01-16-2006, 08:50 PM
நேற்று காலையிலேயே தியேட்டர் முன் ரசிகர்கள் கூடி விஜய் கட்அவுட்டிற்கு பாலாபி ஷேகம் செய்தனர்.
விஜய் நடித்துள்ள படம் ஆதி. இப்படம் பொங்கல் தினமான 14ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக வெளியாகவில்லை. ஒரு நாள் கழித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. சென்னையில் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் முன் திரண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து படப் பெட்டி இரட்டை குதிரை பூட்டிய சாரட் வண்டி யில் வைத்து ஊர்வலமாக கமலா தியேட்டருக்கு கொண்டு சென்றனர். தியேட்டர் அதிபர் சிதம்பரம் பெட்டியை பெற்றுக்கொண்டார். அங்கு சாமி படம் முன் பெட் டியை வைத்து பூஜை செய்யப்பட்டது. இதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம் ஒருநாள் தாமதமாக ரிலீஸ் ஆனதுபற்றி சந்திர சேகரா கூறியது„
எப்போதுமே அறிவித்த நாளில் விஜய் படம் திரைக்கு வந்துவிடும். இப்படம் ஒரு நாள் தாமதமாகிவிட்டது. எடிட்ட ருக்கு உடல் நிலை சரியில் லாமல் போய்விட்டதால் இப்படி ஆனது. இதில் விஜய்க்கு கொஞ்சம் வருத்தம்தான். பல்வேறு ஊர்களிலிருந்து ரசிகர்கள் போன் செய்து படம் வெளியாகாதது பற்றி கேட் டார்கள். பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். எங்களுக்கு இன்று பொங்கலே இல்லை என்றார்கள்.
விஜய் படம் என்றால் முதலில் ஒரு பாட்டு அடுத்து ஒரு பைட் என்று இருக்கும். இதில் அப்படி கிடையாது. காட்சிகள் அழுத்தமாக கொண்டு செல்லப்பட்டு இடை வேளைக்கு பிறகு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். மொத் தம் 286 பிரிண்ட் போடப்பட் டுள்ளது. 176 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. சென் னையைப்போலவே கோவை மதுரை திருச்சி போன்ற இடங்களிலும் ரசிகர்கள் பட பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர் என்றார். நேற்று காலையிலேயே தியேட்டர் முன் ரசிகர்கள் கூடி விஜய் கட்அவுட்டிற்கு பாலாபி ஷேகம் செய்தனர். எம்.ஜி.ஆர். படத்துக்குதான் இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன் என்றார் தியேட்டர் அதிபர் சிதம்பரம்.
dinakaran.com
விடுப்பு : .