Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மைக்ரோவேவ் சக்கரை பொங்கல
#1
<b>மைக்ரோவேவ் சக்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

அரிசி 2 கப்
உடைத்த பாதி பயறு 1 கப்
தேங்காய் பால் 1 கப்
சக்கரை - உங்களுக்கு எவளவு வேணுமோ போடலாம்
நீர் - 4 கப்
நெய் - 3 டேபில் கரண்டி (நிறைய போட்ட பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிட வாய்ப்பு உண்டு)
ஏலக்காய் - 4 (தூளாக்கி போடுங்கோ, இல்லாடி கடிபடும், நல்லா இருக்கது)

1. பயறை சிறிது வறுத்து கொள்ளவும். சாப்பிட்டு பார்த்தால் மொறு மொறுப்பாக இருக்க வேண்டும்.

2. அரிசி,நீர்,பால் இவற்றை கலந்து மைக்கோவேவில் வைத்து மீடியத்தில் 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.

3. சிறிதளவு நீரில் சக்கரையை நன்றாக கரைக்கவும்.

4. சக்கரையையும் மிகுதி உள்ள பொருட்களையும் ஒன்றாக போட்டு கலக்கி 2 நிமிடத்துக்கு வைக்கவும்.

5. கையை சுடாமல் கவனமாக எடுத்து, பாத்திரத்தில் போடவும். வேறு யாரவது ஒருவருக்கு கொடுத்து நன்றாக இருந்தால் நீங்களும் சாப்பிடவும்.


இது தனியாக ஏதோ காரணத்தால் தங்கி இருந்து படிக்கு/வேலை பார்க்கும் சகோதரங்களுக்காக....

இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்</b>
[b][size=15]
..


Reply


Messages In This Thread
மைக்ரோவேவ் சக்கரை பொங்கல - by தூயா - 01-14-2006, 09:27 AM
[No subject] - by shanmuhi - 01-14-2006, 09:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-14-2006, 09:36 AM
[No subject] - by MUGATHTHAR - 01-14-2006, 10:47 AM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 12:19 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 12:25 PM
[No subject] - by eezhanation - 01-14-2006, 12:38 PM
[No subject] - by தூயா - 01-15-2006, 06:39 AM
[No subject] - by RaMa - 01-15-2006, 06:55 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)