உணர்த்துகிற நடிப்பை என்னவென்று பாராட்ட? எல்லாம் சரி... தெலுங்கு ரீமேக் படங்கள் எல்லா நேரத்திலும் தமிழர்களால் ரசிக்கப்படுவதில்லை என்பதை இப்போதாவது உணர்ந்து நேரடி படங்களில் கவனம் செலுத்தலாமே?
பார்த்து பார்த்து பழகியதோலோ என்னவோ, அழகு கூடியிருக்கிறது த்ரிஷாவுக்கு! விஜயுடன் ஆடுவதென்றால் தனி நளினம் வந்துவிடுகிறது. நடிக்கிற காட்சிகளை விடுங்கள். பாடல் காட்சிகளில் வரமளிக்கும் தேவதையாக இருக்கிறார்.
ப்பூ... என்று ஊதி தள்ளுவார் ஒருகாலத்தில்! ப்பூ.. என்று அலட்சியமாக சிரிக்கிற நிலைமை இப்போது விவேக்கிற்கு! கல்லூரி தாதாவாக அறிமுகமாகும் அந்த முதல் காட்சியில் மட்டும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
கொஞ்ச நேரமே வந்தாலும், ரசிகர்கள் மனசில் Ôபச்சக்Õ என்று பச்சை குத்திவிட்டு போவது பிரகாஷ்ராஜுக்கு புதுசில்லையே!
கன்னட ஹீரோ சாய்குமார் இந்த படத்தில் முக்கிய வில்லன். ஆர்.டி.எக்ஸ். என்ற பெயரில் சென்னையை மட்டுமல்ல... பார்க்கிற யாவரையும் மிரட்டியிருக்கிறார். இவர் சிவாஜி ரசிகராம். சிவாஜி வில்லனாக நடித்தால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது.
வித்யாசகரின் பின்னணி இசையும், பாடல்களும் மற்றொரு மெஹாஹிட்! எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக அத்தி அத்திக்கா...
இயக்குனரை விட அதிகம் உழைத்திருக்கிறார் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின். பாராட்டுக்கள். அதே நேரம் தீயால் பற்ற வைக்கப்பட்ட விஜயின் முதுகு பகுதி அரை மணி ரேநமாக எரிவதும், அவர் திரும்பி நடக்கையில் அந்த சட்டையில் சில பொத்தல்களே இடம் பெற்றிருப்பதும் ஓவர் பெயின்! புரியுதா ஹெயின்?
காதல், ஆக்ஷன், சென்ட்டிமெண்ட் எல்லாம் இருந்தும் ஆதி....? பாதிதான்! என்ன செய்ய?
-ஆர்.எஸ்.அந்தணன் / தமிழ் சினிமா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>