01-20-2006, 02:53 PM
Quote:தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே
வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம்
கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும்
நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம்
ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!
ரமா உங்கள் அப்பாவின் நினைவுகளோடு எழுதிய கவிதை நன்று. தொடர்ந்தும் எழுதுங்கள். குறிப்பாக நான் மேற்கோள் காட்டியுள்ள வரிகள் உணர்வுபூர்வமாக இருப்பதோடு, உங்கள் ஏக்கத்தை பகிர்ந்துகொள்கின்றன. எதிர்வரும் காலங்களில் களத்தில் உங்கள் கவிதைகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.

