01-19-2006, 12:26 PM
<span style='color:red'><b>சிவில் நிர்வாகம் சீர்குலைந்த யாழிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுங்கள்</b>
சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாணத்தில் சிவில் நிவாகம் சீர்குலைந்து படுகொலைகள் அதிகரித்துள்ளதால் இராணுவத் தலையீடற்ற பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அறிக்கை:
கடந்த சில வாரங்களாக சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளும், இராணுவத் துணைக் குழுக்களும் மக்களைக் கொன்று குவிக்கும் பாதகங்களைச் சிறலங்கா அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் அரங்கேற்றுகின்றன.
அப்பாவிகள் நாம் ஏதும் அறியோம் எனக் கதறியும் காட்டுமிராண்டித்தனமாக ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி வீதிகளிலேயே தாக்கப்படுகின்றனர். பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். பெண்கள் உடற்சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்படுகின்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படாது தடுக்கப்படுகின்றனர். இரவில் தேடுதல் என்ற பெயரில் வேலி பிரித்து நடுவீட்டில் அட்டகாசம் செய்கின்றனர்.
இராணுவத் துணைக்குழுக்கள் நடுநிசியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கின்றனர். எவ்வகைப் பாதுகாப்பு மற்ற வாழ்க்கை என்ற துயரமிக்க அவலமான சூழ்நிலையே சிறிலங்காப் படைகளால் யாழ். மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொல்வதாயின் யாழ்ப்பாணம் தமிழ் மக்களுக்கு திறந்தவெளி சிறையாகிவிட்டது.
பிணம் தின்னி சிறிலங்கா அரசாங்கமோ, சமாதானப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தமிழின அழிப்பினை மேற்கொள்வதற்காக அதாவது ஒரு போரினைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்காக திட்டங்களைத் தீட்டி வேகமாக காய்களை நகர்த்துகிறது. சிறிலங்கா படைகளது நெருக்குவாரங்கள் அதிகரிக்கும் சூழலிலேயே யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது.
இனவெறிப் பிசாசுகள் பலிகேட்டு கதவைத் தட்டி இழுத்தெடுப்பதற்கு முன், பாதுகாப்புத் தேடி செல்வது இயல்பான உடனடி பாதுகாப்பிற்கான சரியான நடைமுறையாகும்.
அன்பான மக்களே!
உங்களை, உங்களது குடும்பங்களை சிறிலங்காப் படையில் சீரழிப்பில் நின்றும் காத்துக்கொள்வதற்காக சிவில் நிர்வாகம் குலைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து உங்களது பாதுகாப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் பாதுகாப்புத் தேடி இராணுவத்தின் தலையீடற்ற பிரதேசங்களுக்குச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது</span>
<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>

"
"
"