01-19-2006, 12:29 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>இடம்பெயரும் மக்கள் மீதும் சோதனைச் சாவடியில் இராணுவக் கெடுபிடிகள் தீவிரம் </b>
சிறிலங்கா இராணுவ படுகொலைகளுக்கு அஞ்சி யாழ். குடாநாட்டை விட்டு நாள்தோறும ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவதால் அதிர்ச்சி அடைந்துள்ள சிறிலங்கா படைத்தரப்பும், புலனாய்வுத்துறையினரும் முகமாலையில் பொதுமக்கள் மீதான கெடுபிடி நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் வருகையினை படிப்படியாக தடுக்கும் முயற்சிகளிலும் படையினர் தீவிரம் காட்டி வருவதாகவும் நேரடியாகத் தடுத்தால் மக்கள் கொந்தளிக்கும் சூழல் உருவாகும் என்பதால் மறைமுக நகர்வினை படைத்தரப்பு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
அனைவருக்கும் பாதுகாப்புத் தருகிறோம் என்ற போர்வையில் படையினரால் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் யாழ்ப்பாணத்தில் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் படையினர் குடிபோதையில் இருப்பதாகவும் இவர்கள் வீதியால் பயணம் செய்வோரை எந்தவொரு விசாரணைகள் இன்றியும் தாக்குவதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
நிதானம் தவறிய நிலையில் காணப்படும் படையினர் பெண்களை நீண்டநேரம் தடுத்து வைத்து அங்க சேட்டைகளில் ஈடுபடுவதுடன் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
போதையில் இரவில் வீடுகளை சுற்றிவளைக்கும் படையினரில் கண்ணில் படும் பெண்கள் மீது வக்கிர சிந்தனையுடன் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போல் யாழ். குடாநாட்டில் படையினரால் கைது செய்யப்பட்டு படைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் பலர் கறுப்புடை தரித்து முகத்தை மறைத்திருப்போர் முன்நிறுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்டு தப்பிவந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் படையினரின் இரகசிய முகாம்களுக்கு கடத்திச் செல்லப்படும் இளைஞர்கள் கூர்மையான ஆயுதங்களால் உடலில் குத்தப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர்.
விசாரணை செய்வோர் நன்றாக தமிழில் கதைப்பதாகவும் ஊரில் இருப்போர் தொடர்பாய் விலாவாரியாக விசாரிப்பதாகவும் இவர்களே அருகில் இருக்கின்ற படையினருக்கு சிங்களத்தில் மொழி பெயர்த்துச் சொல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</span>[/color]
<i><b> தகவல்மூலம்;- புதினம்</b></i>

"
"
"