Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் `படகு அகதிகள்'
#1
இலங்கையிலிருந்து நேற்று சனிக்கிழமை மேலும் 5 அகதிகள் படகுகள் மூலம் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளதையடுத்து அச்சம் காரணமாக இதுவரை இராமேஸ்வரம் பகுதிக்குச் சென்றுள்ள தமிழ் மக்களின் தொகை 38 ஆக அதிகரித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் முறிவடைந்து மீண்டும் போர் மூளலாம் என்ற அச்சம் காரணமாக உண்டாகியுள்ள நெருக்கடி தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் உணரப்படுகின்றது.

மூன்று வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கையிலிருந்தது நாளாந்தம் தமிழ் மக்கள் படகுகள் மூலம் இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற வண்ணமுள்ளனர்.

மன்னாரிலிருந்து 10,000 ரூபா செலுத்தி மீன்பிடிப் படகுகள் மூலம் பலர் இராமேஸ்வரம் சென்றுள்ளனர். 1980 களில் தமிழ் நாட்டிற்குப் பெருளவு இலங்கைத் தமிழர்கள் தஞ்சம் கோரி செல்வதற்கு காரணமாகவிருந்த யுத்தத்தைப் போன்று மீண்டுமொரு யுத்தம் மூளலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

இலங்கையில் எமது உயிருக்கு கடும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. நாங்கள் கடும் அச்சம் கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இராணுவம் எங்களை சுடுகின்றது. குழந்தைகளைக் கூட கொல்கின்றது. பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுகின்றது என இலங்கை தமிழ் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்திய- இலங்கை கடற்பரப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது இந்திய மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் காயமடைந்தார்.

இந்திய கடற்படையும் கரையோர காவற்படையும் சர்வதேச கடற்பரப்பில் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

தமிழ்நாடு அரசாங்கம் கச்சதீவில் மீன் பிடிப்பதற்கான உரிமையை மீளப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை, தமிழ்நாடு பொலிஸார் மிகுந்த எச்சரிக்கையுடனுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் யுத்தம் மூண்டால் பெருமளவு அகதிகள் இராமேஸ்வரத்திற்கு செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகமாகவுள்ளன.

இதேவேளை, தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய, மாநில அரசுகளுக்கு இது கடும் பாதுகாப்புப் பிரச்சினையாக மாறலாம்.

http://www.thinakkural.com/New%20web%20sit...y/15/news-4.htm
Reply


Messages In This Thread
தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் `படகு அகதிகள்' - by sanjee05 - 01-15-2006, 09:21 PM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 06:06 AM
[No subject] - by Sukumaran - 02-11-2006, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)