Yarl Forum
மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! (/showthread.php?tid=1393)



மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! - மேகநாதன் - 01-14-2006

<b>மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! </b>


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெருமாள்வெளி, இலுக்கு, பெரியவட்டவான், குருகனாமடு போன்ற வயல் வெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாடசாலை, கோயில்கள் போன்ற பொதுக் கட்டடங்களில் இடம் பெயர்ந்துள்ளார்கள்.

அத்துடன் நகர்ப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சித்தாண்டி நான்காம் குறிச்சியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்ததில் உள்ளது. மேலும் வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிவேம்பு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு வாழைச்சேனை - ஏறாவூர் மிச்சநகர் போன்ற கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பராக்கிரமபாகு சமுத்திரத்தின் கதவுகள் பத்தும் திறந்து விடப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு - மன்னம்பிட்டிப் பாலத்திற்குச் சமீபமாக நீர் பாய்வதால் மட்டக்களப்பு - திருமலைப் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>


- மேகநாதன் - 01-14-2006

[size=18]<b>மட்டு. படுவான்கரையிலும் வெள்ளம்! </b>

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்ந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நேற்று ஊரக மேம்பாட்டு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் க.அரிகரன், மாவட்ட மேம்பாட்டுச் செயலாளர் அ.துரைசிங்கம் மற்றும் பிரதேச மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் ஆகியோர் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்திருக்கும் மக்களை பார்வையிட்டுள்ளதோடு அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக மாவட்ட அரச அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்,

இம்மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>


- மேகநாதன் - 01-16-2006

<b>மட்டக்களப்பில் அடைமழை -சித்தாண்டி கிராமம் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்பு.</b>

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை மற்றும் குளங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்தமையால் குளத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் சித்தாண்டி கிராமம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று தினங்களாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை சாப்பாடு கூடதட்டுப்பாட்டான நிலையில் உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

அழுக்கு நீர் வீட்டினுள் புகுந்ததால் சிறு குழந்தைகள் பல்வேறு தொற்று நோய்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கான பாதைகள் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டினுல் உயர் பரண்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும் அவ்வாறு இல்லாது வேறுஇடங்களுக்கு இடம் பெயர்ந்தால் கள்ளர்களின் தொல்லை மிக அதிகம் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள்
வெள்ளம் ஏற்பட்டு மூன்று தினங்களாகியும் இன்னும் எதுவித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளார்கள். அப்பகுதி பிரதேச செயலாளர் நீங்கள் பொது இடங்களுக்கு இடம் பெயர்ந்தால் மாத்திரம் நிவாரணம் பெறமுடியும் என தெரிவித்துள்ளார் இது தவிர தொண்டர் நிறுவனங்கள் கூட எந்தவிதமான உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை

இவர்களின் பல நூற்றுக்கணக்கான நெல் வயல் அறுவடைசெய்யும் நிலையில் பாதிக்கப்பட்டள்ளதாகவும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொருவாண்டும் மார்கழி மாதம் மூன்று அல்லது நான்கு தடவைகள் இதே பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்

<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>


<b><i>தொடர்புபட்ட புகைப்படங்களுக்கு பதிவு.கொம்</i></b>


- மேகநாதன் - 01-16-2006

<i><b>பெரு வெள்ளம் காரணமாக மன்னம்பிட்டி - மட்டக்களப்பு போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் வடிந்து வருகின்ற போதும், மட்டக்களப்பு - மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து தடைப்பட்டள்ளது. பட்டிருப்பில் மண்டூர் படகுச்சேவை இயங்கா நிலையில் காணப்படுகிறது. வேற்றுச்சேனையில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

களுவாஞ்சிக்குடி, அரையம்பதி, காத்தான்குடி, கிரான், மட்டக்களப்பு, வவுணதீவு, ஆகிய பிரதேசங்களில் வெள் நீர் வடிந்து வருகின்றபோதும், அகதி முகாம்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற அதேவேளை படுவான்கரை பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான வயல்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

பொலனறுவை, மின்னேரியாகுளம், என்பன திறக்கப்பட்டதனால் வாகரை மற்றும் கதிரவெளி பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி அங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

பொலனறுவைப் பிரதேசத்தில் பராக்கிரமபாகு சமுத்திரத்தின் வான்கதவுகள் பத்தும் திறக்கப்பட்டதனால் இருநூறு குடும்பங்கள் இடம்பெயாந்துள்ளதுடன் 50 அயிரம் ஏக்கர் வயல்நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் மன்னம்பிட்டி பாலத்தின் மேலால் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
[i][b]தகவல் மூலம்- சங்கதி</b></i>


- மேகநாதன் - 01-16-2006

<b>வெள்ளத்தால் பாதிப்புற்ற சித்தாண்டி மக்களுக்கு நிவாரணமில்லை!


மட்டக்களப்பு சித்தாண்டியில் தொடர்மழை மற்றும் குளங்கள் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாளாகியும் இன்னும் எதுவித உதவிகளும் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த தினங்களாக பெய்த அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வயல் பகுதி மற்றும் சித்தாண்டி 4ம் குறிச்சி பகுதி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டு மூன்று நாளாகியும் இதுவரையில் அவர்களுக்கான உலர் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் எவராலும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அவர்கள் தமக்கு பொருள் கஸ்டமாகவுள்ளதாகவும், வீடுகளுக்குள் உயர் பரண்களை அமைத்து தங்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஏதாவது பொது இடங்களில் இடம் பெயர்ந்தால் மாத்திரம் நிவாரணம் பெறமுடியும் என அப்பகுதி பிரதேச செயலாளர்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் கூறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

<i>[b]தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>