Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு!
#3
<b>மட்டக்களப்பில் அடைமழை -சித்தாண்டி கிராமம் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்பு.</b>

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை மற்றும் குளங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்தமையால் குளத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் சித்தாண்டி கிராமம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று தினங்களாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை சாப்பாடு கூடதட்டுப்பாட்டான நிலையில் உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

அழுக்கு நீர் வீட்டினுள் புகுந்ததால் சிறு குழந்தைகள் பல்வேறு தொற்று நோய்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கான பாதைகள் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டினுல் உயர் பரண்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும் அவ்வாறு இல்லாது வேறுஇடங்களுக்கு இடம் பெயர்ந்தால் கள்ளர்களின் தொல்லை மிக அதிகம் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள்
வெள்ளம் ஏற்பட்டு மூன்று தினங்களாகியும் இன்னும் எதுவித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளார்கள். அப்பகுதி பிரதேச செயலாளர் நீங்கள் பொது இடங்களுக்கு இடம் பெயர்ந்தால் மாத்திரம் நிவாரணம் பெறமுடியும் என தெரிவித்துள்ளார் இது தவிர தொண்டர் நிறுவனங்கள் கூட எந்தவிதமான உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை

இவர்களின் பல நூற்றுக்கணக்கான நெல் வயல் அறுவடைசெய்யும் நிலையில் பாதிக்கப்பட்டள்ளதாகவும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொருவாண்டும் மார்கழி மாதம் மூன்று அல்லது நான்கு தடவைகள் இதே பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்

<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>


<b><i>தொடர்புபட்ட புகைப்படங்களுக்கு பதிவு.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-14-2006, 09:32 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 08:41 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 10:04 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)