Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை
#7
<span style='color:darkred'><b>பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முற்று முழுதாகவே இருதரப்பையும் பொறுத்தது: </b>

இலங்கைக்கு எரிக் சொல்ஹெய்ம் வருகை தருவது முக்கியமானதாக இருந்தாலும் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது முற்று முழுதாகவே இருதரப்பையும் பொறுத்தது என்று நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

எரிக் சொல்கெய்மின் பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இன்றைய எமது பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளவுள்ள பயணம் முக்கியமானதாகும். நோர்வே அமைச்சராக பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்கிற முதலாவது பயணம் இது.

அவர் இலங்கையின் அமைதி முயற்சிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். எதிர்காலத்திலும் பணியாற்றுவார்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரச படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இச்சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். தொடர்ந்தும் இப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்க அனுமதிக்கக்கூடாது.

சிறிலங்கா அரசம் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கவே நாம் கோருகிறோம். ஒப்பந்தத்தின் படி நடந்துகொண்டு அதனை செம்மையாக கடைப்பிடிக்கும்படி நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கடந்த 13 ஆம் திகதி மட்டக்களப்பு கண்ணகாணிப்பு குழு அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பாரதூரமானது. அப்படியான சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது.

அமைதி முயற்சிகளை முன்னெடுத்து செல்வதற்காக சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உதவி செய்வதற்காகவே நாம் இங்கு அனுசரணையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளோம்.

ஆகவே ஏதாவது நடைபெற வேண்டுமானால் அது இரண்டு தரப்பையும் பொறுத்ததே தவிர எங்களை சார்ந்ததல்ல.

அமைதி முயற்சிகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று அவர்கள்தான் கூறவேண்டும். அதற்கு எவ்வாறு உதவி செய்வது என்று நாம் ஆராயலாம்.

<i>சொல்ஹெய்மின் பயணத்தைப் பொறுத்தவரை அவரது வருகையில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தேவையில்லை. அவர் இங்கு வருவது இரண்டு தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேச்சு நடத்துவதற்காகத்தான்.</i>

அரசு தரப்பு கருத்தையோ அல்லது புலிகள் தரப்பு கருத்தையோ நான் கூறமுடியாது. தற்போதைய பிரச்சினையை புரிந்துகொண்டு அதனை எவ்வாறு தீர்ப்பது என்று சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் முன்மொழிவுகளை தந்தால் அவை தொடர்பில் எவ்வாறு உதவி செய்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது என்று சிந்திக்கலாமே தவிர, எவர் தரப்பின் பிரதிநிதியாகவும் நின்று நாங்கள் ஊகங்களை வெளியிடமுடியாது.

<i>சொல்ஹெய்மின் வருகை முக்கியமானது. ஆனால் பிரச்சினைகளுக்கான தீர்வு வழியை காண்பது முற்று முழுதாகவே இருதரப்பையும் பொறுத்தது.</i>

யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளுங்கள். அடுத்த வாரத்துடன் எதுவும் முடிந்துவிடப் போவதில்லை. ஆனால் இது இரு தரப்புக்கும் உரிய விடயங்களை எடுத்துக்கூறி அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச்செல்ல உதவ எமக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம் இது.

விடுதலைப் புலிகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதைப் போலவே அரச தரப்பினருடனும் நான் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்வதுண்டு.

அந்த வகையில் அரச தரப்பினரையும் சந்தித்து பேசியுள்ளேன்.

நாம் மிகுந்த இக்கட்டான நிலைமையில் உள்ளோம். யுத்த நிறுத்த ஒப்பந்தம் பாரதூரமான நெருக்கடியில் உள்ளது. ஆனால் நாம் நம்பிக்கையை கைவிட்டுவிடக்கூடாது.

அமைதி முயற்சிகளை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது? அதற்கு என்ன உதவி வேண்டும் என்று எம்மைக் கேட்டால் நாம் அதற்கு உதவ முடியுமா என்று நாம் யோசிக்கலாம்.

இதை நாம் அடுத்த வாரத்துக்கு பிறகு கூறலாம் என்றும் இல்லை. ஆனாலும் அடுத்த வார நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

இன்றைய சந்திப்பு குறித்து கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியதாவது:

வடக்கு - கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இந்த வன்முறைகளைத் தடுப்பது குறித்து விவாதித்தோம்.

விடுதலைப் புலிகளும் அரச தரப்பினரும் அவர்களது பகுதியில் மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள். மக்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை இருதரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஹக்ரூப் ஹொக்லெண்ட்.</span>


<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:00 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:07 PM
[No subject] - by Vasampu - 01-17-2006, 01:23 PM
[No subject] - by sanjee05 - 01-17-2006, 02:12 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 06:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)