01-16-2006, 09:03 PM
மானிப்பாயில் நடந்த நடுநிசிப்படுகொலை!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலி!
மானிப்பாயில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பியினரும் இணைந்து மேற்கொண்டதாக் கூறப்படும் நடுநிசிப் படுகொலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு மகள்மாரும் உயிரிழந்துள்ளனர். தகப்பனும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் கனகசபை வீதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்த இவர்களின் வீட்டிற்குள் சம்பவம் நடந்த அன்று இரவு 11.45 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள் இவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சத்தத்தை கேட்டு வீட்டின் மேல்மாடியிலிருந்து இறங்கி வந்தவர்கள் மீதும் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
இதன்போது போஜன் அர்த்தநாகேஸ்வரி (வயது 51), மகள்களான போஜன் ரேணுகா (வயது 30), போஜன் சானுகா(வயது 23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகேந்திரன் போஜன்(வயது 55) மற்றும் அவரது மகனான போஜன் உல்லாசன் வயது 26) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த தந்தையும் மகனும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போஜன், சென். ஜோன்ஸ் அம்புலனஸ் படைப்பிரிவின் யாழ். மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் ஆவர். கொல்லங்கலட்டியை சொந்த இடமாக கொண்ட இவர்கள் அங்கியிருந்து இடம்பெயர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மானிப்பாயில் வசித்து வந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ரேணுகா விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" என்ற திரைப்படத்தில் முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[color=brown]<i><b>கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஈ.பி.டி.பியினருக்கு மானிப்பாய் தொகுதியிலிருந்தே அதிகமான வாக்குகள் கிடைக்கப்பெற்றன</b></i>
<i><b>தகவல் மூலம் - புதினம்</b></i>

"
"
"