Yarl Forum
விடுதலைப் புலிகளின் மினி முகாம் மீது படையினர் தாக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: விடுதலைப் புலிகளின் மினி முகாம் மீது படையினர் தாக்குதல் (/showthread.php?tid=1418)

விடுதலைப் புலிகளின் மினி முகாம் மீது படையினர் தாக்குதல் - Vaanampaadi - 01-13-2006

திருமலையில் விடுதலைப் புலிகளின் மினி முகாம் மீது படையினர் தாக்குதல் - நான்கு போராளிகளைக் காணவில்லை
Written by Paandiyan Friday, 13 January 2006

இன்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டம், பாலம்போட்டாறிற்கு அருகில் உள்ள கதவணைக்குளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மினிமுகாம் ஒன்றின் மீது ஸ்ரீலங்கா படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் இந்த முகாமுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐந்து முதல் பத்துவரையான போராளிகள் இருந்த இந்த முகாம் மீதே படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காத போதும், நான்கு போராளிகள் வரை காணாமல் போயுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் திருமலை மாவட்ட அரசியற்துறையினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

Sankathi

- நர்மதா - 01-13-2006

அம்பாறை மாந்தோட்டத்தில் கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம்.
அம்பாறை கச்சிகுச்சாற்று சூனியப்பகுதியை அண்மித்த மாந்தோட்டப்பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் சிறீலங்கா படை புலனாய்வுப் பிரிவினரும் கருணா அணியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மணல் நிரப்பப்பட்ட உளவு இயந்திரங்களில் சென்ற இந்த அணியினர் துக்பாக்கிப் பிடிகளினாலும் ஆயுத கம்பிகளினாலும் காரங்கள் எதுவும் இன்றி பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகி 4 பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியைச் சேர்ந்த 14 ஆயுத தாரிகள் ஈடுபட்டுள்ளதாக உடும்பன்குள அரசியற்துறைப் பொறுப்பாளர் வீரமணி தெரிவித்துள்ளார். இந்த 14 ஆயுததாரிகளும் அக்கரைப்பற்று 40 கட்டையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமில் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

- நர்மதா - 01-14-2006

அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும்இ தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

- kavithaa - 01-14-2006