01-10-2004, 11:21 AM
பேச்சுவார்த்தை பொறுப்பை ஏற்க சந்திரிகா மறுப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு நடத்திவந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தும் பொறுப்பை ஏற்க இயலாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்!
மத்திய இலங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பாதுகாப்பு, உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் பொறுப்பு தமது அரசிடம் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்வது சாத்தியமில்லை என்று கூறினார்.
பாதுகாப்பு அமைச்சகப் பொறுப்பு தம்மிடம் இருந்தால்தான் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இயலும் என்றும், அதனை தற்பொழுது அதிபர் சந்திரிகா எடுத்துக்கொண்டதால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பொறுப்பையும் அவரே ஏற்கவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.
அதிபர் சந்திரிகா சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரணில் விக்ரமசிங்கேயின் கருத்தை நிராகரிப்பதாகவும், அமைதி முயற்சியும், பேச்சுவார்த்தையும், இலங்கை அதிபரும், இலங்கை பிரதமரும் இணைந்து மேற்கொள்ளவேண்டிய கூட்டுப் பொறுப்புதான் என்று கூறப்பட்டுள்ளது.
----------------
webulagam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>