Yarl Forum
அப்பா :( - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அப்பா :( (/showthread.php?tid=1289)

Pages: 1 2 3


அப்பா :( - RaMa - 01-19-2006

<img src='http://img11.imageshack.us/img11/733/appamakal7959az.jpg' border='0' alt='user posted image'>

ஆராரோ பாடிய தாய்க்கு நிகர் ஆனவரே
தாய் இறந்தால் தகப்பன் சித்தப்பன் என்ற நிலையை மாற்றியவரே
தாய்க்கு பதிலாக பாச மழையில் எம்மை நனைத்தவரே
உமது வாழ்வின் இனிமையை எமக்காக துறந்தவரே

கண்டிப்புடன் பாசத்தையையும் ஊட்டியது நீங்கள் தானே
நாம் தப்பு செய்த போதிலும்
உங்களைத் தண்டித்து நம்மைத் திருத்தினீர்களே

அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள்
அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள்
அன்போடு பழகு என்று குட்டும் போட்டீர்கள்
அறிவு பசியை நமக்கு உணர செய்தீர்கள்

தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே
வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம்
கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும்
நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம்

ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!


- Vishnu - 01-19-2006

வாழ்த்துக்கள் ரமா..... வித்தியாசமான ஒரு கவிதையை தந்து இருக்கிறீர்கள். உங்கள் உணர்வுகளை கவிதையில் வெளிக்காட்டி இருக்கிறீர்கள். கொஞ்சம் சோகமாகவும் இருக்கு.. மேலும் கவிகள் படைக்க வாழ்த்துக்கள்.


- Rasikai - 01-19-2006

உங்கள் உள்ளத்து உணர்வுகளை படம் பிடித்துக்காட்டும் அப்பா கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் ரமா. மேலும் தொடர்ந்து கவி படையுங்கள்


- kuruvikal - 01-19-2006

அம்மா பற்றித்தான் அதிகம் கவிதைகள் வரும். ஏக்கங்கள் இழையோட அழகான அப்பாக் கவிதை தந்த ரமாவுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்..!


- RaMa - 01-19-2006

கருத்துக்கள் கூறிய விஷ்ணு ரசிகைக்கும் குருவிகளுக்கும் எனது நன்றிகள்


- வர்ணன் - 01-20-2006

பாராட்டுக்கள் ரமா .. மீண்டுமொருமுறை வாழ்வின் ஏக்கங்களை கவிதையில் பதிவு செய்து இருக்கிறீர்கள்! 8)


Re: அப்பா :( - N.SENTHIL - 01-20-2006

RaMa Wrote:<img src='http://img11.imageshack.us/img11/733/appamakal7959az.jpg' border='0' alt='user posted image'>



தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே
வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம்
கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும்
நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம்

¿øÄ ¸Å¢¨¾ ¦¿ï¨º ¦¾¡¼ §ÅñÎõ. þì¸Å¢¨¾ ¦¾¡Î¸¢ÈÐ..........
Å¡úòÐì¸û.


- RaMa - 01-20-2006

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி வர்ணன் அத்துடன் செந்தில். உங்கள் பாராட்டுக்கள் நிச்சயமாக இன்னும் கவிதை எழுத வேணும் என்று உற்சாகத்தை தருகின்றன. நன்றிகள்


- அருவி - 01-20-2006

Quote:அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள்
அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள்
அன்போடு பழகு என்று குட்டும் போட்டீர்கள்
அறிவு பசியை நமக்கு உணர செய்தீர்கள்

அக்கா கவிதை நன்றாக இருக்கிறது.


- Snegethy - 01-20-2006

அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள்
அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள்

றமாக்கா....அப்பா கவிதை நல்லாயிருக்கு.
அப்பாட்ட அடி வாங்கிறது<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பிறந்தநாள் விழா ஒன்றில குழப்படி செய்ததுக்கு வீட்ட வந்து வாங்கினதுதான் அப்பாட்ட வாங்கின முதல் அடி..ஹிஹி மறக்கமுடியுமா.


- RaMa - 01-20-2006

நன்றி அருவி சிநேகிதி உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும்.
ஆமா சிநேகிதி அப்பாவிடம் நல்லா அடி தான் வேண்டி இருக்கின்றீர்கள்.. நானும் நல்லாய் வாங்கியிருக்கேன். அப்பாவின் அடியை விட ஏச்சுக்குத் தான் பயம் நமக்கு


- வர்ணன் - 01-20-2006

RaMa Wrote:நன்றி அருவி சிநேகிதி உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும்.
ஆமா சிநேகிதி அப்பாவிடம் நல்லா அடி தான் வேண்டி இருக்கின்றீர்கள்.. நானும் நல்லாய் வாங்கியிருக்கேன். அப்பாவின் அடியை விட ஏச்சுக்குத் தான் பயம் நமக்கு

அப்பான்ர அடிக்கு ஒரு போதும் அஞ்சாத சிங்கம் நான் ..
ஏனெண்டால் அவர் அடிக்கிறது ஒன்லி துவாயாலதான் :wink:
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இருந்தாலும் அவர் எங்களை விட்டு போய் சில ஆண்டு ஆகுது.. உங்கள் வரிகள் அத்தனையும் அப்பாவின் அருமையை நினைவு படுத்துறது போல .. அப்பாவை இழந்த எல்லாருக்குமே இருக்கும் ரமா 8)


- RaMa - 01-20-2006

varnan Wrote:
RaMa Wrote:நன்றி அருவி சிநேகிதி உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும்.
ஆமா சிநேகிதி அப்பாவிடம் நல்லா அடி தான் வேண்டி இருக்கின்றீர்கள்.. நானும் நல்லாய் வாங்கியிருக்கேன். அப்பாவின் அடியை விட ஏச்சுக்குத் தான் பயம் நமக்கு

அப்பான்ர அடிக்கு ஒரு போதும் அஞ்சாத சிங்கம் நான் ..
ஏனெண்டால் அவர் அடிக்கிறது ஒன்லி துவாயாலதான் :wink:
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இருந்தாலும் அவர் எங்களை விட்டு போய் சில ஆண்டு ஆகுது.. உங்கள் வரிகள் அத்தனையும் அப்பாவின் அருமையை நினைவு படுத்துறது போல .. அப்பாவை இழந்த எல்லாருக்குமே இருக்கும் ரமா 8)

ஆமாம் வர்ணன் அவர்கள் நம் அருகில் இல்லாத போது தான் அவர்களின் அருமை புரிகின்றது. இருப்பவர்கள் என்றாலும் புரிந்து நடக்கட்டும் என்பது தான் நமது விருப்பம்.


- Snegethy - 01-20-2006

றமாக்கா லிற்றில் பிறின்சஸ் பார்த்தனீங்களே?சின்னப்பிள்ளை இந்தியாவில இருந்திட்டு அமெரிக்காவுக்கு வருவா..அங்க அவான்ர பிரண்ஸ்கு எல்லாம் ராமர் சீதா கதையெல்லாம் சொல்லுவா.


- வெண்ணிலா - 01-20-2006

ரமாக்கா அப்பா கவிதை நல்லா இருக்கு. உருக்கமான வரிகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன. பொருத்தமான படமும் கவிதைக்கு இன்னும் மெருகூட்டுகின்றது. மேலும் கவிகள் எழுத வாழ்த்துகிறேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- மேகநாதன் - 01-20-2006

<b>றமா,

கவிதை எம்மை
"மறக்கயற்சிக்கின்ற காலங்களை"யும்
மீள நினைக்கவைத்துவிட்டது....
நெஞ்சை வருடிய சத்திய வரிகள்.....

வாழ்த்துவதிலும் பார்க்க
உங்கள் கவிதை வரிகளினூடான உணர்வுகளோடு..
நன்றிகள்...</b>


- kuruvikal - 01-20-2006

Snegethy Wrote:அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள்
அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள்

றமாக்கா....அப்பா கவிதை நல்லாயிருக்கு.
அப்பாட்ட அடி வாங்கிறது<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பிறந்தநாள் விழா ஒன்றில குழப்படி செய்ததுக்கு வீட்ட வந்து வாங்கினதுதான் அப்பாட்ட வாங்கின முதல் அடி..ஹிஹி மறக்கமுடியுமா.

நமக்கு அப்பா அடிக்கிறது இல்லை...அம்மாதான்.. அடியோ அடிதான்.. பார்வையாலும் அடிப்பாங்க.. சொல்லாலும் அடிப்பாங்க...கம்பாலும் அடிப்பாங்க..! அப்படி அடிக்கிறது அம்மாமாருக்கு பிறப்பிலேயே வந்த கலையோ...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Vishnu - 01-20-2006

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்ம்ம்.... யாரு அடிச்சாலும் எங்க மேல அன்பா இருக்கிறாங்களா இல்லையா எங்கிறது தான் முக்கியம்.

ஒரு பிரபலம் ஒருவருடைய மகனின் பேட்டி பார்த்தேன். அப்போது அப்பவை பற்றி ஒரு கேள்வி. அதற்கு மகன் பதில் சொன்னார். அப்பா நான் இடக்கு முடக்கா ஏதும் செய்தால் ரொம்ப திட்டி விடுவார். ஆனால் பிறகு அதுக்காக வருத்தப்படுவார்... நான் ஆசைப்பட்டு கேட்டது ஏதாவது ஒன்றை நினைவில் வைத்திருந்து... அதை எனக்கு வாங்கிக்கொடுப்பார். இறுதியாக தான் தனது கார்ஐ மாற்ற ஆசைப்பட்டதாகவும். புதிய கார் வாங்கி கொடுத்ததாகவும் சொன்னார். :roll: :roll: நல்ல அப்பா தான். மகன் சரியாக பயன்படுத்திக்கொண்டால் சரி.


- kuruvikal - 01-20-2006

<b>அப்பா எனும் அன்புறவு...!</b>

<img src='http://img34.imageshack.us/img34/8440/babyanddad9xw.jpg' border='0' alt='user posted image'>

<b>குழந்தை நானும்
மறக்க முடியா ஓர் உறவு
அப்பா எனும் நல்லுறவு
தன்னவளின் அன்புப் பரிசாய்
தன்னணுவின் உருவாய் எனைக் கண்டு
அனுதினமும் அணுவணுவாய் பாடுபட்டு
தன்னுழைப்புத் தந்து
தரணியெங்கும் தலை நிமிர வைக்கும்
நல்லுறவு
அப்பா எனும் அன்புறவு...!
ஆனால்
இன்று அது
உலகில் உரிமைகள் இழந்து
ஏச்சுக்கும் இழக்காரத்துக்கும் இடையில்
சிக்கிச்சீரழியும் நிலை கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லை...!
இந்த நிலை கண்டு
இன்று நான் மெளனியானால்
நாளை எனக்கும் இக்கதிதான்....!

டி என் ஏ யில் சரி பாதி
தந்தது முதலாய்
தன்னவளின் கர்ப்பத்தில்
காத்தது ஈறாய்
ஈன்றபோது அரவணைத்து
தந்த அந்த முத்தத்தின் முதலாய்
பொக்கவாய் வீணி வடிய
பொய்த ஈரம் உப்பாய் படிய
குட்டித் தூக்கம் கலைய
புட்டிப் பாலோடு
மடியிருத்தி ஊட்டிய உறவாய்
அழகு பொம்மை வாங்கி
இசைக்க வைத்து
இசைஞானம் தந்து
வாழ்வில் பலபடிகள் கடந்து வர
நடையோடு கல்வியும் ஊட்டிய சீமான்
தன்னவளோடு வந்த செல்லச் சண்டையில்
என் பிள்ளை அவன் என்று
வீராப்புப் பேசி
வீம்பு வளர்த்தது வரை
நானே என் அப்பாவின்
சொத்தாய் சொந்தமாய்.....!

என்றும் என் குருதியோடு
ஓடும் என் அப்பாவின் குருதிகொள்
டி என் ஏ என்பதை
என் ஆயுள் வரை எங்கும் நான் மறவேன்....!
அவர் மீது பாசம் காட்ட
கணமேதும் பின்நிற்கேன்....!</b>


முன்னர் ஒரு தடவை அப்பாவுக்காக கிறுக்கியது..மீண்டும் உங்களுக்காக..! ரமாவின் கவிதை தந்த எண்ண அலைகளின் பாதிப்பு..மீளப் பதிப்பிக்க தூண்டியது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 01-20-2006

Quote:தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே
வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம்
கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும்
நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம்

ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!

ரமா உங்கள் அப்பாவின் நினைவுகளோடு எழுதிய கவிதை நன்று. தொடர்ந்தும் எழுதுங்கள். குறிப்பாக நான் மேற்கோள் காட்டியுள்ள வரிகள் உணர்வுபூர்வமாக இருப்பதோடு, உங்கள் ஏக்கத்தை பகிர்ந்துகொள்கின்றன. எதிர்வரும் காலங்களில் களத்தில் உங்கள் கவிதைகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.