01-09-2004, 10:27 AM
கவரிமான் , கத்தரிக்காய்
தத்துவத்தைச் சொட்ட வைத்துச்
சாகடிக்கும் கூட்டமாக
என்னைவிடு , உன்னைவிடு
இழுத்தடித்து , விழுந்தெழும்பி....
பெண்ணின் பிரச்சனையென்றால்
இந்தப் பையன்களுக்கெல்லாம்
உடன் நீளும் கைகள் மட்டுமல்ல
காதுகளும் படுகூர்மை....
எழுத்துலகில் பெண்வருகை ,
எழுத்தறிவில் பெண்வருகை ,
வான்முட்டி விமானமோட்டும்
வல்லமைப் பெண் எழுகை ,
வையமே நோக்கும் வகை
களம் ஏகிக்காவியப் பெண்புதுமை....
இத்தனையும் நடக்கும் உலகில்
இவர்களுக்கென்ன குறையாம்....?
எதைச்சொல்ல எடுத்தாலும்
இதுதான் இவர் வேதம்.
வீட்டுப்படி விட்டிறங்க முடியாமல்
வாய் திறந்து தன்துயர் உரைக்கும்
வலுவின்றி ஒருகூட்டம்.
வையமெல்லாம் சுற்றிவந்தும்
விடியலின்றிச் சாகின்ற பிணவாழ்வில்
வதையும் பெண்களின் வகை புரியா
வல்லவர்கள் எருமைத் தோலில்
எல்லாமே மரப்புத்தான்.
'நாணயமில்லாத மாடுகள்
நாடகமாடும் வேடதாரிகள்
அடங்காப் பிடாரிகள்
ஆட வெளிக்கிட்ட கூத்திச்சிகள்
மாயை தேடி ஓடும் மாயப்பேய்கள்"
சொல்லில் தேன்தடவி
கொல்லும் விடம் மிக்க
வித்துவச் சொற்களுக்கு
விசுவாசம் அதிகம் - இவர்
வாயிலிருந்து மீள்வதென்றால்
மறுஜென்மம் போதாது.
ஆணென்றால் அங்கு புதிதாயேதோ
முளைத்தது போல் பெரும் எடுப்பு.
பெண்ணென்றால் எங்கும்
படிதாண்டா விரதைகளாயே
இன்னும் பார்வைகளின் நீளம்....
எப்ப இவர் வாய் திருந்தி
ஆண்பெண் பேதமிவர் மறப்பாரோ
அதுவரைக்கும் இந்த
அவதாரர் வாய்களிலிலே
எட்டாமல் பெண்ணிருக்கட்டும்.
09.01.04.
தத்துவத்தைச் சொட்ட வைத்துச்
சாகடிக்கும் கூட்டமாக
என்னைவிடு , உன்னைவிடு
இழுத்தடித்து , விழுந்தெழும்பி....
பெண்ணின் பிரச்சனையென்றால்
இந்தப் பையன்களுக்கெல்லாம்
உடன் நீளும் கைகள் மட்டுமல்ல
காதுகளும் படுகூர்மை....
எழுத்துலகில் பெண்வருகை ,
எழுத்தறிவில் பெண்வருகை ,
வான்முட்டி விமானமோட்டும்
வல்லமைப் பெண் எழுகை ,
வையமே நோக்கும் வகை
களம் ஏகிக்காவியப் பெண்புதுமை....
இத்தனையும் நடக்கும் உலகில்
இவர்களுக்கென்ன குறையாம்....?
எதைச்சொல்ல எடுத்தாலும்
இதுதான் இவர் வேதம்.
வீட்டுப்படி விட்டிறங்க முடியாமல்
வாய் திறந்து தன்துயர் உரைக்கும்
வலுவின்றி ஒருகூட்டம்.
வையமெல்லாம் சுற்றிவந்தும்
விடியலின்றிச் சாகின்ற பிணவாழ்வில்
வதையும் பெண்களின் வகை புரியா
வல்லவர்கள் எருமைத் தோலில்
எல்லாமே மரப்புத்தான்.
'நாணயமில்லாத மாடுகள்
நாடகமாடும் வேடதாரிகள்
அடங்காப் பிடாரிகள்
ஆட வெளிக்கிட்ட கூத்திச்சிகள்
மாயை தேடி ஓடும் மாயப்பேய்கள்"
சொல்லில் தேன்தடவி
கொல்லும் விடம் மிக்க
வித்துவச் சொற்களுக்கு
விசுவாசம் அதிகம் - இவர்
வாயிலிருந்து மீள்வதென்றால்
மறுஜென்மம் போதாது.
ஆணென்றால் அங்கு புதிதாயேதோ
முளைத்தது போல் பெரும் எடுப்பு.
பெண்ணென்றால் எங்கும்
படிதாண்டா விரதைகளாயே
இன்னும் பார்வைகளின் நீளம்....
எப்ப இவர் வாய் திருந்தி
ஆண்பெண் பேதமிவர் மறப்பாரோ
அதுவரைக்கும் இந்த
அவதாரர் வாய்களிலிலே
எட்டாமல் பெண்ணிருக்கட்டும்.
09.01.04.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

