01-13-2004, 12:45 PM
<b>இலங்கைத் தமிழர் விவகாரத்தில் யதார்த்தத்திற்கு முரணான கொள்கை நிலைப்பாட்டில் இந்திய அரசு</b>
பலாலி விமானத்தள ஓடுபாதையை புனரமைக்க இந்தியா உதவுவதன் சூட்சுமம் தான் என்ன?
இந்திய அரசுக்கெதிரான தமிழினத்தின் உணர்வுகளை யதார்த்த நிலையில் சிந்திப்பது அவசியம். ஏனெனில், தமிழர்கள் இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடென்றும், தாய் நாடென்றும் இன்று வரை கருதினார்கள். இனிமேலும் கருதுவார்கள்.
இந்திய மதத் தலைவர்கள், இலக்கிய விற்பன்னர்கள், கலாசார நிபுணர்களுடன் மிக நெருங்கிய உறவை வைத்திருக்கின்றார்கள் ஈழத்தமிழர்கள். அவர்களுடைய கசப்புணர்வு இந்திய மத்திய அரசுடன் தான். ஏனெனில், இந்திய மத்திய அரசு ஜயவர்தனாவின் வேண்டுதலுக்கமைய தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் கொள்கைக்கு இராணுவ ரீதியாக உதவி செய்தது.
இதன் காரணமாக, இந்த அநியாயங்களுக்கு அரசியல் ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டிய ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் அகால மரணத்தை எதிர்கொண்டார்.
இந்தத் துன்பகரமான நிகழ்வுடைய தாக்கத்தை தமிழர்கள் இன்றும் அனுபவிக்கின்றார்கள்.
தமிழருக்கெதிராக தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் அக்கினிச் சுவாலை போன்ற எதிர் அலைகள் ஏற்பட்டன. ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் போது, மரணத்தை எதிர்கொள்ளவில்லை. பதவியை இழந்த காலத்தில் தான் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
இதேவேளை, ராஜீவ்காந்தியின் தாயார் இந்திரா காந்தி பிரதமர் பதவி வகித்த காலத்தில் தான் அவரது வீட்டு வளாகத்தில் வைத்து சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்டார். தமிழருக்கு எதிராக வீசும் அலைகள் போல் அப்போது சீக்கியருக்கு எதிராக ஏன் அந்த அலை வீசவில்லை என்பது தான் தமிழரின் கேள்வி.
சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் தமிழ்ப் பிரதேசம் சகல வளங்களையுமிழந்து 72 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களுடைய உயிர்களும் பறிக்கப்பட்டன. உலக வங்கியின் அறிக்கையின் படி 3 இலட்சத்து 25 ஆயிரம் தமிழ் வீடுகள் சேதமாக்கப்பட்டன. 500 இற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் சேதமாக்கப்பட்டன. 85 இற்கும் மேற்பட்ட வீதிகள் சேதமாக்கப்பட்டன. கமத்தொழில், கைத்தொழில், மீன்பிடித் தொழில் சார்புடைய சகலதும் சேதமாக்கப்பட்டிருந்தன. 47 வீதமான தமிழ் மக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக்கப்பட்டனர்.
மனித நேயம் படைத்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த அவல நிலையை நேரில் கண்டால் நிச்சயம் கண்ணீர் விடுவர். இந்தத் துன்பங்களை நேரில் அனுபவித்த வெளிநாட்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிவாரணப் பணிகளுக்கு மேற்கு உலகத்தைச் சேர்ந்த அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, ஒல்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், பிரான்ஸ் முதலிய நாடுகளும், அவுஸ்திரேலிய முதலிய நாடுகளும் உதவிகளை வழங்கி வருகின்றன.
உதாரணமாக, ஜேர்மனி எந்த வித அரசியல் ஆதாயங்களுமில்லாமல் யாழ். குடாநாட்டில் சேதப்பட்ட 55 பள்ளிக் கூடங்களின் புனர்நிர்மாணத்துக்கு உதவி செய்தது. ஊர்காவல்துறையில் அர்ச். அந்தோனியார் கல்லூரியை புனர்நிர்மாணம் செய்வதற்கு 195 இலட்சம் ரூபா செலவழித்தார்கள். அவர்களுடைய பணி பள்ளிக் கூடங்களின் புனர்நிர்மாணத்தில் மட்டும் நிற்கவில்லை. நீர் வழங்கல், வறியோர்க்கு வீடு கட்டிக் கொடுத்தல் முதலிய துறைகளிலும் நிவாரணப் பணிகளைச் செய்கின்றார்கள்.
இவ்விதமே, ஏனைய நாடுகளும் தங்கள் நிதி வல்லமைக்கேற்ப உதவிகளைத் திறம்படச் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்த மேற்குலக நாடுகளின் உதவிகளை நாம் அலசும் பொழுது, இந்தியா ஒரு உதவியும் செய்யவில்லை.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களுக்குச் செய்யாவிடினும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு மனிதாபிமான முறையில் உதவிகள் செய்திருக்கலாம். அதுவும் இல்லை.
இந்தியா எமது அயல்நாடு. எமது தாய்நாடு. எமது தந்தையர் நாடென்று கருதுகிறோம். அவர்கள் 6 500 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தார்கள். தமிழ்ப் பிரதேச அநேக வீடுகள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. அநேக தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். அசோகச்சக்கரத்தைத் தங்கள் கொடியாக வைத்திருக்கும் இந்தியா, பகவத்கீதையின் ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் இந்தியா யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியில் அத்துமீறிச் சென்று கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள், தாதிமார்கள், நோயாளிகளைச் சுட்டுத்தள்ளியது. இந்தக் காட்டுமிராண்டித் தனம் 1987 ஆம் ஆண்டு கார்த்திகை நடுப்பகுதியில் நடந்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தக் கொடூர குற்றச் செயல்களைப் புரிந்த இந்திய இராணுவத்திற்கெதிராக வழக்குத் தொடர்ந்திருக்கலாம். மனிதநேயம் படைத்த தமிழ்ச் சட்டத்தரணிகள் சர்வதேச நீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடரவில்லை என்பது முக்கிய கேள்வியாகும்.
இந்தியா சமீபத்தில் செய்யும் இமாலயத் தவறுகள் ஒருவருடைய வீடு எரிந்தால் பக்கத்து வீட்டுக்காரர்தான் உடனடியாகத் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைப்பது மனிதாபிமானம். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் சகல வளங்களையும் இழந்து தமிழ் இனம், நடுத்தெருவில் நிற்கின்றது. அப்படிப்பட்ட கொடூ ரங்களையும், துயரங்களையும் எதிர் கொண்ட தமிழினத்தினுடைய முதுகில் இந்திய அரசு குத்தி விட்டது.
சமாதான முன்னெடுப்புகளில் பங்கு செய்யாத இந்தியா, புனர்நிர்மாணம், புனர்வாழ்வு, புனரமைப்புக்கு உதவி செய்யாத இந்தியா, சேதமடைந்த பள்ளிக் கூடங்கள், கோயில்கள், வீடுகள், வீதிகளுக்கு ஒரு செங்கட்டியாவது உதவி செய்யாத இந்தியா, தமிழ்க் குழந்தைகளுக்குப் பாலுணவு கூடக் கொடுக்க முடியாத இந்தியா, மிஞ்சிய தமிழ் மக்களைப் பூண்டோடு அழிப்பதற்கு இலங்கை விமானப்படை தமிழ் மக்களை அழிப்பதற்கு, இலங்கை விமானப்படைக்கு உதவுமுகமாக ஓடுபாதையை புனர்நிர்மாணம் செய்வதை நியாயப்படுத்த முடியாது.
பலாலி விமானப்படைத் தள ஓடுபாதைக்கு இந்தியா வழங்கவுள்ள உதவி தமிழ் அப்பாவி மக்களை அழிப்பதற்குச் சிங்கள இராணுவத்துக்குச் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா முதிர்ச்சியடையாததும், யதார்த்தத்துக்கு எதிரான கொள்கைகளையும் கடைப்பிடித்தால் சிங்கள தேசம் இந்தியாவுடைய பின்லாந்து அல்லது பூட்டான் அல்லது சீக்கிரமாக மாறுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஆனால், தமிழ்த் தாயகத்தைப் பொறுத்தவரை நிலைமை அதுவல்ல. இந்த யதார்த்தத்தை இந்தியப் பாதுகாப்பு மந்திரியும், பிரதமரும் அறிந்திருப்பது அவசியம்.
இலங்கையில் பிரதம மந்திரிக்கும், ஜனாதிபதிக்குமுள்ள அரசியல் முரண்பாடுகள் எந்த விதத்திலும் புலிகளைப் பாதிக்காது.
சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த உச்சி மகாநாட்டில் இந்தியப் பிரதமர் எமது ஜனாதிபதிக்கு அரசியல் நெருக்கடியைத் தவிர்க்கும் படி புத்திமதி கூறியுள்ளார். இந்த அரசியல் நெருக்கடி தவிர்க்கப்படாவிட்டால் விடுதலைப்புலிகள் தான் இலாபமடைவார்களென வலியுறுத்தியுள்ளார்.
பலாலி விமான நிலைய ஓடுபாதையை இந்திய விமானப்படை உயரதிகாரிகள் வந்து பார்வையிட்டு, எவ்விதம் புனர்நிர்மாணம் செய்யலாமென்று ஒரு மதிப்பீடு செய்துள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாக கொழும்பிலுள்ள புத்திஜீவிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், வட கீழ்ப் பிராந்திய பொது அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். யுத்தம் வெடித்தால் அது மிகவும் கொடிய யுத்தமாக மாறும்.
கொழும்பு வாழ் புத்திஜீவிகள் அநேகர் இந்தியா தமிழர்களுக்கு என்ன தவறுகளைச் செய்தாலும் தமிழர்கள் இந்திய மத்திய அரசுடன் பகைமை உணர்வை வெளிப்படுத்தலாகாதென்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்கள். எம்மைப் பொறுத்தவரை தமிழர்கள் இந்தியாவை தாய் நாடு, தந்தையர் நாடு என்று கருதினாலும், இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறுகளை மன்னிக்க முடியாது. இலங்கையின் இன்றைய அரசியல் முரண்பாடுகளுக்கு இந்தியா ஒரு சாராருக்கும், அமெரிக்கா இன்னொரு சாராருக்கும் ஆதரவு கொடுக்கின்றது.
எனவே, இது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமுள்ள மறைமுக அதிகாரப் போட்டி.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைதியைக் கடைப்பிடித்து ராஜதந்திர முன்னெடுப்புகளைச் செயற்படுத்தியும், தமிழ்ப் பிரதேசத்துக்குப் புனர்நிர்மாண, புனரமைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துவதும் முதற் கடமை.
நன்றி: தில்லைக்கூத்தன் (தினக்குரல்)