01-20-2006, 04:15 PM
RaMa Wrote:<img src='http://img11.imageshack.us/img11/733/appamakal7959az.jpg' border='0' alt='user posted image'>
ஆராரோ பாடிய தாய்க்கு நிகர் ஆனவரே
தாய் இறந்தால் தகப்பன் சித்தப்பன் என்ற நிலையை மாற்றியவரே
தாய்க்கு பதிலாக பாச மழையில் எம்மை நனைத்தவரே
உமது வாழ்வின் இனிமையை எமக்காக துறந்தவரே
கண்டிப்புடன் பாசத்தையையும் ஊட்டியது நீங்கள் தானே
நாம் தப்பு செய்த போதிலும்
உங்களைத் தண்டித்து நம்மைத் திருத்தினீர்களே
அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள்
அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள்
அன்போடு பழகு என்று குட்டும் போட்டீர்கள்
அறிவு பசியை நமக்கு உணர செய்தீர்கள்
தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே
வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம்
கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும்
நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம்
ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!
நன்றி ரமா அப்பா கவிந ன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்க ரமா :wink:

