Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது
#1
<b>தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது : சீக்கிய மாணவனுக்கு மலேசியாவில் உத்தரவு</b>

கோலாலம்பூர்: மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங். வயது 17. இவரை முகச்சவரம் செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் கூறுகையில்,"" எங்கள் சீக்கிய மதப்படி உடம்பின் எந்த பகுதியில் இருந்து முடியை அகற்ற கூடாது என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு அதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது. முகச்சவரம் செய்து விட்டு வராவிட்டால் வேறு பள்ளியை பார்த்து கொள்ளும்படியும் அந்த பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது,'' என்றார்.

இது குறித்து மலேசிய கல்வி துறை அதிகாரி கூறுகையில், ""ரன்வீர் சிங் இன்னும் அந்த பள்ளியில் இருந்து இட மாற்றம் செய்யப்படவில்லை. அவர் முகச்சவரம் செய்து தான் தீர வேண்டும் என கட்டாயப் படுத்தப்படவில்லை. எனினும், இப்பிரச்னை குறித்து கல்வி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளி கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதும்படி ரன்வீர் சிங்குக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Dinamalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது - by Vaanampaadi - 01-15-2006, 05:08 AM
[No subject] - by Mathan - 01-18-2006, 05:16 PM
[No subject] - by Snegethy - 01-18-2006, 05:21 PM
[No subject] - by Mathan - 01-18-2006, 05:36 PM
[No subject] - by Luckyluke - 01-19-2006, 10:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)