06-23-2003, 11:57 AM
தாயாகி நின்ற அவள்
இன்று
செவிலிகளால் தத்தெடுக்கப்பட்ட
நம்மவர்
சித்தம் கலங்கி
செவிலி தன்
சிங்காரம் காட்டிப் புகழ் தேட
அன்னையவளோ
கோடிக்கரையில் வாழ்வுக்காய் அலையும்
நிலை கொண்டாள்
ஆனாலும்
தமிழுக்காய் வாழும்
மறவர் கூட்டம்
அவள் பிள்ளைகளாய்
உலாவருதல் கண்டு
அவள் சற்றே நிம்மதி கொண்டாள்!
நாமும் மறவர் அணியில்
கலந்திடுவோம்
அன்னையவள்
செழிப்புக்காய்!
செவிலி பிடியில்
அலைபவரே
தாய்க்குப் பின் தான்
செவிலி எனும்
உண்மை உணரும்!
தாயின்றேல்
உமக்கொரு வாழ்வில்லை!
நாமம் இல்லை!
இன்று
செவிலிகளால் தத்தெடுக்கப்பட்ட
நம்மவர்
சித்தம் கலங்கி
செவிலி தன்
சிங்காரம் காட்டிப் புகழ் தேட
அன்னையவளோ
கோடிக்கரையில் வாழ்வுக்காய் அலையும்
நிலை கொண்டாள்
ஆனாலும்
தமிழுக்காய் வாழும்
மறவர் கூட்டம்
அவள் பிள்ளைகளாய்
உலாவருதல் கண்டு
அவள் சற்றே நிம்மதி கொண்டாள்!
நாமும் மறவர் அணியில்
கலந்திடுவோம்
அன்னையவள்
செழிப்புக்காய்!
செவிலி பிடியில்
அலைபவரே
தாய்க்குப் பின் தான்
செவிலி எனும்
உண்மை உணரும்!
தாயின்றேல்
உமக்கொரு வாழ்வில்லை!
நாமம் இல்லை!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

