01-16-2006, 07:38 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் - தாயும், இரு மகள்களும் பலி, தந்தையும், மகனும் படுகாயம் </b>
யாழ். மானிப்பாய்ப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த காடையர்களும், மாவீரர் ஒருவரின் குடும்பத்தினர் மீது மேற்கொண்ட வெறியாட்டத்தில், தாயும் இரு மகள்களும் கொல்லப்பட்டுள்ளதுடன், தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
மானிப்பாய் இந்துக் கல்லூக்கு அண்மையில் உள்ள முதலியார் கனகசபை வீதியில் உள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்தவேளை அதிகாலை 12.15 மணியளவில் வீட்டினுள் புகுந்த ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதிகளும், இவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி;ச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் தாயார் போஜன் ஆர்த்தநாகேஸ்வரி(51), மகள்களான போஜன் ரேணுகா(30), போஜன் சானுகா(23) ஆகியோர் கொல்லப்பட்டதுடன், தந்தையார் நாகேந்திரன் போஜன்(55) மற்றும் அவரது மகன் போஜன் உலாசன்(26) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் உயிராபத்தான நிலையில் யாழ். அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். கொல்லன்கலட்டிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர்கள் இடம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். கொல்லப்பட்ட ரேணுகா, விடுதலைப் புலிகளின் நிதர்சன நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 'அம்மா\" என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</span>
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

"
"
"