Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#23
<b>இந்து சமுத்திர வல்லாதிக்க போட்டியில் தமிழீழம்</b>
டி. சிவராம் (தராக்கி)


இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் எதிர்காலம் என்பதை நாம் ஆராய்வதானால் அதற்கு இன்றியமையாத பல விடயங்கள் உள்ளன. அதில் தலையாயது இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தன் போரியல், மற்றும் பொருளாதார நலன்களை நிலை நாட்டவும் விரிவாக்கவும் அன்றும் இன்றும் எடுத்துவரும் முயற்சிகளேயாகும். இதற்கடுத்தபடியாக நாம் கருத்திற்கொள்ள வேண்டியது இந்தியாவின் மேற்படி முயற்சிகளுக்கு எதிராக அல்லது அதனை மட்டுப்படுத்திடும் வகையில் சீனாவும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளான ஜப்பான் பிரித்தானியா என்பனவும் அன்றும் இன்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைத்துவரும் வியுூகங்களாகும். 1970 களின் பிற்கூற்றில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை விரிவாக்கிட அமெரிக்கா செய்த காய் நகர்த்தல்களில் சிறிலங்கா தொடர்பு பட்டிருந்ததாலேயே இந்தியா தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும், புகலிடமும் கொடுத்து அதன் மூலம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு மீது அழுத்தத்தை ஏற்படுத்தி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செய்து கொண்டது என்பது எமது விடுதலைப் போராட்டம் புறக்கணிக்க முடியாத உண்மை.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்லது இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகமான எந்த சக்தியோ இலங்கையில் தனது படைகளை வைத்திருக்க முடியாது. திருமலைத் துறைமுகத்தையோ இலங்கையிலுள்ள வேறு தளங்களையோ பயன்படுத்த முடியாது என அந்த ஒப்பந்தம் சிறிலங்காவை எக்காலத்துக்கும் பிணித்துவிட்டது என்பது அடுத்த உண்மை. இலங்கை அமைதிப்பேச்சுகளின் செல்திசையை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முற்றாக ஆக்கிரமிக்க முற்படுவதை மட்டுப்படுத்த இந்தியா எடுத்துவரும் மறைமுக முயற்சிகளின் விளைவாகவே இன்று சிறிலங்காவின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கெடுபிடி ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் திரிசங்கு நிலையில் கிடக்கின்றன என்று சில சிங்கள ஆய்வாளர் கூறுவதும் நாம் இலகுவில் தட்டிக்கழித்திட முடியாத அடுத்த விடயம்.

இலங்கையின் துறைமுகங்களையும், வான்படைத்தளங்களையும் தங்கு தடையின்றிப் பயன்படுத்திட வழிவகுக்கும் யுஊளுயு என்ற ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசுடன் கைச்சாத்திட அமெரிக்கா 2002இல் தயாராக இருந்ததென்பதையும் அதை இந்தியா தலையிட்டுத் தடுத்துவிட்டதென்பதும் அடுத்த உண்மை.

இதுமட்டுமன்று தனித் தமிழீழ அரசு நிறுவப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். அதன் இருப்பிற்கு வங்காள விரிகுடா ஊடாகவும், மன்னார் வளைகுடாவினூடாகவும் செல்லும் கடற்பாதைகள் இன்றியமையாத உயிர் நாளங்களாக அமையும். இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் கையிலிருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கிடைப்பட்ட 10 பாகை கடலோடை வழியாகவே தென்கிழக்காசியா, சீனா, ஜப்பான் என்பவற்றை நோக்கிச் செல்கின்றன என்பதும், தமிழீழத்தின் மீது நேரடியாகப் பாதைகளை நசுக்கியும், கடற்தடைகளைப் போட்டும் அதன் இருப்பை கேள்விக்குறியாக்கவே இந்தியா முயன்றிடும் என்பதும் தமிழீழ விடுதலைப் பற்றாளர் அனைவரும் அலசிப்பார்க்க மறுத்திட முடியாத விடயங்களாகும்.

தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கும் எம்மைச் சூழவுள்ள கடலுக்கும் உள்ள தொடர்பு அரசியல் hPதியாகவும் போரியல் hPதியாகவும் புறக்கணிக்கப்பட முடியாதது என்ற உண்மை இவ்வாறிருக்க போன கிழமை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா வகுத்துவரும் வியுூகங்களின் சில முக்கியமான பின்னணிகளைப் பற்றி எழுதிய கருத்துக்கள் விளங்கவில்லை எனவும், வரலாறு கிரலாறு என ஏன் எழுதிக் கொண்டிருக்கின்றீர்களென்றும் ஒரு சிலர் கூறினர்.

'படம்பார். பாடம் படி. சூரியன் கிழக்கில் உதிக்கும்" என்ற பாணியில் எழுதினால்தான் படிப்போம், இல்லையெனில் எமது குண்டுச்சட்டி இருக்கவே இருக்கிறது. குதிரை விடுவதற்கு எனக் கூறுபவர்க்காக எமது வருங்காலம் பற்றிய எமது கேந்திரப் பாதுகாப்புப் பற்றிய தேடல்களைக் கைவிட்டு அரிவரிப் பாடம் நடத்திக் கொண்டிருக்க இதுகாலமல்ல.

இந்தியாவின் பாதுகாப்புப் பற்றிய அக்கறைகள் நடைமுறைகள் என்பன எங்ஙனம் அதன் பெருநிலப்பரப்பு மையப்பட்டதாக ஆரம்பத்திலிருந்து அமைந்திருந்தன என்பதையும், 1971 ஆம் ஆண்டு பங்காளதேஷ் போருக்குப் பின்னர் இந்தியாவின் பாதுகாப்பு வியுூகங்கள் ஏன் எங்ஙனம் வங்காள விரிகுடா, அரபிக்கடல், இலங்கையைச் சுற்றிய கடற்பரப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுவந்துள்ளன என்பதையும் கண்டோம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய போரியல் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இலங்கை துணைபோகாமல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா கொண்ட அக்கறையின் விளைவாக 1974 - 76 ஆகிய ஆண்டுகளில் சிறிலங்கா அரசுடன் அது இருகடல் எல்லை ஒப்பந்தங்களை செய்து கொண்டது.

இக்காலகட்டத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க - ஏகாதிபத்தியம் தளம் அமைத்து தனது கடலாதிக்கத்தை விரிவாக்க எடுத்த முயற்சியை சோவியத்யுூனியன், இந்தியா ஆகியவற்றின் பக்கம் நின்று சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அப்போதைய அரசு எதிர்த்து வந்தது. இது இந்தியாவிற்குத் தனது தென்புலக் கடற் பாதுகாப்புப் பற்றிய திருப்தியை ஏற்படுத்திற்று.

சிறிலங்கா அரசின் அனுமதியின்றி தன் கடற்பரப்பில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் பயணிக்க முடியாது என 1977ஆம் ஆண்டு ஜனவரி மாத இலங்கை கடற் சட்டப் பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தமையும் இதற்கு வலுவுூட்டியது.

ஆனால் இந்நிலை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் ஆட்சிக்கு வந்த போது மாறிற்று. 1981ஆம் ஆண்டு அணி சேரா நாடுகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் டி.யுூ.கோ கார்சியாதீவில் அமைத்திருந்த அணு ஆயுதக் கடற்படைத்தளம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற தீர்மானத்தை இந்தியா கொண்டுவர முனைந்தது. இத்தீர்மானத்தை மாற்றியமைத்திட சிறிலங்கா அரசு அங்கு கடும் முயற்சி எடுத்து அதில் டியுூகோ கார்சியா பற்றி குறிப்பிடப்பட்டதை நீக்குவதில் வெற்றியும் கண்டது. அமெரிக்காவிற்குச் சார்பாகவே சிறிலங்கா அரசு இதைச் செய்தது என்ற விடயம் இந்தியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்திற்று. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்மேலாதிக்கம் நிறுவப்படுவதையும், விரிவடைவதையும் ஜே.ஆர். அரசு விரும்புவதையே அதன் மேற்படி நடவடிக்கை காட்டுகிறது என இந்திய வெளிவிவகார மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உஷாரடைந்தனர்.

அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதே ஆண்டு சிறிலங்கா அரசு திருமலை எண்ணெய் குதங்களை கோஸ்டல் கோப்ரேஷன் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முடிவெடுத்தது. இந்நிறுவனத்தின் பின்னணி மிகச் சந்தேகத்திற்கிடமாகவுள்ளதாக இந்தியா சிறிலங்கா அரசிடம் கூறி இதை தடுத்துவிட்டது. இதன் பின்னர் டெல்லிக்கும் சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலிக்குமிடையில் நடந்த பேச்சுகளின் விளைவாக திருமலை எண்ணெய்க் குதங்களை சர்வதேச ஒப்பந்தக் கேள்வி அடிப்படையில் கொடுப்பதாக உடன்பாடு காணப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க இலங்கை எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 1982 ஏப்ரல் மாதம் வெளியிட்ட சர்வதேசக் கேள்விப் பத்திரத்தில் 'எந்தவொரு இராணுவத்திற்கும் உரிய எரிபொருள் திருமலைக் குதங்களில் வைக்கப்படமாட்டாது" என்ற அறிவித்தலையும் வெளியிட்டது. இதனடிப்படையில் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் திருமலைக் குதங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான கேள்விப்பத்திரம் சமர்ப்பித்தது. வழங்கப்பட்ட அனைத்திலும் இதுவே இலாபகரமானதாக இருந்தபோதும் சிறிலங்கா அரசு அதைக்கிடப்பில் போட்டுவிட்டு சிங்கப்பூரில் அமெரிக்கப் பின்னணியுடன் இயங்குவதாககச் சந்தேகிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு திருமலைக்குதங்களை வழங்க ஏற்பாடு செய்யலாயிற்று. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அணுவாயுதத்தளத்தை ஆதரிக்கவும்,திருமலையில் அமெரிக்கா மறைமுகமாகக் காலு}ன்ற உதவவும் சிறீலங்கா முயற்சி எடுத்த வேளையில்தான் இந்தியப் புலனாய்வுத்துறை இலங்கைத் தமிழ் இளைஞர் சிலருக்குப் பயிற்சி அளிக்க முனைந்தது. (1981-82 காலப்பகுதியில் அந்த இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டபயிற்சி இராணுவப் பயிற்சிஅல்ல). திருமலைத்துறை முகப்பகுதியை எங்ஙனம் வேவு பார்ப்பது. பல்வேறு வகைக்கப்பல்களை எப்படி அடையாளங் காண்பது என்பதாகவே அப்பயிற்சி அமைந்திருந்தது.

மேற்படி இளைஞர்களுக்கும் விடுதலை அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கவில்லை.

இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது. போல் 1983 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அமெரிக்காவின் குரல் (ஏழiஉந ழக யுஅநசiஉய) வானொலி நிலையத்தை புத்தளம் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவி நடத்திட 20 ஆண்டுகளுக்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதன்படி ஒப்பந்தம் முடிந்து அதையடுத்துவரும் ஒவ்வொரு 10 ஆண்டும் அது புதுப்பிக்கப்படலாம் எனவும் உடன்பாடானது.

இந்து சமுத்திரத்தினுள் திரியும் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பற்படையுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான அதிநுண்ணலைப் பிறப்பாக்கியையும் மேற்படி வானொலி நிலையம் கொண்டிருக்கிறது என இந்தியாவும் சோவியத் யுூனியனும் குற்றஞ்சாட்டின. இந்த அதி நுண்ணலைத் தொலைத்தொடர்பு நிலையத்தை நிறுவுவதற்கான இடப்பரப்பு டியுூகோ கார்சியாத் தீவில் இல்லையெனவும் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள இரணவிலப்பகுதியே அதற்கு வசதி அமைந்திருக்கிறது எனவும் இந்திய போரியல் ஆய்வாளர் ஜஸ்ஜீத்சிங் அப்போது கருத்து வெளியிட்டார். இதுமட்டுமன்றி தன்மீதும் தனது நேசநாடுகள் மீது உளவியற்போரைத் தொடுக்கவே இந்த வானொலி நிலையத்தை மிகசக்தி வாய்ந்த தொன்றாக அமெரிக்கா நிறுவியுள்ளது என சோவியத் யுூனியன் குற்றஞ்சாட்டிற்று. இந்த வேளையில்தான் சிறீலங்காவை நிரந்தரமாகத்தன் பிடிக்குள் கொண்டு வரவும் அதன் வெளிச்சுயநிர்ணய உரிமையைத் தனக்கேற்றவாறு கத்தரித்து விடவும் இந்தியா தீர்மானித்தது. இக்குறிக்கோளை அடைந்திடுவதற்குரிய கருவியாக தமிழீழ விடுதலைப் போரை பயன்படுத்துவதற்கு அது ஆவன செய்யலாயிற்று.


நன்றி: வீரகேசரி வார வெளியீடு (11.01.04) & தமிழ்நாதம்
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)