01-19-2006, 11:33 AM
Quote:பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளாக இருந்தாலோ அல்லது தனி நபர் வசைபாடல் இருந்தாலோ அவை நிர்வாகம் பகுதிக்க நகர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்...
ஆனால் இப்போது மட்டும் ஒரு பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று புலம் பகுதிக்கும், ஒன்று நிர்வாக பகுதிக்கும், ஒன்று 'பார்வையாளர் வசதிக்காக' கள உறுப்பினருக்கு மட்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது...
அந்த கருத்துகளை எல்லா பார்வையாளர்களும் பார்க்க வேண்டியதின் அவசியமென்ன?
கருத்துடன் சம்பந்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டு களஉறுப்பினர்களுக்கு மட்டும் பகுதியில் அரட்டை என்னும் தலைப்பிலும், கருத்தோடு ஒன்றிய ஓர் தலைப்பிட்டும் இணைக்கப்பட்டு வருவதுண்டு. இங்கு பெரும்பாலும் கருத்துக்களைத் தொடர்வதற்கான வசதிக்காக அவை மூடப்படுவதில்லை.
இன்று, கள உறுப்பினர்கள் அக்கருத்துக்களைப்பார்வையிடுவதில் தப்பில்லை, ஆனால் அதைத் தொடரவேண்டிய தேவையுமில்லை எனக்கருதியதால் சில கருத்துக்களை பார்வைக்காக இணைத்துள்ளேன்.
நீக்கப்படவேண்டியவை எனக் கருதப்படும் கருத்துக்கள் மட்டுமே நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்படுவதுண்டு.

