![]() |
|
போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை ஆபத்தில்---ரணில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை ஆபத்தில்---ரணில் (/showthread.php?tid=7617) |
போர் நிறுத்தம், பேச்சு - kuruvikal - 01-07-2004 பேச்சுவார்த்தைக்கும் சந்திரிகா பொறுப்பேற்க வேண்டும் - ரணில் பாதுகாப்பு, உள்துறை உள்ளிட்ட மூன்று அமைச்சகப் பொறுப்புகளை தன்னிடம் நிரந்தரமாக வைத்துக்கொள்ள அதிபர் சந்திரிகா விரும்பினால், விடுதலைப் புலிகளுடன் தமது அரசு நடத்திவந்த அமைதிப் பேச்சுவார்த்தையை அவரே தொடரவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்! இலங்கையின் வட மத்திய மாகாணமான குருணகலாவில் உள்ள பாண்டுவாஸ்னுவாரா எனுமிடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ராணுவ அமைச்சகப் பொறுப்பு இல்லாமல் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடருவது இயலாத காரியம் என்று கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தமது அரசு கையெழுத்திட்டதற்குக் காரணம், ராணுவ கட்டுப்பாடு அரசிடமிருந்ததே என்று கூறிய ரணில், பாதுகாப்பு, உள்துறை அமைச்சர்களை நீக்கிவிட்டு அந்த அமைச்சகப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டுள்ள அதிபர் சந்திரிகா, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பையும் முடிந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சவால் விடுத்தார். சந்திரிகாவிடம் ராணுவ அமைச்சகப் பொறுப்பை அளித்துவிட்டு புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது போர் நிறுத்தம் ஒப்பந்தம் மீறப்படுமானால், அதன் விளைவாக இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறிய ரணில் விக்ரமசிங்கே, அதனால்தான் ராணுவ அமைச்சகப் பொறுப்பை தங்களிடம் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று தான் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு, உள்துறை அமைச்சகப் பொறுப்புக்களை தானே ஏற்றுக்கொண்டதன் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிட்டார் சந்திரிகா என்று ரணில் விக்ரமசிங்கே குற்றம் சாட்டினார். -------- News from webulagam.com - yarl - 01-07-2004 பழையபடி நேர்சரி விளையாட்டு தொடங்கிவிட்டார்கள் - shanthy - 01-07-2004 நேசறிக்குப் போகத்துவங்கிக் கனநாளச்சு. இன்னும் அ ஆவன்னா எழுதி முடிக்காமல் முளிக்கினம் அம்மாவும் ரணில் அங்கிளும். :roll: - vasisutha - 01-08-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 01-08-2004 யார் சொன்னது முழிக்கினம் என்று அவர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். வெள்ளைத்தாளில் வெள்ளைப்பேனையால் அதுதான் மற்றவர்களிற்கு புரிய மறுக்கின்றது :oops: :oops: :oops: <!--QuoteBegin-shanthy+-->QUOTE(shanthy)<!--QuoteEBegin-->நேசறிக்குப் போகத்துவங்கிக் கனநாளச்சு. இன்னும் அ ஆவன்னா எழுதி முடிக்காமல் முளிக்கினம் அம்மாவும் ரணில் அங்கிளும். :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - kuruvikal - 01-10-2004 பேச்சுவார்த்தை பொறுப்பை ஏற்க சந்திரிகா மறுப்பு! தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு நடத்திவந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தும் பொறுப்பை ஏற்க இயலாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்! மத்திய இலங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பாதுகாப்பு, உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் பொறுப்பு தமது அரசிடம் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்வது சாத்தியமில்லை என்று கூறினார். பாதுகாப்பு அமைச்சகப் பொறுப்பு தம்மிடம் இருந்தால்தான் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இயலும் என்றும், அதனை தற்பொழுது அதிபர் சந்திரிகா எடுத்துக்கொண்டதால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பொறுப்பையும் அவரே ஏற்கவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியிருந்தார். அதிபர் சந்திரிகா சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரணில் விக்ரமசிங்கேயின் கருத்தை நிராகரிப்பதாகவும், அமைதி முயற்சியும், பேச்சுவார்த்தையும், இலங்கை அதிபரும், இலங்கை பிரதமரும் இணைந்து மேற்கொள்ளவேண்டிய கூட்டுப் பொறுப்புதான் என்று கூறப்பட்டுள்ளது. ---------------- webulagam.com |