Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் இலக்கியம் 2004 இல் இருந்து....
#1
<img src='http://thoughtsintamil.blogspot.com/images/tlit2004/sumathi.jpg' border='0' alt='user posted image'>
.........

பேராசிரியை த. சுமதி என்றொரு புதுமுகம் அரங்கில் முதல்மேடை கண்டார். அழகாக, சுதா ரகுநாதனுக்குப் போட்டியாகப் பளபளவென்று பட்டுப்புடைவை உடுத்தி, நெற்றிப்பொட்டைச் சுற்றி ஜிகினாக்கோலங்கள் வரைந்து, மெருகாக மருதாணி இட்டு, காதில் தங்க ஜிமிக்கி ஆட, கைகள் இரண்டிலும் சுமார் 20 வளையல்கள் குலுங்க - மைக் முன்னால் அவர் நின்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இலக்கியம் தான் பேசியிருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக யாரும் அவரது பேச்சை கவனிக்கவில்லை.

இலக்கியக்கூட்டங்களுக்கு இத்தகைய மேக் அப் எவ்வகையிலாவது நலன் பயக்குமா என்று பேராசிரியர் மார்க்ஸ் கருத்து சொல்லியிருக்கலாம். அவரும் தவறவிட்டுவிட்டதால் அடுத்தடுத்த கூட்டங்களில் அம்மணியின் ·பேஷன் பரேடு இனி அடிக்கடி காணக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (அவர் எந்தக் கல்லூரிப் பேராசிரியர் என்று விசாரிக்க நினைத்து மறந்துபோனேன். நாளை கேட்டுச் சொல்கிறேன்.)
..........


..........

தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் பங்குபெற்றுப் பேசிய பேராசிரியை சுமதி என்பவரின் புடைவை, நகை, அலங்காரங்கள் குறித்து நான் எழுதிய வரிகள் பற்றி ரவி ஸ்ரீனிவாஸ¤ம் உஷாவும் தம் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எழுத்தில் அங்கதம் என்றொரு சங்கதி உண்டு. நேரடியாக விமரிசிக்க விரும்பாத விஷயங்களை இன்னொரு தளத்திலிருந்து மெல்லிய கிண்டலுடன் அணுகுவது. மேற்படி பேராசிரியை விஷயத்தில் நான் கையாண்டது இந்த உத்தியைத்தான்.

அவர் பேச்சிலிருந்து எடுத்துச் சொல்ல எதுவுமில்லையா என்கிற ரவி ஸ்ரீனிவாசின் கேள்வியிலேயே விடை இருக்கிறது. பேச்சைக் குறித்து எழுத ஒன்றுமில்லை என்பதைத் தெரிவிக்கவே புடைவை குறித்தும் அலங்காரங்கள் குறித்தும் எழுதினேன்.

மற்றபடி பெண்களின் அலங்காரத்துக்கோ அழகுக்கோ மற்ற எதற்குமோ நான் எதிரி அல்ல. அதெப்படி அலங்காரத்துக்கும் அழகுக்கும்போய் எதிரியாக இருக்கமுடியும்?

அடடா, இன்னும் கண்ணிலேயே நிற்கிறது அந்தப் பட்டுப்புடைவை. நிச்சயம் பத்தாயிரம் ரூபாய்க்குமேல் பெருமானமுள்ளதாகத்தான் அது இருக்கவேண்டும்

.......

எழுத்து பாரா (நன்றீ)
<b>
?

?</b>-
Reply


Messages In This Thread
தமிழ் இலக்கியம் 2004 இல் - by Aalavanthan - 01-12-2004, 10:16 PM
[No subject] - by Mathivathanan - 01-13-2004, 01:44 AM
[No subject] - by yarl - 01-13-2004, 06:52 AM
[No subject] - by shanthy - 01-13-2004, 07:47 AM
[No subject] - by Paranee - 01-13-2004, 09:20 AM
[No subject] - by Paranee - 01-13-2004, 09:22 AM
[No subject] - by Paranee - 01-13-2004, 09:24 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:37 PM
[No subject] - by kuruvikal - 01-29-2004, 01:22 PM
[No subject] - by Paranee - 01-29-2004, 01:28 PM
[No subject] - by vasisutha - 01-29-2004, 09:06 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:32 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)