01-17-2006, 08:02 PM
<span style='color:red'><b>மானிப்பாய் படுகொலை-தமிழின அழிப்பு முன்னெடுப்புகளுக்கு எடுத்துக்காட்டு: மானிப்பாய் பொதுஜன ஒன்றியம் </b>
<b>சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்பு முன்னெடுப்புகளுக்கு மானிப்பாய் படுகொலை எடுத்துக்காட்டு என்று மானிப்பாய் பொதுஜன ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.</b>
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
சிறிலங்கா படையினராலும் ஈ.பி.டி.பி துணை இராணுவ ஒட்டுக்குழுவினராலும் 15.01.2006 அன்று நடுநிசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் உட்பட மூவர் தமது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவர்களது வீட்டில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டதுடன், அவரது கணவரும் பிள்ளையும் படுகாயமடைந்து யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமதி.அன்னாநாகேஸ்வரி போஜனும், அவரது இரு பெண் பிள்ளைகளாகிய திருமதி.ரேணுகாவும், செல்வி.சண்முகாவும் கொல்லப்பட்டுள்ளனர். அவரது கணவராகிய திரு.நகேந்திரம் போஜனும், மகனாகிய போஜனும் உல்லாசனும், படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏதோ சமாதானத்தின் பால் கரிசனை கொண்டவர்கள் போல் அரிதாரமிட்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஐபக்சவின் தலைமையிலான சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்பு முன்னெடுப்புகளுக்கு இக்கொடூர சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாகும்.
இச் சந்தர்ப்பத்தில் அநியாயமாக சிங்களப் படையினரால் தமிழ் மக்கள் பலியாக்கப்படுவதிலிருந்து தம்மைத் தாமே தற்காத்துக் கொள்வதற்கு பாதுகாப்பான வன்னிப் பிரதேசத்திற்கு செல்வதே எமது பாதுகாப்புக்கான சிறந்த வழியாகும்.
சட்டத்தினதும், ஒழுங்கினதும் பேரால் தமிழ் மக்களது பாதுகாப்பிற்கே தாமே பொறுப்பு எனக் கூறிக்கொள்ளும் சிறிலங்கா படையினரின் அடாவடித்தனங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினதும், படையினரதும், உயர் பீடத்தினால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் தமிழ் மக்கள் மீதான போர்த் திணிப்பதற்கான முதற்படிகளாகும் இந்தப் படுகொலைகள்.
போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதில் இராணுவ நோக்கங்களுக்காகவே பின்னடிக்கும் சிறிலங்கா அரசாங்கம் சமாதான வழியிலான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தயாராக இல்லையென்பதை கடந்த சில மாதங்களாக படையினர் மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான கொலைவெறி அட்டூழியங்கள் தெளிவாக்குகின்றன.
சர்வதேச சமூகம் வெறுமனே பார்வையாளராக இருந்து, சிறிலங்கா படைகளது அட்டூழியங்களையும், சிங்கள பௌத்த பேரினவாதத்தை நிலைநாட்ட முயலும் சிறிலங்கா அரசாங்கத்தினதும் வஞ்சகப் போக்குகளையும் கண்டும் மௌனித்திருப்பதானது அவர்களது இன அழிப்பு கொடூரங்களுக்கு துணைபோவதாகவே அமைந்துவிடுகின்றது.
வெறுமனே கண்டனங்களும், அறிக்கைகளும் எவ்வகையிலும் பயனான விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை. மெய்யான சமாதானத்தின் மேலுள்ள மக்களது பற்றுதலானது அன்றாடம் சிதைக்கப்பட்டே வருகின்றது. தமிழின அழிப்புக்கான முன்தயாரிப்புக்களில் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே இறங்கியுள்ளது.
இக் கட்டத்தில் தமிழ் மக்கள் தம்மைத்தாமே தற்காத்துக் கொள்வதற்கும் கௌரவத்தையும், சுதந்திரத்தையும் பேணுவதற்கும் மனித உரிமைகளின் அப்பாற்பட்டதும் அடக்குமுறைக்கு எதிரானதுமான போராட்டங்களை முன்னெடுப்பது வரலாற்றுத் தேவையாகிவிட்டது.
கௌரவத்துடனான சுதந்திர வாழ்வியல் உரிமைகளை தமிழ் மக்களாகிய நாம் போராடித்தான் பேறவேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.
மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலைகளுக்கு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும், சுதந்திரத்தையும் மீட்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு பின்நிற்கப்போவதில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் ஓர் எச்சரிக்கையாக வலியுறுத்துகின்றோம்.</span>
<b><i>தகவல் மூலம் - புதினம்</i></b>

"
"
"