01-14-2006, 12:16 PM
இன்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டம், பாலம்போட்டாறிற்கு அருகில் உள்ள கதவணைக்குளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மினிமுகாம் ஒன்றின் மீது ஸ்ரீலங்கா படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் இந்த முகாமுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐந்து முதல் பத்துவரையான போராளிகள் இருந்த இந்த முகாம் மீதே படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காத போதும், நான்கு போராளிகள் வரை காணாமல் போயுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.