01-16-2006, 11:49 PM
அனைவருக்கும் வணக்கம்.
நம்மவர்களிடையே ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்துவது இலகுவான ஒன்றல்ல பலசிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும், அவற்றை திறம்பட எதிர்கொண்டு இந்த பட்டிமன்றத்தை திறம்பட நடாத்தி கொண்டிருக்கும் ரசிகைக்கு எனது நன்றிகள். அதுதவிர தாயாரை இழந்த துயரத்தின் மத்தியிலும் பட்டிமன்ற நடுவராக இருந்து சிறப்பிக்கும் செல்வமுத்து அவர்களுக்கும், பட்டிமன்றத்தை வழிநடத்துவது இது முதல் தடவையாக இருந்தாலும் அதனை திறம்பட செய்துவரும் தமிழினிக்கும், இதனை நடாத்த தளம் அமைத்து தந்த யாழ் களத்துக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி.
பட்டிமன்றத்தில் எனது முறை வந்ததும் ரசிகையும் இளைஞனும் பலமுறை நினைவூட்டிய போதிலும் எனது வாதத்தை இன்றுதான் இணைக்க முடிந்தது. இதற்கு காரணம் ஏதும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட காலதாமத்திற்கு வருந்துகின்றேன்.
இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்பது தான். இதில் நன்மையடைகின்றார்கள் என்பது தான் உண்மை என்று எதிரணி நண்பர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் வாதாட வந்துவிட்டோமே என்பதற்காக ஒரு சில விதிவிலக்குக்களை பூதாகரமாக பெருப்பித்து காட்டி சீரழிந்துதான் போகிறார்கள் என்று நிறுவ முயல்கின்றார்கள். இதுவரை வாதாடிய எதிரணி நண்பர்களின் வாதங்கள் அனைத்தையும் படித்தேன். அவற்றில் இந்த விதிவிலக்குகளை தவிர சீரழிந்து போகிறார்கள் என்பதற்குரிய ஒரு சரியான காரணத்தை கூட அவர்களால் சொல்ல முடியவில்லை. இவற்றை நிரூபிக்க கடைசியாக வாதாடிய அருவியின் வாதத்தை பார்க்கலாம்.
இதில் அருவி சொல்லியிருப்பது என்ன
1) அஜீவன் அண்ணாவின் வாததிறனை பார்த்து வியந்து போய்விட்டாராம் - ஆக அவரின் வாதமும் அதில் இருந்த எமது அணிக்கு சார்ப்பான கருத்துக்களும் தன்னை வாயடைக்க வைத்துவிட்டதாக மறைமுகமாக ஒத்து கொள்கின்றார்.
2) இதை சொன்ன அடுத்த கணமே அவரை குழப்பவாதி, தலைப்பை தொட்டு செல்லவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக பேசி தானே குழப்பவாதியாக காட்சியளிக்கிறார் அன்புக்குரிய அருவி. இதில் அருவி அஜீவன் அண்ணா தலைப்பை தொட்டு செல்லவில்லை என்பதை எங்காவது நிரூபித்திருக்கிறாரா? அப்படி செய்யாமல் குழப்பவாதி, தலைப்பை தொட்டுசெல்லவில்லை என்று கூக்குரலிட்டு என்ன பயன்? இது எப்படியிருக்கின்றது நிதிமன்றத்தில் ஒரு தரப்பை எதிர்தரப்பை சேர்ந்த சட்டதரணி ஆதாரம் ஏதையுமே சமர்ப்பிக்காமல் அவன் குற்றவாளி, குழப்பவாதி என்று புலம்புவதை போலிருக்கின்றது. இது பட்டிமன்றம் இங்கு வாதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இனிமேல் எதிரணி தரப்பில் பேச வருபவர்களாவது வாதத்தை ஆதாரங்களோடு முன்வைக்குமாறு அன்புடன் கேட்கின்றேன்.
நண்பன் துணி இன்னும் விலகாதா என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இளையோர் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்கள், அவர்களிற்கு இணையம் என்ற பெயரில் ஒரு கட்டில்லா சுதந்திரத்தை வழங்கி அவர்களைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கிறது என்று. படத்தில துணி விலகாதா என்று என்று பாத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையில் இணையத்தில் பாக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல், படம் பாக்க போவதென்றால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு அது ஒன்றும் இல்லையே.கணினியை இயக்கி அதிலிருந்து மிகவும் இலகுவாக ஒருவரினதும் பயமின்றி செல்லவேண்டிய இடமெல்லாம் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
கதைகள் என்பது எழுத்தாளன் தன்னுடைய கருத்துக்களை இலகுவான முறையில் வாசகர்களுக்கு உணர்த்த உபயோகிக்கப்படும் ஒரு ஊடகம். அந்த வகையிலேயே அஜீவன் அண்ணாவும் ஒரு குட்டிகதையை சொல்லி எப்படி சபை முழுவதும் நல்லதை நுகர ஒரு விதிவிலக்கு தீமையை மட்டும் நுகர்வதை சுட்டிக்காட்டி அதேபோல் இணையத்தில் பெரும்பாலான இளையோர் நன்மையடைகிறார்கள் ஒரு சில விதிவிலக்குகள் தவிர என்பதை அருமையாக உணர்த்தியிருந்தார். அப்படி உணர்த்திய பின்பும் நண்பர் அருவி துணிவிலகியதை மட்டுமே எடுத்து விவாதிக்கின்றார் என்றால் அவரை என்ன சொல்ல? அவர் அஜீவன் அண்ணா சொல்லிய கதையில் இருந்த நீதியை புரிந்து கொள்ளாமல் எப்படி அவரை துணி விலகியதை பற்றி கொண்டாரோ அதே போல் அவரது அணியினரும் நன்மையடைகிறார்கள் என்ற உண்மையை ஒத்து கொள்ளாமல் வேறு எதையோ பார்த்துகொண்டு சீரழிகிறார்கள் என்று புலம்புகிறார்கள். ஆக தப்பு இணையத்தில் இல்லை பார்வையில் தான்.
அடுத்தது புலம்பெயர்ந்த இளையர்கள் இணையத்தில் துணிவிலகிய நிலையில் யாருக்கும் தெரியாமல் பார்க்கிறார்களாம் மற்றய இடத்தில் எலலாம் கஷ்டமாம் யாராவது பார்த்துவிடுவார்களாம். இதுதான் இந்த ஆண்டின் மிகபெரிய நகைச்சுவை. பிரித்தானியாவில் சன் பத்திரிகையை எடுத்து பார்த்தால் அதில் மூன்றாம் பக்கத்தில் தினமும் துணிவிலகிய படம் தான் வருகின்றது. இவ்வளவிற்கும் அது வயது வந்தோருக்கான பத்திரிகை அல்ல? அப்போ அதில் பார்க்க மாட்டார்களா? அருவி வசிக்கும் கனடா நாடு சென்றிருந்த போது அங்கு இரவில் தொலைக்காட்சிகளில் எந்தவித கட்டுப்பாடுமின்றி துணிவிலகிய படங்கள் காண்பிக்கப்படுவதை அவதானித்தேன். புலத்தில் ஒவ்வொரு படுக்கையறையிலும் தொலைக்காட்சி உள்ள நிலையில் அதில் பார்க்கமாட்டார்களா? இதுதவிர இது போன்ற சிடிக்கள் கட்டுப்பாடு ஏதுமின்றி நடைபாதைகளில் வைத்து விற்கப்படுகின்றன. இவற்றை வாங்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. இதுபோல இணையத்தில் தான் யாருக்கும் தெரியாமல் துணிவிலகிய படங்களை பார்க்கின்றார்கள் என்ற அருவியின் வாதத்தை தவறு என்பதை நிரூபிக்க பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
தொலைபேசி, கடிதம் என்பவை எப்படி தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற உதவியதோ அதை போல இணையமும் ஒரு ஊடகமாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாற புரிந்துகொள்ள உதவுகின்றது. அதன் அடிப்படையிலேயே நமக்கு அறிந்தவர்களுடன் இணையம் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து புரிந்துகொண்டு பிடித்திருந்தால் வாழ்க்கை துணையாக மாற்றி கொள்ளலாம் என்கின்றோம். இணையம் இந்த யுகத்தின் அற்புதமான ஒரு தகவல் தொடர்பு ஊடகம் அதை சரியான வழியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உபயோகித்து நன்மையடைகிறார்கள். எதிர்காலத்தில் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தால் அதையும் நல்ல முறையில் உபயோகித்து நன்மையடைவார்கள் நமது இளையோர்.
ஒரு திருமணம் -முறிவடைவதற்கான காரணம் பெற்றோர் பார்த்து வைத்ததா, காதலித்து செய்ததா என்பதல்ல, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையே அதற்கு காரணம். எந்தவிதமான விதமான திருமணத்திற்கு முன்பும் ஒருவரை ஒருவர் தயக்கமின்றி புரிந்து கொள்ள கருத்துக்களை பரிமாறிகொள்ள விருப்பு வெறுப்புக்களை அறிய இணைய ஊடகத்தை பயன்படுத்தி நமது புலம்பெயர் இளையோர் நன்மையடைகின்றார்கள்.
இணைய திருமண சேவை பக்கங்கள், பல்கலைகழகங்களின் கருத்துகளங்கள், மெசஞ்சரில் நண்பர்கள் உறவினர்களால் அறிமுகம் உள்ளிட்ட பல வகைகளில் புதியவர்களை இயற்பெயருடன் அறிந்து பேசி புரிந்து வேறு விபரங்கள் ஏதும் தேவைப்பட்டால் இணைய மூலமே வேறு நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து பேசி வாழ்க்கை துணையை முடிவு செய்து பல இளையோர் நன்மையடைந்து இருக்கின்றார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு இயற்பெயருடன் வராத இடங்கள் தான் அருவியின் கண்களுக்கு பட்டிருக்கின்றது அங்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கலாமா என்று சிரிக்கிறாராம். இப்போதாவது எப்படி இளையோர் இணையம் மூலம் வாழ்க்கை துணையை தேர்தெடுக்கின்றார்கள் மற்றும் வேறு வழிகளில் அறிமுகமானோரை திருமணம் செய்ய முன்பு இணையம் மூலம் புரிந்து கொண்டு நன்மையடைகின்றார்கள் என்று எதிரணி நண்பர்களுக்கு புரிந்ததா அல்லது இன்னும் புரியாதது போல் நடிக்க போகிறீர்களா?
இங்கு அன்னம் ஏன் இறந்தது என்பதற்கு பாலை மட்டும் குடித்ததால் என்று புது விளக்கம் சொல்கின்றார் அருவி. அதை அப்படியே ஏற்று கொண்டாலும் அதில் ஒரு முரண்பாடு. அன்னம் பாலை மட்டும் குடித்ததால் அழிந்து போனது என்றால் அது பாலையையும் தண்ணீரையும் சேர்த்து அருந்த வேண்டும் என்று சொல்ல வருகிறாரா? இளையோர் நன்மை தீமை இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டுமா? என்ன அர்த்தமில்லாமல் புலம்புகிறாரே?
அடுத்து இணையத்தில் நல்லவற்றை பணம் கொடுக்காமல் இலவசமாக பெற்று கொள்ள முடியுமா ஆனால் கெட்டவை இலவசமாக கிடைக்கின்றனவே என்கிறார். அவருடைய வாதங்களில் எதுவுமே உண்மையில்லை போலிருக்கின்றது. அவருக்கு எந்த நன்மைகள் இலவசமாக கிடைக்கின்றன என்று அவர் உபயோகித்தவற்றில் சிலவற்றையே பட்டியல் போட்டு நினைவூட்டுகின்றேன்.
செய்திகள் - http://www.eelampage.com/
காலநிலை - http://www.bbc.co.uk/weather/
தகவல் தொடர்பு - MSN Messenger, Skype
நாணய மாற்று - http://www.xe.com/ucc/
இவைமட்டுமன்றி இலவச இணைய வங்கி சேவை உள்ளிட்ட பல விடயங்களை இலவசமாக பயன்படுத்துகின்றார். இவை அவருக்கு நன்மைகள் இல்லையா அல்லது அவர் இளையோர் இல்லையா? இது தவிர இலவசமாய் தர முடியாத உரிமமுடைய விட்யங்களை இளையோர் பணம் செலுத்தியும் பெற்று நன்மையடைகிறார்கள்.
நண்பருக்கு திரும்பவும் குழப்பம் வந்திருக்கிறது பாருங்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்பு இலவசமாக கிடைக்காதா என்று கேட்டவர் இப்போது பாடல்கள் இலவசமாக கிடைக்கின்றதே என்று புலம்புகின்றார். தமிழ் இசைதட்டுக்களின் உரிமம் ஆங்கில இசையை போல் இன்னும் இணையத்தில் ஒழுங்கு படுத்தபடவில்லை. அத்னால் தற்போதைக்கு தமிழ் பாடல்களை இலவசமாக பெற்று கொள்ளும் அதே சமயம் ஆங்கில பாடல்களை பணம் செலுத்தி பெற்று கொண்டு இளையோர் நன்மையடைகிறார்கள். முன்பு ஆங்கில பாடல்களில் உரிமம் இணையவழி ஒழுங்குபடுத்துவதற்கு முன்பு அதுவும் இலவசமாக கிடைத்து வந்தது அவை ஒழுங்கு படுத்தப்பட்டு பணம் செலுத்தி உரிய வழியில் உரிமம் பெற வழி செய்யப்பட்ட பின்பு அவற்றை இளையோர் பெருமளவில் உபயோகிக்கின்றார்கள் தானே? அப்பிள் நிறுவனம் எவ்வளோ பாடல்களை இணையவழி விற்றிருக்கின்றது என்று நீங்கள் அறியாததா? இவற்றை விளக்கமாக விபரிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றூ நினைக்கின்றேன். ஆக எந்த பாடல்களாக இருந்தாலும் அவற்றை ஒழுங்குமுறைகள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட பெற்று கொண்டு நன்மையடைகிறார்கள் நமது இளையோர்.
அடுத்து மென்பொருள் திருட்டு பற்றி சொல்லியிருக்கின்றார். உரிய வகையில் வாங்கப்படும் மென்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக பிரதி செய்யப்பட்டு நடைபாதையில் வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன நண்பர்களிடையே மென் தகடுகளாக பரிமாறப்படுகின்றன். இணையம் இன்றியே நடக்கும் ஒரு விட்யம் இது. ஆனால் இது இணையம் வழியால் தான் நடப்பதாகவும் அதனால் இளையோர் சீரழிவதாக புது கதை சொல்கின்றார் அருவி.
இதற்கு பதிலை நீட்டி முழக்கி எழுத போவதில்லை சுருக்கமாகவே சொல்கின்றேன். தாயக செய்திகளை அறிய புலம் பெயர் இளையோர் உபயோகிக்கும் முக்கிய தளங்கள் தமிழ் நெட் மற்றும் புதினம். இவற்றை பெரும் தொகையானோர் பார்வையிடுகின்றார்கள். பிபிசி செய்தி தளத்தில் கூட முக்கிய இலங்கை செய்திகளின் போது தமிழ் நெட்டுக்கு இணைப்பு வழங்கப்படுகின்றது . இதே போல நம்பகதன்மை அற்ற அல்லது மாற்று கருத்துடைய சில இணையங்கள் உண்டு தான் இவை எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்த சிலராது அடிக்கடி படிக்கிறார்களா? அல்லது பிபிசி போன்றவற்றில் இணைப்பு தான் வழ்ங்கப்படுகின்றதா? இவை சரியான தளங்களை சரியான முறையில் தகவல்களை அறிய புலம் பெயர்ந்த இளையோர் பயன்படுத்தி பெரும்பாலானோர் நன்மையடைகின்றார்கள் என்று உணர்த்த போதுமானவை என்று நினைக்கின்றேன்.
வலைப்பதிவுகள் அண்மைகாலங்களில் ஆரம்பமாகி இப்போது தான் பிரபல்யமாகி வருகின்றது. அவற்றை புலம்பெயர்ந்த இளையோர் தமது கருத்துக்களை எண்ணங்களை தங்குதடையின்றி வெளிப்படுத்த உபயோகிக்கின்றார்கள். தமிழில் தோன்றும் வலைப்பதிவுகளை எடுத்து கொண்டால் அவை தமிழ் நன்றாக தெரியாத புலம் பெயர்ந்த இளையோரினால் தமிழில் எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஆரம்பிக்கபடும் போது இலக்கண தவறுகள் ஏதும் நிகழலாம். அவை வேண்டுமென்றே செய்யப்படுவன அல்ல. இன்று இந்த வலைப்பதிவு மூலம் தமிழில் தனது புலமையை அதிகரித்து நன்மையடையும் இளையோர் நாளை அந்த இலக்கண தவறுகளையும் மற்றவர்களின் வழிகாட்டலுடன் சரி செய்வார்கள் என்பதை க்ருத்தில் கொள்ளுங்கள். இங்கு இளைன்யோரின் நோக்கம் தமிழில் எழுதுவதே அன்றி இலக்கண விதிகளை மீறுவது அல்ல.
இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

Quote:எனக்கு முன் வந்து வாதாடிச்சென்ற எதிரணி நண்பரின் வாதத்திறனை பார்த்து வியந்து போய்விட்டேன். இணையம் அவரை எப்படிக் குழப்பவாதியாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா, இங்கு விவாதத்தின் தலைப்பு இணைய ஊடகத்தால் இளையோர் நன்மை அடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா என்று இருக்க அவர் அதனைத் தொட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. காரணம் அதனால் சீரழிந்த இளையோரே அதிகம் உள்ளதாலாகும். நடுவர் அவர்களே பாருங்கள் அவர்களிற்கே தங்கள் மேல் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் தான் தலைப்பை மறந்து ஏதேதோ எல்லாம் கூறுகிறார்கள்.
இதில் அருவி சொல்லியிருப்பது என்ன
1) அஜீவன் அண்ணாவின் வாததிறனை பார்த்து வியந்து போய்விட்டாராம் - ஆக அவரின் வாதமும் அதில் இருந்த எமது அணிக்கு சார்ப்பான கருத்துக்களும் தன்னை வாயடைக்க வைத்துவிட்டதாக மறைமுகமாக ஒத்து கொள்கின்றார்.
2) இதை சொன்ன அடுத்த கணமே அவரை குழப்பவாதி, தலைப்பை தொட்டு செல்லவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக பேசி தானே குழப்பவாதியாக காட்சியளிக்கிறார் அன்புக்குரிய அருவி. இதில் அருவி அஜீவன் அண்ணா தலைப்பை தொட்டு செல்லவில்லை என்பதை எங்காவது நிரூபித்திருக்கிறாரா? அப்படி செய்யாமல் குழப்பவாதி, தலைப்பை தொட்டுசெல்லவில்லை என்று கூக்குரலிட்டு என்ன பயன்? இது எப்படியிருக்கின்றது நிதிமன்றத்தில் ஒரு தரப்பை எதிர்தரப்பை சேர்ந்த சட்டதரணி ஆதாரம் ஏதையுமே சமர்ப்பிக்காமல் அவன் குற்றவாளி, குழப்பவாதி என்று புலம்புவதை போலிருக்கின்றது. இது பட்டிமன்றம் இங்கு வாதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இனிமேல் எதிரணி தரப்பில் பேச வருபவர்களாவது வாதத்தை ஆதாரங்களோடு முன்வைக்குமாறு அன்புடன் கேட்கின்றேன்.
நண்பன் துணி இன்னும் விலகாதா என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இளையோர் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்கள், அவர்களிற்கு இணையம் என்ற பெயரில் ஒரு கட்டில்லா சுதந்திரத்தை வழங்கி அவர்களைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கிறது என்று. படத்தில துணி விலகாதா என்று என்று பாத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையில் இணையத்தில் பாக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல், படம் பாக்க போவதென்றால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு அது ஒன்றும் இல்லையே.கணினியை இயக்கி அதிலிருந்து மிகவும் இலகுவாக ஒருவரினதும் பயமின்றி செல்லவேண்டிய இடமெல்லாம் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
கதைகள் என்பது எழுத்தாளன் தன்னுடைய கருத்துக்களை இலகுவான முறையில் வாசகர்களுக்கு உணர்த்த உபயோகிக்கப்படும் ஒரு ஊடகம். அந்த வகையிலேயே அஜீவன் அண்ணாவும் ஒரு குட்டிகதையை சொல்லி எப்படி சபை முழுவதும் நல்லதை நுகர ஒரு விதிவிலக்கு தீமையை மட்டும் நுகர்வதை சுட்டிக்காட்டி அதேபோல் இணையத்தில் பெரும்பாலான இளையோர் நன்மையடைகிறார்கள் ஒரு சில விதிவிலக்குகள் தவிர என்பதை அருமையாக உணர்த்தியிருந்தார். அப்படி உணர்த்திய பின்பும் நண்பர் அருவி துணிவிலகியதை மட்டுமே எடுத்து விவாதிக்கின்றார் என்றால் அவரை என்ன சொல்ல? அவர் அஜீவன் அண்ணா சொல்லிய கதையில் இருந்த நீதியை புரிந்து கொள்ளாமல் எப்படி அவரை துணி விலகியதை பற்றி கொண்டாரோ அதே போல் அவரது அணியினரும் நன்மையடைகிறார்கள் என்ற உண்மையை ஒத்து கொள்ளாமல் வேறு எதையோ பார்த்துகொண்டு சீரழிகிறார்கள் என்று புலம்புகிறார்கள். ஆக தப்பு இணையத்தில் இல்லை பார்வையில் தான்.
அடுத்தது புலம்பெயர்ந்த இளையர்கள் இணையத்தில் துணிவிலகிய நிலையில் யாருக்கும் தெரியாமல் பார்க்கிறார்களாம் மற்றய இடத்தில் எலலாம் கஷ்டமாம் யாராவது பார்த்துவிடுவார்களாம். இதுதான் இந்த ஆண்டின் மிகபெரிய நகைச்சுவை. பிரித்தானியாவில் சன் பத்திரிகையை எடுத்து பார்த்தால் அதில் மூன்றாம் பக்கத்தில் தினமும் துணிவிலகிய படம் தான் வருகின்றது. இவ்வளவிற்கும் அது வயது வந்தோருக்கான பத்திரிகை அல்ல? அப்போ அதில் பார்க்க மாட்டார்களா? அருவி வசிக்கும் கனடா நாடு சென்றிருந்த போது அங்கு இரவில் தொலைக்காட்சிகளில் எந்தவித கட்டுப்பாடுமின்றி துணிவிலகிய படங்கள் காண்பிக்கப்படுவதை அவதானித்தேன். புலத்தில் ஒவ்வொரு படுக்கையறையிலும் தொலைக்காட்சி உள்ள நிலையில் அதில் பார்க்கமாட்டார்களா? இதுதவிர இது போன்ற சிடிக்கள் கட்டுப்பாடு ஏதுமின்றி நடைபாதைகளில் வைத்து விற்கப்படுகின்றன. இவற்றை வாங்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. இதுபோல இணையத்தில் தான் யாருக்கும் தெரியாமல் துணிவிலகிய படங்களை பார்க்கின்றார்கள் என்ற அருவியின் வாதத்தை தவறு என்பதை நிரூபிக்க பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
Quote:இணையத்தில் நல்ல வாழ்க்கைத்துணையைச் சந்திக்க முடியாதா என்று எதிரணியினர் கேள்வி கேட்கின்றனர். எப்படிச் சந்தித்து நல்லவர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். யாராவது இணையத்தில் தமது இயற்பெயர்களுடன் வருகிறார்களா. அம்மா அப்பா பார்த்து பேசி செய்து வைக்கும் திருமணங்களும் நேரில் கண்டு காதலித்து செய்து கொள்ளும் திருமணங்களுமே முறிந்து போய்நிற்கும் இன்றைய சூழலில், இணையத்தின் மூலம் துணையைத் தேடலாம் என்று சொல்கிறீர்கள், அதைக் கேட்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இதே யாழ்களத்தில் இணையக் காதலால் தன்னை ஏமாந்து தன் பொருளைப் பறிகொடுத்த ஒருவரைப்பற்றிய செய்தி வந்ததே மறந்து விட்டீர்களா நண்பர்களே. இணையத்தில்பல நல்ல விடயங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளலாம் அன்னம் போல பாலை மட்டும் குடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் அன்பான எதிரணியினர். பாலை மட்டும் பிரித்து பிரித்து குடித்ததால் தான் தமயந்திக்கும் நளனிற்கும் தூது போன அன்னம் இன்று மிருகக்காட்சிச்சாலைகளில் பார்க்கும் ஒரு உயிரினம் ஆகிவிட்டது. அதுவும் எல்லா இடத்திலும் இல்லை. அதனால் தான் சொல்கிறோம் அன்னம் அழிந்ததுபோல் இளையோரையும் அழியவிடாதீர்கள் . எதிரணியினரிடம் ஒரு கேள்வி, இணையத்தில் நீங்கள் நல்லவை என்று கருதுபவைகளை இலவசமாகப் பெறமுடியுமா. அநேகமானவை பணம்செலுத்திப் பெறவேண்டியவைகளாக இருக்கின்றன. ஆனால் இளையோரைக் கவரும் விதத்தில் எவ்வாறு சீரழிக்கும் இணையத்தளங்கள் இயங்குகின்றன என்பது உங்களிற்குத் தெரியும். அவற்றிற்கு பணம் கூட செலுத்தத்தேவையில்லை.
தொலைபேசி, கடிதம் என்பவை எப்படி தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற உதவியதோ அதை போல இணையமும் ஒரு ஊடகமாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாற புரிந்துகொள்ள உதவுகின்றது. அதன் அடிப்படையிலேயே நமக்கு அறிந்தவர்களுடன் இணையம் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து புரிந்துகொண்டு பிடித்திருந்தால் வாழ்க்கை துணையாக மாற்றி கொள்ளலாம் என்கின்றோம். இணையம் இந்த யுகத்தின் அற்புதமான ஒரு தகவல் தொடர்பு ஊடகம் அதை சரியான வழியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உபயோகித்து நன்மையடைகிறார்கள். எதிர்காலத்தில் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தால் அதையும் நல்ல முறையில் உபயோகித்து நன்மையடைவார்கள் நமது இளையோர்.
ஒரு திருமணம் -முறிவடைவதற்கான காரணம் பெற்றோர் பார்த்து வைத்ததா, காதலித்து செய்ததா என்பதல்ல, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையே அதற்கு காரணம். எந்தவிதமான விதமான திருமணத்திற்கு முன்பும் ஒருவரை ஒருவர் தயக்கமின்றி புரிந்து கொள்ள கருத்துக்களை பரிமாறிகொள்ள விருப்பு வெறுப்புக்களை அறிய இணைய ஊடகத்தை பயன்படுத்தி நமது புலம்பெயர் இளையோர் நன்மையடைகின்றார்கள்.
இணைய திருமண சேவை பக்கங்கள், பல்கலைகழகங்களின் கருத்துகளங்கள், மெசஞ்சரில் நண்பர்கள் உறவினர்களால் அறிமுகம் உள்ளிட்ட பல வகைகளில் புதியவர்களை இயற்பெயருடன் அறிந்து பேசி புரிந்து வேறு விபரங்கள் ஏதும் தேவைப்பட்டால் இணைய மூலமே வேறு நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து பேசி வாழ்க்கை துணையை முடிவு செய்து பல இளையோர் நன்மையடைந்து இருக்கின்றார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு இயற்பெயருடன் வராத இடங்கள் தான் அருவியின் கண்களுக்கு பட்டிருக்கின்றது அங்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கலாமா என்று சிரிக்கிறாராம். இப்போதாவது எப்படி இளையோர் இணையம் மூலம் வாழ்க்கை துணையை தேர்தெடுக்கின்றார்கள் மற்றும் வேறு வழிகளில் அறிமுகமானோரை திருமணம் செய்ய முன்பு இணையம் மூலம் புரிந்து கொண்டு நன்மையடைகின்றார்கள் என்று எதிரணி நண்பர்களுக்கு புரிந்ததா அல்லது இன்னும் புரியாதது போல் நடிக்க போகிறீர்களா?
இங்கு அன்னம் ஏன் இறந்தது என்பதற்கு பாலை மட்டும் குடித்ததால் என்று புது விளக்கம் சொல்கின்றார் அருவி. அதை அப்படியே ஏற்று கொண்டாலும் அதில் ஒரு முரண்பாடு. அன்னம் பாலை மட்டும் குடித்ததால் அழிந்து போனது என்றால் அது பாலையையும் தண்ணீரையும் சேர்த்து அருந்த வேண்டும் என்று சொல்ல வருகிறாரா? இளையோர் நன்மை தீமை இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டுமா? என்ன அர்த்தமில்லாமல் புலம்புகிறாரே?
அடுத்து இணையத்தில் நல்லவற்றை பணம் கொடுக்காமல் இலவசமாக பெற்று கொள்ள முடியுமா ஆனால் கெட்டவை இலவசமாக கிடைக்கின்றனவே என்கிறார். அவருடைய வாதங்களில் எதுவுமே உண்மையில்லை போலிருக்கின்றது. அவருக்கு எந்த நன்மைகள் இலவசமாக கிடைக்கின்றன என்று அவர் உபயோகித்தவற்றில் சிலவற்றையே பட்டியல் போட்டு நினைவூட்டுகின்றேன்.
செய்திகள் - http://www.eelampage.com/
காலநிலை - http://www.bbc.co.uk/weather/
தகவல் தொடர்பு - MSN Messenger, Skype
நாணய மாற்று - http://www.xe.com/ucc/
இவைமட்டுமன்றி இலவச இணைய வங்கி சேவை உள்ளிட்ட பல விடயங்களை இலவசமாக பயன்படுத்துகின்றார். இவை அவருக்கு நன்மைகள் இல்லையா அல்லது அவர் இளையோர் இல்லையா? இது தவிர இலவசமாய் தர முடியாத உரிமமுடைய விட்யங்களை இளையோர் பணம் செலுத்தியும் பெற்று நன்மையடைகிறார்கள்.
Quote:எதிரணிச் சிப்பாய்களுள் ஒருவர் கூறிச்சென்றார் பாடல்களை படங்களைச் செலவின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று, இதைத்தானே இணையம் இன்றைய இளையோரிற்கு சொல்லிக் கொடுக்கிறது. எப்படித் திருடலாம் என்று. பாடல்கள் படங்களில் கைவைப்பவர்கள்தானே அடுத்து கடனட்டை வங்கிப்பணம் திருடல்களில் இறங்குகிறார்கள். இதைத்தான் அடுத்தநாள் வேலை என்று கூறுகிறீர்களா? ஒருவர் தன் முழு உழைப்பையும் சிந்தி ஒரு படைப்பினை வெளியே கொண்டுவர அதனைத்திருடி நீங்கள் உற்சாகமடைவதுமட்டுமல்ல அடுத்தவனது வியாபார உரிமையையும் அல்லவா நீங்கள் திருடுகிறீர்கள். கனடாவிலே பல்கலைக்கழகத்திலே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் கிட்டத்தட்ட 80வீதமானவர்கள் கணினி மென்பொருட்களை பணம்கொடுத்து வாங்குவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் கணினித் துறையைச் சேர்ந்தவர்களும் கணிசமானவர்கள் இதனைத் தாம் செய்வதாகச் சொல்கிறார். என்று அவ்வாய்வு சொல்கிறது. இப்படித்தான் இன்றை புலம்பெயர்ந்து வாழும் இளையோரும் இருக்கிறார்கள்.
நண்பருக்கு திரும்பவும் குழப்பம் வந்திருக்கிறது பாருங்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்பு இலவசமாக கிடைக்காதா என்று கேட்டவர் இப்போது பாடல்கள் இலவசமாக கிடைக்கின்றதே என்று புலம்புகின்றார். தமிழ் இசைதட்டுக்களின் உரிமம் ஆங்கில இசையை போல் இன்னும் இணையத்தில் ஒழுங்கு படுத்தபடவில்லை. அத்னால் தற்போதைக்கு தமிழ் பாடல்களை இலவசமாக பெற்று கொள்ளும் அதே சமயம் ஆங்கில பாடல்களை பணம் செலுத்தி பெற்று கொண்டு இளையோர் நன்மையடைகிறார்கள். முன்பு ஆங்கில பாடல்களில் உரிமம் இணையவழி ஒழுங்குபடுத்துவதற்கு முன்பு அதுவும் இலவசமாக கிடைத்து வந்தது அவை ஒழுங்கு படுத்தப்பட்டு பணம் செலுத்தி உரிய வழியில் உரிமம் பெற வழி செய்யப்பட்ட பின்பு அவற்றை இளையோர் பெருமளவில் உபயோகிக்கின்றார்கள் தானே? அப்பிள் நிறுவனம் எவ்வளோ பாடல்களை இணையவழி விற்றிருக்கின்றது என்று நீங்கள் அறியாததா? இவற்றை விளக்கமாக விபரிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றூ நினைக்கின்றேன். ஆக எந்த பாடல்களாக இருந்தாலும் அவற்றை ஒழுங்குமுறைகள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட பெற்று கொண்டு நன்மையடைகிறார்கள் நமது இளையோர்.
அடுத்து மென்பொருள் திருட்டு பற்றி சொல்லியிருக்கின்றார். உரிய வகையில் வாங்கப்படும் மென்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக பிரதி செய்யப்பட்டு நடைபாதையில் வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன நண்பர்களிடையே மென் தகடுகளாக பரிமாறப்படுகின்றன். இணையம் இன்றியே நடக்கும் ஒரு விட்யம் இது. ஆனால் இது இணையம் வழியால் தான் நடப்பதாகவும் அதனால் இளையோர் சீரழிவதாக புது கதை சொல்கின்றார் அருவி.
Quote:அடுத்து இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் பற்றிப் பேசினார்கள். உண்மைதான் நீங்கள் கூறுவது போல் செய்திகளை உடனுக்குடன் அறியவும், கூட்டங்களை வைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் இணையத்தில் தரப்படும் செய்திகளில் எத்தனை வீதமானவை உண்மையானவை; உறுதிப்படுத்தப்பட்டவை. இஸ்லாமியத் தீவிரவாதிகள் தம்மிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்று உளவு அமைப்புக்கள் கூறுகின்றன. அவற்றினைக் கண்காணிப்பதற்காகவே பல நூற்றுக்கணக்கான பணத்தினைக் கொட்டுகிறார்கள். இதுதான் நன்மையா.இவ்வாறான தளங்கள் யாரை மையப்படுத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் அழிவது யார்? ஒரு தடவை இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்தம் சிந்தும் மண்டையோட்டின் படம் பெரிதாக வந்திருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திபோட்டார்கள். இப்படி ஒரு அரசாங்க இணையத்தளமே மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டு அந்நாட்டின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு சர்வதேச அளவில் இதற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்விணையத்தினால் இளையோர் நன்மையடைகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியலயே! சந்தேகம் தான் இணையப்பக்கங்களிலும் இணையத்தில் இணைபவர்களிலும் ஏற்படுமே தவிர அவை ஒருபோதும் இளையோர் நன்மையடையப் போவதில்லை.
இதற்கு பதிலை நீட்டி முழக்கி எழுத போவதில்லை சுருக்கமாகவே சொல்கின்றேன். தாயக செய்திகளை அறிய புலம் பெயர் இளையோர் உபயோகிக்கும் முக்கிய தளங்கள் தமிழ் நெட் மற்றும் புதினம். இவற்றை பெரும் தொகையானோர் பார்வையிடுகின்றார்கள். பிபிசி செய்தி தளத்தில் கூட முக்கிய இலங்கை செய்திகளின் போது தமிழ் நெட்டுக்கு இணைப்பு வழங்கப்படுகின்றது . இதே போல நம்பகதன்மை அற்ற அல்லது மாற்று கருத்துடைய சில இணையங்கள் உண்டு தான் இவை எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்த சிலராது அடிக்கடி படிக்கிறார்களா? அல்லது பிபிசி போன்றவற்றில் இணைப்பு தான் வழ்ங்கப்படுகின்றதா? இவை சரியான தளங்களை சரியான முறையில் தகவல்களை அறிய புலம் பெயர்ந்த இளையோர் பயன்படுத்தி பெரும்பாலானோர் நன்மையடைகின்றார்கள் என்று உணர்த்த போதுமானவை என்று நினைக்கின்றேன்.
Quote:\"பட்டிமன்றம் தொடர்வோமா\" என்னும் தலைப்பின் கீழ் தொடரும் கருத்தாடலில் எமது எதிரணி விவாதி குருவிகள் அவர்கள் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார். பாவம் அவர் அறிந்து செய்தாரோ அறியாமல் செய்தாரோ தெரியவில்லை. அது என்னவெனில் தமிழில் தோன்றும் புதுப்புதுச் சொற்கள். இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது. இதுதான் இளையோர் பெறும் நன்மையா அல்லது தமிழ் பெறும் நன்மையா. தமிழ் இன்று இணையத்தில் இரண்டாம் மொழியாக இருந்தால் கூட ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா தாமும் அழிந்து பிறரையும் அழிக்கத்தான் இளையோரிற்கு இணையம் பயன்படுகின்றது என்று.
வலைப்பதிவுகள் அண்மைகாலங்களில் ஆரம்பமாகி இப்போது தான் பிரபல்யமாகி வருகின்றது. அவற்றை புலம்பெயர்ந்த இளையோர் தமது கருத்துக்களை எண்ணங்களை தங்குதடையின்றி வெளிப்படுத்த உபயோகிக்கின்றார்கள். தமிழில் தோன்றும் வலைப்பதிவுகளை எடுத்து கொண்டால் அவை தமிழ் நன்றாக தெரியாத புலம் பெயர்ந்த இளையோரினால் தமிழில் எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஆரம்பிக்கபடும் போது இலக்கண தவறுகள் ஏதும் நிகழலாம். அவை வேண்டுமென்றே செய்யப்படுவன அல்ல. இன்று இந்த வலைப்பதிவு மூலம் தமிழில் தனது புலமையை அதிகரித்து நன்மையடையும் இளையோர் நாளை அந்த இலக்கண தவறுகளையும் மற்றவர்களின் வழிகாட்டலுடன் சரி செய்வார்கள் என்பதை க்ருத்தில் கொள்ளுங்கள். இங்கு இளைன்யோரின் நோக்கம் தமிழில் எழுதுவதே அன்றி இலக்கண விதிகளை மீறுவது அல்ல.
இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>