01-20-2006, 04:52 AM
அருவி Wrote:இப்பத்திரிகை கனடாவில் ஈழத்தமிழரின் பால் வேற்றுமை பாராட்டும் பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கனடாவில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வை அது பயங்கரவாதிகளிற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று விளித்து தன் இனவெறியைக்காட்டி நின்றது.
இப் பத்திரிகை தமிழர்களுக்கு வேற்றுமை காட்டும் பத்திரிகை என்பதை எல்லோரும் அறிந்ததே. Peter MacKay என்பவர் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததால், தமிழர்களாகிய நாம் வாக்களிக்கும் போது சற்று கவனம் எடுப்பது நல்லதே, என்பது எனது கருத்து. முக்கியமாக வாக்களிப்புக்கு 3 நாட்கள் இருக்கும் போது இப்படியான ஒருகருத்தை வெளியிட்டது எம்மவரில் எத்தனை பேர் அறிந்துள்ளனர் என்பது கேள்வியே!
-சபேஷ்-

