01-20-2006, 01:10 PM
பிரித்தானியாவில் குடிவரவு குடியகல்வு உள்ளிட்ட பல விடயங்களை கவனிக்கும் Home Office இலங்கையை பாதுகாப்பான நாடுகள் என கூறி White list இல் வகைப்படுத்தியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்வோருக்கான பிரயாண எச்சரிக்கையை Home Office விடுத்த போதிலும் அதில் இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரதேசங்களே பாதுகாப்பற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இங்கு தஞ்சம் கோரி கோரிக்கை நிராகரிகப்பட்டோர் இலங்கைக்கு திரும்ப சென்று வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றய இடங்களில் வாழ முடியும் என கூறி கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பபடுகின்றார்கள். பிரித்தானிய அரசு இலங்கையில் தற்போது பாதுகாப்பற்ற நிலை உண்டு என்ற கொள்கை முடிவு எதையும் எடுக்காதவரை திருப்பி அனுப்புவதை நிறுத்துவது கடினம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

