Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#32
அனல் பறக்கும் இருதரப்பு விவாதங்களிடையே பீனிக்ஸ் பறவைகள் போல் நின்று தலைமை தாங்கும் ஆற்றல் மிகு நடுவர்களான திரு.செல்வமுத்து...மதிப்புக்குரிய தமிழினி அவர்களே..

என்தரப்பு அணிக்கு தலைமை தாங்கும் இளைஞன் அவர்களே..
மற்றும் எனது அணி சார்ந்த சக கள உறுப்பினர்களே..

எதிர் அணிக்கு தலைமை தாங்கும் திரு.சோழியன் அவர்களே..

இணையதளங்கள் நவீன உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த நிலையில்:

இணையதளங்கள் என்பவை:
எந்த ஒரு சமுதாயத்தையும் வழி நடத்தும் இளையோர்க்கு...

ஆயிரக்கணக்கான நூல்கள்..
நூற்றுக்கணக்கான நூலகங்கள்..
பல்லாயிரக்கணக்கான மனிதர்களூடான சந்திப்புக்கள்...
தேடியும் நிறைவடையாத தேடல்கள்....

இப்பிடி பலவற்றின்மூலம் கிடைக்காத தகவல்களை...
ஒரே ஒரு கணணி திரை தரும் என்றும்..அதில் வரும் இணைய தளங்கள் செய்திருக்கிறது என்று தெரிந்தும்...
வீட்டுக்குள்ளேயே அது ஒரு பல்கலைக்கழகத்தை கொண்டுவரும் என்று புரிந்தும்..
இல்லையில்லை அவை தீங்குதான் ... சீரழிவுதான் எம் இளையோர்க்கு என்று சொல்லி வாதிட வந்திருக்கும் எதிர்தரப்பு வாதிகளே
அனைவருக்கும் எனது பணிவு கலந்த வணக்கங்கள்!

நடுவர் அவர்களே திரு.சோழியன் அவர்கள் நன்றாக ஒரு வாதத்தை வைத்தார். அது:


<b>புலம் பெயர்ந்து வாழும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்.
1. தாயகத்தில் பிறந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலங்களிலோ புலம் பெயர்ந்து வந்தவர்கள்.
2. புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்பவர்கள்.

இதிலே முதலாவது வகையினரில் பெரும்பாலானவர்களைத்தான் தமிழ் கருத்துக்களங்களிலே, தமிழில் கருத்தாடுபவர்களாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு எதையாவது தருபவர்களாகவோ, அல்லது ஆகக் குறைந்தது அங்கத்துவர்களாகவோ காணக் கிடைக்கிறது. ஆனால், இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது யாழ் போன்ற கருத்துக்களங்களில் காணமுடிகிறதா? ஒரே வார்த்தையில் 'இல்லை' என மனவருத்தத்துடன்தான் கூறமுடிகிறது. வேண்டுமானால் இவர்களை, தமிழ் கருத்துக்களம் என்ற பெயரில் தமிங்கிலத்தில் உரையாடும் களங்களில் காணலாம். அங்கே என்ன செய்கிறார்கள்.. சினிமாவை.. நடிக நடிகையரை.. அவர்களுடைய நெளிகோல படங்களை பக்கம் பக்கமாக அலசுகிறார்கள். அவ்வளவுதான்</b>

நல்லாக சொன்னீங்க சோழியன்அவர்களே:

நீங்க சொன்ன 2 வது வகை தமிங்கிலம் பேசுபவர்கள்தான் கனடாவின் சரித்திரம் கண்டிராத ஒரு பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்!

பொய் சொல்கிறேன் என்று நினைத்தால்.. பி.பி.ஸி வானொலி கண்ட செவ்விக்கு கனடா பொங்குதமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பல்கலைக்கழக மாணவி ஒருத்தி சொன்னாளே..

இது முதற்கட்டம்.. நான் இங்கேதான் என் நினைவுதெரிந்தவரை இருக்கிறேன். ஆனால் இனம் முக்கியம் ... இதுக்கும் சிங்கள அரசாங்கம் பதில் சொல்லாவிடில் இன்னும் தீவிரமாக எம் போராட்டத்தை முன்னெடுப்போம்!

அதை விடுவோம்.. சுனாமி என்ற ஒன்று வந்திச்சு..சுவிஸ்ல
ரயில்வே ஸ்ரேசன்லயும்...
லண்டன்ல.. ஆலயங்கள் முன்னாலயும் போறவர் .. வாறவர் எல்லார்கிட்டயும்
எங்கள் இனம் பேரழிவை சந்திச்சு இருக்கு உதவி செய்யுங்க எண்டு மடியேந்தி பிச்சை கேட்டார்கள் என்று எல்லாருமே அறிந்தோம்.

இந்த இங்க பிறந்து வளர்ந்த இளையோர்தானே அதை செய்தாங்க.
அப்போ எங்கே போனிங்க நீங்க?

அவர்கள் பார்த்திராத இணையதளங்களா?
அது அவர்கள் பாதையை திசை திருப்பிச்சா?

சாட்டிங்கும் அதன் பிறகு டேற்றின்கும் என்று வாதாடுறீங்கள்.
சாட் பண்ண இணையம் வழி செய்யுதுதான்.. அதற்காக
24 மணி நேரமும் சாட் பண்ண முடியுமா?
அது ஒரு வகை பொழுதுபோக்கு... '
இயந்திரமயமான புலம் பெயர்வு வாழ்க்கை அதுக்கு இடம் கொடுக்குமா?

சாட் பண்ணுறதாலதான் நீங்கள் சொன்னவை எல்லாம் நடக்குது என்றால் ..
புலத்தில் உண்மையாக வாழ்பவர்கள் நீங்களாக இருந்தால் நம்புங்கள் ..
இளையோர்க்கு இணையதளங்கள்தான் அதுக்கு தேவை என்று இல்லை!!
புறச்சூழ்நிலைகளே அவற்றிற்க்கு அகலமாக கதவை திறந்து வைத்து காத்துக்கொண்டிருக்கிறது!

இன்னும் ஒன்றை சொன்னீர்கள் அது:

<b>காதலுக்கு வழி தேடுது. அதாவது காதல் என்ற பெயரிலே பருவ உணர்வுக்கு வடிகால் தேடுது. மனதிலுள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க இடம் தேடுது. நாலு சுவர்களுக்குள் இருந்து, 'சற்' ரூம்களிலே மன வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்குது. தெருவில் இறங்கி நேருக்கு நேராய் தைரியமாய் பேச முடியாததுகளை எல்லாம், 'சற் ரூம்'களிலே கொட்டிக் கிளறி குப்பையாக்கி தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறது. இதுதான் பல 'சற் ரூம்'களிலே அதுவும் கண்காணிப்பாளரற்ற தமிழ் 'சற் ரூம்'களிலே வாசிக்க வாசிக்க வந்துகொண்டேயிருக்கும் சமாச்சாரங்கள்</b>.

அற்புதமாய் சொன்னீர்கள்

கனம் நடுவர் அவர்களே திரு.சோழியன் அவர்களின் வாதத்தின் மீதான என்னிடம் உள்ள கேள்விகள் இவை:

* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?

*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?

*கண்காணிப்பாளர்களற்ற ???????? சாட்ரூம் என்ற ஒன்று வந்தபின்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா?

*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?

நீங்கள் இணையதளங்களில் உள்ள பாதிப்பு என்று சொல்லவந்தது ...

அதன் மொத்த பகுதியின் சிறு அம்சம்! ஆகவே ஒன்றை வைத்து பலதை தீர்மானிப்பது எப்படி இருக்கிறதென்றால்...

காகங்கள் கறுப்பானவை-ஆகவே

கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!

என்பது போல் உள்ளது!


பிரியசகி அவர்கள் இன்னும் திறமையாக தொடர்ந்தார்:
அவர்சொல்கிறார்:

<b>தயவு செய்து கருத்தை தெளிவாக உள்வாங்குங்கள். பெற்றோரின் கணனி பற்றிய அறிவின்மையை இளையோர் தமது சீரழிவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கூறவந்தால்.. அதற்காக பெற்றோரை குறைகூறாதீர்கள்.. ஒரு சில டொலர்களுடன் நாடுகள் கடந்து.. புதிய சூழலிலே தம்மை நிலைநிறுத்திய அவர்களா அறியாமையுள்ளவர்கள்..? அது உண்மையல்ல. தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்ற நிலையில் ஓய்வெடுக்கிறார்கள். ....... இப்படி தொடர்ந்திருந்தார்!</b>

*தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்று ஓய்வெடுக்கிறார்கள் என்று சொன்னீர்கள்.

உங்களிடம் கேக்கிறேன்.. தற்காலகட்டத்தின் வளர்ச்சி போக்கில் முன்னைய சந்த்ததியை விட எல்லா விதமான துறைகளிலும்..

அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில் அவர்களின் பெற்றோர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் எட்டி பிடிக்க முடியாத உயரங்களை.. புலம்பெயர்ந்த்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சாதித்தார்களே எதனால் ? இணைய தளங்களினால் ஏற்பட்ட தீங்கினாலா?

*அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக வந்து உட்கார்ந்துவிட்ட இணையதளங்களின் நன்மையினாலா?

*இணையதளங்களின் பாவனையானது எமது கலாச்சாரத்தை மறந்து வேற்று இனத்தவரின் கலாச்சாரத்தை பழகும் வழி உள்ளது என்றும் சொன்னீர்கள். -நல்லது..

இணையதளங்களின் பாவனையினால் வேற்றுக் கலாச்சாரத்தை தழுவி பெயர் பழக்கவழக்கம் எல்லாம் மாறி..மதம் மாறி ..மொழிமாறி.. போய்விட்ட எத்தனை இளையோர் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்?

*இந்த இணையதளங்களின் வாசனையே அறியாத பல வளர்ந்தவர்கள்தான் இதை எல்லாம் பெரும்பாலும் எம்மிடையே செய்து கொண்டிருக்கிறார்களே- இது எதனால் ஆச்சு?

தொடர்ந்து திரு.முகத்தார் அவர்கள் அற்புதமாய் ஒரு கருத்தை வைத்தார் நடுவர் அவர்களே - அது :<b> முதலில் இந்த தலைப்பை ஏன் வந்தது என எதிர் தரப்பினர் புரிந்து கொள்ளவேணும் அவர்கள் கூறுவதுபோல இணையத்தினால்; நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்பிடி ஒரு தலைப்புக் கீழ் நாங்கள் வாதிடத் தேவையில்லையே </b>!

ஐயா விவாத மேடை என்பது எந்த தலைப்பிலும் வரலாம். தலைப்பு சில சமயங்களில் மழை பூமியில் இருந்து வருதா? இல்லை வானத்தில் இருந்து வருதா எண்டும் வரலாம். எந்த அணியில் நீங்கள் இருந்தாலும் .. உண்மை எது என்று சரியாக தெரிந்தாலும் ... எதிர்வாதங்களை வைத்தே ஆவீர்கள்.

மழைக்கு நீராவியின் வடிவில் பூமி கடல் காரணம்.. அதேபோல் பூமி இன்னும் காணாமல் போய்விடாமல் இருக்க வானமும் ஒரு காரணம்-!!!!!

ஆகவே தீர்ப்புக்கு முன்னம் தலைப்பை பற்றி சிலாகிப்பது அவ்ளோ உகந்தல்ல!

நடுவர் அவர்களே: <b>எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் உண்டு என்பது பொதுவிதி</b>! - தீமைபற்றி வாதம் புரிகிறோம்- என்றால் நன்மைக்கு வழிகாட்டுகிறோம்!

இணயதளங்கள் இளையோர்க்கு தீமை என்பதனால்தான் அதை பற்றி இங்கு விவாதிக்க வந்து இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டி நல்லவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த... இணயதளம் ஒன்றையே பாவித்ததன் மூலம் - திரு.முகத்தார் அவர்கள் .... எதிரணியில் இருந்தாலும் எங்கள் அணிக்கு வலுவான கருத்தை சேர்த்தற்க்கு பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

நடுவர் அவர்களே- தீமை என்கில்லை? எதில் இல்லை?



தலைப்புக்கு சம்பந்தமாய் யாரும் பேசவில்லை என்கிறார்கள் எதிர்த்தரப்பினர்!

அவர்கள் அர்த்தப்படுத்துவதுதான் என்ன? சீரழிந்து போகிறார்கள்தான்! மிக சொற்ப சிலர்! அதே நேரம் இலட்சக்கணக்கானவர்கள் பயனடைகிறார்களே - அதை ஏன் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை? ஒரு விமானம் சிதறி விழுகிறதென்றால்- விமானமே அபாயம் என்று சொல்கிறீர்களா? பயணம் இடைவழியில் நிற்கும்! - அதை தவிர உங்கள் விவாதத்தில் பயன் ஒன்றும் இல்லை!!

<b>நடுவர் அவர்களே!

உண்ணும் உணவில் இருந்து - ஒரு சிலரின் உயிர்வாழ்வு வரை சில அம்சங்கள் பிறருக்கு தீங்காய் இருக்கிறது! அதனால் உணவே கூடாது என்று ஒதுக்கி வைக்கிறோமா?

இல்லை மனித இனமே அபாயமானது என்று சொல்லிவிட்டு போகலாமா?அப்புறம் உயிர்வாழ்தல் எப்பிடி நிலை பெறும்?</b>

புலம்பெயர்ந்த இளையோரை இணையதளங்கள் சீரழிக்கிறது என்கிறார்கள் எதிர்தரப்பினர் - ஆனால் இதுவரை அதனை தவிர்த்து அதற்க்கு சமனான - தீங்கில்லாத மாற்று ஊடகம் ஒன்றை இதுவரை அவர்கள் சுட்டி காட்டவில்லை!சுட்டிக்காட்ட போவதும் இல்லை! ஏனெனில் அவர்களிடம் விடை இல்லை!

வேற்றுநாட்டவருக்கு சவால்விடும் வகையில் மிககுறுகிய காலத்தில் பாடசாலைகளிலும் - கல்லூரிகளிலும்-பயிற்சிமையங்களிலும்- பயின்ற- பயில்கின்ற -பயில போகும் எம் இளையோர்க்கு அவர்களின் அறிவு தேடலுக்கு இந்த இணயதளங்கள் கை கொடுத்த-கொடுக்கின்ற- கொடுக்க போகும் இடங்கள் எத்தனை எத்தனை?
ஆபாசதளங்கள்-இணைய அரட்டைகள் என்ற ஒரு சில விடயத்தையே வைத்து மல்லுக்கட்டும் இவர்களிடம் கேட்கிறேன் நடுவர் அவர்களே...

இன்றைய இளையோர்க்கு

<b>பொருளாதாரம்-மருத்துவம்-இலக்கியம்-பன்னாட்டுத்தொடர்பு-கலை-தொழில்நுட்பம்-பத்திரிகைத்துறை-அரசியல்-ஆன்மீகம்-புவியியல்-உயிரியல்-தாவரவியல் -விண்ணியல் விநோதங்கள்-இசை-கற்கைநெறி-கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்-திரைத்துறை-வரலாறு-இயற்கை பற்றிய ஆய்வு- </b> ...
இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்- இத்தனை விடயங்களையும் மேற் சொன்ன ஒரு சில விடயங்களை வைத்து உதாசீன படுத்தலாமா?

<b>இவ்வளவு பேசும் இவர்கள் -இளையோர்க்கு ஒரு முன்மாதிரியாக செயற்பட முன்வந்து -இணையத்தின் தீங்கை வலியுறுத்தி- நாளைக்கே தங்கள் இணையதொடர்பை துண்டித்து ஒரு வழிகாட்டிகளாக செயற்பட முடியுமா?</b>

இல்லை என்றே பதில் வரும்- ஏனெனில் அதில் உள்ள நன்மைகள் அவர்களுக்கும் தெரியும்!!

ஒருசில புறநடைகளை பூதாகாரமாக்கி -இளையோர் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி...

அதை தவிர்க்கலாமோ என்று ஒரு குழப்பம் கலந்த அச்சத்தை உருவாக்கி நவீன உலகின் போக்கிலிருந்து எம் இளையோரை அப்புறப் படுத்தலாமா?

அப்பிடியான செயல்களை செய்து வெற்றி கொண்டு -பழமைவாத கருத்துக்களை முன்வைத்து ஒரு இனத்தின் முனேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட்ட தலிபான்கள் போல் எம் இளையோரும் வாழ்வதில் எதிர் தரப்பினர்க்கு சம்மதமா?


இறுதியாக நடுவர் அவர்களே- உங்கள் தீர்ப்பு எதுவாகவும் இருக்கலாம்.

அதை பற்றி பேசவோ .. கருத்து சொல்லவோ எனக்கு எந்த அருகதையும் -அதிகாரமும் இல்லை!!-

ஆனால்... ஒரு வேளை உங்கள் முடிவு இளையோர்க்கு இணையதளங்கள் சீரழிவுதான் என்று அமைந்தால்-- புதுயுகத்துடன் போட்டி போட்டு ஓடும் இளையவர்களின் கால்களுக்கு குறுக்கே தடையாய் அது அமைந்துவிடுமோ- அவர்கள் ஆற்றலை முடக்கி போட்டுவிடுமோ?என்ற ஒரு சந்தேகத்தைஎன்னுள் நானே எழுப்பி -

வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்!!
-வணக்கம்-
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)